கச்சைத்தீவு

 

1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் ;அமைந்த  285 ஏக்கர் பரப்புள்ள மக்கள் வாழாத தீவு.   இத்தீவைச் சுற்றி நல்ல மீன்வளமும,; தீவில் கனிவளமும்  உள்ளது. பெட்ரல் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. கச்சை என அழைக்கப்பட்ட பச்சை நிற ஆமைகள் அதிகம் இத்தீவில் சுற்றியுள்ள கடலில் காணப்படுவதால்; பச்சை தீவு என அழைக்கப்பட்டு, பின்னர்  கச்சைத்தீவேன பெயர் மருவியதாக ஒரு சாரர் கருத்து. மீனவர்கள்; தம் வலைகளை அத்தீவில் உளரவைப்பதால்  வலையைக் கச்சை எனக் குறிப்பதாலும் அப்பெயர் அத்தீவுக்கு வந்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் இராமேஸ்வரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ தூரத்தில் இத்தீவு அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்புக்கு உகந்த தீவென கருதப்படுகிறது. இத்தீவில் தம் மரபு வழி வந்த  தொழில் புரிவதற்காகச் சென்று, தன் உயிரைப் பலிகொடுத்த ஒரு மீனவ இளைஞனைக் கருவாக வைத்துப் புனையப்பட்ட கதை.

 

இராமேஸ்வரத்தில் வாழும்  சூசைதாசன், பரம்பரை பரம்பரையாக  ஆழ் கடலுக்குப் போய் மீன் படிப்பதை தொழிலாகக் கொண்டவன். 1964 நடந்த சூறாவளியின் போது பல மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவனைச் சாரும். சூசைதாசன் மீனவர் சங்கத்தின் உபதலைவர். மீனவர்களுக்கும் இலங்கை அரசுக்கும்  இடையேலான, கச்சைத்தீவு மீன் பிடிக்கும் பகுதிக்கான பிரச்சனையை தமிழ்நாட்டு அரசின் கவனத்துக்கு  அடிக்கடி கொண்டு சென்றுஇ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுப் பணம் கிடைக்க வழிவகுத்தவன்.; அவனை அரசியலில் ஈடுபடும் படி பலர் கேட்டுமஇ; தனது சமூகத்துக்காக செய்யும்; சேவையில் ஊழல் புகுந்து விடுமோ என்ற பயத்தால் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தான்.

 

சூசைதாசனின்   ஒரே மகன் அந்தனிமுத்து. தகப்பனாரைப் போல் சமூக சேவையில் ஈடுபட்டவன். தந்தைக்கு உதவியாகக் கடலுக்கு போய் வருவான். கடலுக்கு அந்தனிமுத்து தந்தைக்கு துணையாகப் போய் வரும் போது மீன்கள்; அதிகம் பிடிபடுவதை பலர் அவதானித்தனர். தீவுக்குப் போகும் போது அத்தீவில் உள்ள அந்தோனியார் தேவாலயத்துக்குச்ச சிலசமயம்; சென்று வணங்கி வருவது அவன் வழக்கம். இதை இலங்கை கடற்படை கவனிப்பதில்லை. ஏதோ அந்தோனியாரின் கிருபை அவனுக்கு இருக்கிறது என்று  சகி மீனவர்கள் பேசிக்கொண்டனர்.

 

தொழிலுக்குப் போகாத நாட்களில் பாதர் பீட்டரிடம் ஆங்கிலம் கற்றுவநதான் அதனால் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கூடியவன். தமிழும் ஆங்கிலமும் பேசும் திறமை உள்ள அவனை தங்கள் சங்கத்தின் செயலாளராக இராமேஸ்வரம் மீனவர் சங்கம் ஏகமானதாகத் தேர்ந்தெடுத்தது.

 

இலங்கை இந்தியா கச்சை தீவு ஒப்பந்தம்இ கச்சைத் தீவின் வரலாறு. மன்னார் வளைகுடாவுமஇ; அதில் உள்ள கனிவளமும்  பற்றி அந்தனிமுத்து அறிந்து வைத்திருந்தான். தன் அறிவை மற்றைய மீனவர்களோடும்இ அரசியல்வாதிகளோடும் பகிர்ந்து கொள்வான். அவனது இளமையையும்இ திடகாத்திரமான உடலையும் கண்டு மோகித்த மீனவப் பெண்கள் அனேகர். ஆனால் அந்தனிமுத்துவின் மனதில் இடம் படித்தவள் பிலோமினா என்ற மீனவப்பெண். அவள் மேல் அந்தனிமுத்துவுக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம் பிலோமினாவின எளிமையான தோற்றமும்இ அமைதியான போக்கும். அதுவுமில்லாமல் சுறாவளியில் தாயையும் தந்தையையும் இழந்த அனாதைபெண் பிலோமினா. தன் பாட்டி நேசமணியின் கவனிப்பில் வாழ்பவள். கடும் உழைப்பாளி. பல மைல்கள் நடந்து சென்று மீன் வியாபாரம் செய்து வருவாள். குறைந்த விலையில் பேரம், பேசி மீன் பிடித்து வரும் மீனவர்களிடம் மீன் வாங்கும் திறமை படைத்தவள்.

 

“ என்ன பிலோமினா இண்டைக்கு உன் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான சுறாவும், அறுக்குளா, கயல் மீனும் , ஓராவும் கிடைத்திருக்கு உனக்காக வைத்திருக்கிறன” என்றான் அந்தனிமுத்து.

 

“ நான் கேட்கும் விலைக்குத் தந்தால் உன்னிடம் வாங்குவான்” சிரித்படி பதில் சொன்னாள் பிலோமினா. அவளுக்குப் பிரமாதமான முக அழகு இல்லாவிட்டாலும்இ பொது நிறம். நீண்ட கரும் கூந்தல். சிரிப்பழகி. எதோ ஒரு வித கவர்ச்சியை பல மீனவர்கள் கண்டார்கள். ஆதனால்தானோ என்னவோ போட்டி போட்டுக்கொண்டு அவளுக்கு மீன் விற்க முன்வந்தனர்.

 

மீன் பிடித்துவரும் மீனவர்களில் முதலில் தேடிப் போய் மீன வாங்குவது அநதனிமுத்துவிடம். அவனோடு தர்க்கம் புரிந்து மீன் வாங்குவதில் அவளுக்கு ஒரு தனி சந்தோஷம். அவர்கள் பேச்சில் ஊடலுமஇ; கிண்டலும் இருந்தது. அதுவே காதலாக மாறியது. ஒரு தடவை கடலில் மீன பிடித்து வரும்; போது வலையில் சிக்கிய முத்துச் சிப்பியில் இருந்து கிடைத்த முத்தை பிலோமினாவுக்கு அந்தனிமுத்து கொடுத்த போதுஇ

 

“ என்ன அந்தனி இந்த விலையுயர்ந்த முத்து எனக்கா? நம்பமுடியவில்லையே” என்றாள் பிலோமினா.

 

“ நீ எனக்கு ஒரு முத்துபோல. இது உன் சிரிப்புக்கு பொருத்தமானது.

அதுதான் இது உனக்கு என் பரிசு” என்றான் அந்தனி.

 

அந்தனியின் வார்த்தைகளால் அவள் வெட்கித் குனிந்தாள்.

 

“நீ நல்ல சமையல்காரி என்று உன் சினேகிதி திரேசா எனக்குச் சொன்னாள். உன் மீன் சமையலை சுவைக்கவேண்டும் போல இருக்கு.  நீ செய்து தந்தால் ரசித்துச் சாப்பிடுவேன்.” புதில சொன்னான் அந்தனி.

 

“ நீ கேட்டாள் முடியாது என்று சொல்லுவேனா? என்ன மீன சமையல் உனக்கு விருப்பம்”?

 

“ சுறாமீன் பிட்டு, இறால் பொரியல், ஓர மீன் தீயல், அறுககுளா  மீன் குளம்பு.” என்றான் அந்தனி.

 

“ அடேயப்பா நீண்ட பட்டியல். அவ்வளவும் நான் சமைத்து தந்தால் சாப்பிடுவாயா”?

 

“ நீயும் சேர்ந்து என்னோடு சாப்பிட்டால் நிட்சயம் சாப்பிடுவேன்”.

 

“ அப்போது வருகிற ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சுக்குப்;போய் நீ திரும்பும் போது என் வீpட்டில் தான் உனக்குப் பகல் சாப்பாடு உன் விருப்பப்படு எல்லாம் செய்து வைக்கிறன” என்றாள் பிலோமினா.

 

“உன் சித்தம். என் பாக்கியம்” என்றான் சிரித்தபடி அந்தனி.

 

சூசைதாசனுக்கு பிலோமினாவின் தந்தை மாரியம்பிள்ளை தூரத்துச் சொந்தம். பிலோமினாவுக்கும்  மகன் அந்தனி முத்துக்கும் இடையே வளர்ந்து வரும் காதலைப் பற்றி  பலர் சூசைதாசனுக்கு சொன்னார்கள்.

 

“ எனக்குத் தெரியும் அந்தனுக்கு பிலோமினாவை தன் துணைவியாக்க நல்ல விருப்பம் என்று. நான் இதைப்பற்றி பிலோமினாவின் பாட்டி நேசமணியிடம்; பேசிவிட்டேன். அவாவுக்கும் சம்மதம். பிலோமனாவின் தன்தை எனக்குத் தூரத்துச் சொந்தம் வேறு. வருகிற நத்தாரோடு திருமணம் செய்துவைக்க இருக்கிறன. திருமண செலவுக்கு  தேவையான பணத்தை தானே மீன பிடித்து சேர்ப்பதாக அந்தனி எனக்குச் சொன்னான்.” என்றான் சூசைதாசன் தன் நண்பன் சேவியரிடம்.

 

அடிக்கடி மீன்வளம் அதிகமாக உள்ள  பகுதியான கச்சைத் தீவுக்கு அருகே சென்று தன் சகி தொழிலாளியான பிச்சைமுத்துவோடு போய் வரத்தொடங்கினான் அந்தனி. தனக்கு வரப்போகும் கணவன்இ சொந்த உழைப்பில் தனக்குத் தேவையான நகைகள்இ சேலைகள்இ வீட்டுச் சாமான்கள் வாங்கக் கடுமையாக உழைக்கிறான் என்பதைக் கண்டு பிலோமினா பெருமைப் பட்டாள். அவனுக்கு வாவுக்கு ருசியாக சமைத்துப் போட்டாள்.

 

நத்தாருக்கு இரு கிழமைகளுக்கு முன்னரே அந்தனிமுத்து பிலேமினா திருமணம் நடக்க இருந்தது. அதற்கு முன் அந்தச் சம்பவம் நடக்கும் என்று இராமேஸ்வர மீனவ மக்கள் எதர்பார்த்;திருகவில்லை.

 

திருமணத்துக்கு முன் ஒருநாள் அந்தனிமுத்து, பிசசைமுத்துவோடு கச்சைத்தீவுக்கு அருகாமையில் உள்ள கடல் பகுதிக்கு மீன பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையின் பார்வைக் பட்டான். அவர்கள் அவனது விசைப்படகை நிறுத்தும்படி  கட்டளையிட்டும்;; அவர்களின் கட்டளையை அவன் மதிக்கவில்லை. எங்கே கடற்படை தன்னைக் கைது செய்து சித்திரவதை செய்வார்களோ என்ற பயம் வேறு.  எனக்கு கச்சைதீவை சுற்றி உள்ள பகுதியில் மீன பிடிக்கவுமஇ; வலையைத் தீவில் உலர வைக்கவும் ஒப்பந்தத்தின்படி உரிமை உண்டு. நான் ஏன் அவர்கள் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டு; என்று கடற்படையின் தாக்குதலுக்குப் பலியாக முன் தனக்கு அந்தனி சொன்னதாக உயிர்தப்பிவந்த பிச்சைமுத்து சூசைதாசனுக்கும் இராமேஸ்வர மீனவர் சங்கத்துக்கும் சொன்னான்.

 

தனனை மணமுடிக்க இருந்தவனுக்கு இப்படி வீர மரணம் ஏற்படும் என பிலோமினா எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் தொழில் செய்து தீரும்போது உண்பதற்காக அவனுக்குச் சுறபுட்டும், இறால் பொரியலும், அறுக்குளா மீன் குளம்பும் செய்து வைத்திருந்தாள். அந்தனிமுத்துவின் மரணம் இராமேஸ்வர மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவனின் மரணத்தை மனித உரிமை மிறலாக ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதியது. தமிழ்நாட்டு அரசு இம்மரணத்தைப்பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து, இலங்கை அரசிடம் அந்தனிமுத்துவின் காரணமற்ற மரணத்துக்காக நஷ்ட ஈடு கொடுக்கும்படி கேட்டது. அரசியல் அழுத்தம் காரணமாக பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடாக அந்தனிமுத்து பெற்றோருக்கு கிடைத்தது. அப்பனம் பிலோமினாவுக்குகே போய்ச் சேர வேண்டும் என சூசைதாசன் முடிவெடுத்தான். அந்தனிமுத்துவின் பெற்றோர் பெலோமினா வீட்டுக்கு அவளைச் சந்தித்து பணம் கொடுக்கப் போன  போது இன்னொரு அதிர்ச்சியும் அவர்களுக்குக் காத்திருந்தது.

 

“என் பேத்தி இப்போது இங்க இல்லை. அந்தனியின் மரணம் அவள் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது” என்றாள் பாட்டி நேசமணி.

 

“ அந்தனி மரணத்துக்கு இழப்பீடாக பத்து இலட்சம் பணம் அரசு கொடுத்திருக்கிறது. அப் பணம் அவளைப்  போய் சேர வேண்டும். அதை அவளுக்குக்  கொடுக்கவே வந்திருக்கிறோம் என்றார்கள் சூசைதாசனும் மீனவர்கள் சங்கத் தலைவர்களும்.

 

“நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவள் வாங்கும் நிலமையில் இப்போது இல்லை” நேசமணி பாட்டி சொன்னாள்.

 

“ ஏன் பாட்டி அப்படிச் சொல்லுகிறீர்கள்”? சூசைதாசன் கேட்டான்.

 

“ பிலோமினா இப்போது கன்னிகாஸ்தீரியாக மாறிவிட்டாள். பயிற்சிக்காக திருச்சிக்குப் போய்விட்டாள். தனக்கு இனி திருமணமே வேண்டாம் என்று விட்டாள்”, என்றாள் நேசமணி பாட்டி

 

எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றனர். பிலோமினா தினமும் மீன் விற்கச் சுமந்து செல்லும் மீன் கூடை ஓரமாகக் கிடந்தது.

                ******

(யாவும் கற்பனையே)

 

1480 இல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட சுறாவளியால் இராமேஸ்வரம் உற்பட 11 தீவுகள் தோன்றின அதில் கச்சைதீவும் உள்ளடங்கும். இராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே உள்ள கடல் எல்லையில் ;அமைந்த  285 ஏக்கர் பரப்புள்ள மக்கள் வாழாத தீவு.   இத்தீவைச் சுற்றி நல்ல மீன்வளமும,; தீவில் கனிவளமும்  உள்ளது. பெட்ரல் கிடைக்கக் கூடிய சாத்தியக்கூறுகளும் உண்டு. கச்சை என அழைக்கப்பட்ட பச்சை நிற ஆமைகள் அதிகம் இத்தீவில் சுற்றியுள்ள கடலில் காணப்படுவதால்; பச்சை தீவு என அழைக்கப்பட்டு, பின்னர்  கச்சைத்தீவேன பெயர் மருவியதாக ஒரு சாரர் கருத்து. மீனவர்கள்; தம் வலைகளை அத்தீவில் உளரவைப்பதால்  வலையைக் கச்சை எனக் குறிப்பதாலும் அப்பெயர் அத்தீவுக்கு வந்திருக்கலாம். எது எவ்வாறு இருப்பினும் இராமேஸ்வரத்தில் இருந்து கிழக்கே 17 கி.மீ தூரத்தில் இத்தீவு அமைந்துள்ளது. இந்திய பாதுகாப்புக்கு உகந்த தீவென கருதப்படுகிறது. இத்தீவில் தம் மரபு வழி வந்த  தொழில் புரிவதற்காகச் சென்று, தன் உயிரைப் பலிகொடுத்த ஒரு மீனவ இளைஞனைக் கருவாக வைத்துப் புனையப்பட்ட கதை.

 

இராமேஸ்வரத்தில் வாழும்  சூசைதாசன், பரம்பரை பரம்பரையாக  ஆழ் கடலுக்குப் போய் மீன் படிப்பதை தொழிலாகக் கொண்டவன். 1964 நடந்த சூறாவளியின் போது பல மீனவர்களின் உயிரைக் காப்பாற்றிய பெருமை அவனைச் சாரும். சூசைதாசன் மீனவர் சங்கத்தின் உபதலைவர். மீனவர்களுக்கும் இலங்கை அரசுக்கும்  இடையேலான, கச்சைத்தீவு மீன் பிடிக்கும் பகுதிக்கான பிரச்சனையை தமிழ்நாட்டு அரசின் கவனத்துக்கு  அடிக்கடி கொண்டு சென்றுஇ பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீட்டுப் பணம் கிடைக்க வழிவகுத்தவன்.; அவனை அரசியலில் ஈடுபடும் படி பலர் கேட்டும; தனது சமூகத்துக்காக செய்யும்; சேவையில் ஊழல் புகுந்து விடுமோ என்ற பயத்தால் அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தான்.

 

சூசைதாசனின்   ஒரே மகன் அந்தனிமுத்து. தகப்பனாரைப் போல் சமூக சேவையில் ஈடுபட்டவன். தந்தைக்கு உதவியாகக் கடலுக்கு போய் வருவான். கடலுக்கு அந்தனிமுத்து தந்தைக்கு துணையாகப் போய் வரும் போது மீன்கள்; அதிகம் பிடிபடுவதை பலர் அவதானித்தனர். தீவுக்குப் போகும் போது அத்தீவில் உள்ள அந்தோனியார் தேவாலயத்துக்குச்ச சிலசமயம்; சென்று வணங்கி வருவது அவன் வழக்கம். இதை இலங்கை கடற்படை கவனிப்பதில்லை. ஏதோ அந்தோனியாரின் கிருபை அவனுக்கு இருக்கிறது என்று  சகி மீனவர்கள் பேசிக்கொண்டனர்.

 

தொழிலுக்குப் போகாத நாட்களில் பாதர் பீட்டரிடம் ஆங்கிலம் கற்றுவநதான் அதனால் ஆங்கிலம் சரளமாகப் பேசக் கூடியவன். தமிழும் ஆங்கிலமும் பேசும் திறமை உள்ள அவனை தங்கள் சங்கத்தின் செயலாளராக இராமேஸ்வரம் மீனவர் சங்கம் ஏகமானதாகத் தேர்ந்தெடுத்தது.

 

இலங்கை இந்தியா கச்சை தீவு ஒப்பந்தம்இ கச்சைத் தீவின் வரலாறு. மன்னார் வளைகுடாவுமஇ; அதில் உள்ள கனிவளமும்  பற்றி அந்தனிமுத்து அறிந்து வைத்திருந்தான். தன் அறிவை மற்றைய மீனவர்களோடும்இ அரசியல்வாதிகளோடும் பகிர்ந்து கொள்வான். அவனது இளமையையும்இ திடகாத்திரமான உடலையும் கண்டு மோகித்த மீனவப் பெண்கள் அனேகர். ஆனால் அந்தனிமுத்துவின் மனதில் இடம் படித்தவள் பிலோமினா என்ற மீனவப்பெண். அவள் மேல் அந்தனிமுத்துவுக்கு காதல் ஏற்பட முக்கிய காரணம் பிலோமினாவின எளிமையான தோற்றமும்இ அமைதியான போக்கும். அதுவுமில்லாமல் சுறாவளியில் தாயையும் தந்தையையும் இழந்த அனாதைபெண் பிலோமினா. தன் பாட்டி நேசமணியின் கவனிப்பில் வாழ்பவள். கடும் உழைப்பாளி. பல மைல்கள் நடந்து சென்று மீன் வியாபாரம் செய்து வருவாள். குறைந்த விலையில் பேரம், பேசி மீன் பிடித்து வரும் மீனவர்களிடம் மீன் வாங்கும் திறமை படைத்தவள்.

 

“ என்ன பிலோமினா இண்டைக்கு உன் வாடிக்கையாளர்களுக்கு விருப்பமான சுறாவும், அறுக்குளா, கயல் மீனும் , ஓராவும் கிடைத்திருக்கு உனக்காக வைத்திருக்கிறன” என்றான் அந்தனிமுத்து.

 

“ நான் கேட்கும் விலைக்குத் தந்தால் உன்னிடம் வாங்குவான்” சிரித்படி பதில் சொன்னாள் பிலோமினா. அவளுக்குப் பிரமாதமான முக அழகு இல்லாவிட்டாலும்இ பொது நிறம். நீண்ட கரும் கூந்தல். சிரிப்பழகி. எதோ ஒரு வித கவர்ச்சியை பல மீனவர்கள் கண்டார்கள். ஆதனால்தானோ என்னவோ போட்டி போட்டுக்கொண்டு அவளுக்கு மீன் விற்க முன்வந்தனர்.

 

மீன் பிடித்துவரும் மீனவர்களில் முதலில் தேடிப் போய் மீன வாங்குவது அநதனிமுத்துவிடம். அவனோடு தர்க்கம் புரிந்து மீன் வாங்குவதில் அவளுக்கு ஒரு தனி சந்தோஷம். அவர்கள் பேச்சில் ஊடலுமஇ; கிண்டலும் இருந்தது. அதுவே காதலாக மாறியது. ஒரு தடவை கடலில் மீன பிடித்து வரும்; போது வலையில் சிக்கிய முத்துச் சிப்பியில் இருந்து கிடைத்த முத்தை பிலோமினாவுக்கு அந்தனிமுத்து கொடுத்த போதுஇ

 

“ என்ன அந்தனி இந்த விலையுயர்ந்த முத்து எனக்கா? நம்பமுடியவில்லையே” என்றாள் பிலோமினா.

 

“ நீ எனக்கு ஒரு முத்துபோல. இது உன் சிரிப்புக்கு பொருத்தமானது.

அதுதான் இது உனக்கு என் பரிசு” என்றான் அந்தனி.

 

அந்தனியின் வார்த்தைகளால் அவள் வெட்கித் குனிந்தாள்.

 

“நீ நல்ல சமையல்காரி என்று உன் சினேகிதி திரேசா எனக்குச் சொன்னாள். உன் மீன் சமையலை சுவைக்கவேண்டும் போல இருக்கு.  நீ செய்து தந்தால் ரசித்துச் சாப்பிடுவேன்.” புதில சொன்னான் அந்தனி.

 

“ நீ கேட்டாள் முடியாது என்று சொல்லுவேனா? என்ன மீன சமையல் உனக்கு விருப்பம்”?

 

“ சுறாமீன் பிட்டு, இறால் பொரியல், ஓர மீன் தீயல், அறுககுளா  மீன் குளம்பு.” என்றான் அந்தனி.

 

“ அடேயப்பா நீண்ட பட்டியல். அவ்வளவும் நான் சமைத்து தந்தால் சாப்பிடுவாயா”?

 

“ நீயும் சேர்ந்து என்னோடு சாப்பிட்டால் நிட்சயம் சாப்பிடுவேன்”.

 

“ அப்போது வருகிற ஞாயிற்றுக்கிழமை சேர்ச்சுக்குப்;போய் நீ திரும்பும் போது என் வீpட்டில் தான் உனக்குப் பகல் சாப்பாடு உன் விருப்பப்படு எல்லாம் செய்து வைக்கிறன” என்றாள் பிலோமினா.

 

“உன் சித்தம். என் பாக்கியம்” என்றான் சிரித்தபடி அந்தனி.

 

சூசைதாசனுக்கு பிலோமினாவின் தந்தை மாரியம்பிள்ளை தூரத்துச் சொந்தம். பிலோமினாவுக்கும்  மகன் அந்தனி முத்துக்கும் இடையே வளர்ந்து வரும் காதலைப் பற்றி  பலர் சூசைதாசனுக்கு சொன்னார்கள்.

 

“ எனக்குத் தெரியும் அந்தனுக்கு பிலோமினாவை தன் துணைவியாக்க நல்ல விருப்பம் என்று. நான் இதைப்பற்றி பிலோமினாவின் பாட்டி நேசமணியிடம்; பேசிவிட்டேன். அவாவுக்கும் சம்மதம். பிலோமனாவின் தன்தை எனக்குத் தூரத்துச் சொந்தம் வேறு. வருகிற நத்தாரோடு திருமணம் செய்துவைக்க இருக்கிறன. திருமண செலவுக்கு  தேவையான பணத்தை தானே மீன பிடித்து சேர்ப்பதாக அந்தனி எனக்குச் சொன்னான்.” என்றான் சூசைதாசன் தன் நண்பன் சேவியரிடம்.

