“குவியம்” - Focus

வணக்கம் பார்வையாளர்களே

 “குவியம்” என்ற வார்த்தை ஆங்கிலத்தில் FOCUS எனப்படும்;. இவ்வெப்பக்கம் எனது தமிழ், ஆங்கில இலக்கியப் படைப்புகளை ஒரு இடத்தில் குவிக்கிறது.  எனது ஆங்கில நூல்களை Amazon.com  யில் பார்வையிடலாம். எனது படைப்புகள் கீழ்கண்டவைகளை உள்ளடக்கும்.

1    சிறுகதைகள் (அறிவியல் உருவகம், மனித உரிமை மீறல், குடும்பம், மரபு, ஆவிக்  கதைகள்)

2    வரலாறு

3.    ஆன்மீகம்

4.    கவிதைகள்

5.    கட்டுரைகள் 

நன்றி  

பொன் குலேந்திரன் - கனடா

           

                                    ♣♣♣♣♣

Dear Reader

 Focus in Tamil means “Kuviyam”.

I am a dual language writer (Tamil & English). I have published several books in both languages. For English books, look into Amazon.com

 The objective of this web site is to publish my creations in Tamil and English. The Creations contain:

  1. Short stories (including science fiction,Family issues, Social, Allogery, HR Violations< Ghos)
  2. Heritage
  3. Spirituality
  4. Poems
  5. Essays

Thank you

Pon Kulendiren

Mississauga L5N 6S9

Ontario, Canada

Kulendiren2509@gmail.com 

“Tamil Seniors Pearl Necklace “ eBook

“Tamil Seniors Pearl Necklace

eBook

KuviyamCanada.comis proud to announce the release of a collection of 50 short stories from 13 countries, written by Tamil senior Creative writers all over the world on 31st January 2018. The stories are based on issues of Tamils seniors and reflective of country's environment. The objective of the book is to prove the unity of Tamil seniors living all around the world and their creative talent. Each story is a pearl. Please support. The book will appear as printed book in April 2018 Tamil New year.

The review of the book is given below in Tamil

Thank you

 

Pon Kulendiren

Dual Language writer

Editor

Kuviyamcanada.com

16th December 2017

 

****

 

தொகுப்பாளர் கருத்து

தமிழ் இலக்கியம் எல்லா வயதினருக்கும் பொதுவானது. குழைந்தைகள் இலக்கியம், காதல் இலக்கியம், அறிவியல்,  வரலாறு, அரசியல், குடும்பம் போன்று பல பார்வைகளில் படைப்பாளிகள் எழுதுவார்கள். முதியோரின் பிரச்சனைகள் பல. தனிமை,  அல்செய்மார் என்ற மறதி நோய். போன்று பலவிதமன வியாதிகள், முதுமையில் கணவன் மனைவி உறவு, பழைய பழக்க வழக்கத்தில்  இருந்து மாறாமை, பிடிவாதம், எதிர்பார்ப்பு.. மருந்து  குளுசைகளை நம்பி வாழ்பவர்கள்  தலைமுறை இடவெளி. சிலர் இறுதி காலத்தில் கவனிக்க ஒருவரும் இல்லாத காரணத்தால் முதியோர் இல்லத்தைத் தஞ்சம் அடைகிறார்கள்.

பல முதியோர்கள் கடந்த காலத்தில் தாம் வகித்த பதவி.; பிறருக்கு செய்த உதவி, தமக்கு கிடைத்த பேரும், புகழும் பற்றி பேசுவதில் இன்பம் காண்பார்கள் ஒரு  காலத்தில் விளயாட்டு வீரராக  இருந்தவர் முதுமையின் போது  கைக்கோலையும் . நாற் சக்கர வண்டியையும் நம்பி   வாழ வேண்டிய நிலை போன்ற பலவிடயங்களை  வைத்து சுவையான கதைகள்’ அடங்கியது  இத் தொகுப்பு

பல முதியோருக்கு எழுதும் திறமை இருந்தும். இனி என்ன எழுதி கிழிக்கப் போகிறோம் என்று  எழுதுவதை நிறுத்தி விடுவார்கள். அனால் இந்த கதை தொகுப்பு இன்னும் பல முதியோரககள் எழுதிக்;கொண்டே இருக்குறார்கள்  என்பதை எடுத்துக் காட்டுகிறது.   உடலில் உள்ள வியாதியை மறக்க, வாசிப்பும் எழுதுவதும் பகிர்வதும்  ஒரு வகை தியானமாகும். இந்தக் கதைக் கொத்தில் பல  நாடுகளில் இருந்து முதியவர்கள் உருவாக்கிய சுவையான சிறுகதைகளை சேர்த்து, நான் எழுதிய முத்துக்களோடு கோத்து உருவாக்கிய முதுதமிழரின் மாலையாக  உங்கள் பார்வைக்கு  சமர்பிக்கிறேன். கனடாவில்  சாதனை படைத்த மூன்று முதியவர்களின் கதைகள் இத் தொகுப்பில் உண்டு . ஆரம்பத்தில் மின் நூலாக வரும் இந் நூல் பின்னர் அச்சில் வெளி வரும். இது ஒரு வித்தியாசமான முயற்ச்சி . இந்த தொகுப்பில் கனடா . தமிழ்நாடு, இலங்கை அமெரிக்கா,. சிங்கப்பூர் . மலேசியா , ஜெர்மனி . சுவிஸ், நோர்வே . துபாய் ஆகியநாடுகளில் இருந்து படைப்பாளிகளிடம் இருந்து கதைகள் வந்துள்ளது    

பல தேசங்களில்  இருந்து வந்த கதைகள்  அந்த நாட்டின் மண்வாசனையுடன் வருகிறது. இது ஒரு புது முயற்ச்சி. இந்த  தொகுப்பை  உருவாக்க உதவிய  தமிழ் மேல் பற்றுள்ளவர்களுக்கு எனது நன்றி

இதில் வரும் நிதி ஒரு முதியோர் சங்கத்தின் நூலகத்தின் விருத்திக்குப் பாவிக்கப்படும். உங்கள் ஆதரவை எதிர்பார்க்கும்

பொன் குலேன்திரன்

(இரு மொழி எழுத்தாளன் )

ஒரு முதிய தமிழன்

ஒன்டாறியோ, கனடா