 

அடிக்கடி மீன்வளம் அதிகமாக உள்ள  பகுதியான கச்சைத் தீவுக்கு அருகே சென்று தன் சகி தொழிலாளியான பிச்சைமுத்துவோடு போய் வரத்தொடங்கினான் அந்தனி. தனக்கு வரப்போகும் கணவன்இ சொந்த உழைப்பில் தனக்குத் தேவையான நகைகள்இ சேலைகள்இ வீட்டுச் சாமான்கள் வாங்கக் கடுமையாக உழைக்கிறான் என்பதைக் கண்டு பிலோமினா பெருமைப் பட்டாள். அவனுக்கு வாவுக்கு ருசியாக சமைத்துப் போட்டாள்.

 

நத்தாருக்கு இரு கிழமைகளுக்கு முன்னரே அந்தனிமுத்து பிலேமினா திருமணம் நடக்க இருந்தது. அதற்கு முன் அந்தச் சம்பவம் நடக்கும் என்று இராமேஸ்வர மீனவ மக்கள் எதர்பார்த்;திருகவில்லை.

 

திருமணத்துக்கு முன் ஒருநாள் அந்தனிமுத்து, பிசசைமுத்துவோடு கச்சைத்தீவுக்கு அருகாமையில் உள்ள கடல் பகுதிக்கு மீன பிடிக்க சென்றபோது இலங்கை கடற்படையின் பார்வைக் பட்டான். அவர்கள் அவனது விசைப்படகை நிறுத்தும்படி  கட்டளையிட்டும்;; அவர்களின் கட்டளையை அவன் மதிக்கவில்லை. எங்கே கடற்படை தன்னைக் கைது செய்து சித்திரவதை செய்வார்களோ என்ற பயம் வேறு.  எனக்கு கச்சைதீவை சுற்றி உள்ள பகுதியில் மீன பிடிக்கவுமஇ; வலையைத் தீவில் உலர வைக்கவும் ஒப்பந்தத்தின்படி உரிமை உண்டு. நான் ஏன் அவர்கள் கட்டளைக்கு கீழ்ப்படியவேண்டு; என்று கடற்படையின் தாக்குதலுக்குப் பலியாக முன் தனக்கு அந்தனி சொன்னதாக உயிர்தப்பிவந்த பிச்சைமுத்து சூசைதாசனுக்கும் இராமேஸ்வர மீனவர் சங்கத்துக்கும் சொன்னான்.

 

தனனை மணமுடிக்க இருந்தவனுக்கு இப்படி வீர மரணம் ஏற்படும் என பிலோமினா எதிர்பார்த்திருக்கவில்லை. அவன் தொழில் செய்து தீரும்போது உண்பதற்காக அவனுக்குச் சுறபுட்டும், இறால் பொரியலும், அறுக்குளா மீன் குளம்பும் செய்து வைத்திருந்தாள். அந்தனிமுத்துவின் மரணம் இராமேஸ்வர மீனவர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. அவனின் மரணத்தை மனித உரிமை மிறலாக ஊடகங்கள் பக்கம் பக்கமாக எழுதியது. தமிழ்நாட்டு அரசு இம்மரணத்தைப்பற்றி மத்திய அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்து, இலங்கை அரசிடம் அந்தனிமுத்துவின் காரணமற்ற மரணத்துக்காக நஷ்ட ஈடு கொடுக்கும்படி கேட்டது. அரசியல் அழுத்தம் காரணமாக பத்து இலட்சம் ரூபாய் இழப்பீடாக அந்தனிமுத்து பெற்றோருக்கு கிடைத்தது. அப்பனம் பிலோமினாவுக்குகே போய்ச் சேர வேண்டும் என சூசைதாசன் முடிவெடுத்தான். அந்தனிமுத்துவின் பெற்றோர் பெலோமினா வீட்டுக்கு அவளைச் சந்தித்து பணம் கொடுக்கப் போன  போது இன்னொரு அதிர்ச்சியும் அவர்களுக்குக் காத்திருந்தது.

 

“என் பேத்தி இப்போது இங்க இல்லை. அந்தனியின் மரணம் அவள் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது” என்றாள் பாட்டி நேசமணி.

 

“ அந்தனி மரணத்துக்கு இழப்பீடாக பத்து இலட்சம் பணம் அரசு கொடுத்திருக்கிறது. அப் பணம் அவளைப்  போய் சேர வேண்டும். அதை அவளுக்குக்  கொடுக்கவே வந்திருக்கிறோம் என்றார்கள் சூசைதாசனும் மீனவர்கள் சங்கத் தலைவர்களும்.

 

“நீங்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அவள் வாங்கும் நிலமையில் இப்போது இல்லை” நேசமணி பாட்டி சொன்னாள்.

 

“ ஏன் பாட்டி அப்படிச் சொல்லுகிறீர்கள்”? சூசைதாசன் கேட்டான்.

 

“ பிலோமினா இப்போது கன்னிகாஸ்தீரியாக மாறிவிட்டாள். பயிற்சிக்காக திருச்சிக்குப் போய்விட்டாள். தனக்கு இனி திருமணமே வேண்டாம் என்று விட்டாள்”, என்றாள் நேசமணி பாட்டி

 

எல்லோரும் வாயடைத்துப் போய் நின்றனர். பிலோமினா தினமும் மீன் விற்கச் சுமந்து செல்லும் மீன் கூடை ஓரமாகக் கிடந்தது.

               

(யாவும் கற்பனையே)

******       

 

மூவர்

 

சரஸ்வதிக்கு ( சரசு)  மிகக் கவலை தன்னையும் செல்வாவையும்  கடைசிக் காலத்தில் கவனிப்பதுக்கு      ஒரு மகள் இல்லையே என்று.. சரசு விண் கணவன் செல்வேந்திரன் (செல்வா) லண்டனில் படித்து பட்டம் பெற்ற சார்டேர்ட்  அக்கௌன்டன்ட் .  லண்டனில் ஐந்து வருடங்கள்  வேலை செய்து அதன் பின் சரசுவை திருமணம் செய்து  கொழும்பில் பெரிய நிறுவனத்தில் பிரதம அக்கௌன்டன். வேலை . வெள்ளவத்தையில் கொலிங்வுட் பிலேசில்( Collingwood Place) அவருக்குச் சீதனமாக கிடைத்த நாலறைகள் உள்ள  வீடு இருந்தது.  அவர் சரசுவை திருமணம் செய்த அதிர்ஷ்டமோ என்னவோ அவருக்குத் திருமணத்தின் பின் ஒரு வருடத்தில் உலக வங்கியில் வேலைக் கிடைத்தது. நல்ல சம்பளமும். சலுகைகளும். ஒவ்வொரு வருடமும் லீவில் குடும்பத்தோடு கொழும்பு திரும்பும் போது விமானத்தில் முதலாம் வகுப்பில் பயணம் . பல நாடுகளில் வேலை செய்து பல இன மக்களுடன் பழகும் சந்தர்ப்பம் கிட்டியது. சரசு பாராத தேசம் இல்லை .செல்வா தம்பதிகளுக்கு சிங்கப்பூரில் செல்வா  வேலை செய்யும் போது ஜெயேந்திரன் ( ஜெயம்) பிறந்தான் .  அதன் பின் அவர்களுக்குப் பிள்ளைகள் இல்லை . அது செல்வாவுக்கும் சரசுக்கும் பெரும் கவலை.

பொரியல் பட்டதாரியான ஜெயம், இலங்கை பரிபாலன சேவையில் திறைச்செரியில் வேலை . அவனோடு பல்கலை கழகத்தில் படித்த  சுபத்திராவை பெற்றோரின் அனுமதியோடு திருமணம் செய்து கொண்டான். பாவம் சுபத்திரா . இனக் கலவரத்தில் பெற்றோரை இழந்தவள் . கூடப் பிறந்த சகோதரங்கள் கூட இல்லை. அவளுக்கு   ஜெயத்தின்  தாயும் தகப்பனும் தான் எல்லாம். சுபத்திரா ஜெயத்தைத் திருமணம் செய்ய முன்பு மாமி  மருமகளைக் கொடுமை படுத்திய கதைகள் பலஅறிந்திருந்தாள். சில விவாகரத்தில் கூட போய் முடிந்ததைப்  பலர் சொல்லிக் கேள்விப்பட்டாள் . திரைப்படத்திலும் பார்த்திருக்கிறாள்  . தனக்கு வரும் மாமி எப்படி யானவளோ என்று  யோசித்தாள் சுபத்திரா  . எதற்கும் வரும் மாமியோடு பணிந்து போக வேண்டும். தனக்கோ தாயும் தகப்பனும்  ஒரு சகோதரமும் இல்லை. ஜெயம் குடும்பம் தான் இனி   எல்லாம்

 

செல்வா ரிட்டையாராகி கொழும்பு திரும்பி அடுத்த வருடமே ஒரு நாள் திடீர்   என  ஹார்ட் அட்டாக  வந்து மரணத்தைத்  தழுவினார் . சரசு அதை எதிர்பார்க்கவில்லை . கொழும்பு வீட்டில் சரசு, ஜெயம் சுபத்திரா மட்டுமே வாழ்ந்தார்கள். சரசுக்கு பென்ஷன் வந்தது . சுபத்திரா கொழும்பில் ஒரு கல்லூரியில் அறிவியல் ஆசிரியை  . வீட்டையும் சரசுவையும்  கவனிக்க அவளுக்கும் ஜெயத்துக்கும் நேரமில்லை. சுரசுவுக்கோ . கீல்வாதம்( Arthritis). அவளால் அசைந்து வேலை செய்வது  கடினம் . வீட்டு வேலை  பார்ப்பதுக்கும்  வார நாட்களில் சமைப்பதுக்கும்  ராஜம்மா வந்து போவாள். லீவு நாட்களில் சுபத்திரா சமைப்பதுண்டு. சரசு சுத்த சைவம் என்பது சுபத்திராவுக்கு திருமணம் நடந்த நாள் முதல் கொண்டே தெரியும். தாயைப்  பற்றிய முழு விபரமும் ஜெயம் சுபத்திராவுகு சொல்லியிருந்தான் . தன் தாய் சரியாக அனுஷ்தானம் பார்ப்பவள் கச்சிதமானவள். துப்பரவு  பார்ப்பவலள் என்று சுபத்திராவுக்கு  எச்சரித்திருந்தான் .  ஜெயத்துக்கோ மீன். இறைச்சி இல்லாவிட்டால் உணவு போகாது . வீட்டில் வெவ்வேறு பாத்திரங்களில் சமையல் நடக்கும்.

 

தாயில்லா சுபத்திராவின் மேல் அவளின் மாமிக்கு   தனிக் கரிசனையும் அன்பும் . சரசுக்கு  மகள் இல்லாத குறையை மருமகள்  சுபத்திரா தீர்த்து வைத்துவிட்டாள் என்ற மனத் திருப்தி. மகனுடன் கோபித்து பேசினாலும் ஒரு போதும் மருமகளோடு சரசு கோபித்தது இல்லை. அதற்கு ஏற்றவாறு சுபத்திரா நடந்தாள்.  மாமியின்  போக்கினை சுபத்திரா எதிர்பார்க்கவில்லை  

“ அம்மா நீ எனக்குத் தாயில்லை   , சுப்பிக்கு தான் தாய் போல எனக்குத்  தெரிகிறது . எனக்கும் அவளுக்கும் ஏதும் பிரச்சனை என்று வந்தால் நீ அவளுக்குச் சார்பாக தான் பேசுவாய்,. இது எனக்கே  ஆச்சரியமாக இருக்கு.” ஒரு நாள் செல்வா தாயிக்குச் சொன்னான்.

“ மகன், சுபி பெற்றோரும்  சகோதரங்களும் இல்லாதவள். பாவம் அவள் . தனித்து எங்களை நம்பி எங்கள் குடும்பத்துக்குள் வந்திட்டாள் . எனக்கு மகள் இல்லாத குறையைத் தீர்த்து வைத்து விட்டாள். எனக்கு நேரத்துக்கு மருந்து தருகிறாள். வாவுக்கு ருசியா சமைத்து தருகிறாள். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் என்னை என் கை பிடித்து   கோவிலுக்கு அழைத்துச் செல்கிறாள் . என்னோடு விரதம் இருக்கிறாள். நான் சாப்பிடும் பொது  பக்கத்தில் இருந்து கவனிக்கிறாள்.. என் படுக்கையை தினமும் சரி செய்து, விரித்து துப்பரவாக வைக்கிறாள் ;. கீழ் வாதத்தால் கஷ்டப்படும்  எனக்கு குளிப்பாட்டுவதும், தலை சீவி விடுவதும் அவளே. எதோ முட் பிறவியில் அவள் எனக்கு மகளாய் பிறந்திருக்க வேண்டும்  என்று நான் நினைக்கிறேன் . உன் அப்பா இருந்திருந்தால் அவரையும் மகள் போல் இருந்து கவனித்திருப்பாள்” சரசு மகனுக்குச் சொன்னாள்.

“ என் நண்பன் காந்தன் வீட்டில் எப்பாவும் அவன் மனைவிக்கும் அவனின்  தாயிக்கும் மாமி மருமகள் சண்டை. ஒரு நாள் காந்தனின் மனைவி தான் தன் தாய் வீட்டுக்குப்  போவதாக அவனை மிரட்டி இருக்கிறாள். பாவம் அவன்” செல்வா சொன்னான்

“காந்தனின் அம்மாவைப் பற்றி எனக்குத் தெரியும். அவள் புருசினோடும் எப்பாவும்  சண்டை  அவளுக்குக் காந்தன் ஒரு மகனும் இரு மகள்மார் மட்டுமே . இருக்கிறார்கள். அவளுக்கு மகன் மேலே சரியான பாசம். எங்கே அந்தப் பாசத்தில் மருமகள் பங்கு போடுவாளோ என்ற பயமாக இருக்கலாம். அதோடு மருமகள்  அவள் கேட்ட சீதனம் கொண்டு வரவில்லை  என்ற குறை வேறு  காந்தனின்  சகோதரிமாரின் தலையீடும் இருப்பதாகக்  கேள்வி பட்டேன் . காந்தனின்  சம்பளத்தில் தாய் பங்கு கேட்பது அவனின் மனைவிக்கு பிடிக்கவில்லையாம். எல்லாம் நடக்கிற விதத்தில்  இருக்கு. இந்த வீட்டில் நாங்கள்  மூவர் மட்டுமே, பிறர் தலையீடு இருக்கத் தேவையில்லை ” சரசு பதில் சொன்னாள்.

***

காலம்  உருண்டோடியது . செல்வாவுகும் சுபத்திரவுக்கும் ஒரு மகள்  பிறந்தாள். சரசுக்கு பெரும் சந்தோசம்  மருமகளிடம் இந்த வீட்டில் மூவர் நால்வராகி விட்டோம் . இன்னும் இரண்டு வருசத்திலை எனக்கு ஒரு பேரனை பெத்துக்  கொடு இந்த வீட்டில் ஐயிந்தாகி விடுவோம்” : என்றாள் மருமகளிடம் சரசு சிரித்தபடி.

அவளின் ஆசை நிறைவேற முன் சரசு  கண் முடிவிட்டாள் . தன் மரணச் செலவுக்கும்,. அனாதைப் பிள்ளைகள் இல்லதுக்கும்,  பேத்தியின் படிப்புக்கும் மருமகளிடம் தேவையான பணம் கொடுத்து தனக்குச்  சொல்லாமல் தாய் போனது ஜெயாவுக்குத்  தெரியாது. சுபத்திரா முழு விபரம் சொன்னபோது அவன் அதிர்ச்சி அடைந்தான். அவன் மனதுக்குள் தாயை பற்றி பெருமை பட்டான்  தன்மேல்  இருந்த நம்பிக்கையை  விட தாயிக்கு மருமகள்  சுபத்திராமேல் மேல் அவளுக்கு  இருந்த நம்பிக்கையும், பாசத்தையும்  நினைத்து மறைந்த தாயின் மேல் அவனுக்கு இருந்த மரியாதை மேலும் கூடியது.

****  

( யாவும் புனைவு )    

புரட்டாசிச் சனி

 

அன்று புரட்டாசிச் சனிக்கிழமை. அம்மாவும் அப்பாவும் புரட்டாசிச் சனிக்கிழமைக்கு விரதம். இருவரும் காலை, வண்ணார்பண்ணை வரதராஜ பெருமாள் கோயிலுக்குப் போய் நல்லெண்ணை எரித்து, சிவனுக்கு அர்ச்சனை செய்து வந்தார்கள். அவர்கள் தங்களோடு என்னையும் வரும்படி கூப்பிட்ட போது நான் சாக்குப் போக்குச் சொல்லி கடத்திவிட்டேன். அப்பாவுக்கு ஏழரைச் சனி கடைக்கூறாம் அம்மா சொன்னாள்.; முதற் கூறில் அக்சிடென்ட் பட்டவர் நல்லகாலம் தன்றை மாங்கல்யப் பாக்கியத்தால் அவர் உயிர் தப்பியது ஏதோ கடவுள் புண்ணியம் என்பாள் அவள் அடிக்கடி. ஏழரைச் சனி முதல் கூறு நடக்கும் போது காணியில் பங்கு கேட்டு அப்பா போட்ட கேஸில்; தோர்த்து போனார். நடுக் கூறு நடக்கும் போது தான் அப்பாவுக்கு புரமோசன் கிடைத்தது. அக்காவுக்கு திருமணம் நடந்தது .கனடா மாப்பிள்ளை வேறு. அந்த நல்ல காரியங்களைப் பற்றி அம்மா பேசமாட்டாள். அம்மா பயப்பட்டாள் கடைக் கூறில் என்ன நடக்குமோ என்று. இதுக்கெல்லாம் காரணம் ஊர் சாஸ்திரி சதாசிவம் தான். ஒரு மாதத்துக்கு ஒரு தடவை அவரிடம் ஐம்பது ரூபாய் கொடுத்து ஆலோசனை கேட்காவிட்டால் அம்மாவுக்குத் திருப்தியில்லை. அவர் சொன்ன படி சனிக்கிழமை விரதப் பைத்தியம் அவளைப் பீடித்துக் கொண்டது. சதாசிவத்தாரின் ஆலோசனை படி; ஒவ்வொரு சனிக்கிழமையும் அப்பாவுக்காக அம்மா விரதம் இருந்தாள். எனக்கு தான் வயிற்றில் அடி. சனிக்கிழமையில் தான் மார்க்கண்டன் கிடாய் வெட்டி கூறு போடுகிறவன். பனை ஓலையிலை கொழுப்போடை கட்டித் தரும் அந்த இறச்சியை ருசித்த சாப்பிடாமல் இந்த சனிக்கிழமை விரதம் தடுத்துவிட்டது. ஒரே ஒரு சனிக்கிழமை சித்தப்பா வீட்டை போய் அம்மாவுக்கு தெரியாமல் அந்த இறச்சியை சாப்பிட்டு வந்தனான். அம்மாவுக்கு தெரிந்திருந்தால் வீட்டுக்குள்ளை என்னை விட்டிருக்கமாட்டாள். 

கோயிலுக்குப் போய் வந்து, சமைத்து, கையில் வாழையிலையில் காகத்துக்குப் படைக்க சோறு கறியுடன் முற்றத்துக்கு அம்மா போவதைக் கண்டேன். கத்தரிக்காய் பொரித்த குழம்பு, முருங்கையிலை வறை, பாவக்காய் பொரியல் , துவரம் பருப்பு கறி , புடலங்காய் வதக்கல், உருழைக் கிழங்கு பிரட்டல் வாசனை மூக்கைத் துளைத்தது.. சனிக்கிழமை விரதத்துக்கு முருங்கையிலை கறி அவசியம் இருந்தாக வேண்டும். இது அம்மாவின் நம்பிக்கை. சுத்த பசு நெய்யின் மணம் கூட வீசியது. அடித்தது யோகம் காகங்களுக்கு. வீட்டில் பழைய பராசக்திப் பாடலான கா கா கா என்ற பாடல் ரேடியோவில் கேட்டது அவவின் கா கா கா என்று காகத்தை அன்பாக விருந்துக்கு கூப்பிடும் அழைப்பும் பராசக்தியில் வரும் கா கா பாடலையும் கேட்டவுடன் எனக்கு சிரிப்புத்தான் வந்தது. தாளத்தில் தான் என்ன ஒற்றுமை. 

இந்தக் காகங்கள் பொல்லாதது. சமயம் பார்த்து புரட்டாசி சனிக்கிழமைகளில் ஓடி ஒளிந்துவிடும். பல வீடுகளில் காகங்களுக்கு வரவேற்பு பாவம் அம்மா தொண்டை கிழியக் கத்திய பிறகு எங்கையோ இருந்து பக்கத்து வீடுகளில் வயிறு முட்டச் சாப்பிட்டு விட்டு வேண்டா வெறுப்பாக துணிமணிகள் காயப் போட்ட கொடியில் வந்தமர்ந்தது ஒரு காகம். 

“ஐயோ அம்மா பசிக்குது. இரண்டு நாளாக பட்டினி. ஏதும் சாப்பாடு இருந்தா போடுங்கோ”, பிச்சைக்காரன் குரல் கேட்டடியில் கேட்டது. அவன் போட்டச் சத்தத்தில் காகம் பறந்து போய் விடுமோ என்ற பயம் அம்மாவுக்கு . ” ஏய் ஒரு மணித்தியாலம் கழித்து வா பார்ப்பம்” என்றாள் அம்மா. மனிதனின் பசியை விட காகத்தின் பசி தான் அவளுக்கு முக்கியமாகப் பட்டது. எல்லாம் சனிபகவான் செய்கிற வேலை. மதில் மேல் நாயுக்கு எட்டாத வாறு சாப்பாட்டை வைத்தாள். அவள் முகத்தில் ஒரு திருப்தி. சனி பகவான் வந்துவிட்டார் என்ற திருப்தியோ என்னவோ. நடப்பதை தூரத்தில் இருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 

“உன் பொறுமைக்கு பாடம் கற்பிக்கிறேன். போன கிழமை காய வைத்த மிளகாயை கிளரியதுக்கு என்னை கல்லால எறிந்து துரத்திய உன்னை பழி வாங்காமல் நான் விடப் போவதில்லை; நான் சாப்பிட்டால் தான் நீ சாப்பிட முடியும். நான் பக்கத்து வீட்டை சாப்பிட்டு விட்டேன்” என்பது போல் சாப்பாடு இருந்த பக்கம் பாராமல் வேறு பக்கம் தன்தலையைத் திருப்பி வைத்திருந்தது அக்காகம். பழிவாங்க நினைத்த அக்காகம் என்ன நினைத்ததோ என்னவோ கொடியில் காயப் போட்டிருந்த அப்பாவின் வெள்ளை நிற மல் வேட்டியில் தன் எச்சத்தால் கோலம் போட்டது. அம்மா பார்த்துவிட்டாள். என் செய்வது வந்ததோ ஒரே ஒரு காகம். அதன் மேல் கல் எடுத்து வீசி தன் கோபத்தைத் தணிக்க முடியாதே அதுவும் புரட்டாசி சனிக்கிழமை அன்று சனி பகவானுக்கு எள் எண்ணை எரித்தப் பிறகு காகம் செய்த செயலுக்காக அதை தண்டிக்கலாமோ?. அவர் கோபிக்க மாட்டாரோ?. அப்பாவுக்கு இன்னும் ஏழரைச் சனி முடியவில்லை. காகம் கோபப்பட்டு சனிபகவானுக்கு கோள் மூட்ட, அவர் எதாவது எக்கச்சக்கமாக கடைக் கூறில் செய்து விட்டால். அப்பாவுக்கு எழரைச் சனி முடியும் மட்டும் கவனமாக இருக்கும் படி சாஸ்திரி கூட எச்சரிக்கை செய்தவர். அவள் அதையெல்லாம் யோசித்திருக்க வேண்டும். விருந்துக்கு வந்ததோ ஒரே ஒரு காகம். அதை ஆதரவாக வரவேற்று சாப்பாட்டைக் கொடுக்காவிட்டால் இன்று நாங்கள் பட்டினி . அது சாப்பிட்டு ஏவறை விட்ட பிறகு தான் எமக்கு அம்மா சாப்பாடு போடுவாள். இல்லாவிட்டால் அவள் சுவையாக சமைத்த கறி சோறு ஆறிப் போய்விடும். 

“ அம்மா காகங்களுக்கு மரக்கறி சோறு பிடிக்காது. மீன் அல்லது இறச்சி கறி வைத்தால் அவை மணத்துக்கு உடனே வந்திடும் என்றேன் நான் கிண்டலாக”. 

“ டேய் நீ வாயை மூடு. உனக்குத் தான் இதிலை நம்பிக்கையில்லலை என்றால் சும்மா இருக்க வேண்டியது தானே” அம்மா என்னை அதட்டினாள். 

பாவம் எங்கள் வீட்டு ஜிம்மிக்கு கூட பசி. பாவம் அதுவும் வீட்டோடை விரதம். நாக்கை வெளியே நீட்டிய படி தனக்கு அதில் ஒரு பங்கு கிடைக்காதா என்று தவித்து நின்றது. கலியாணவீட்டு மிச்சச் சாப்பாடும், ஹோட்டல்களில் எஞ்சி இருந்த சாப்பாட்டையும் ஒரு கை காகங்களுடன் போட்டி போட்டுக் கொண்டு சாப்பிடும் ஜம்மிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் மட்டும் காகங்களுக்கு ஏன் இந்த தனிச் சலுகை என்பது விளங்காத புதிராக இருந்தது. லொள் லொள் என்று அடிக்கடி குரைத்தது. கொடியில் இருந்த காகத்தை கேட்டபோது அது சொல்லிற்று “ ஏய் ஜிம்மி நாங்கள் சர்வ வல்லமை படைத்த சனிபாகவானின் அலுவலக வாகனம். அதாவது ஒபிசல் வெகிக்கல். அவர் நினைத்தால் தன் ஏழரை வருட ஆட்சியில் ஆட்களை ஆட்டி வைக்க முடியும். என்னை தாஜா செய்தால் நான் அவருக்கு சிபாரிசு செய்து கஷ்டத்தை அவர் ஆட்சி காலத்தில் கொடுக்காமல் செய்து விடுவேன். அதற்காக எனக்கு எனக்கு ஒரு தனி மரியாதை”. 

“ ஓ அப்ப ஒரு வித ஊழல் என்று சொல்லேன்” என்றது ஜிம்மி. 

“ ஏய் ஜம்மி அதிகம் பேசாதே. உனக்கும் பிரச்சனையை தரச் சொல்லுவன்”. 

“ என்ன என்னை மிரட்டுகிறாயா. நான் எல்லோரையும் பாதுகாக்கும் வைரவரின் வாகனம். அவர் இருக்கு மட்டும் எனக்கென்ன பயம்?” 

“ அப்படியென்றால் வைரவருக்கு பொங்கி படைக்கும் போது உனக்கு என்னைப் போல் ஏன் சலுகை காட்டுவதில்லை?” 

“ ஏன் என்றால் உன்னைப் போல் நன்றியில்லாதவன் அல்ல நான். நாய் ஒரு நன்றியுள்ள மிருகம் எனக் கேள்விப்பட்டிருப்பியே. அது தான் என்னை அன்பாய் வீட்டில் வளர்க்கிறார்கள். உனக்கு வருஷத்தில் சில தினங்களுக்குத் தான் மரியாதை கொடுக்கிறார்கள். மற்ற நாட்களில் கல் எறிந்து துறத்திவிடுவார்கள்”, ஜிம்மி தன் கௌரவத்தை விட்டுக் கொடுக்கவில்லை. 

அம்மாவுக்கு காகம் சாப்பிடாமல் ஜிம்மியுடன் பேசிக் கொண்டிருந்தது புரியவில்லை. ஜிம்மி தொடர்ந்து குரைத்தது. காகம் கரைந்தது. இரண்டும் தொடர்ந்து பேசிக் கொண்டன. அவர்கள் பார்வையில் எனக்குப் புரிந்து அவர்களுக்கு கிடையே உள்ள கௌரவ பிரச்சனை என்று. 

“ ஏய் ஜிம்மி என்னைப் பற்றி மகா கவி பாரதியார் கூட “காக்கைச் சிறகினலே..” என்று பாடியிருக்கிறார். என் நிறத்தில் அழகைக் கண்டு இரசித்திருக்கிறார்.. அதோ கேட்டாயா அந்த காக்கா பாடலை. அது கூட நடிகர் திலகம் தன் முதல் படத்தில் பாடியது. அந்த படம் வந்த போது எங்களைப் பார்த்து ஒற்றுமைக்கு எடுத்துக் காட்டாக பாடுவார்கள்.” 

“ ஒற்றுமையா?” 

“ ஆமாம். உங்களைப் போல் நாலு பேர் கூடினால் வள் வள் என்று குரைத்து கடித்து சண்டை போடமாட்டோம். பிரச்சனையெண்டவுடன் கா கா கா என்று ஒரு குரல் கொடுத்தால் போதும். நாலு திசையிலும் இருந்தும் எம்மினம் பறந்து வந்திடும். ஒரு நாள் இப்படித்தான் ஒரு சிறுவன் மரத்தில் ஏறி கூட்டில் உள்ள என் முட்டைகளைக் களவாடப் பார்த்தான். எனது சகோதரி அதைக் கண்டு விட்டாள். உடனே அவள் போட்ட கூக் குரலில் என் சொந்தக்காரர், நண்பர்கள் எல்லோரும் பறந்து வந்து சிறுவன் தலையில் கொத்தோ கொத்தி இரத்தம் வழிய சிறுவனை ஓடச் செய்து விட்டார்கள். சாப்பாட்டை கூட பகிர்ந்துண்ணுவோம்.” என்றது பெருமையாக காகம். 

“ ஓ கோ. ஆனால் என்னை குளிப்பாட்டி தலை வாரி கவனிப்பது போன்ற மரியாதை உனக்கு நடப்பதில்லையே” 

“ ஏன் இல்லை. என் பெயரில் யாழ்ப்பாணத்தில் காக்கை தீவு என்ற பெயர் உள்ள கடலோரப் பகுதி கூட உண்டு. கிட்டடியில் கொழும்பில் என் இனத்தவர்கள் சிலர் தீடீரென்று இறக்கத் தொடங்கினர். உடனே மாநகரசபை அதற்கு காரணம் கண்டு நடவடிக்கை எடுத்தது. நாம் நகரைச் சுத்தம் செய்யும் தொழிலாளிகளுக்கு ஒரு விதத்தில் உதவி செய்கிறோம். உன்னைக் கண்டால் பிடித்து, கூட்டுக்குள் அடைத்து, கொண்டு போய் விடுவார்கள். மக்களை விசராக்கி விடுவாய் என்ற பயம் வேறு” 

“ ஏய் அப்படி சொல்லாதே நீ கூட தொற்று நோயை பரப்பி விடுவாய் என்று சனங்கள் பயப்பிடுகிறார்கள்.” 

“ நான் பிறருக்கு உதவி செய்யும் இனத்தை சேர்ந்தவன். குயில் கூட என் கூட்டில் தான் முட்டையிடும். நான் அடைகாத்து அதன் முட்டைகளை பொரிக்க வைப்பேன். குஞ்சுகள் வெளி வந்ததும் அவை வளரும் மட்டும் தாதியாக கவனிப்பேன். நீ அப்படி ஒரு நல்ல காரியம் செய்திருக்கிறாயா?” 

“ஏன் இல்லை. என் வீட்டு எஜமானின் குழந்தைகளை என்னை நம்பி எத்தனை தடவை தனிமையாக விட்டுப் போயிருக்கிறார்கள் அது தெரியுமா உனக்கு.?” 

“ ஏய் ஜிம்மி உன்னைப்பற்றி அதிகம் புழுகாதே. என்னைப் பற்றிய காகமும் நரியும் என்ற பிரபல்யமான கதை கேள்விப்பட்டிருக்கிறாயா? 

“ ஏன் இல்லை. நீ நரியால் ஏமாற்றப் பட்ட கதையைத் தானெ சொல்லுகிறாய். அந்த வடைக்கு என்ன நடந்தது?” 

“ அடேய் ஜிம்மி அதையல்ல நான் சொல்வது. ஏ.யீ மனோகரனின் பிரபல்யமான இலங்கைக்காகத்தின் பாடலில் வந்த கதையைப் பற்றி. நரிக்கு காதுலை பூ வைத்துவிட்டு போன புத்தியுள்ள இலங்கை காகத்தின் மொடர்ன் கதை அது” 

அவர்களிடையே நடந்த சம்பாஷணை அம்மாவின் பொறுமையை சோதித்தது. ஜிம்மி காகத்தை சாப்பிட விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. காகமும் கரைநதபடி இருந்தது. அவைகளுக்கிடையே என்ன பேசுகிறார்கள் என நான் கற்பனை செய்துகோண்டேன். அவளுக்கு எரிச்சலைக கொடுத்தது. கீழே கிடந்த கல்லை தூக்கி ஜிம்மி மேல் எறிந்து “ ஓடிப் போ நாயே“ என்று துறத்தினாள். அது வள் வள் என்று கதறிய படி ஓடியது. பார்க்க பரிதாபமாகயிருந்தது. அடுத்த புதன் கிழமை அரசடி வைரவர் வடைமாலை சாத்தி பொங்கல்.. அது தான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. அப்போ பார்ப்போம் ஜிம்மிக்கு அம்மா மரியாதை செய்கிறாவா வென்று. 

ஜிம்மி போனபின்பும் கொடியில் இருந்த காகம் சாப்பிட மறுத்தது. அம்மாவின் கா கா என்ற பரிதாபமான ஓலத்தைக் கேட்டு மனம் இரங்கி இன்னும் இரண்டு காகங்கள் சாப்பிட மதிலில் வந்தமர்ந்தன. கொடியில் இருந்த காகமும் அவையளோடை சேர்ந்து உண்ண ஆரம்பித்தது. 

“ கனகம் எனக்கு பசி வயித்தை பிடிங்குது”, என்று அப்பா உள்ளுக்குள் இருந்து சத்தம் போட்டார். எனக்கு மனதுக்குள் சந்தோஷம். சாப்பிட வீட்டுக்குள் அம்மாவுக்குப் பின்னால் போனேன். ஜம்மியும் அப்பா சொன்னது விளங்கியோ என்னவோ என் பின்னால் வந்தது. நல்லகாலம் எல்லா காகங்களும் முழுதையும் சாப்பிடும் மட்டும் அம்மா நிற்கவில்லை. 

காகங்கள் இல்லாத தேசங்களில் புரட்டாதி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் காகத்துக்கு சாப்பாடு வைக்க என்ன செய்வார்கள் என்று யோசித்தேன். பதில் கிடைத்தது. கலியாணத்தில் பொம்மைப் பசுக் கன்று, வாழை மரம், முருக்கை மரம் வைத்து கலியாணச் சடங்குகள் செய்வது போல் பொம்மைக் காகத்துக்கு சாப்பாட்டை வைப்பார்கள் போலும் என்றது என் மனம். கிட்டடியில் கனடாவில், புரட்டாசிக் சனிக்கிழமை அன்று இரண்டு காகத்தை எங்கிருந்தோ கொண்டு வந்து கூட்டுக்குள் அடைத்து வைத்து கோயிலில் சாப்பாடு வைக்க இரண்டு டொலர் எடுத்ததாக என் அத்தான் போன் செய்த போது சொன்னார். கேட்கும் போது வேடிக்கையாகயிருந்தது. எல்லாம் மக்களின் மூட நம்பிக்கை தான். அதை வைத்து கோயில்கள பிஸ்னஸ் செய்யினம்;. “காக்கைச் சிறகினிலே நந்தலாலா மடைமைத் தனம் தோன்றுதடா நந்தலாலா” என்று எனக்குள் பாரதியார் பாடலை திருத்திப் பாடிக்கொண்டேன். 

******

விதி

 

அன்று 2004 ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி. ஞாயிற்றுக்கிழமை. சிறீலங்காவில்  போயா தின  நாளாகும்;. கொழும்பு கோட்டை ரயில்வே ஸ்டேசனில் பல குடும்பங்கள் தங்கள் ஆண்டு இறுதி விடுமுறையைக் களிக்க பல இடங்களுக்குப் பயணம் செய்ய மூட்டை முடிச்சுகளோடு தாங்கள் பயணிக்கவிருக்கும் சமுத்திரதேவி கடுகதி புகையிரதத்தின் வருகையை எதிர்பார்த்து, 2 ஆம் பிளட்பாரத்தில் காத்து நின்றனர். இக்கடுகதி புகையிரதம் கொழும்பிலிருநது தேற்கு கடற்கரையேரமாக பெலியத்தை வரை பயணிக்கும் சமுத்திரதேவி என்ற பெயரைக் கொண்டது.  சமுத்திரதேவி; கொழும்பில் இருந்து 98 மைல் தூரத்தில் உள்ள பெலியத்தைக்கு காலை 6-45 மணிக்குப் புறப்படுவது வழமை.   சமுத்திரதேவியில் பயணம் செய்ய அன்று எதிர்பாராத கூட்டம் காத்து நின்றது. அதில் பலர் தெற்கே பெலியத்தைக்கு அப்பால் கிழக்கே 95 கி.மீ தூரத்தில் உள்ள கதிர்காம தேவியோ என்ற முருகனைப் தரிசிப்பதற்காகப் போகிறவர்களுக்கு பெலியத்தையில் இருந்து கதிர்காமத்துக்கு பஸ்சேவையுண்டு.. பிளட்பாரத்தில் நின்ற கூட்டத்தில்  சிலர் குடும்பத்தோடு விடுமுறை நாட்களை, இனித்தவர்களோடும் கொண்டாடப் போகிறவர்கள். இருந்தனர்

 

ஸ்டேசன் மாஸ்டராக ரயில்வே இலாக்காவில் பல வருடங்கள் வேலை செய்யும் சேனாதீர, தெற்கே, அம்பலாங்கொடைக்கு அருகே உள்ள போகொட என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மருதானையில் உள்ள புகையிரத போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் கொண்ரோலராக (Traffic Controller) வேலை செய்துவந்தார். தன் மனைவி சந்திரவதியொடும், ஒரே பதினைந்து வயதான மகன் ஜெயவீராவோடும் மருதானையில் வாடகை வீட்டில் வாழ்பவர். சந்திரவதி கொழும்பு பெரிய ஆஸ்பத்திரியில் நேர்சாக வேலைசெய்பவள்.

 

ரயில்வே இலாக்காவில் வேலை செய்வதினால் இலவசமாக ரயிலில் பயணம் செய்வதற்கு  வோரண்டுகள் ( Warrant) வருடா வருடம் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிடைக்கும். அதைப் பயன் படுத்தி தன் குடும்பத்தோடு அடிக்கடி அம்பலாங்கொடையில் உள்ள தன் பெற்றோர் வீட்டிலும் , அனுராதபுரத்தில் உள்ள தன்; மனைவியின் பெற்றோர் வீட்டிலும் விடுமுறையைக் கழிக்க அவர் குடும்பம் போய்வருவது வழக்கம்.

***

சமுத்திரதேவியின் வருகையை எதிர்பார்த்துக்க கொண்டு நி;ன்ற கூட்டத்தில் சேனாதீராவின் குடும்பத்துக்கு  அருகே மூன்று பேரைக் கொண்ட இன்அனாரு குடும்பமும், சூட்கேசுகளோடு சமுத்திரதேவியின் வருகையை எதிர்பார்த்து நின்றது. அக்குடும்பத்தின் தலைவர் சுமார் அறுபது வயது மதிக்கக் கூடிய முதியவர்.

“ இண்டைக்கு டிரேயின் லேட் போல இருக்கு” முதியவர்  பேச்சை சிங்களத்தில் ஆரம்பித்தார்.

 

“ வழக்கத்தில் 6.30 க்கு, நேரத்துக்கு வந்துவிடும்.” சேனாதீர பதில் சொன்னார்.

 

“ அதெப்படி சொல்லுகிறீர்’?

 

“ நான்  ரயில்வே இலாக்காவில், ஸ்டேசன்மாஸ்டராக வேலை செய்பவன். இப்போ மருதானை கொண்டிரோல் ரூமில் வேலை செய்கிறன். அதனாலை தான் சொல்லுகிறன்” சேனாதீரா முதியவர் கேட்ட கேள்வி பதில் சொன்னார்.

 

“ அப்போது நீங்கள் யார் ?…” முதியவர் கேட்டார்

 

“ என்றைப் பெயர் சேனாதீர. இவர்கள் இருவரும் என் மனைவி சந்திரவதியும் மகன்  ஜெயவீராவும்;. நீங்களும் உங்கள் குடும்பமும்; வெகு தூரத்துக்கே பயணம்” ? சேனாதீர முதியவரைப் பார்த்துக்  கேட்டார்.

 

முதியவர் தன்னை  பந்துசேனா  என்று அறிமுகப்படுத்திய பின்னர்; தன் மனைவி சீலாவதியையும், பதினாறு வயதுடைய  மகன்    கருணாத்திலக்காவையும் அறிமுகப்படுத்தினார்.

 

“ நாங்கள் கதிர்காமத்துக்குப் போகிறோம்” என்றார் பந்துசேனா.

 

“ உங்;களைப் பார்த்தால்  ரிட்டயரான கவர்மண்ட சேர்வண்ட் போலத் தெரிகிறது” சேனாதீரா பந்துசேனாவைப் பார்த்துக் கேட்டார்.

 

“ அதெப்படி  உங்களுக்குத் தெரியும் சேனா?”.

 

“ உமது கையில் உள்ள அரசாங்கத்தால் கொடுக்கப்படும் கறுப்பு நிறத் தோல் பாக் சொல்லுகிறதே . நானும் உதைப் போல் ஒரு பாக் வைத்திருக்கிறன்.”

 

“ எனது டிப்பாரட்மெண்டால் எனக்குத் தந்த இந்த லெதர் பாக்; சுமார் இருபத்தைந்து வருடங்களாக எனக்கு சேவை செய்திருக்கிறது. வத்திருக்கிறன். நான் தபால் இலாக்காவில் கிளர்க்காக சேர்ந்து இருண்டு வருஷத்தில் எனக்குக் கிடைத்த உறுதியான பாக். நான் முப்பது வருஷம் வேலை செய்து, பரிபாலன அதிகாரியாக ரிட்டையராகி ஒரு வருஷமாகிறது.”

“ நீங்கள் இருப்பது கொழும்பா”?

“ கொழும்பு 5 நாரஹன்பிட்டியாவில் உள்ள அன்டேர்சன் பிளட்டில் இருக்கிறோம்.  நேர்த்திக் கடனை தீர்ப்பதற்காக கதிர்காமத்துக்குப் போகிறோம்”; பந்துசேனா தங்கள் பயணத்தின் நோக்கத்தைச் சொன்னார். அவர்களின் சம்பாஷணை சிங்களத்தில் தொடர்ந்தது.

 

“கதிர்காம ஸ்கந்த தேவியோ வேண்டுவதைக் கொடுப்பார். ருகுணு மன்னன் துட்டகைமுனு, கதிர்காம தெய்யோவை தரிசித்து இல்லானோடு போருக்குப் போன படியால், போரில் வென்றார். அதுசரி கதிர்காமத்துக்கு எதற்காக நேர்த்திக்க கடன்”? சேனாதீர பந்துசேனாவைக் கேட்டார்.

 

“எல்லாம் எங்கடை மூத்த மகன் சந்திரசேனாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்படி வேண்டுதல் வைத்து நேர்த்திக், கடனை தீர்க்கப் போகிறோம்” பதில் சொன்னாள் பந்துசேனாவின் மனைவி சீலாவதி.

 

“ ஏன் உங்கள் மூத்த மகனுக்கு  ஏதும் சுகமில்லையா”?

 

“என் மகன்  வடக்கில், ஆர்மியில் லாண்ட்ஸ் கோப்பிரலாக வேலை செய்த போது ஒரு தமிழ் மாணவியைக் கற்பழித்து, கொலை செய்த குற்றத்துக்காக வழக்கு நடந்து, அவருக்கும் அவரோடு வேலை செய்த மூன்று சோல்சேர்சுககும் கொழும்பு ஹைக்கோர்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டது“ என்றார் அழாக் குறையாக முதியவர்.

 

“ என்ன சொல்லுகிறீர் ஐயா. உங்கடை மகன் கொலைகாரனா”?

 

“ நான் எப்படி உமக்குச் சொல்லுவது.? அவனை நான் கண்டிப்பாக வளர்த்தனான். எனக்கு அவன் ஆர்மியிலை சேர்ந்தது விருப்பமில்லை. தான் அந்தக் குற்றத்தை செய்யவில்லை என்றும் தனது அதிகாரிகளின் கட்டளைப்படி தான் நடந்ததாகவும், அந்த மாணவியின் உடலைப் புதைத்தாக நீதிமன்றத்தில் என் மகன் சொன்னான். ஆனால் கோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுடைய வழக்கு மனித உரிமை மீறல் என்று காரணம் காட்டி சர்வதேச மன்னிப்புச்சபையால் பகிரங்கப் படுத்தப்பட்டுவிட்டது.

 

“ இப்ப எனக்கு நீர் சொல்லுகிற உம்முடைய மகனுடைய  கேஸ் என் நினைவுக்கு வருகிறது. என்னோடை வேலைசெய்யும் ஸ்டேசன் மாஸ்டர் கணேஷ் என்பவரின்  தூரத்துச் சொந்தக்கார குடும்பத்தில் உள்ள மாணவியைத்தான் உம்முடைய மகனும் இன்னும் சில சோல்சேர்சும் சேர்ந்து  கற்பழித்து, கொலை செய்து, சுடலை ஒன்றில்  புதைத்ததாக அவர் எனக்குச் சொன்னது. நினைவிருக்கு  . அதோடு விசாரிக்கச் சென்ற அந்த மாணவியின் தாயையும், தம்பிiயும், சொந்தக்காரர் ஒருவரையும் கொலைசெய்து புதைத்துவிட்டதாகவும் சொன்னது என நினைவுக்கு இப்ப வருகுது. 1996 இல் நடந்த கொலைக்காக 1998 இல் உங்கள் மகனுக்கும் அவரோடு சேர்ந்த நான்கு சோல்சேர்சுக்கும் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாம். அப்படித்தானே”, சேனாதீர, பந்துசேனாவைக் கேட்டார்.

 

“ நீங்கள் சொல்வது சரி. அவனுடைய செயலால் எங்கள் குடும்பம், எங்கள் ஊரில் தலை காட்ட முடியாமல் போய்விட்டது.  ஊர் மக்களின் விமர்சனத்;துக்கு அளவில்லை. அவமானப்பட்டு விட்டோம் கம்பஹாவில்  இருக்க முடியாமல்; கொழும்புக்கு இடம் பெயர்ந்து விட்டோம்” பந்துசேனா கவலையோடு சொன்னார்.

 

“அப்பீல் செய்யவில்லையா”?,

 

“அப்பீல்செய்தும் சரிவரவில்லை. சுப்பிரீம் கோர்ட் அப்பீலை நிராகரித்து விட்டது. இது அரசியல் கலந்த கேசாகமாறியதும் ஒரு காரணம். இந்தக் கொலை கெஸ் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் என்று பிரபல்யபடுத்தப் பட்டுவிட்டதும்  அப்பீல் நிராகரிக்கப்பட முக்கிய காரணம்”

 

“இப்ப தண்டனை விதித்து 17வருடங்களாகிவிட்டதே. மரணதண்டனை எப்போது நிறைவேற்றப்படும்”?;.

 

“தண்டனைக் கொடுத்து பல வருடங்களாகிவிட்டது என்பது உண்மை. சட்டப்படி மரணதண்டனை நீக்கப்படவில்லை. இப்போதும் மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன.  ஆனால் அரசியல் கரணத்தால் தற்காலிகமாக மரணதண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. எப்போது திரும்பவும் மரணதண்டiயை நிறைவேற்றத்  தொடங்குவார்கள் என்பது தெரியாது. அப்போது என் மகன் உயிர் போய்விடும். நாங்கள் அப்பீல் செய்தும் சரிவரவில்லை. பல கைதிகளுக்கு மரணதண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் அரசு நிறுத்தி வைத்துள்ளது. தினமும் அவன் எப்போது தன்னை தூக்கில் போடுவார்கள் என்று நினைத்து நிம்மதி இல்லாமல் இருக்கிறான். எங்களைப் பார்த்துப் பேசவும் அவனுக்கு விருப்பமில்லை   ”.

 

“அப்போ உங்கள் மகனின் மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் என்று கதிர்காமத்துக்கு நேர்த்தி வைத்திருக்கிறீர்களா”?.

 

“ம்... என் குடும்பமே காவடி எடுப்பதாக நேர்த்தி வைத்திருக்கிறோம். ஆயுள் தண்டனையாகக் குறைத்தால் இன்னும் சில வருடங்களில் அவன் வெளியே வந்துவிடுவான்.”

 

“நானும் உம்மைப் போல்; ஒரு பௌத்தன். எனக்கும் கதிர்காம ஸ்கந்த தெய்யோ மேல் முழு நம்பிக்கை உண்டு. வருடா வருடம் கோயிலுக்கு குடும்பத்தோடு போய் வருவேன்” என்று சொல்லி முடிக்கும் தருவாயில் சமுத்திரதேவி இரைச்சலோடு மேடைக்கு வந்தது.

***

பயணிகள் பிரயாணம் செய்யும் கொம்பார்ட்மென்ட்( Compartment) எனப்படும் எட்டு பெட்டிகளைப் பூட்டிய எண் 591 சமுத்திரதேவி கடுகதி புகையிரதம் சுமார் 1700 பயணிகளைச் சுமந்து கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற  உறுமும் சத்தத்தோடு ஸ்டேசனில் காலை 7.00 மணிக்கு பிளட்போர்மில் வந்து நின்றது. பிளாட்போர்மில் நின்ற பயணிகள் முண்டி அடித்துக்கோண்டு பயணிகள் பெட்டிகளில் ஏறினார்கள்.

 

 இரு குடும்பங்களுக்கும் ஒரே கொம்பார்ட்மென்டில். அருகருகே அவர்களுக்கு சீட்கிடைத்தது, அவர்களுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்;. ஆதனால் அவர்களிடையே சம்பாஷணை தொடர்ந்தது.

“ அதுசரி நீங்கள் எங்கே பயணம்”? பந்துசேனா சேனாதீராவைக் கேட்டார்.

 “ நாங்கள்  அம்பாலாங்கொடையில உள்ள எங்கடை கிராமத்துக்குப் போறோம். எனது தந்தைக்கு  அவ்வளவுக்கு உடம்பு சரியில்லை. சில பிக்குகளுக்குத் தானம் கொடுத்து, மந்திரித்து, பிரித் ஓதி, அவிர்கையில் நூல் கட்ட என் அக்கா ஒழுங்கு செய்திருக்கிறா. அதில் பங்கு கொள்ளக் குடும்பத்தோடு போகிறோம்”.

 

“கொழும்பில் இருந்து வெகுதூரமே அம்பலாங்கொடை’?

 

“கொழும்பில் இருந்து தெற்கே சுமார் 85 கி.மீ தூரம். இரண்டு மணித்தியாலத்தில் போய் விடுவோம். காலியில் இருந்து அம்பாலாங்கொடை 30 கி.மீ தூரம். எங்கடை ஊரிலை தான் ஆர்மியிலை  பீல்ட் மார்ஷலாக இருந்த சரத் பொன்சேக்கா பிறந்தவர். அவர் எனக்குச் தூரத்துச் சொந்தம் கூட.”

 

“நீங்கள் பொளத்தன் என்று சொன்னீரே  ஆனால் உமது உறவினர் பெயர் பொன்சேக்கா என்ற கத்தோலிக்க பெயராக இருக்கிறதே”.

 

“அதெல்லாம் போரத்துக்கோயர் ஆட்சியின் போது  ஏற்பட்ட மதமாற்றமும் பெயர்; மாற்றமும். இன்னும் அந்த போர்த்துக்கேய பெயர்கள் மறையவில்லை”

 

சமுத்திரதேவி தெஹிவளை ஸ்டேசனை தாண்டும் போது  மகன் பசிக்கிறது அம்மா என்று கேட்ட படியால் பந்துசேனாவின் மனைவி சீலாவதி, கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்தாள்.

 

இடியப்பமும், சீனிச்சம்பலும, சொதியும் கொண்டு வந்திருக்கிறோம். எங்களோடு பகிர்ந்து சாப்பிடுகிறீர்களா”? பந்துசேனாவின் மனைவி கேட்டாள்.

 

“வேண்டாம். கேட்டதுக்கு நன்றி.. காலைச் சாப்பாடு முடித்துவிட்டுத் தான் புறப்பட்டு வந்தோம் இன்னும் இரு மணி நேரத்தில் அம்பலாங்கொடைக்கு போய் விடுவோம். அது சரி உங்கள் மகன் எங்கை,  படிக்கிறார்.”?

 

“மகன் ஆனந்தா கொலேஜில் ஏ லெவல் படிக்கிறான்”

.

“என்னவாக உங்கடை மகனுக்கு வர விருப்பம்”?, சேனாதீராவின் மனைவி கேட்டாள்.

 

“எண்டை மகனுக்கு டாக்டராக வர விருப்பம். என்ன வந்தாலும்; தான் ஆர்மியிலை  சேர மாட்டேன் என்கிறான். அவனுக்குத் தன் தமையனுக்கு நடந்தது தெரியும். அவன் படிக்கும் கல்லூரியில் அவனை, ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் கேசைப் பற்றிப் பல கேள்விகள் கேட்கிறார்கள்”.

 

“என்ன செய்வது? குடும்பத்தில் ஒருவருக்கு மரணதண்டனை கிடைத்தால் அதைப்பற்றி சமூகம் துருவித் துருவி கேள்விகள் கேட்பது சகஜம்”

 

“நானும் மனைவியும் எங்கள் மகனைப் படிக்க வெளிநாட்டுக்கு அனுப்புவோமா என்று கூட யோசித்தனாங்கள்.. எனது மனைவியின் அண்ணன் அவுஸ்திரேலியாவில் என்ஜினியனிராக வேலை செய்கிறார். அவர் எண்டை இரண்டாவது மகனை தன்னிடம் அனுப்பும்படி என் மனைவிக்குச் சொன்னவர். அவளுக்கு விருப்பமில்லை.   அவர்தான் எண்டை மூத்தமகனின் கேசுக்கு செலவு செய்தவரும் எனது மனைவியின் அண்ணன்.”

 

“அதுசரி மரணதண்டனை விதிக்கப்பட்டுப் பல வருடங்களாகிவிட்டதே. காலம் தாழ்த்துவதும் ஒரு தண்டனை போலத்தான். சாவைப் பற்றி தினமும் சிந்தித்து சிந்தித்து மனநிலை பாதிக்கப்படலாம்.”

 

“உண்மைதான். அவரைப்போல் பல கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவ காத்துக்கோண்டு இருக்கிறார்கள்.”

 

இரு குடும்பிகளுக்கிடையே சம்பாஷணை அரசியல், வேலை செய்யும் இடம், தாங்கள் வசிக்கும் ஊர், பிள்ளைகளின் படிப்பு, ஆகியவற்றைப் பற்றி இருந்ததினால் நேரம் போனது அவர்களுக்குத் தெரியவில்லை.

 

“அடுத்த ஸ்டேசன் அம்பலாங்கொடை. இன்னும் பத்து நிடங்களில் நாங்கள் இறங்கிவிடுவோம். சந்தர்ப்பம் கிடைத்தால் எப்போதாவது ஒரு நாள் உங்கள் குடும்பத்தைச் சந்திப்போம். இதோ எனது விசிட்டிங் கார்ட் என்று பந்துசேனாவிடம் தன் கார்டை கொடுத்தார் சேனாதீர.

 

“சேனா, என்னடம் விசிட்டிங் கார்ட் இல்லை. இதோ எனது விலாசம் பற்றி விபரத்தை ஒரு பேப்ரில் எழுதித் தருகிறேன்” என்றார் பந்துசேனா.

 

சமுத்திரதேவி அம்பலாங்கோடை ஸ்டசனை அடையும்; போது காலை 9.15 ஆகிவிட்டது.

 

ஐந்து நிமிடங்கள் அம்பலாங்கொடையில் நின்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு சமுத்திரதேவி காலை 9.20க்கு தன் பயணத்தைத் தொடர்ந்தது. அம்பலாங்கொடையில் இருந்து 10 கிமீ தூரத்தில் உள்ள தெல்வத்தை ஸ்டேசனில் சிவப்பு சிக்னல் லைட் எரிந்ததால் தொடர்ந்து பயணத்தைத் தொடரமுடியாமல் சமுத்திரதேவி நிறுத்தப்பட்டது. தெல்வத்தைவுக்கு அருகே உள்ள கிராமம் பெரலிய . புகையிரத வீதியானது கடற்கரைக்கு வெகு அருகில் அமைந்துள்ளது. பிரதான காலி வீதியானது கடற்கரையில் இருந்து சுமார் 200 யார் தூரத்தில் உள்ளது.

 

சமுத்திரதேவியில் பயணம் செய்தவர்கள் கடலை பார்த்தபோது என்றுமில்லாது கொந்தளித்த நிலையில் இருப்பதைக் கண்டார்கள். பந்துசேனாவோடு பயணம் செய்த ஒரு இளைஞன் கையில் இருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவில், சிங்கள வானொலி சேவையில் ஒலிபரப்பான சிங்கள பாட்டுகளைக் கெட்டு இரசித்துக் கொண்டிருந்தான். திடீரென பாட்டு நிறுத்தப்பட்டு, முக்கிய அறிவித்தல் சொல்லப்பட்டது.  அந்த அறிவிப்பாளன் காலை 6.50 மணியளவில்,  இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 9.5 ரிட்சர் ஸ்கேலில் பூகம்பம்; பதிவாகி உள்ளதாகவும், புகம்பம் மையத்தில் இருந்து  250 கிமீ தூரத்தில்  உள்ள பண்டாஅசே என்ற  இந்தோனேசியா மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திதயாகவும், இவ்வலைகள் இலங்கையை நோக்கி வருவதால் எந்த நேரமும் சிறீலங்காவின் கிழக்கு,  தெற்கு, தென் மேற்கு கரையோரப்பகுதிகளை தாக்கலாம் என்று மிண்டும் மீண்டும் செய்தியாளன் அறிவித்தான்;. அதைக் கேட்ட பந்துசெனவின் மகன்; ஜன்னலூடக கடலைப் பார்த்து, “ தாத்தே கடலைப் உடனே பாருங்கள்.  கடற் தண்ணீர் படிப்படியாக வற்றி கடல் பின் வாங்குவதை அவதானியுங்கள். கடல் பறவைகள் வானத்தில் சத்தம் போட்டவாறு கூட்டமாக பறக்கின்றன. மீன்கள் கடல் தண்ணீர் வற்றியதால் துடிக்கிறது தெரிகிறது.  ஏதோ நடக்கக் கூடாதது ஒன்று நடக்கப் போகுது அம்மே. ஏனக்கு பயமாக இருக்குது”, பந்துசேனாவின் மகன் சொல்லி முடித்து சில நிமிடங்களில்; முப்பது அடி உயரமுள்ள பெரிய அலை ஒன்று பேரிரச்சலோடு நிறுத்தப்பட்டிருந்த சமுத்தரதேவி என்ஜினையும்; ரயில் பெட்டிகளையும் அதி வேகத்தோடு தாக்கியது. ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அந்த எதிர்பாராத கடல் அலையின் தாக்குதலை எதிர்பார்க்கவில்லை. ஓரே கூக்குரல்களும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கேட்டது. கடல் நீர், பெட்டிகளை நிரப்பியது. சமுத்திரதேவியின் என்ஜினும், முதல் மூன்று பெட்டிகளும் தடம்புரண்டன.  அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில் 40 ஆடி உயரமுள்ள இரண்டாவது முதல் அலையை விடப் பெரிய அலை வெகு வேகமாக சமுத்திரதேவியை தாக்கியது. மிகுதி இருந்த பெட்டிகளும் தடம்புரண்டு சில அடி தூரத்துக்கு வீசி எறியப்பட்டன. அலைகள் பிரதான வீதியைத் தாண்டி சென்று பல வீடுகளையும் தாக்கி அழித்தது. இரும்பு ரயில் பாதை நெளியும் அளவுக்கு பெரலைகளின் சக்தி இருந்து.

 

சமுத்திரதேவியில் பயணம் செய்தவர்களில் ஒரு சிலரே உயிர் தப்பினார்கள். பந்துசேனா குடும்பம் பேரலைகளில் சங்கமமாயிற்று. மூத்த மகன் செய்த குற்றத்துக்காக ஒன்றும் அறியாத பந்துசேனா குடும்பத்தை இயற்கை பழி தீர்த்துவிட்டதா? விதி அவர்களைத் தாக்கி விட்டதா ?

***

இந்தச் சம்பவம் நடந்த பெரலிய கிராமத்தில் இருந்து வடக்கே சுமார் 15 கிமீ தூரத்தில் இருந்த அம்பலாங்கொடையின்  கடலோரத்தில் இருந்து சில மைல்களுக்கு கிழக்கே இருந்த பொல்கொட கிராமத்தை சேனாதீர குடும்பம் போயடையும் போது பதினாறு மணியாகிவிட்டது. அவரின் உறவினர் குடும்பம் அவர்களை; வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்து நின்றனர்.

அவர்களைக் கண்டவுடன் சேனாதீராவின் அக்கா பெருத்த குரலில் “ ஐயோ கடவுளே உன் குடும்பம் சுனாமியின் தாக்குதலில் இருந்து தப்பித்தது. நீங்கள் செய்த புண்ண்யம் மல்லி ” என்றாள்.

 

“ என்ன அக்கா சுனாமி என்று சொல்லுகிறீர்கள். ஒன்றும் விளங்கவில்லையே”.

 

“ மல்லி (தம்பி), உனக்குச் செய்தி தெரியாதா? நீ வந்த சமுத்திரதேவியை சுனாமி தெல்வத்தையில் தாக்கி சுமார் 1700 பயணிகள் இறந்துவிட்டார்களாம். ஒரு சிலர் தானாம் உயிர்தப்பினார்கள்.”

“என்ன சொல்லுகிறீர்கள் அக்கா. இது உண்மையான செய்தியா’?

“ ரேடியயோவிலும, டிவியிலும்; நியூஸ் போய் கொண்டிருக்கு. வந்து பார்” என்;றார் சேனாதீராவின் மைத்துனர்.

செய்தி கேட்ட சேனாதீர குடும்பம் அதிர்ச்சியில் ஒன்றுமே பேசவில்லை.

“ தாத்தே சுமத்திராவுக்கு கிட்ட கடலுக்கடியில் இன்று காலை 6.50க்கு பூகம்பம் ஏற்பட்டு சுனாமி அலைகள் சிறீலஙகாவை தாக்கும் என்று தெரிந்திருந்தால் ஏன் சமுத்திரதேவியை பயணம் செய்ய உங்கடைகொண்டிரோல் ரூம் அனுமதித்தது”? சேனாதீராவின் மகன் கேட்டான்.

“ மகன் நான் எதைச் சொல்ல?. கொண்டிரோல் ரூமுக்கு சமுத்திரதேவியின் பயணத்தை நிறுத்தும்படி மேலிடத்தில் இருந்து உத்தரவு வந்திருக்காது என நினைக்கிறேன்.”

“அப்போது எங்களோடை நண்பர்களாக மூன்று மணித்தியாலங்கள் பயணம் செய்த பந்துசேனா குடும்பத்துக்கு என்ன நடந்தது”? சேனாதீராவின் மனைவி சந்திரவதி கணவனைப் பார்த்து கேட்டாள்.

“ அவர்களுடைய மகன் செய்த குற்றத்துக்காக, பாவம், ஒன்றுமறியாத பந்து சேனாவின் குடும்பத்தை விதி விட்டு வைக்கவில்லை போலத் தெரிகிறது”, என்றார் சோகத்தோடு சேனாதீர. சில மணித்தியால நட்பின் பாதிப்பு  அவரில் தெரிந்தது.

***

(உண்மைச் சம்பவங்களைக் கருவாக வைத்துப் புனைந்தது) 

சிடுமூஞ்சி சித்தப்பா

              

சிடுமூஞ்சி சித்தப்பா இது என் அப்பாவின் தம்பி  மனோகருக்கு  நான் வைத்த பெயர். ஒரு காலத்தில் வில்லானாக சினிமாவில் நடித்த  மனோகரின் தோற்றம். அரும்பு மீசை.  அதட்டும் குரல் அதே போன்று .  என் சித்தப்பாவுக்கு  இருந்தது.. எப்போதும் சிடு சிடுத்த   முகம். முகத்தில் சிரிப்பையோ  புன்னகையோ  காண முடியாது.  வெறுக்கும் பார்வை. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை . வயது முப்பத்தையின்து. என் அப்பாவுக்கும்  பார்க்க பத்து வயது அவர் இளமை. ஒரே தம்பி என்ற படியால் என் அப்பா அவர் போக்கை பொறுத்துக் கொள்வார். என் அம்மாவும் அப்படித்தான் அப்பா விரும்புவதையே  செய்வாள்.

சித்தப்பாவுக்கு  தான்.பொருளியளில்  எம்ஏ பட்டம் பெற்றவரன் என்ற  பெருமை வேறு . இப்பவும் பல நூல்களைப் படித்த படியே இருப்பார். .அவருக்கு என்று எங்கள் வீட்டில் தனி அறை. அவருக்கு விருப்பமான மாமிம்;,  மீன் உணவை  என் அம்மா தயாரித்து கொடுப்பாள். அவர் விரும்பிய சாப்பாடு  இருக்காவிட்டால் அவ்வளவு தான். சாபிடாமல் முகத்தை நீட்டிக் கொண்டு எழும்பிப் போய் விடுவார்.

என் அப்பா எந்தனையோ  கலியாணங்களை அவருக்குப் பேசி வந்தார். ஆறு பெண்களைப் போய் பெண் பார்த்தும் கலியாணம் சரிவரவில்லை  ஒருவேலை   இவரின் சிடுமூஞ்சியையும் பேச்சையும்  பார்த்து  பெண்கள் இவரை வேண்டாம் என்று சொல்லி  இருக்கலாம்.  சித்தப்பாவுக்கு வீட்டில் என்னோடு  சண்டை. நண்பர்களோடு சண்டை. ஆபீசில் சண்டை. என்ன குணமோ  அவருக்குத் தெரியாது.

 

 டாக்டரின் ஆலோசனைபடி ஒரு ப்ளட்பிரஷர் மெஷின் வாங்கி தன்னை  தினமும் செக் செய்து  கொள்வார். .  கோபத்தில் விஸ்வமித்திர  ரிஷியையும் வென்று விடுவார் இரண்டு நிறுவனங்களில் இடங்களில் நல்ல பதவியில் இருந்து ,தன்னோடு வேலை செய்த இருவரோடு தகாத  வார்த்தைகளால் பேசியதாலும் அவர்களை அடித்ததாலும் வேலையில் இருந்து நிறுத்தப்பட்டார்

.அன்று சனிக்கிழமை. ஹோம் வொர்க் செய்துகொண்டிருந்த  என்னை “ டேய் ஜே இங்கை கெதிலை வா” என்று உரத்த குரலில்  சித்தப்பா கூப்பிட்டார். அவரின்  அறைக்குப் போனேன் “

அம்மாவும் அப்பாவும் என்னை ஜெயம் என்று தான் கூப்பிடுவார்கள். இவர் மட்டும் ஜே என்று சுருக்கிக் கூப்பிடுவார்  சில சமயங்கலளில் டேய்  என்றும் கூப்பிடுவர் . அவர் கூபிட்ட தொனியில் இருந்து அவர்கோபமாக இருக்கிறார் என்று எனக்குத் தெரிந்தது.

“ என்ன சித்தப்பா  ஏன் என்னை கூப்பிடுகிறியல்”? என்று கேட்டவாறு  அவர் ரூமுக்குள் போனேன்,

அவர்  முகம் கோபத்தில் சிவந்து இருந்தது. ஏதோ நடக்கக் கூடாதது ஓன்று நடந்து விட்டது போல் எனக்குத்  தெரிந்தது

“நீ நான் இல்லா சமயம் என் ரூமுக்குள் வந்தனியா?

:” இல்லையே . சித்தப்பா. நான் என் வரவேண்டும்”?

“ போய் சொல்லாதே. நான் வாய்த்த சாமான்கள்  அந்த  அந்த இடத்தில் இல்லையே “  எனக்குத் தெரியாது சித்தப்பா “

:”. உணமையை  சொல்லுவியா இல்லையா . “ என்னை அடிக்க கையை ஓங்கினார்

“உண்மையை தான் சொல்லுறேன்  சித்தப்பா” என்று சொல்லி ஓதுங்கி நின்றேன்:

“ பொய் சொல்லவும் பழகிட்டாயா ”?

“நான் ஒரு போதும் போய் சொல்வதில்லை. எனக்கு உங்கள் அறையில்  ஒரு தேவையும் இல்லை”.

எங்கள் வாக்கு வாதத்தை கெட்’ட அம்மா அறைக்குள் வந்ததை கண்டு அவர் கோபம் சற்று தணிந்தது

” அண்ணி நீங்கள்  என் அறைக்குள் வந்த நீங்களாநீ”?

“ ம்.. வந்தனான் . உன் அறை ஒரே குப்பையாய் இருந்தது. அறையை .தூசி தட்;டி ,   கீழே கிடந்த உன் புத்கங்களை  ஒழுங்காக அடுக்கி வைத்தனான். அது பிழையா:?.

“:பராவியில்லை அண்ணி  . ஆனால் எனக்குச்  சொல்லிவிட்டுச் செய்திருக்கலாமே”

“மனோகர், நீ தான் வீட்டில் இல்லையே . நீ வரும் மட்டும் உன் அறை குப்பையை ஒதுக்காமல் என்னால் இருக்க . முடியாது”  என்று  பதில் சொல்லி விட்டு அவள்  போய் விட்டாள்.

நான் சித்தப்பாவை பார்த்துச் சொன்னேன். “:சித்தப்பா நீங்கள்  முன் பின் தெரியாமல் பல தடவை என் மேல் குற்றம் சொல்லி பேசி இருக்கிறியள். இது சரியான பிழை.”.

“சரி நீ போ” என்று சுருக்கமாக அவரிடம் இருந்து  பதில் வந்தது. .  அவரிடம் மன்னிப்பு   கேட்கும் குணம் இல்லை.

 

*****

“உங்களைத்  தான் அத்தான் . இனி எவ்வளவு காலம் உங்கடை அருமை தம்பியின் போக்கைப் பொறுத்துக் கொள்ளவேண்டும். கெதியிலை மனோகருக்கு ஒரு கலியாணம்  செய்து வையுங்கள் அபோதாவது அவன் குணம் மாறட்டும்” என் அம்மா  அப்பாவுக்கு சொன்னாள்..

“நான் என்ன பாக்கியம் செய்ய ? அவன் குணம் அறிந்து ஒருவரும் அவனுக்குப் பெண் கொடுக்க வருகினம் இல்லை”

 

“நான் ஒன்று சொல்லட்டுமா அத்தான் ”

“சொல்லு “

“ உங்கடை   ஊரிலை உங்ளுக்கு தூரத்துச்  சொந்தத்தில் ஒரு வாயாடி பெண் ஒருத்தி  இருக்கிறாள் என்று சொன்னியளே. நினைவு இருக்கிறதா“?

“நீ யாரை சொல்லுறாய் பாக்கியம் “?

“ வேறு யார்? . உங்கடை பெரியமாவின்டை மருகளின் சித்தப்பாவின் மகளைத் சொல்லுறன். அவள் பெயர் பைரவி. பெயருக்கு ஏற்ற குணம் அவளை. ஒரு தடவை  ஊரிலை நடந்த உங்கடைபெரியமாவின் இளைய ,மகனின்   கலியாணத்தில் பார்த்த நினைவு  எனக்கு. வால் சரியான வாயாடி. ஆனால் . படித்த பிஸ்சி பட்டதாரி என்று உங்கடை சின்னம்மா சொன்னா. அவளை மனோகருக்குப் பேசி முடித்தால் என்ன?. கொஞ்சம் பசை உள்ள இடம் தான். சொந்தத்துக்குள்ளை என்ற படியால் சாதி, சனம் பார்க்கத் தேவை இல்லை. பெட்டையும் ஓரளவுக்கு வடிவு. பொது நிறம்  இவனை விட கொஞ்சம் உயரம் அவ்வளவு தான் ” பாக்கியம் சொன்னாள்

 “ நீர் நல்ல ஞாபகசக்திக்காரி.  அவள் பைரவி ஒரு சயன்ஸ் டீச்சர். என்று எனக்கு தெரியும்  அம்மாவோடை பேசிப் பார்க்கிறேன்.”

“ உங்கடை அம்மா சொன்னால், மனோகர் கேட்பான். அவனைத் திருத்த பைரவி தான் பொருத்தமானவாள் என்று என் மனசு சொல்லுது”

“ ஏதோ என் தம்பிக்கு கலியாணம் நடந்தால் நல்லது தான்”

*****
என் அம்மா பாக்கியம்,  எடுத்த காரியத்தை முடித்து வைப்பதில்  கெட்டிக்காரி. அவள் எங்கள் டவுனில் உள்ள மகளிர் சங்கத்தின் தலைவி வேறு  .தன் கெட்டித்தனத்தால் பல குடும்பப் பிரச்னைகளை விவாகரத்தில் போய் முடியாமல் தீர்த்து வைத்தவள். என் அப்பா அவவின் பாவாடைக்குள் என்று  என் சொந்தக் காரர்கள் சொல்லுவதைக் கேள்விப் பட்டிருகிறேன்

எனக்கு  பைரவி சித்தியைப் பிடித்து கொண்டது. நான் கணிதம்  , பௌதிகம், ஆகிய பாடங்களில்  கொஞ்ச வீக்.  சித்தி எங்கள் குடும்பதுக்குள் வந்த பிறகு அவளின் உதவியோடு நான் அந்த இரு பாடங்களிலும்  அதிக மார்க்ஸ் எடுக்க முடிந்தது. அவள் கொஞ்சம் வாயாடி தான்.. தனக்கு  எது சரிஎன்று  நினைக்கிறாலோ அதில் இருந்து மாற  மாட்டா. .  ஆனால் என்னோடு அன்பாக நடப்பாள். அவள் சொன்ன வேலைகள் எல்லாம் நான் மறுக்காமல் செய்வேன்.  என் அம்மாவையும் அப்பாவையும் மதித்து நடந்தாள்.

சித்தி நல்ல சமையல்காரி. அவள் வந்த பின் வாரத்தில் சனி ஞாயிற்றுக் கிழமைகளை விட மற்று  ஐந்து   நாட்கள் வீட்டில் மரக்கறி மட்டுமே  சமையல் . எல்லா நாட்களிலும் மீன், முட்டை , இறச்சி தேவைப்பட்ட சித்தப்பாவையும்  ஐந்து நாட்கள் மரக்கறி சாப்பிடும் அளவுக்கு  மாற்றி விட்டாள் சித்தி. அவரின் சிகரெட் குடிக்கும் பழக்கத்தையும் நிறுத்தி விட்டாள்.     என் அம்மாவைப் போல் சித்தி துப்பரவு பார்பவள். தினமும் வேலைக்குப் போகமுன் சித்தப்பா குளித்தி சீராக ஆடை அணிந்து போக   வேணும். மாலை நேரத்துக்கு வேலை முடிந்து வீடு திரும்பவேண்டும் காலையில் தாமதித்து எழும்பும் சித்தப்பாவில் திருமணமாகி ஆறு மாதத்துக்குள் ஒரு  மாற்றம். காலையில்  ஆறு மணிக்கே  எழும்பப் பழகி விட்டார்  

சித்தப்பா அடிக்கடி கை கழுவ வேண்டும். என்னை ஜெய் என்று கூபிடுவதி நிறுத்தி ஜெயம் என்று கூப்பிடத் தொடங்கினார் ன்கினர்  இதை எல்லாம்  சித்தப்பா முன்பு செய்யவில்லை. அவரின் போக்கில் பெரும் மாற்றம் ஏற்பட்டது . சிடுமூஞ்சித் தனம்  படிப்படியாக் குறைந்தது.  என்னோடு அன்பாகப் பேசத் தொடங்கினார்

சித்தி வந்த அதிர்ஷ்டமோ என்னவோ அவருக்கு அரசாங்கத்தில் திட்டமிடும்  இலாக்காவில் உயர் அதிகாரியாக வேலை கிடைத்தது. அவருக்கு சித்தியின் பெற்றோர் ஒரு ஹோண்டா மோட்டார் சைக்கில் வாங்கிக்  கொடுத்தார்கள். அதில் சித்தப்பாவும் சித்தியும், மாலையில் பீச்சுக்குப் போவதை கண்டு நானும் என் பெற்றறோரும் சந்தோஷப்பட்டோம். எனது பதினாறாவது பிறந்த நாளுக்கு சித்தப்பாவும் சித்தியும் எனக்கு ஒரு லப்டோப் ஓன்று வாங்கித் தந்தார்கள். நான் அதை எதிர்பார்க்கவில்லை.

“.பாக்கியம் பார்த்தாயா என் தம்பி  மனோகரில் உள்ள மாற்றத்தை.  முந்தி வேலை இல்லாத விரக்தியும், முன்பு அவன்  சாப்பிட்ட  உணவும்  தான் அவனின் சிடு மூஞ்சித் தனத்துக்குக் காரணம். அதை பைரவி மாற்றி விட்டாள். அவளின் வாயாடித்தனம்   இப்போ இல்லை அவளுக்கு என் பாராட்டுக்கள். அதோடு உனக்கும் என் பாராட்டுக்கள் “ என்றார்  அப்பா.

 

“ எனக்கு ஏன் பாராட்டுகள்”?

“நீர் தானே  பைரவியை மனோகருக்கு  தேர்ந்து எடுத்தவள்”

“ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”  என்றாள் அம்மா

*****

 

.

 

 

 .

”.

 

 

 

“சுமி” ஒரு தொட்டாச்சிணுங்கி

 

அன்று திங்கட்கிழமை  காலை ஏழு மணி. நான் வேலை செய்யும் வங்கியில் மோகனுக்கு மனேஜர் பதவி உயர்வு கிடைத்து இரு மாதங்களாகி விட்டன. நேரத்துக்கு ஆபிசுக்கு போக வேண்டும் , அப்போது தான் தனக்கு ரிபோர்ட் செய்யும் இருபது பேருக்கு தான் ஒரு வழிகாட்டியாக இருக்கமுடியும்   . ஆபீசுக்குப் புறப்பட்டு,  அவசரம் அவசரமாக காலை உணவையும் காப்பியையும்  சாப்பிட்டு விட்டு கார் சாவியுடனும், கையில்  குறும் பெட்டியுடனும்   வீட்டில் உள்ள கராஜுக்கு தன் மாமனார் வாங்கிக் கொடுத்த ஹோண்டா காரை எடுக்க  மோகன் வெளிகிட்டான்.  என் சுமி என்று  நான் கூப்பிடும் அவனின் மனைவி    சுமித்திரா அவன்  பின்னால் போனாள்.

 மோகனுக்குத் திருமணமாகி ஒரு வருடமும் ஆகவில்லை. தனிக் குடித்தனம் செய்ய வேண்டும் என்று சுமி வற்புறுத்தி மூன்று அறை உள்ள வீடு ஒன்றை  மாமனார் உதவியோடு வாங்கினான் . “சுமி” தான் நினைத்ததை  அழுதோ அல்லது முகத்தை நீட்டியோ  சாதித்து விடுவாள்.

சுமி  வசதி உள்ள பெற்றோருக்கு ஒரே மகள் .கலைப் பட்டதாரி. தனியார் கல்லூரியில் ஆசிரியை வேலை கிடைத்தும் மோகனை கவனிக்க வேண்டும் என்று வேலைக்குப் போக மறுத்து விட்டாள்.  அதோடு சீதனத்தோடு  வந்தவள். பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும் அவளின் சிரிப்பிலும், பார்வையிலும் மயங்கியவன் மோகன்.  சுமி அதிகம் பேச மாட்டாள். எதையும் உண்ணிப்பாக  கவனிப்பாள். எப்போதும் கணவன்  மேல் ஒரு சந்தேகப் பார்வை. “என் புருஷன் எனக்கு மட்டும் தான்” என்ற போக்கு உள்ளவள் என்பதை  திருமணமாகி  ஒரு மாதங்களுக்குள் மோகன் அறிந்து கொண்டான். அவன் மேல் சுமிக்கு அளவு கடந்த அக்கறையும், பற்றும். மோகனின்  உணவு,  ஆடை ,அவன் பழகும் நண்பர்கள் மேல் ஒரு அவதானிப்பு . எங்கே போகிறான்,  எங்கிருந்து வருகிறான். யாருடன் பேசுகிறான் எல்லாம் அவளுக்கு அவன்   சொல்லியாகவேண்டும்   அதுவும் அவன்  பேசுவது  அவள் வயது  பெண்ணாக இருந்தால் பிறகு வீட்டில் வழக்கறிஞர் போல் பல கேள்விகள் கேட்பாள் .  என்ன சாப்பிடுகிறான்?,   யாரோடு மோகன் பேசுகிறான் என்று தன் கடைக்  கண்ணால் கவனித்துக் கொள்வாள். சற்று ,மோகன்  உரத்துப் பேசி விட்டால் பொல போல வென்று  அவள் கண்களில் கண்ணீர் கொட்டும்.

மோகன் வீட்டுத் தோட்டம் நிரம்ப  தொட்டாச்சிணுங்கிச் செடிகள். அவற்றைச் சுட்டிக் காட்டி . சுமி நீரும் அசெடிகளில் ஓன்று என்று மோகன்  சீண்டுவான் . அவளைச் சீண்டி  வேடிக்கை பார்ப்பது அவனக்கு விருப்பம். அது ஒரு வகை ஊடல் .

சுமி என்று அவளை கூப்பிடாமல் “தொட்டாச்சிணுங்கி இங்கே வரும் உம்மை நான் தொடலாமா” என்பான் மோகன்   . தன்னைத்  தொட்டா சிணுங்கியோடு மோகன்  ஒப்பிடுவது அவளுக்குப்  பிடிக்காது.  பிறகு சில மணி நேரம் அவனோடு பேச மாட்டாள். அவன் போய் பேசினால்,  தொட்டாச் சிணுங்கிச் செடியின் இலைகள்  சில நிமிடங்களுக்கு களுக்குப் பின் சுய நிலைக்கு வருவது போல் அவளும் சுய நிலைக்கு வருவாள்  சற்று கர்வம் உள்ளவள். என்ன செய்வது. தாலி கட்டியாகி விட்டது  . மோகன்  ஒத்துப் போக வேண்டியது தான். ஒரு  பிள்ளை பிறந்தால் அவள் மாறி விடுவாள் என்று மோகனின் பெற்றோர் அவனுக்குச்  சொன்னார்கள்

 தான் ஏதும் மோகனுக்குச் சொல்லலாம். கேள்விகள் கேட்கலாம்.  ஆனால் மோகன் மட்டும் தன் கருத்தை அவளுக்குச் சொல்ல அனுமதி இல்லை. தன் கோபத்தை அழுகை மூலம் காட்டுவாள். தாங்க முடியாவிட்டால் ஓடிப் போய் அறைக்குள் படுத்து விடுவாள். எல்லாம் பெற்றோர் வளர்த்த வளர்ப்பு. நல்ல காலம் மோகனின்  அப்பாவும் அம்மா அவர்களோடு இருக்கவில்லை. இருந்திருந்தால் தினமும் மாமி மருமகள் சண்டையை தீர்த்து வைக்க மோகனுக்கு நேரம் சரியாக இருந்திருக்கும் மோகனின் அம்மா கண்டிபானவள். மகன் மேல் உள்ள தன் அன்பை வேறு  ஒருத்தி பங்கு போடுவது அவளுக்குப் பிடியாது.

*****

மோகனின் சாம்சுங் செல் போன் மணி   அடித்தது. அவன் பெசினான்

“எஸ்  மோகன்  ஸ்பீக்கிங் ஹியர்.”

“........”

“சரி ஒன்பது மணிக்கு முன்பே நான் நிறப்பேன்”  

“........”

 “என்ன?  இன்று மாலை நாலு மணிக்கு ஜெனரல் மனேஜர் வருகிறாரா. எனக்கு அவரிடம் இருந்து மெசேஜ் வரயில்லையே  ”?

“........”

 “சரி முக்கிய பைல்களை என் மேசையில் எடுத்து வையும் மாலதி”

“........”

 “லஞ்சுக்கு வருவேன். நீரும்  வருவீர் தானே”  

“........”

 “அப்போ அதைப் பற்றி  பேசுவோம்”

“........”

“ சரி பை”

போனில் பேசி முடிந்து குறும் பையுடன் மோகன் புறப்படும் பொது

“அத்தான்  யார் உங்களோடை  பேசினது”?: சுமி கேட்டாள்

“அது என் செக்கரட்டரி. ஏன் “?

“அவள் பெயரா மாலதி” ?

“ம்ம்”..

“என்ன வயசு”?

“ஏன்  அவளுக்கு கலியாணம் பேசப் போறீரா”?

“இல்லை சும்மா கேட்டனான்”

“அவளுக்கு வயசு இருபத்தி இரண்டு. உம்மிலும் ஒரு வயசு இளமை”

“ அவள் வயசு உங்களுக்கு  எப்படித் தெரியும்”?

“சென்ற புதன் கிழமை அவளின் பிறந்தநாள். அன்று  ஆபிசில் கேக் வெட்டி கார்ட் கொடுத்து கொண்டாடினார்கள்  அதனால் அவள் வயசு தெரியவந்தது  “

“ ஓ கோ . அப்போ கேக்கும் கார்ட்டுக்கும்   செலவு செய்தது  நீங்களா ?

”ஆபிசில் வேலை செய்யும்  எல்லோரினதும் காசு அது. இன்னும் கேள்விகள் இருக்கா”? மோகன் தன் பொறுமையை  இழந்தான் . அவன்  குரலில் கோபம் தொனித்தது

“ எப்ப இருந்து அவள் உங்கள் செக்ரட்டரி”?

“வங்கியில் அவள் சேர்ந்து மூன்று மாதம்.  சேர முன் அவள்  ஒரு மாடல்’ இன்னும் விபரம் தேவையா”?

“இண்டைக்கு லஞ்ச் வெளியிலையா”?

“ ம்ம்ம்”:

“அப்போ உங்களுக்கு சாப்பாடு அனுப்ப வேண்டாமா?

“வேண்டாம். எனக்கு  நேரம் போகுது நான் வாறன் “

அவளிடம் இருந்து மேலும்: , கேள்விகளை எதிர்பார்க்காமல் வீட்டில் இருந்து  மோகன் புறப்பட்டான். .

அவ்வளவு தான். சுமி அழுது கொண்டு அறைக்குள் போய் படுத்து விட்டாள். வேதாளம் முருக்கை மரம்  ஏறிவிட்டது . இனி கீழே இறங்க சில மணி நேரம் எடுக்கும் இறங்கும் மட்டும் மோகன் ஆபிசுக்கு போகாமல் இருக்க முடியாது

****

பல தடவை மோகனுக்கும் சுமிக்கும் இடையே நடக்கும்  கேள்வி பதில்  போர்களில் இதுவும்   ஓன்று. . மோகன்  ஒரு போதும் அவளிடம் இப்படியான  கேள்விகள் சந்தேகத்தில் கேட்டதில்லை. அவனுக்குத் தெரியும் அவள் தன் மேல் உள்ள அன்பின் நிமித்தம் இப்படி நடக்குறாள் என்று.

ஒரு நாள் தனது  பிரச்சனையை மனநல மருத்துவரராக இருக்கும்  நண்பன் டாக்டர் சிவராமிடம் சொல்லி  மோகன் கவலைப்  பட்டான்.

“மோகன் உன் மனைவி தொட்டதற்கு எல்லாம் கோபப்டுவளே ; கத்துவாளே,  அழுவாளே. துருவித் துருவி  கேள்விகள் கேட்பாளே   .அவளிடம் எதைச் சொல்வது என்று உனக்குத் தயக்கமாகவும் , பயமாகவும் இருக்குமே ”? டாக்டர் சிவா கேட்டான் 

 

 “நீ சரியாக  சொன்னாய் சிவா. இதுக்கு  ஏதும் மாற்று வழி ஏதும் ' உண்டா  சிவா “ ?. மோகன் கேட்டான்

“உணர்வு மற்றும் உணர்ச்சி என்பது, உடல் சார்ந்தது. உணர்ச்சியை உணரவும், அனுபவிக்கவும் அளவு உள்ளது.  அது, ஒவ்வொரு மனிதனுக்கும் மாறுபடும். அந்த அளவை வைத்து தான் ஒருவரை, 'தொட்டாச்சிணுங்கி' அல்லது 'எருமை மாட்டுத்தோல்' என்று கூறுகிறோம். சுரனை இல்லை என்கிறோம்  எங்கெங்கு, உரிமை இருக்கிறதோ, சலுகை எடுத்துக்கொள்ள முடியுமோ, அங்கெல்லாம் உணர்ச்சிகளை கட்டுப்பாட்டோடு வெளிப்படுத்த வேண்டும். அந்த .அடிப்படையில் தான், ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாட்டை, அலசி ஆராய வேண்டும் . பொதுவாக, எரிச்சல்படுகிறோம் என்றால், அங்கு உரிமை அதிகம் என்று அர்த்தம்.
தொட்டால் சிணுங்குவதே உரிமையின் அடையாளம். அதை சீர்படுத்த வேண்டியது, உரிமை உள்ளவர்களின் கடமை.

.அவர்களின்   நிலைமையைப் புரிந்து கொண்டு, தீர்வு காண வேண்டும் . அப்போது தான், இணக்கம் மற்றும் நெருக்கம் எற்படும் . யாரிடம் நமக்கு உரிமை இருக்கிறதோ, அவர்களை சரிசெய்ய வேண்டியது, நமது கடமையும் பொறுப்பும் கூட. அதை விட்டுவிட்டு, வெறுப்பை வளர்த்தால், அது இருவருக்குமே இழப்பாகவே முடியும். தொட்டால் சிணுங்குவதே உரிமையின் அடையாளம். அதை சீர்படுத்த .'வேண்டியது, உரிமை உள்ளவர்களின். கடமை. அதை, உரிமை உள்ளோர் புரிந்து கொள்ளாமல், 'என்னை புண்படுத்திவிட்டான்' என்று, வெறுப்பை வளர்த்து கொள்கின்றனர்.. யாரிடம் நமக்கு உரிமை இருக்கிறதோ, அவர்களை சரிசெய்ய வேண்டியது, நமது கடமையும் பொறுப்பும் கூட . அதை விட்டுவிட்டு, வெறுப்பை வளர்த்தால், அது இருவருக்குமே விவாகரத்தில் போய் முடியும் மோகன்”

“அப்போ என்னை என்ன செய்யச் சொல்லுறாய்  சிவா.”?

“ உன் புத்தியை பாவித்து உனக்கு அவள் நிலை ஏற்பட்டால் அவளுக்கு எப்படி இருக்கும் என்பதை அவள் உணர ஒரு சூழலை உருவாக்கி  அவளை  உணரவை. சிலசமயம் அவள் அதை உள்வாங்கி மாறினாலும் மாறலாம். முயற்சித்துப்  பார்  மோகன் “ டாக்டர் சிவா  அறிவுரை சொன்னார்.

****

 

அன்று வேலை முடிந்து மோகன் மாலை ஆறுமணிக்கு வீடு திரும்பிய பொது சுமி தன் மாமன் மகனோடு பேசிக் கொடிருந்தாள்

“ அத்தான்  இவரை எங்கள் கலியாணத்தில் கண்டிருபீர்களே;. இவர் என் அம்மாவின் அண்ணாவின் மகன் ரமேஷ். மார்க்கெட்டிங் அமெரிக்கன் கொம்பனி ஒன்றில்  டிரெக்டராக இருக்கிறார். எம் பி ஏ செய்தவர் ”

“அப்படியா:”?

 “எனக்கு இரண்டு வயசு மூப்பு.”

“அப்படியா:”?

“சிறு வயதில் என்னோடு சேர்ந்து கரம் விளையாடுவார் 

 “அப்படியா:”?

“ இன்னும் இவர் கலியானம் செய்யவில்லை :

 “அப்படியா:”?

 “ உங்களுக்கு தெரிந்த வடிவான பெண் யாரும் இருந்தால் சொலுங்கோ”

“ பார்ப்போம்”

“ உங்க செக்ரட்டரி மாலதி பாங்கில் சேர முன் மொடலிங்க் செய்ததாக சொன்னீர்கள் அவளைப் பேசினால் என்ன ”?

“ நான் கலியாணத்  தரகன் இல்லை” என்று சுருக்கமாக பதில் சொல்லி விட்டு மோகன்  அறைக்குள் போனான் . சுமியின் முகம் சுருங்கியது.  கண்களில்  கண்ணீர் வந்தததை . அடக்கிக் கொண்டாள் ரமேஷ் இருந்த படியால் அவளுக்கு அழுகை வரவில்லை;. அதைத் தான் மோகன் எதிர் பார்த்தான்

ரமேஷ் போனபின் சுமி காப்பியோடு மோகனிடம் அறைக்குள் போனாள்
“உன் மாமன் மகன் ரமேஷ் போயிட்டானா”? மோகன் சுமியிம் கேட்டான்

“போய்விட்டான் அத்தான். அவனுக்கு தான் என்னிடம் வந்தது உங்களுக்கு பிடிகவில்லை  போல் இருக்குது என்று சொல்லிப் போய் விட்டான். நீங்கள் அப்படி அவன் முன்னால்

மரியாதையில்லாமல பேசி இருக்க கூடாது

 “ இப்ப புரியுதா சுமி உமக்கு. என்னிடம் நீர் ஆயிரம் கேள்விகள் கேட்டு நான்  பதில் சொல்லாவிட்டால் அழுது கொண்டு அறைக்குள் போய் விடுவீரே அது மரியாதைக் குறைவில்லையா  ? . எனக்கும் உணர்ச்சி என்று ஓண்டு உண்டு. நீர் உம் மனதில் அதைப் பற்றி யோசித்துப் பாரும்.  தனக்கு ஓன்று என்று வந்தால் மனம் படக் படக் என்று அடிக்கும். ரமேஷை அவமானப்  படுத்த வேண்டும் என்பது என் நோக்கமில்லை. அவனை எனக்கு  முன்பே தெரியும். அவனின் கொமப்னிக்கு லோன் எடுக்க என்னிடம் வந்தவன். அதன் பின் அவன் என்னோடு அடிகடி பேசியும் இருக்கிறான். இதெல்லாம் நான் உனக்கு சொல்லவில்லை”.

“நீம்கள் சரியான கள்ளன் அத்தான் : உங்களுக்கு பிடித் ஊத்தப்பமும், சட்னியும். கிழங்கு கறியும் , பால் பாயாசமும் செய்து வைதிருகிறேன். குளித்துப் போட்டு கேதியிலை சாப்பிட வாருங்கோ  நான் உங்களுக்காக காத்துக் கொண்டு இருகிறேன். அதோடு ஒரு நல்ல செய்தியும் ஓன்று  சாப்பிடும் பொது  சொல்லப் போறன். செய்தியை சொல்லாமல்  சுமி சமையல் அறைக்குப் போய் விட்டாள்.

அதுதான் பல மாதங்களுக்கு பின்  முதல் தடவை  சுமியின்  பேச்சிலும் முகத்திலும் செந்தலிப்பை மோகன்  கண்டான் சிவா சொன்ன படி தான் வைத் ப்ரஎத்கஹ்யில் சுமி சித்தி அடைந்து விட்டாளா என பொருது இருந்து மோகன் பார்க்க வேண்டும்


*****

மோகனும் சுமையும் சிரித்து பேசியபடி இரவு போசனத்தை

ரசித்து சாபிடுகோடு இருந்தர்கள்

: அது சரி நீ நாள் சித்தி ஓய்ந்ற்று இருக்குது என்றயே என்ன செய்தி அது:

:அட்டஹன் எண்களுக்கு ஒரு வாரிசு வடப் போறன். அவன் இருந்தால் எனக்ளுகுள் சண்டை ச்காரவு வரத்து

: நல்ல செய்தி சொன்னாய் சுமி . தொட்டாச்சிணுங்கி பூத்து விட்டது  என்று சொல்லி அவளைக் கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தான் . அவள் முகம் மலர்ந்தது

*****

தாலி

மீன்காரி பொன்னி மகள் சினத்தங்கத்துக்கு வயது இருபது. ஊரில் நடக்கும் அழகு ராணி போட்டியில் தங்கம் பங்கேற்றிருந்தால் அவளுக்குத்தான் தங்கப் பதக்கம் . சினிமாக்காரனின் பார்வையில் அவள் பட்டிருந்தால் அவள் வாழ்க்கை வேறு. பொன்னிக்கு அவள் ஒரே ஒரு மகள். வயது வந்த காலத்தில் மூட்டையைச் சுமந்து கொண்டு யாழ்ப்பாணம் பெரிய கடைக்குப் போய் மீன் விற்கமுடியாத நிலை பொன்னிக்கு. பொன்னியின் கணவன் பொன்னையன்; பத்துவயது மகளையும், மனைவியையும் நிர்க்;கதியாக விட்டு விட்டு, கொழும்புக்கு வியாபாரம் செய்யப் போனவன், போனவன் தான் வீடு திரும்பவே இல்லை.

பொன்னையனை கொழும்பிலை கண்ட பொன்னியின் தூரத்துச் சொந்தக்காரன் சண்முகம்; சொன்னான் “பொன்னி, உண்டைப் புருஷன் பொன்னையன் கொழும்பலை சீலாவதி என்ற பணக்கார சிங்களத்தியோடை குடும்பம் நடத்துவதை நான் கண்டனான். இனி அவன் திரும்பி உன்னிடம் வருவான் என்று எதிர்பாராதே” .

“சண்முகா நீ சொல்வது உண்மையாக இருக்கலாம். நான் எப்பவோ அவனைத் தலை முழுகி விட்டிட்டேன.; அவன் கட்டிய தாலியைக் கூட களட்டி எறிந்து விட்டேனே. இப்ப எனக்கு உறவு எண்டு இருப்பது என் மகள் தங்கம் ஒருத்தி மட்டும் தான். இந்த தள்ளாத வயசிலை நான் பெரியகடைக்கு கூடையைச் சுமந்து கொண்டு போய் மீன் விற்கமுடியாத நிலை. இவள் தங்கம் தான், மீன் கொண்டு போய்; விற்கிறாள். என்னைவிட அவளிடம் மீன் வாங்க வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகம். அதாலை எதோ வரும் வருமானத்திலை தங்கத்தின்டை கலியாணத்துக்குக் காசு மிச்சம் பிடித்து கொண்டு வாறன்” என்று பொன்னி சண்முகத்துக்குச் சொன்னாள்.

பொன்னி மகள் சின்னத்தங்கம் நளினச் சிரிப்புக்காரி. நறுக்கென்ற பேச்சுக்காரி. ஆடவர் கண்வீச்சுக்கு அலட்சியப் பார்வைக்காரி. காளையரைக் கவரும் கட்டுடலும், திரண்டு புடைத்த பின்னழகும். முத்துபோல்; பல்வரிசையும,; கொவ்வைச் சொண்டுகளும். கிள்ளத் தோன்றும் கன்னங்களும். தலைமேல் மீன் கூடையோடு, தாளம் தவறாத நடை யோடு; கைவீச்சும்,  அதற்கேற்ப அசைபோட்டு ஒடிந்துவிடும் இடை தெரிய, பெரிய கடையை நாடி ஒயிலாகப் போய்ச் சேர்வாள்.       

மீன் கடையில் வியாபாரம் செய்த பல பெண்களில் தங்கத்துக்கு; மீன் வாங்க வருபவர்களிடையே ஒரு தனி இடம் இருந்ததுக்கு முக்கிய காரணம்  சிரித்து மீனைப் பேரம் பேசும் அவள் அழகுதான். அவள் சிரிப்பிலும், பார்வையிலும் அவளின் கைப்பட வாங்கும் மீனைச் சமைத்தாலே தனிச்சுவை எனக் கருதி  அவளிடம் மீன் வாங்குவதற்காகவே நான் முந்தி நீ முந்தி என்று மல்லுக் கட்டிக் கொண்டு நிற்பார்கள் அவள் அழகை இரசித்தபடி வாடிக்கையாளர்கள். அதை பார்த்து மற்ற மீன்காரிகளுக்குப் பொறாமை வேறு. ஆனால் அவள் அருகே இருந்து மீன வியாபாரம் செய்யும் மீனாட்சிக்கும் மட்டும்; தங்கத்தின் மேல் ஒரு தனிப்பற்று. காரணம் அவள் உள் நோக்கம் வேறு. பஸ்டிரைவராக இருக்கும் ஆண் அழகனான தன் அண்ணன் சுந்தரத்துக்கு தங்கம்தான் பொருத்தமானவள் என்று எப்பவோ மீனாட்சி தன் மனதுக்குள் தீர்மானித்துவிட்டாள். அதனால் அடிக்கடி தன் தமையன் சுந்தரம் தன் மேல் எவ்வளவுக்குப் பற்றுதல் வைத்திருக்கிறான் என்றும், சிகரட், பீடி ,குடி என்று கெட்ட பழக்கங்கள் இல்லை என்றும், சிக்கனக்காரன் என்றும் தமையனை அடிக்கடி புகழ்பாடுவாள் மீனாட்சி. தங்கம் அதைக் கேளாதவள் போல்; தன் வியாபாரத்தில் கவனமாக இருப்பாள்.

மைனர் மாணிக்கம் கழுத்தில் தங்கச் சங்கிலிமின்ன, தன் தங்கப் பல்லை சிரித்துக் காட்டியபடி , தினமும் தங்;கத்திடம் மீன் வாங்க வரும் முக்கியமான பிரமுகர்களில் ஒருவன்.

“ என்ன தங்கம் நீ உடுத்திருக்கிறது புதுச் சீலை போலத் தெரியுது. அதுக்கு ஏற்ற பிளவுசு வேறை போட்டிருக்கிறாய். உண்டை நிறத்துக்குப் பொருத்தமான சீலைதான்.   சீலை விலை அதிகமோ? நான் தரட்டே சீலையின்றை காசை”, இளித்தபடி கேட்டான் மைனர் மாணிக்கம்.

“அய்யோ வெண்டாம் மைனர் உம்முடைய காசு. நான் உழைத்து; மிச்சம் பிடிச்சு வாங்கின சேலை இது”இ நறுக்கென்று தங்கம் பதில் சொன்னாள். முகத்தை சுழித்துக்கோண்டு பேசாமல் போனார் மாணிக்கம்.

மாணிக்கம் போன பின், மீன் வாங்க வந்தார் வட்டிக் கடை வடிவேலு. “என்ன தங்கம் எப்படி இண்டைக்கு வியாபாரம்? அதிக மீன் வாங்கி விற்கக்  கடனாய் பணம் வட்டியில்லாமல் நான் தரட்டே. நீ நினைத்த நேரம் திருப்பித்தாவேன்” சிரித்தபடி கேட்டார் வடிவெலு.

“ ஐயோ வேண்டாம் உம்முடைய காசு வடிவேலு ஐயா.. அதைச்சாட்டி  அடிக்கடி என்னோடை பேச நீர் வருவீர்.” தங்கம் குனிந்தபடி பதில் சொன்னாள்;. தங்கம் பார்வை தன் மேல் விழாததைக் கண்ட வடிவேலு ஏமாற்றத்தோடு மீன் வாங்காமல் அவ்விடத்தை விட்டு நகர்ந்தார்.

அடுத்து வந்தார்  மீன் வாங்கக் கையில் உமலோடு விதானையார் வினாசித்தம்பி. இரு தடவை திருமணம் செய்து விவாகரத்து செய்தவர். பெண்களைக் கண்டாலே சபலப் புத்தி அவருக்கு.

“என்ன தங்கம் உண்டை  முகத்தில் இண்டைக்கு வாட்டம். வேலை என்ன உனக்கு கனத்துப் போச்சோ? நான் வரட்டே உனக்கு உதவி செய்ய”?. கரிசனையொடு கேட்டார் விதானையார் வினாசித்தம்பி.

“ ஐயோ வேண்டாம் விதானையார் எனக்கு உம் உதவி. கேட்டதுக்கு மிகவும் நன்றி.’ நறுக் என்று பதில் சொன்னாள் தங்கம் தன் முகத்தை உம்மென்று  வைத்தபடி.

“என்ன குஞ்சுவை கனகாலாம் காணோம். காய்ச்சல் ஏதும் வந்ததோ உனக்கு? மருந்து வாங்கிக் கொண்டு வந்து நான் தரட்டே உனக்கு  இது அடுத்து வந்த கவலையுடன் கலியாணமாகாத கந்தையர் கேட்டார்.

“மருந்தும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். தினமும் நான்  மீன் கூடை சுமந்து மீன்  விற்கக் கடைக்கு வருகிறேன். உமக்கு நான் இருப்பது தெரியவில்லையோ” கோபத்தோடு பதில் சொன்னாள் தங்கம்.

அடுத்து மீன் வாங்க வந்தவர் போஸ்ட் மாஸ்டர் சின்னையர். அவர் கேட்டார் தங்கத்தைப் பார்த்து “ என்ன தங்கம் கையிலை கிளிட்டு வளையல்? தங்கத்துக்கு  இரண்டு பவுனிலை நல்ல தங்க வளையல் நான் வாங்கித்தரட்டே”?.

“நீர் முதலிலை உம்முடைய மனுசிக்கு வளையல் வாங்கிக் கொடும். நூன் அவவுக்கு சொல்லுகிறன நீர் எனக்கு வளையல் வாங்கித்தரவோ என்று கேட்டதாக” என்றாள் சிரித்தபடி தங்கம்.

ஒன்றும் பேசாhமல மீன் வாங்காமல் போனார் சின்னையர்.

“ என்ன விலை கயல்மீன் தங்கம்? மீனின் கண்கள் உன் விழிகள் போல இருக்கிறதே” நக்கல் நடராசர் கேட்டார் தங்கத்தைப் பார்த்து.

மீனின் விலையைக் கூட்டி  சொன்னாள் தங்கம்.

“உனக்கும் சேர்த்தோ மீனின் விலை. அப்படி என்றால் நீ சொன்ன விலைக்கு நான் வாங்கத் தயாh” என்றார்; நக்கல் பேர்வழி நடராசர்;

“ நான சொன்ன விலைக்கு நீர் காசு தந்தாலும் மீன் உமக்கு நான் ; தரப்போவது இல்லை. திரும்பிப் போம் வந்த வழியே.” கோபத்தோடு பதில் சொன்னாள் தங்கம்.

வாடிக்கையாளர்களின் வேடிக்கைக் கேள்விகள் அம்பு போல் அவளைத் தைத்து நின்றன. என்ன கரிசனம் அவள் மேல் அவர்களுக்கு. அவர்கள் பேச்சினில் தான் எத்தனை வம்பு.

 தங்கம் தன் பிளவுசுக்குள்; கையை வைத்தாள். அதைப் பார்த்த அவள் வாடிக்கையாளர்கள் ல்லோரும் விட்டனர் பெருமூச்சுக்கள். வெளியே எடுத்தாள் தங்கம் தன் மார்பகத்தே மறைத்து வைத்திருந்த தாலிக்கொடியை.

 சத்தம் போட்டு எல்லோரும் கேட்க தங்கம் சொன்னாள் “என் புருஷன்  தந்த பாதுகாப்பு இது. அவர் கையால் கட்டிய தாலியிது. இப்ப நான் ஒருவனுக்குச் சொந்தம். கொஞ்ச நேரத்தில் என் அத்தான்  வருவான் என்னை கூட்டிப் போக. அப்போ கேளுங்கள் கேள்விகளை அவரிடம் மறக்காமல். சரியான பதில்களைத் அவர் தக்கபடி தருவார்”.

 கேள்வி கேட்டவர்கள் அனைவரையும் அடுத்த வினாடி அந்த இடத்தில் காணோம். வேறு தங்கத்தை தேடிப்போயினரோ? தங்கத்தின் மச்சான் வரமுன் விரைந்து ஓடினரோ?

 மீனாட்சிக்கோ தங்கம் சொன்னதைக் கேட்டு ஒரே அதிர்ச்சி. “என்னடி தங்கம்.; உனக்குத் திருமணம் எப்பவடி நடந்தது? உண்மையை  எனக்குச் சொல்லடி”.

 கேள்வி கேட்ட மீனாட்சியைப் பார்த்து கெக்கட்டம் விட்டுச் சிரித்தாள் சின்னத்தங்கம்.

 “என்ன அக்கா உனக்குத் தெரியாமலா எனக்குத் திருமணம்? விரலி மஞ்சளில் கயிற்றால் கட்டிய தாலியும், ஒரு கொஞ்சம் குங்குமமும் பலர் பார்வையிலும் கொஞ்சலிலுமிருந்து என்னைக் காக்கத்தான் இந்தத் போலித்  தாலி. இந்தத் தாலி எனக்கு ஒரு வேலி”.

 (பி.கு: நான் எழுதிய கவிதையை மாற்றத்தோடு உருவாக்கிய சிறுகதை இது)

                   

                                                            *******

கடல்கொண்ட குமரிக்ண்டம்

 

 

 

 

 

 

  

 

தமிழ்நாட்டின் மதுரையை  சேர்ந்த தேவநேயரும், தஞ்சாவூரைச்   சேர்ந்த அண்ணாமலையும் நண்பர்கள்.  இருவரும் பண்டையத் தமிழ்
 இலக்கியத்தை நன்கு  கற்று அறிந்தவர்கள். தமிழ் மொழி தோன்றிய காலத்தையும், நாகரீகத்தை பற்பற்றி அறிவதிலும் அவர்களின்  ஆராய்ச்சிகள் இருந்தன.  அவர்கள்  கூடவே இலங்கை, அவுஸ்த்திரேலியா, மடகாஸ்கர் நாட்டு   ஆராய்ச்சியாளர்களும் இருந்தார்கள்.
   அன்று அறிவியல்  பத்திரிகையொன்றில் வந்திருந்த இருசெய்திகள் அவர்களை அதிர்ச்சியடைய வைத்தது. முதல் செய்தியானது  பூம்புகாரில் இருந்து கிழக்கே 5 கிமீ  தூரத்தில் கடலுக்கடியில்   23  கிமீ   ஆழத்தில் ஒரு நகரம்
 இருப்பதைக்  ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள் என்பதாகும். 
 இரண்டாவது செய்தியானது,  தனுஷ்கோடியையும் இலங்கையையும்   இணைக்கும் இராமர்பாலம் பற்றியது. அது, வானரங்களால் கட்டப்பட்டதில்லை எனவும், அது 20,000 ஆண்டுகளுக்கு
 முன்னமே, இலங்கையும் தென் இந்தியாவும் குமரிக்கண்டம்  என்ற  நிலப்பரப்பால்  ஒன்றாக இணைந்து இருந்ததாகவும், தாமிரபரணி ஆறு  இலங்கையில் மேற்கே மன்னார்  வளைகுடாவில் கலக்கும்  மல்வத்து  ஓயாவுடன் இணைந்து இருந்ததாகவும், அதனாலேயே இலங்கைக்குத்
  தப்பரப்பேன் என்ற பெயர் தோன்றியது என்றும் இரண்டாம் செய்தி கூறியது.
 “ஐயா,   நான் பலதடவை உமக்குச் சொன்னேனே, சிலப்பதிகாரத்திலும் மணிமேகலை  காப்பியத்திலும், கடல் கொண்ட காவரிப்பூம் பட்டிணத்தையும், குமரிக்காண்டத்தையும்
 பற்றிக் குறிப்பிட்டிருப்பதை!  பூம்புகார் என்ற காவரிப்பூம்பட்டிணம்  கிமு 3 ஆம் நூற்றாண்டில் ஒரு வணிக  நகராக  இருந்தது. கிரேக்க, அராபிய, ரோமானியர்,  சீனர்  ஆகியோர் தென் இந்தியாவோடு  வியாபாரம் செய்ய அந்த நகருக்கு வந்து போனார்கள்.
 அந்தச் சூழலிலேயே சிலப்பதிகாரக்  கதை எழுதப்பட்டது. இந்தச் செய்திகள் குமரிக்கண்டம் இருந்ததற்கு ஆதாரம்” என்றார் அண்ணாமலை.
 “அண்ணாமலை.  நான் ஓரளவுக்கு இதை ஏற்றுக்  கொள்கிறேன். கி.மு.6-ம் நூற்றாண்டு தொடங்கி கி.மு.4-ம்
 நூற்றாண்டு வரையிலான இலங்கையின் வரலாற்றைச் சொல்லும் மகாவம்சம்  என்ற சிங்கள நூல்,   கிமு  3 ஆம்   நூற்றாண்டில்  களனி திஸ்ஸ மன்னன்  காலத்தில் ஏற்பட்ட சுனாமியால் இலங்கையின் மேற்குப்பகுதி பாதிப்புக்கு உள்ளாகியது என்றுதெரிவிக்கிறது.
 கொழும்புக்கு அருகே உள்ள களனி நகரத்தைக்  கடல் 11 மைல்கள் அந்த சுனாமி விழுங்கி விட்டது அப்போது, யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள சப்த தீவுகளும், புத்தளத்துக்கு அருகே பல தீவுகளும்  தோன்றியதாகச்  சொல்கிறார்கள். இக்காலத்தில்  பூம்புகார் நகரமும்
 மாமல்லபுரத்தின்  ஒரு பகுதியும்  கடலுக்குள் மறைந்திருக்கலாம்.  இத்தோடு  மடகாஸ்கர் தீவில் உள்ள லெமூர் என்ற  ஒருவகை மிருகம்  ஆஸ்திரேலியாவில் உண்டு என்றார்கள் இதோ வந்திருக்கும் என் நண்பர்களான மடகாஸ்கர் நாட்டு அல்பர்ட்டும், அவுஸ்த்திரேலியாவைச்
 சேர்ந்த மார்டின்வன் என்பவரும்.  இது மடகாஸ்கர் தீவும் ஆஸ்திரேலியாவும் ஒரே நிலப்பரப்பாக இருந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும்.  300 கர்ஜுலன் தீவுகளும் குமரிக்கண்டத்துக்குள் அடங்கும்.” அங்கிருந்த  தொல்பொருள் ஆராச்சியாளரான இலங்கை வாசி 
 குணரத்தினம் அவர்கள் இருவரும் சொன்னதை ஆமோதித்து விளக்கினார்.
 “அது சரி, இந்த கர்ஜுலன் தீவுகள் எங்கை இருக்கிறது?” அண்ணாமலை கேட்டார்.
 “ இவை  தனித்து விடப்பட்ட தீவுக் கூட்டங்கள். இங்கு மிக குறைந்த மக்களே
 வாழ்கிறார்கள். மடகாஸ்கர் தீவில் இருந்து  தென் கிழக்கே தென் துருவத்துக்கு அருகே, சுமார் 2000  மைல்கள் தூரத்தில்  அமைந்துஉள்ளது. இந்து சமுத்திரத்தின் தென் பகுதியில் பல தீவுக் கூடங்கள் உண்டு. இவை எல்லாம்  ஒரு காலத்தில்குமரி கண்டத்தில் இருந்திருக்கலாம்”
 குணரத்தினம் சொன்னார்

  “அது சரி குணரத்தினம், கிமு 3 ஆம் நூற்றாண்டுக்குமுன்பும் சுனாமி இலங்கைத் தீவை தாக்கியதா”?   அண்ணாமலை கேட்டார்.

“   கிமு  3  ஆம்  நூற்றாண்டுக்கு   முன்பே  சிவ பக்தன் இராவணன்  ஆட்சி காலத்தில் சுனாமிகள் தோன்றியதால் அம்மன்னன் இலங்கைத். தீவை சுனாமி அழிவில் இருந்து காப்பற்ற தீவின் நான்கு திசைகளிலும் கரையோரமாக, வடக்கில் நகுலேஸ்வரம், கிழக்கில்  கோணேஸ்வரம்,  மேற்கில் திருகேதீஸ்வரம், தென் மேற்கில் முன்னேஸ்வரம்,  தெற்கில் தென்னாவரம்  ஆகிய 5 சிவ  ஈஸ்வரங்களைத் தோற்றுவித்தான் என்பர் சரித்திர ஆய்வாளர்கள்”  குணரத்தினம் சொன்னார்..

“தேவனேயரே, நீர்தான் தமிழர் நாகரீகம் பற்றி தெரிந்தவராயிற்றே, இந்து நதி பள்ளத்தாக்கு நாகரீகத்துக்கு முன்பே
 தமிழ் நாகரீகம் தோன்றியதா”? அவுஸ்த்திரேலிய ஆராய்ச்சியளர்  மார்டின்வன் கேட்டார்.
 இந்தியாவைப் பொறுத்தமட்டில் சிந்து சமவெளி நாகரீகம் தான் மிகவும் பழமையானது என்கிறது வரலாறு. ஆனால் அதற்கெல்லாம் முன் தோன்றிய மூத்த
 நாகரீகம் தமிழனின் நாகரீகம். ஆதனால் தானோ என்னவோ கல் தோன்றா மண் தோன்றா காலத்து மூத்த தமிழ் என தமிழை அழைத்து மிகவும் பழமை வாய்ந்த தமிழ் மொழியும்தமிழர் நாகரீகம் எனவும் மதிப்பு கொடுத்துள்ளனர். இதற்கான ஆதாரங்களை கடல் கொண்டு விட்டது. குமரிக்
 கடலின் அடியில் உள்ள லெமூரியா கண்டத்தில தான் மனிதன் முதல் தோன்றினான். லேமூர் என்றால் பரிணாம வளாச்சியில் குரங்கிற்கும் மனிதனுக்கும் இடைப்பட்டவன் எனபது பொருள். ஆகவே உலகில முதல் பரிணாம வளர்ச்சி குமரி கண்டத்தில் நடந்திருக்கிறது. இந்தியாவின தென்பகுதியான கேரளா,
 தமிழ்நாட்டில் இருந்து இந்தியா இந்து சமுத்திரத்தில நிலப்பரப்பாக வரிவடைந்து இலங்கைத் தீவு, மடகஸ்கார், தென் கிழக்காசியா, அவுஸ்திரேலியா போன்ற நிலப்பரப்புகளை உள்ளடக்கியதாக வரலாறு சொல்கிறது. குமரிக்கடல்
 49 ஆயிரம் சதுர மைல்கள் என்கிறார்கள். கடல் கொண்ட குமரி கண்டத்தின கிழக்கு எல்லை ஆவுஸ்திரேலியா, மேற்கு எல்லை மடகஸ்கார் , தேற்கெல்லை அண்டார்டிகா. ஒரு காலத்தில இவை இவை அனைத்தும் ஒன்றாக இருந்திருக்கின்றன. காலப்போக்கில
 பிரமாண்டமான கடற்கோள் இவைற்றை பிரித்துள்ளது. இக்கடல் தோன்ற காரணம் கண்டங்களின அசைவு ( Continental Shift) அல்லது Meterioid எனப்படும் வானில் இருந்து இந்து சமுத்திரத்தில் விழுந்த பெரும் எரிகல்லினால் ஏற்பட்ட சுனாமி போன்ற பிரமாணட்டமான பெரும் அலைகள் அல்லது கடலுக்கடியில்
 ஏற்பட்ட பூகம்பத்தினால் தோன்றிய கடற்கோளாக இருந்திருக்கலாம். டைனோசர்கள் என்ற மிருக இனம் கணப் பொழுதில் உலகில் இருந்து மறைந்தன என்கிறது வரலாறு. அதற்கு காரணம் பூமியை விண்கல் தாக்கியதே என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். உயரமான நிலப் பரப்பு கூட கடலில் மூழ்க அதற்கான
 மிக உயர்ந்த கடல் அலைகள் தோன்றியிருக்கலாம்.  விளக்கம் கொடுத்தார் தேவராயர்.
 அவர் கொடுத்த விளக்கத்தை கேட்டு. அவுஸ்த்திரேலிய ஆராச்சியளர்  மார்டின்வன் பேசத் தொடங்கினார்

 “குமரி கண்டம் அவுஸ்திரேலியாவையும் மடகஸ்காரையும் உள்டக்கியிருந்தது என்பதற்கான பல ஆதாரங்கள் உண்டு என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். குறிப்பாக அவுஸ்திரேலியா நாட்டின பழம்குடியினர் இன்னும் சிவா நடனம் என்ற பழம் பெரும் சிவா நடனத்தை ஆடுகிறார்கள். நெற்றில் கண்வைத்துக் கொண்டு முக்கண்ணுடன் ஆடுகிறார்கள். வன உயிர்களை வேட்டையாட அவர்கள் பூமராங் என்ற ஆயுதத்தை பயன்படுத்துகிறார்கள். இது எதிரியை அப்படியே தாக்கிவிட்டு திரும்பி அனுப்பியவரிடமே வந்துவிடும். இந்த பூமராங்கை இன்றும் ஊட்டி கோடைக்கானல் பகுதிகளில் வாழும் பழம் குடிமக்கள் பயன்படுத்துகிறார்கள். இது போல் ஆபிரிக்க பழங்குடியினமக்களுக்கும் தமிழர்களுக்கும் பல ஒற்றுமைகள் இருக்கின்றன. அவர்களும் குடும்பங்களில் வயதானவர்களை நாம் அழைப்பது போல் பாட்டி என அழைக்கின்றனர். அவல் என்ற பெயரை உச்சரிக்கிறார்;கள். நமது மீனவர்கள் நாட்டுப் படகை தெப்பம் , மிதப்பு என்று அழைப்பது போல் ஆபிரிக்க பழங்குடியினரும் அச்சொற்களை பாவிப்பதற்கு ஒரு காலத்தில் ஆபிரிக்கா குமரிகண்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது என்பதற்கு ஆதாரமென்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

மடகாஸ்கர்நாட்டு அல்பேர்ட் ஆபிரிக்காவின் கருப்பு
 இன மக்களை பற்றி அறிந்தவர். அவர் தனது கூற்றை சொன்னார்.
 நீக்ரோயிட்ஸ் ( Negeroids) என அழைக்கப்;படும் கறுப்பின மக்கள் ஆபிரிக்காவின பெரும் பகுதிகளில் வாழ்வதை பலர் அறிந்ததே. கறுப்பின அவுஸ்திரேலிய
 பூர்வ குடிமக்களான (Aboriginal), அந்தமான் தீவு பூர்வ குடிவாசிகள்; , இலங்கையை சேர்ந்த வேடவர்கள், நிட்டாவோ இனங்கள் , இந்தியாவின பூர்வ குடிமக்கள் எல்லோரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள். சொலமன்
 தீவு மக்களும் ஆபிரிக்க இனத்தவருக்கும் நிறத்தில் பல ஒற்றுமைகள் உண்டு. பூமத்திய ரேகையை உள்ளடக்கிய குமரிகண்டம் அதிக வெப்ப நிலை காரணத்தால் அக்கண்டத்தில வாழந்தவர்களின் சருமத்தின நிறம் கறுப்பாக அமைந்தது என்கிறது ஒரு வாதம். நாவலம் என்ற குமரிகண்டத்த்தின தென் பகுதி
 தமிழர் நாகரீகம் வளர்ந்த பகுதியென்கிறது வரலாறு. தமிழ் ஆராயச்சியாளாகள் புழனெறயயெ எனற குமரி கண்டத்தின வடபகுதியே லெமூரியா கணடம் என அழைக்கப்படும் குமரி கண்டமாகும். சுரவய இ னுநவைய போன்ற நாடுகளைப்பற்றி இந்திய இதிகாசத்தில் பேசப்படுகிறது. இந்நாடுகள் குமரி ;கண்டத்தின்
 ஒரு பகுதியாகயிருந்து கடலுக்குள் மூழ்கியதாக வரலாற்றாளர்கள் கருத்து. கறுப்பின மக்கள் ஆபிரிக்கா, இந்தியா , அவுஸ்திரேலியா, பப்புவா நியூ கினி பொன்ற தேசங்களில் காணப்படுவதற்கு இந்நாடுகள் எல்லாம் ஒருகாலத்தில ஒன்றிணைந்த
 நிலப்பரப்பாக இருந்தது என்பது ஒரு விளக்கம். இதற்கு ஆதாராமாக ஆவுஸ்திரேலிய பூர்வ குடிமக்களின பூர்வீகம் குமரி கண்டத்தில தோன்றியது என்பர். 650 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் தென் அமெரிக்கா. ஆபிரிக்கா, இந்தியா , அவுஸ்திரேலியா,
 தென் துருவம் ஆகிய நிலப்பரப்புகள் ஒரு பரப்பாக புழனெறயயெ என்ற பெயரில் அமைந்ததென வல்லுனர்கள் கூற்று. பூமியின் சுழற்சி காரணமாக இந்நிலப்பரப்பு பிரிந்து புது கண்டங்கள் தோன்றியிருக்கலாம். உலகப் படத்தினை சற்ற கவனமாக உற்று நோக்கினால் ஒவ்வொரு கண்டத்தினது கரையோரங்களின்
 அமைப்பு மற்றைய கண்டத்துடன் பொருந்தக்கூடியவகையில் அமைந்துள்ளது. ஒரு உருளியை ( ball) எவ்வாறு உடைத்துவிட்டு பொருத்த முடியுமோ அவ்வாறு அமைந்துள்ளது. ஒன்று சேர்ந்த கொட்வானா கண்டம் பிரிந்தபோது தற்போதைய கண்டஙகள் தோன்றின. பவழப் பாறைகளை கொண்ட தீவுகள் இந்து சமுத்திரத்தில்
 தோன்றின. இவ்வாறு தோன்றியதீவுகளில் மால தீவு . லக்கதீவுகள், கொக்கூஸ் தீவுகள், சாக்கோஸ் தீவுகளான டியஜோ கார்சியா போன்றவை அமையும். இந்தியா , இலங்கை, பவழப்பாறைத் தீவுகள் , மடகஸ்கார்
 போன்ற நாடுகளில் உள்ள தாவரங்களுக்கிடையே உள்ள ஒற்றுமையும் குமரிகண்டம் இருந்ததிற்கு ஒரு ஆதாரமாகும்
  
“இந்தியா, இலங்கை, அவுஸ்த்திரேலியா, மடகாஸ்கர், சீசெல்ஸ், மொரேசியஸ், மாலை தீவு இவைகளோடு,  இலங்கைக்குத்
 தெற்கே 1800 மைல் தூரத்தில் உள்ள, அமெரிக்காவுக்குச்  சொந்தமான   டிகோ கார்சியா தீவும்  ஒருகாலத்தில் குமரிக்காண்டத்தினுள் இருந்தவை என்பது ஒரு நம்பிக்கை., சுமார் கிமு 20,000 ஆண்டுகளுக்கு முன்பே  இந்த 8  நாடுகளும் மதுரையைத் தலைநகராகக்
 கொண்ட பாண்டிய நாடாக இருந்தன என கிரேக்க தத்துவஞானி  பிளேட்டோ . லுமேரியா கண்டம் என்றபெயரில் இருந்ததாகக் குறிப்பிட்டு உள்ளார்.” தேவநேயர் சொன்னார்  
“அது உண்மைய இல்லையா என்டறு கண்டறியவெ  எட்டு நாடுகளில் இருந்து சமுத்திரவியல்,
 தொல்லியல், தமிழ் இலக்கியம் அறிவியல் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிகள் செய்து அனுபவம் பெற்ற ஏழுபேர் அடங்கிய குழுவாகி  நாம் கூடியுள்ளோம் என்றார் அமெரிக்க தேசத்து வில்லிமஸ்
                    
                       ******
 ,  எட்டு நாடுகளும் ஒன்று சேர்ந்து அளித்த நிதி உதவியோடு உண்மையைக் கண்டறியத் தமது ஆராய்ச்சியைக் கன்னியாகுமரியில்
 இருக்கும் விவேகானந்தர் பாறையில் இருந்து ஆரம்பிக்கிறார்கள்.

    இலங்கையைச் சேர்ந்த குணரத்தினம், இந்தியாவைச் சேர்ந்த தேவநேயர், அண்ணாமலை, மடகாஸ்கர்நாட்டு அல்பேர்ட், மாலத்தீவு ஹசன், சீசெல்ஸ் நாட்டு நிர்மல், அவுஸ்த்திரேலியாவைச் சேர்ந்த மார்டின்வன், அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ்   ஆகிய எட்டு  அறிவியலாளர்கள் வில்லிமஸ் கூறிபடி இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். குமரித் திட்டமென்ற பெயரில் ஆராய்ச்சி  ஆரம்பிக்கப் பட்டது.

   தேவநேயரும், அண்ணாமலையும் பண்டைய தமிழ் இலக்கியத்தை நன்கு  கற்றறிந்தவர்கள். மதுரை நகரில் பழம்  ஏட்டுச்சுவடிகளை வாசித்து அறிந்தவர்கள். மடகாஸ்கர்நாட்டு அல்பேர்ட்டும், மாலத்தீவு ஹசன்னும் கடலில் ஆழத்துக்கு நீந்திப் பல மணி நேரம் இருக்கும் திறமை படைத்தவர்கள்.

   சீசெல்ஸ் நாட்டு நிர்மல் அவுஸ்த்திரேலியாவை சேர்ந்த மார்டின் அமெரிக்காவைச் சேர்ந்த வில்லியம்ஸ் ஆகியவர்கள்  ஆழ்கடல் அறிவியல் துறையில்  பல ஆராய்ச்சி செய்தவர்கள். குணரத்தினம் ஒரு தொல்பொருள் ஆராச்சியாளர். இராமர் பாலத்தின்  தோற்றத்தைப் பற்றி சேது சமுத்திர திட்டத்தில் ஈடுபாடுள்ள  பொறியாளர்களோடு சேர்ந்து ஆராய்ச்சி செய்து அறிக்கை சமர்ப்பித்தவர்.

  பலதுறைகளில் தேர்ச்சி பெற்ற இவர்கள் குமரிக்கண்டம் என்று ஒன்று இருந்ததா, அக்காண்டத்தில்  வாழ்ந்தவர்கள் என்ன மொழி பேசியவர்கள்,  அவர்கள் கலாச்சாரம் என்ன, அறிவியலில் முன்னேறியவர்களா,  அக்காண்டத்தில் ஓடிய நதிகள் எவை,  அப்படி ஒரு  கண்டம் இருந்திருப்பின் அதன் தலை நகரம் எது, எக்காரணத்தால் அக்கண்டம் மறைந்தது போன்ற கேள்விகளுக்கு விடைகள் காண  ஆழ்கடல் ஆராய்ச்சிகள் நடத்தத் தேவையான எதிரொலிக்  கருவிகளும், செய்மதி தொடர்பு கருவியும் பொருத்திய  “குமரி” என்ற பெயருள்ள கப்பலில் தமது பயணத்தை ஆரம்பித்தனர். அவர்களுக்குத் துணையாக பத்து மாலுமிகள், மூன்று சமையல்காரர் சென்றனர்.  அக்கப்பலுக்கு இன்மார்சட்  தொலை தொடர்பு நிறுவனம் செய்மதி மூலம் எல்லா  விதமான தொடர்புகளை செய்வதற்கு வசதிகள் தம் செலவில் செய்து கொடுத்திருந்தது.

கன்னியாகுமரி முனையில் இருந்து தெற்கே சுமார்  1800     கிமி தூரத்தில் குதிரை லாட வடிவில் அமைந்த டிகோ கார்சியா என்ற  தீவில் அமெரிக்க விமானத்தளம் அமைந்துள்ளது.  இத்தீவில்இருந்து பயங்கரவாதத்துக்கு எதிராக ஈராக், ஆப்கானிஸ்தான் மீது  அமெரிக்கா தாக்குதல்கள் நடத்தியது. அமெரிக்க விமானத்தளமாக இருக்கும் இத் தீவில் முன்பு சுமார் இரண்டாயிரம் மக்கள் வாழ்ந்தனர். பிரித்தானியர்  அத்தீவை அமெரிக்காவுக்கு விற்றபின், அம்மக்களை  மொரேசியஸ் தீவுக்குப் புலம்பெயர வைத்தனர்.   60 தீவுகள் கொண்ட இத்தீவுக் கூட்டமும் குமரிக்கண்டம் எனக் கருதப்படும் பகுதிக்குள் அடங்கும்.

“குமரி” என்ற ஆராய்ச்சிக்கப்பல் கன்னியாகுமரியில் இருந்து தன் பயணத்தைத் தென்துருவத்தை நோக்கி ஆரம்பித்தது.
 கடலுக்கு அடியில் உள்ள நிலப் பரப்பை சோனா எனப்படும் எதிரொலிக் கருவி மூலமும், ஈர்ப்பு கிரேடியோமீட்டர் மூலமும், செய்மதி உதவியோடும் படம் எடுத்தனர். அவர்கள்  எதிர்பாராதவாறு கடலுக்கடியில் உள்ள நிலப்பட்டையில் வெடிப்புகள்  இருப்பதைக்  கண்டனர். 
 அது போன்ற வெடிப்புகளே 2004  ஆம் ஆண்டு  இந்தோனேசியா அருகே கடலுக்கு அடியில் தோன்றிய பூகம்பத்தால் உருவாகிய சுனாமிக்கு காரணம் என்பதையும் அறிந்தனர். சில பகுதிகளில் 5 மைல்  ஆழத்துக்கு அகழிகள் இருப்பதைக் கண்டனர். 
குமரிமுனையில் இருந்து 800
 மைல் தூரத்தில்  அவர்கள் கடலுக்கு அடியில் ஒரு மைல்  ஆழத்தில்  கடற்கன்னிகளும் ,  கடல் ஆடவர்களும் உல்லாசமாக  நீந்துவதைக் கண்டு  அதிசயித்தார்கள். அவர்களின் உரையாடல் இவர்களுக்குப் புரியவில்லை. இவர்கள் ஒரு காலத்தில் வாழ்ந்த மக்களாக 
 இருந்திருக்கலாம் எனக் கருதி அவர்களைப்  பின்தொடர்ந்த போது ஒரு பெரிய நகரமே கடலுக்கு அடியில் இருப்பதைக் கண்டனர். அதன் கட்டிட அமைப்புகள் தென் இந்தியக் கோவில்களைப் போல் இருந்தன. சுவர்களில் புரியாத மொழியில் எழுத்துகள்  கற்களில்  பதிவாகி இருந்தன. அவை
 சில தமிழ் எழுத்துக்கள் போன்றவை.
அந்தப் பதிவுகளைப் படம் பிடித்து மேலும் மொழி ஆராய்ச்சி செய்யத் தீர்மானித்தார்கள். தென் இந்தியக்  கோவில் தோற்றமுள்ள  கட்டிடங்களுக்குள் சென்று பார்த்தபோது அவர்கள் சிவன் பார்வதி சிலைகள் இருக்குமென எதிர்பார்க்கவில்லை.
  இந்து மதம் பல  ஆயிரம்  ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததைக்கண்டு   பெருமைப்பட்டனர். 
கவிதை வடிவில் கற்களில்  பதிவு செய்யப்பட்டு இருந்தன. அந்த நகரில்  வாழ்ந்தவர்கள் கல்விமான்களாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்தனர்.
 முதலாம் தமிழ்ச்சங்கமானது  சுமார் 10,000  ஆண்டுகளுக்கு முன்னரே இருந்ததற்கான ஆதாரம் கிடைத்ததையும் எண்ணிப்  பெரும்  ஆனந்தம் அடைந்தனர்,

 ஆழ்கடலில் இருந்த பாசிபடர்ந்த நகரத்தில்  காணப்பட்ட  அழகான கட்டிடங்களில் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருந்தன. பெரும்பாலும் கட்டிடங்கள் கற்கட்டிடங்களாகவே இருந்தன.  கோயில் கட்டிடக்கலை தற்போதைய  கலை போல் இருந்தது.  கற்சிற்பங்கள்  பல பரத நாட்டியக் கலையையும் ஆட்சி  செய்த மன்னரையும் பிரதிபலித்தன. மன்னரின் சிலையின் கீழ் அவரது பெயரும் பூர்வீகமும்   சாதனைகளும்  அக்காலத்தில் இருந்த மொழியில் பதிவாகி இருந்தன. யாழ், மிருதங்கம், ஊதுகுழல் போன்ற இசைக் கருவிகள் இருந்ததைக் கண்டு  அக்கால மக்கள் இசையிலும் வல்லுனர்களாக  வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டியது. ஒரு பெட்டிக்குள் ஏட்டுச் சுவடிகள் இருந்தன.  அண்ணாமலைக்கு ஏட்டுச் சுவடிகளைக் கண்டதும் ஒரே ஆச்சரியம். கைகளைத் தட்டி ஆரவாரப்பட்டார்.

 அந்த நகரம் இருந்த பகுதியில் இருந்து நூறு மைல் கிழக்கே சென்றபோது  7௦௦ மைல் நீளமுள்ள இரு நதிகள் இருந்ததற்கான  அடையாளங்கள் தென்பட்டன.

“நான் நினைக்கிறேன், இவை இரண்டும் பஃறுளியும், குமரியுமாக இருக்கலாம்” என்றார்   தேவநேயர்.

 ஆராய்ச்சியாளர்கள் கடலுக்கு அடியில் கண்ட மலைகள் இரண்டு. உடனே குமரிக்காண்டத்தின் அமைப்பு பற்றித் தெரிந்த தேவநேயர் “இவை இரண்டும்  குமரிக்கோடு,  மணிமலைகளாக  இருக்கலாம்” என்றார். அவர் சொன்னதை அண்ணாமலையும் ஆமோதித்தார்.

 அல்பேர்ட்டும், மாலத்தீவு ஹசன்னும் கடலில் ஆழத்துக்கு நீந்திக் கடலுக்கடியில் மூன்று நகரங்களைக் கண்டுபிடித்தனர்.

 

“ஐயா இவை மூன்றும் என்ன நகரங்களாக இருக்கும்?”  அல்பேர்ட்  தேவநேயரை கேட்டார்.

 “எனக்குத் தெரிந்த மட்டில் இவை தென்மதுரை, கபாடபுரம், முத்தூர் ஆகிய நகரங்களாக இருக்கலாம்” என்றார் தேவநேயர்.

 “நானறிந்த மட்டில் குமரிக்காண்டத்தில் 49 பிரதேசங்கள் இருந்தன” என்றார் அண்ணாமலை.

 ஒருவருட ஆராய்ச்சியில் சேகரித்த ஆதாரங்களோடு இந்தியா திரும்பினார்கள். குமரிக்கண்டம்  பற்றிய அறிக்கையை அதில் பங்கு பற்றிய நாடுகளுக்குச் சமர்ப்பித்தனர். அறிக்கையில் குமரிக்கண்டம்   கடலுக்குள்  மூழ்குவதற்கு  மூன்று சாத்தியக்கூறுகளைச் சொன்னார்கள்.

  1. தென்துருவப் பனிமலைகள் உருகிக் கடல் நீர் மட்டம்   உயர்ந்ததால்
  2. கடலுக்கடியில் ஏற்பட்ட பூகம்பத்தால்  உருவாகிய சுனாமியால்
  3. விண்கல் இந்து சமுத்திரத்தைத் தாக்கியதால்
  4.  எரிமலை வெடித்ததால்
  5. கண்டங்களின் அசைவினால்       

இதில் முதலாவது  சாத்தியக்கூறே தங்களின் கணிப்புப்படி குமரிக்கண்டம் கடலுக்குள் மறைவதற்கு  முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம் என்றார்கள் தமது அறிக்கையில்.

                                                     ******

                                     

 

 

 

 

 

 

 

 

பொன்னாடையும், மலர்செண்டும், பிணப்பெட்டியும்

         (ஒரு உருவகக் கதை)

 

 “சாந்தி” ஒரு பிரபல்யமான கடை. இறுதியில் மனிதனின் ஆன்மா சாந்தி பெறுவதை நினைவூட்டும் பெயர்.    பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி போன்ற முக்கியப் பொருட்களை ஈமச் சடங்கு நிகழ்வுக்காக விற்பனை செய்யும் கடை. குறுகிய நேரத்தில் தாங்கத்தக்க விலைக்கு ஏற்றவாறு  வாங்கக்; கூடிய கடையாதலால், வாடிக்கையாளர்களுக்குக் குறைவில்லை. கடையின் விற்பனை பகுதியில் பொன்னாடை, மலர்வளையம், பிணப்பெட்டி ஆகிய மூன்றும், அன்று  நடக்கவிருக்கும் ஒரு தனவந்தரும், அரசியல்வாதி ஒருவரின் ஈமச் சடங்;கு நிகழ்வுக்குப்  போவதற்கு தம்மைத் தயார் செய்து கொண்டு இருந்தன. அவர்களிடையே நடக்கும் உரையாடல் தான் இது.

 பிணப்பெட்டி: என்ன நண்பர்களே என்னிடம் இருந்து சந்தன மணம் வீசுகிறதா. நான் ஒரு பிரபல்யமான அரசியல்வாதியும் தனவந்தர் ஒருவரின் உடலை சுமக்கப் போகிறேன்;. அவரின் கட்சி ஆதரவாளர்கள் பெரும்; பணத்தொகை செலவு செய்து சந்தன மரத்தால் செய்த பிணப்பெட்டி வேண்டும் என்று என் முதலாளியிடம் கேட்ட படியால் என்னை அவர் தயார் செய்தார்;. அது மட்டுமல்ல இறந்தவரின் பெயர், அவர் பெற்ற பட்டங்கள் . கட்சியில் அவர் தலைவரென்பதால்  பெட்டிக்கு வெளியே எல்லோரினது பார்வைக்ப் படும் படி

செய்யப்பட்டேன்.

 மலர்வளையம்:; நீ மாத்திரமே சுகந்த மணம் உள்ளவன் என்று பெருமைப்படாதே. நூன் கூடத்; தான் சுகந்த மணம் வீசுபவன்;. இறந்தவரின் கட்சிக் கொடியின் நிறத்தில் உள்ள மலர்களால் உருவாக்கப்பட்டவன். அவரின் பெயரும், அவர் வகித்த பதவியையும்;, கட்சிப் பெயரையும் எழுதிய லேபல் என்ற முகப்புச் சீட்டையும் சுமக்கிறேன். என்னோடு என் தம்பியும் கூடவே இருக்கிறான்.

 பிணப்பெட்டி: உன் தம்பியா? புரியவில்லையே. கொஞ்சம் விளக்கமாகத் தான் சொல்லேன்.

 மலர்வளையம்: நான் சொல்வது ஆறடி நீளத்துக்குத் தயாரிதடத  ரோஜாப்பூ மல்லிகை, செவ்வந்தி போன்ற பூக்கள் கலந்த மலர் வளையம். இதைத் தான் அவரின பிரேதத்தின் அருகே வைக்கப்போகிறார்; கட்சியின் பொதுச் செயலாளர்.

 பொன்னாடை: நீங்கள் உங்கள் சுகந்த மணத்தைப் பற்றி பெருமையாகப் பேசுகிறீர்களே, எனது  தங்கச் சரிகை வைத்து காஞ்சிபுரப் பட்டில்; உருவாக்கப்பட்ட நான் எவ்வளவு பெறுமதியம் அழகும் வாய்ந்தவன் என்பது உங்களுக்குத் தெரியுமா. எனது நிறமும்; கட்சிக் கொடியின் நிறத்துக்குப் பொருத்தமாக அமைய வேண்டும் என்பது கட்சிக்காரர்கள் முதலாளியிடம் இட்ட கட்டளை. அதனாலை பிரத்தியேகமாகக் குறுகிய காலத்தில் தாயரிகப்பட்டவன் நான்.

 பிணப்பெட்டி: அதுசரி எனக்கு மேல் கண்ணாடி மூடிப் போட்ட பாதுகாப்பு இருக்கிறதைக் கவனித்தீர்களா? அது ஏன் தெரியமா?

 மலர்வளையம்: நீ சொன்னால் தான் எங்களுக்குப் புரியும்

 பிணப்பெட்டி: எனக்குள் அடங்கப்போகும் அரசியல்வாதி ஆட்சியில் இருக்கும் போது அவரது போஸ்டர்கள் சாணத்தால் எதிர்க்கட்சியினால் அலங்கரிக்கப்பட்டன. அதுவுமில்லாமல் அவர் பேசிய கூட்டத்தில் கற்களும் செருப்பும் எறியப்பட்டது. அது போன்று ஒன்றும் அவர் உடலுக்கு இறந்த பின்னர் நடக்கக் கூடாது என்பதற்காகக் கண்ணாடி மூடியால் பாதுகாத்து இருக்கிறார்கள். ஒருவரும் ஊரிலை செய்வது போல் உடலைத் தொட்டு ஒப்பாரி வைக்க முடியாது.

 பொன்னாடை: ஒப்பாரியா? அதென்ன? கொஞ்சம் விபரமாய் தான் சொல்லேன்.

நான் ஈமச்சடங்குகளில் இறந்தவரின் பெருமையைப் பற்றி பேச்சாளர்கள் பேசுவதைத் தான் நான் கேள்விப்பட்டிருக்கிறேன்..

 

பிணப்பெட்டி : தாய், தந்தை, கணவன், பிள்ளை, உற்றார், உறவினர் எவரேனும் இறந்து விட்டால் ஒருவருடைய உள்ளத்தில் எழுகின்ற துன்பஉணர்வை வெளிக்காட்ட ஒப்பாரி பாடப்படுகிறது. இறந்தவர்களின் வரலாறு பற்றித் தெரியாதவர்கள் அப்பாடல் மூலம் வரலாற்றினை அறிய முடியும். ஒப்பாரிப் பாடல்களின் இசை, விளம்பமும் மத்யமும் கலந்த ஒரு லய அமைப்பில் முகாரி, ஆகிரி முதலான இராகச் சாயலுடன் விளங்குகின்றது.

 மலர்வளையம்: எனக்குச் சினமா பாடல் கேட்டு அலுப்புத் தட்டிப் போச்சு ஒரு ஒப்பாரியைத்தான் கேட்போமே. உனக்குத் தெரிந்தால் ஒரு ஒப்பாரியைப் பாடேன்.

 பிணப்பெடடி : ஒரு மனைவி தன்றை புருஷன் மறைந்ததுக்கு வைத்த ஒப்பாரியைப் பாடுகிறேன் கேளுங்கள்

 “ஆலமரம் போல அண்ணாந்து நிப்பேனு

நான் ஒய்யாரமா வந்தேனே

இப்ப நீ பட்ட மரம்போல

பட்டு போயிட்டையே.

 

பொட்டு இல்ல பூவில்லை

பூச மஞ்சளும் இல்ல

நான் கட்டன ராசாவே

என்ன தனியாக விட்டுத்தான் போனிங்க.

 

பட்டு இல்லை தங்கம் இல்லை

பரிமாற பந்தல் இல்ல

படையெடுத்து வந்த ராசா

பாதியியில போரிங்க்கலே

 

நான் முன்னே போரேன்

நீங்க பின்னே வாருங்கோ

என சொல்லிட்டு

இடம்பிடிக்கப் போயிதங்களா.

 

நான் காக்காவாட்டும் கத்தரனே,

உங்க காதுக்கு கேக்கலையா

கொண்டுவந்த ராசாவே

உங்களுக்குக் காதும் கேக்கலையா.

 

நான் கேட்ட நேரமெல்லாம்

ஆயிரம் ஆயிரமாய் தந்தனீங்கள்.

தங்கம் வைரமாய் எனக்குப் போட்டினீங்கள்

பினாமியில் ஊர் முழுவதும்

காணிகள், வீடுகள் வாங்கினீங்க

இப்ப அவை அரசு எடுக்கப் போகுதே

நான் என்ன செய்ய என் ராசாவே?

  பொன்னாடை : நீ பாடிய பாடல் என் மனதை உருக்கிறது. அழுகை வரும் போல் இருக்கிறது. அரசியலும் கலந்து இருக்கிறது. கடைசி சில வரிகள் உன் கற்பனையா

 பிணப்பெட்டி: இப்படி வந்திருப்பவர்களின் கண்களில் கண்ணீர் வரும் படி எல்லோராலும் சோகக் குரலில் பாடமுடியாது. இதற்குகென ஒப்பாரி பாடி அனுபவம் வாய்ந்த கூலிக்கு மாரடிப்போர் உண்டு. ஒரு கிராமத்துக்கென தனிப்பட்ட கூட்டம் அது. கொடுக்கிற கூலிகட்கு ஏற்றவாறு பாடுவார்கள். நாலைந்து பேர் சுற்றியிருந்து கட்டிப்பிடித்துப் பாடுவார்கள். நீலிக் கண்ணீர் வடிப்பார்கள். கிளிசரினை கூடச் சில சமயம் அழுகை வரப் பாவிப்பார்கள். இனத்;தவர்களைக் கண்டதும் தம் குரலை உயர்த்தி ஒப்பாரி வைப்பார்கள் பாடும் போது தமது இறந்த கணவனையோ பிள்ளையையோ நினைத்துப் பாடுவதால் அவர்களுக்கே அழுகை வந்துவிடும். கூலி வாங்கி ஒப்பாரிவைக்கும் அவர்களுக்கு இறந்தவர் பற்றி விபரம் தெரியாது.

 மலர்வளையம்: கிராமத்து இலக்கியம் இன்னும் மறையவில்லை போல. பேச்சாளர் இறந்தவரைப் பற்றி பேசும் போது பீதாம்பரம் என்ற என்னை தங்களுக்குப் போர்த்தி பேச வைப்பார்கள் என நினைப்பார்கள். ஆனால் அந்தப் பொன்னாடை இறந்தவரின் உடலுக்கு மாலை போட்டு, பொன்னாடையால் போர்ப்பார்கள். பாவம் நன்றி சொல்ல முடியாத நிலை அவருக்கு.

 பிணப்பெட்டி: அதசரி திரு பீதாம்பரம் உம்மை முக்கிய புள்ளிகளுக்கு போர்ப்பதன் அர்த்தம் என்ன?

 பொன்னாடை: பீதாம்பரம் என்று பெருமையாக அழைக்கப்படும் நான் வடமொழியான சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்டவன். பீதம், அம்பரம் என்று எனப் பெயரைப் பிரித்தால், பீதம்  என்பது தங்கவண்ணம் என்றும் அம்பரம் என்றால் துணி என்றும் பொருள்படும். தோள்களைச் சுற்றிப் போர்த்துக் கொள்ளவோ அல்லது இடுப்பில் கட்டிக்கொள்ளவோ பயன்பட்ட பட்டுச் சேலையிலான துணி. தற்காலத்தில் பொன்னாடை என்று பரவலாகப் பேசப்படுகிறது. தங்க இழைகளைக் கலந்து நெய்திருப்பர். அல்லது துணிக் கரையாவது தங்கம் கலந்து நெய்யப்பட்டிருக்கும்...மொத்தத்தில் இந்தத் துணி தகதக என்று மின்னியபடி மிகக் கவர்ச்சிகரமாக இருக்கும்...விசேட நாட்களில் பயன்படுத்தினர்...இந்து மதத் தொடர்பான காரியங்களைப் பட்டாடை, பீதாம்பரம் அணிந்துச் செய்வது சிறந்த பலனைக் கொடுக்கும் எனக் கருதப்பட்டது...பொன்னாடை(பீதாம்பரம்) போர்த்திப் பொற்கிழியும் வழங்குதல் பண்டைக் காலத்தில் மன்னர்கள் புலவர்கள் முதலானோருக்குச் செய்த மரியாதையாகும்.

 மலர்வளையம்: இந்த நிகழ்ச்சியில் பேசும் பேச்சாளர்கள் சிலர் சிலேடையாக பேசுவார்கள். நான் கேள்விப்பட்டேன் அண்மையில் இறந்த தமிழ்நாட்டு முதல் அமைச்சர்; மரணத்துக்கான இரங்கல் செய்திகளில் கவனத்தைக் கவர்ந்தது வரிகள் 'சந்தியாவின் மகளாகப் பிறந்தவர் இந்தியாவின் மகளாக இறந்தார்'. 32 ஆண்டுகளுக்கு முன்பு இந்திரா காந்தி படுகொலை செய்யப் பட்டபோது தமிழ் வார இதழ் ஒன்று அட்டையிலேயே அவருக்கான அஞ்சலிக் 'கவிதை'யை வெளியிட்டிருந்தது. அந்தக் 'கவிதை' இப்படி முடிந்தது: 'பிரியதர்சினி உன்னையும் பிரிய நேர்ந்ததே'. இந்திரா காந்தியின் முழுப் பெயர் இந்திரா பிரியதர்சனி என்பது இங்கு நினைவுகூரத் தக்கது.

 பொன்னாடை. அதெல்லாம் சரி நாங்கள் எல்லோரும் இறந்தவரோடு உடன்கட்டை ஏற வேண்டியது தானா”? எங்களுக்கு அஞ்சலி செலுத்த ஒருவரும் இல்லையா?.

 பிணப்பெட்டி: சத்தம் போட்டு பேசாதே அதோ இறந்தவரின் கட்சியாளர்கள் வந்துவிட்டார்கள் எங்களைக் கூட்டிப்போக. இது நாம் மனித இனத்துக்குச் செய்யும் சேவையாக இருக்கட்டுமே.

 

                                                            *******

அசுத்தம் -(Unclean)

தர்மசீலன் சிறுவயது முதற்கொணடே அவ்வளவுக்குச் சுத்தம் பார்ப்பவன் அல்ல. அதைக் கண்டு அவன் அம்மாவோ அப்பாவோ அவனைக் கண்டித்து வளர்க்கவில்லை. தர்மன் ஒரு மகனானபடியால் அவனுக்கென வீட்டில் தனி அறை கொடுத்திருந்திருந்தார்;கள். ஆனால் தர்மாவின்; அறைக்குள் போனால் ஒரே நாற்றம் என அம்மா அடிக்கடி  குறைப்படுவாள்; அறை முழுவதும் ஒரே குப்பை என்பாள்.;

 “ ஏண்டா தர்மா உன் அறை ஜன்னலைத் திறந்து வையேன். வெய்யில் வரட்டும். காற்றோட்டம் இருக்கட்டும். மேசையிலை புத்தகங்களைப் பரப்பி வையாதே. புத்தகம் வைக்க ஒரு அலுமாரி உனக்கென்று ஒன்று இருக்கிறது. அதில் அழகாகப் புத்தகங்களை அடுக்கி வைத்தால் தான் குறைந்தா போவாய்? எப்பவும் அம்மா அவனை நச்சரித்தபடியே இருப்பாள்.

தர்மசீலனின் அம்மா மைதிலி நுணுக்கமாக சுத்தம் பார்ப்பவள். தினமும் பல தடவை கைகளை அடிக்கடி சோப்பு போட்டு களுவுவாள். ஏன் அப்படி களுவுகிறாய என்று கேட்டாள். “சரியாக கழுவாமல் விட்டால் தொற்று நோய் வந்துவிடும்” என்பாள். 

தர்மசீலன் குளிப்பதற்கு கள்ளம். தலை முடி வெட்டமாட்டான். ஹப்பியைப் போல் வளர்த்திருப்பான். முகச்சவரம் செய்யமாட்டான்.  தன படுக்கையை துப்பரவாக வைத்திருக்கமாட்டேன். எண்;ணை படிந்த தலையணை உறையை அம்மாவை மாற்ற விடமாட்டான். படுத்து ஏழும்பிய பின் பெட்சீட்டை மடித்து வைக்கும் பழக்கம் தர்மாவுக்கு இல்லை. சாப்பிட்ட பின் பீளெட்டை களுவிவைக்கமுhட்டான். அதையும் அவன் அம்மா தான் செய்வாள். அவன் அப்பாவும் அம்மாவைப் போல் சுத்தம் பார்ப்பவர். 

“ எப்படி மைதிலி உன்வீட்டை அழகாகவும் சுத்தமாகவும் வைத்திருக்கிறாய்”? என்று வீட்டுக்கு வருபவர்கள் கேட்பார்கள்.

“ அதெல்லாம் எனக்குச் சிறுவயது முதற்கொண்டே என் அம்மா எனக்கு கற்றுக் கொடுத்த பழக்கம். என் கணவரும் சுத்தம் பார்ப்பவர்.  ஆனால் அந்த சுத்தமாக இருக்கும் பழக்கத்தை என் மகன் தர்மனுக்கு நான்இ எவ்வளவோ சொல்லிக் கொடுத்தாலும் அவன் சுத்தமாக தன் அறையை வைத்திருக்கிறான் இல்லை. குளிப்பதுக்கு கள்ளம். உடுப்பை அடிக்கடி மாற்றமடாட்டான்.” இப்படி தர்மனைப் பற்றி தன் சினேகிதி ராஜத்துக்கு முறையிடுவாள்:

“ மைதிலி உன் மகன் சுத்தம் இல்லாவிட்டாலும் அவன் பெயருக்கு ஏற்ற நல்ல இரக்கச் சுபாவம் உள்ளவன். நல்ல கள்ளம் கபடமற்ற சுத்தமான மனம் அவனுக்கு. பல விஷயங்களில் அவதானித்திருக்கிறேன்” என்றாள் ராசம்; மாமி.

 

                                  *******

அன்று வெள்ளிக்கிழமை. அம்மா முருகன் கோவிலுக்கு போகும் தினம். தர்மாவையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றாள். போகமுன் கட்டாயப்படுத்தி அவனை குளிக்கச்செய்து, தான் வாங்கித் தந்த புது வேட்டியையும் லண்டனில் இருந்து அவனது பிறந்த நாளுக்கு அவன் மாமா ஆனுப்பிய சேர்;டையும் அணியச் செய்தாள். கையில் மாமா அனுப்பிய விலை உயர்ந்த பிரமிட் கைக்குட்டை வேறு அவனக்கு.

“ஏன் அம்மா எனக்குக் கைக்குட்டை”? என்று அவன் தாயைக் கேட்டான்

“கோவிலில் கால்முகம் கழுவி கோவிலுக்குள் போகமுன் துடைக்க  பாவிப்பதுக்கு. அதோடு பிரசாதம் உண்ட பின் கையை துடைக்கத்தான். இல்லாட்டால் வேஷ்டியில்; துடைப்பாய் அது விலை உயர்ந்த வேஷ்டி”, என்றாள் மைதிலி

கோவிலுக்குள் போகமுன் வீதியில்; ஒரே பிச்சைக்காரக் கூட்டம் “ ஆம்மா தாயே ஏதாவது hரமம் செய்யம்மா என்று கூவியபடி வரிசையில் அமர்ந்திருந்தார்கள்.. கால இழநுதவரகள் இ கையிழநதவரகள் குருடகைள் அங்கங்கள் குறைநதவரகள்இ சிறுவர்கள் நிறைந்து இருந்தனர்  தர்மன் தான் சேர்த்து வைத்திருந்த சிலரைகளை உவ்வோரு பிச்சைக்காரனுக்கும் கொடுத் வந்தான். அவன் செயல் சிலர் அவன் கையை தொட்டு கும்பிட்டார்கள். தாவுக்கு இது அருவுருப்பாக இருந்தது. அசுதடதமான இந்த பிச்சைகாரரகளுக்கு இவன் ஏன் சில்லரை போடுகிறான்? என்று தங்கள் கூடவே கோவிலுக்கு வந்த ராஜம் மாமிக்கு முறையிட்டாள் மைதிலி.

“ அது அவன் குணம். ஆவன் இஷ்டப்படி பிச்சைப் போடட்டும் அவனைத் தடுக்காதே மைதிலி”, என்றாள் ராஜம் மாமி.

 திடிரேன்று வரிசையில் இருந்த ஒரு தொழுநோய் பிசசைக்காரனைப் பார்த்து

“ அட சின்னையா, நீயா இந்தக் கோலத்தில்? உனக்கு என்ன நடந்தது? ஏன் இந்தக் கோலம். எங்கிருந்து இந்தக் குஷ்ட வியாதி உனக்கு வந்தது”? இரக்கத்தோடு தர்மன் அவன் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு காலத்தில் காவலாளியாக இருந்த சின்னையாவை பாரத்துக் கேட்டான். தர்மசீலன். அவனை ஒரு காலத்தில் அழகானவன் என்று மாணவ மாணவிகள் வர்ணித்தது தர்மாவின் நினைவுக்கு வந்தது.

“ அதை எப்படி என் விதியைச் சொல்ல தம்பி? எல்லாம் நான் பழகிய தீய குணம் உள்ள நண்பர்களால் தான் எனக்கு இந்த நிலை வந்தது. அவர்கள் நட்பால்மூ; விபசாரிகளோடு எனக்கு ஏற்பட்ட தொடர்பினால் வந்த விளைவுதான் இந்த நோய். எல்லோரும் என்னை அசுத்தாமானவன்இ தீண்டப்படப்படாதவன் என்று தள்ளி வைக்கிறார்கள். ஒருகாலத்தில் அழகானவன் என்று பலரால் வர்ணிக்கப்பட்டது என் தோற்றம் தோழுநோயால் இந்த நிலை அடைந்துவிட்டது” என்றான் சின்னையா. அவன் முகத்திலும் கைகளிலும் இருந்து சீழ் வடிந்துகொண்டிருந்தது. முகம் பார்ப்பதற்கு அகோரமாக இருந்தான்.

தர்மாவின் அம்மா அருவருப்பினால் தூர விளகி நின்றபடி “ ஏடெய் தர்மா கதைத்தபோதும் வா கோயிலுக்கு நேரமாயிற்று என்று சத்தம் போட்டாள். தர்மன், தாய் சத்தம் போட்டதைக் கேட்காதவாறு தன் புதுக் கைக்குட்டையை சின்னையாவிடம்; கொடுத்து, தன் கையில் மிகுதி இருநு;த எல்லாக் காசையையும் அவனிடம்; கொடுத்து

“ இதை வைத்துக்கொள் சின்னையா. முதலில் உன் முகத்திலும் கையிலும் இருந்து வழியும் சீழை இந்த கைக்குட்டையால் துடை” என்றான் தர்மன்.

அந்தப் பிச்சைக்காரன் சின்னையன், தர்மன் கொடுத்த தர்மத்தை வாங்கியபடி, அவனின் இரு கைகளை இறுக்கப்பற்றிக், கொஞ்சி உன் மனம் எவ்வளவு சுத்தமானது. நீண்ட காலம் வாழ்வாய் தம்பி” என்று வாழ்த்தினான்.

“ அம்மா வா கோவிலுக்குப் போக நான் ரெடி“ என்றான் தர்மா.

 “ கோவிலுக்குப  போகமுன் அந்தத் தொழுநோயாளியை தொட்டு, உன்னை நீ அசுத்தப்படுத்திவிட்டாய் தர்மா. வா வீட்டுக்குத் திரும்பிப் போய் நீ முதலில் குளித்த பிறகு கோவிலுக்கு வருவோம் என்றாள் தர்மாவின் தாய் மைதிலி;.

         

ராஜம் மாமி மௌனமாக நடப்பதை பார்த்துக் கொண்டு நின்றாள். எது சுத்தம் எது அசுத்தம் என்றது அவள் மனம்

 

                          *******         

 

 

அன்று பெய்த மழையில்…

  

அடைமழை தொடர்ந்து பெய்துகொண்டிருந்தது. மழை பெய்வது மலைநாட்டில் புதுமையானதொன்றல்ல. குளிர் காற்றுக் கூட இதமாக வீசியது. நுவரெலியா பஸ் ஸ்டாண்டில் பதுளைக்குப் போகும் பஸ்சுக்காக காத்துக்கொண்டிருந்தேன். மழைபெய்த காரணத்தாலோ என்னவோ அவ்வளவுக்கு பஸ் ஸ்டாண்டில் ஜனமில்லை. பஸ் நேரத்துக்கு வராததையிட்டு எனக்கு யோசனை.  பக்கத்தில் நின்ற ஒருவரிடம் கைக்கடிகாரம் இருப்பதைக்கண்டேன்.

 “தயவு செய்து என்ன நேரம் என்று சொல்லமுடியுமா ஐயா?” என்றேன் எனக்குத் தெரிந்த சிங்களத்தில். என் கணிப்பு அவர் சிங்களவர் என்று. ஒரு கையில் கைக்குழந்தையும் மறு கையில் சூட்கேசுடன் நின்ற என்னைச் சற்று உற்று பார்த்த அவர்.

 “என்ன நோனா பதுளைக்குப் போகும் பஸ்சையா எதிர்பார்க்கிறாய்?”. என்றார் சிங்களத்தில் அவர். அவருக்கு அறுபது வயது இருக்கும் என எனகணிப்பு. தலை சற்று நரைத்திருந்தது. கழுத்தைச் சுற்றி மப்ளர். வழமையாக சிங்களவாகள் கட்டும் லுங்கி எனப்படும் சாரம் கட்டியிருந்தார். சாரத்துக்கு குளிரைத் தாங்கிக் கொள்ளக்கூடிய கறுத்த கோர்ட். கையில் வியாபாரிகளுக்கே உரித்தான ஒரு தோல் பை. ஒரு வேளை பிஸினஸ் செய்பவராயிருப்பாரோ.

 “ஆமாம் ஐயா “ என்றேன் மரியாதையாக அவர் வயதுக்கு மதிப்புக் கொடுத்து.

 “இப்போ நேரம் ஐந்து இருபது. பதுளை பஸ் ஐந்து மணிக்கு கண்டியில் இருந்து இங்கு வந்திருக்கவேண்டும். வழக்கத்தில் சரியான நேரத்துக்கு வந்துவிடும். இன்று மழை. அது தான் தாமதமாகிறது என்றார்”;.

 “தினமும் இந்த பஸ்சில் பயணம் செய்வீர்களோ? நான் அவரைக் கேட்டேன்.

 “ இல்லை. பிஸ்னஸ் விசயமாகத் தான் அடிக்கடி  நுவரேலியாவுக்கு வருவேன். என் மகள் இங்குதான் திருமணமாகி இருக்கிறாள். என் தங்கையும் இங்குதான் இருக்கிறாள். என் ஒரே மகன் ஆர்மியில் கெப்டன். அவனுக்கு திருமணமாகவில்லை. அதைப்பற்றி பேசி முடிக்கத்தான் இங்கு வந்தேன்.” மள மளவென்று தான் வந்த காரணத்தை நான் கேட்காமலே சொன்னார்.

 “ஓ அப்படியா. மகன் கொழும்பு ஆர்மி தலமையகத்திலா  வேலை? “

 “இல்லை. சண்டை நடக்கிற யாழ்ப்பாணத்தில் அவருக்கு வேலை. ஒரு காலத்தில் நான் யாழ்ப்பாணத்தில்  அங்கு பேக்கரி வைத்திருந்தனான்.  “சிரிசேனா பேக்கரி” என்றால் ஒரு காலத்தில் யாழ்ப்பாணத்தில் எல்லோருக்கும் தெரியும். வின்சர் தியேட்டருக்கு அருகாமையிலிருந்தது. அது சரி நீ பேசும் சிங்களத்தில் தமிழ் வாடை வீசுகிறதே. நீர் தமிழா”? என்று தனக்குத் தெரிந்த அரைகுறைத் தமிழில் பேசினார் அவர்.

 “என்னால் நான் தமிழிச்சி  என்பதை அவருக்கு மறைக்க முடியவில்லை. ஆமாம் நான் தமிழ்தான்.” என்று ஒப்புக்கொண்டேன்.

 “ நல்லாக சிங்களம் பேசுகிறாயே?” என்றார் சிரித்தபடி அவர்.;

 “அதற்குக் காரணம் என் சிங்களச் சினேகிதி ஹேமாலதா. ஹேமாவும் நானும் ஒன்றாக பேராதனை யூனிவசிட்டியில் படித்தனாங்கள்.  ரூம் மேட் கூட. அவளும் ஓரளவுக்கு தமிழ் பேசுவாள்.” என்று எனக்கு சிங்களம் பேசத் தெரிந்த காரணத்தை விளக்கினேன்.

 “ யாழ்ப்பாணம் நல்ல ஊர். படித்தவர்கள் அதிகம். அங்கை என் பேக்கரிக்கு பக்கத்து கடைக்காரரின் மருமகன்; கனகரத்தினம் என் பேக்கரிக்கு பாணும் சீனிச்சம்பலும் வாங்க வருவார்.  அதாலை என் நண்பரானர். அவருக்கு கொழும்பு கச்சேரியிலை வேலை. மாதம் இரு தடவையாவது வீட்டுக்கு வருவார்.” என்று  தன் நண்பரையும் யாழ்ப்பாணத்தையும்; பற்றி பேசத் தொடங்கினார்.

 என் மனம் யாழ்ப்பாணம் என்றவுடன் சற்று அதைப்பற்றி அவருடன் தொடர்ந்து பேச தயங்கியது. வேண்டாம் அந்த பழைய சம்பவம். அவருக்கு அது நல்ல ஊராயிருக்கலாம். என் வாழ்க்கையின் பாதையையே மாற்றியமைத்த ஊரது. தூர விலகி வந்துள்ளேன். ஆனால் நான் தமிழிச்சி என்று ஏன் மறைப்பான்?. என் நெற்றியில் உள்ள பொட்டே என்னைக் காட்டி கொடுத்துவிட்டது.

 “ஆமாம் ஐயா. நான் பிறந்தது பருத்தித்துறையில். ஆனால் சிங்களப் பகுதிகளில் உள்ள பாடசாலையில் ஆங்கிலம் கற்றுக்கொடுக்கத்தொடங்கியவுடன் சிங்களம் சுமாராகப் பேசக் கற்றுக்கொண்டேன். அது சரி நீங்களும்; பதுளையா?”

 “இல்லை நான் இருப்பது வெளிமடை. அங்கு சிறு  பேக்கரி வைத்து வியாபாரம் செய்கிறேன். சாமான்களுக்கு ஓடர் கொடுக்கவும் மகனின் கலியாணத்தை ஒழுங்கு செய்யவும் வந்தனான் . நாலு மணி பஸ்சை தவறவிட்டுவிட்டேன். “

 நான் ஊகித்தது சரி. அவரில் வேலைப்பலுவின் முதிர்ச்சி தெரிந்தது.

 “அதிக வருஷமாய் வெளிமடையில் இருக்குறீர்களோ.?”

 “யாழ்ப்பாணத்தில் எனக்கு இருந்த பேக்கரியை  மூடிவிட்டு என்ன சொந்த ஊரான வெலிமடவுக்கு வந்து  கிட்டத்தட்ட பதினைந்து வருடங்களாகிறது. அதுசரி பதுளைக்கு இந்த நேரத்தில் தனியாகப் போகிறாயே. அங்கு பஸ் போய் சேர இரவாகிவிடும். யாரும் பஸ்நிலையத்துக்கு உன்னைச் சந்திக்க வருகிறார்களா?”

 “இல்லை. நான் ஒரு ஆங்கிலத்தில் பயிற்சி பெற்ற ஆசிரியையாக மாற்றலாகி பதுளைக்கு செல்கிறேன். அங்கு என் சினேகிதி ஹேமா படிப்பிக்கிற பள்ளிக் கூடத்தில் படிப்பிக்கப போறன். வீடு வாடகைக்கு கிடைக்கு மட்டும்; அவள் வீட்டில் சொற்ப காலம் தங்குவேன். ஹேமா பஸ் ஸ்டாண்டுக்கு என்னையும் குழந்தையையும் கூட்டிப் போக வருவாள்.”

 “அப்போ உன் கையில் இருக்கும் குழந்தையை யார் கவனிப்பது?”

 “பிரச்சனையில்லை. என் சினேகிதியின் தாய் பார்த்துக்கொள்வாள்.”

 “ஏன் உன் கணவன் உன்னோடு வரவில்லையா?”

 நான் மனதுக்குள் சிரித்துக்கொண்டேன். கணவனா? காமுகனா?. எனக்கு நடந்ததை அவருக்குச் சொல்லவேண்டிய அவசியமில்லை. நான் பொய்சொல்லியாகவேண்டும்.

 “இல்லை அவர் யாழ்ப்பாணத்தில் வேலை. அது தான் வரவில்லை. சுருக்கமாக பதில் சொன்னேன். என்னை மேலும் அவர் கேள்விகளுக்கு என்னை பதில்சொல்ல வைக்காதவாறு பதுளைக்குப் போகும் பஸ் வந்து நின்றது. கூட்டம் அதிகமில்லை. மூன்று பேர் அமரக் கூடிய சீட்; காலியாகயிருந்தது. அதில் போய் ஜன்னல் ஓரமாக அமர்ந்தேன். முதியவரும் அதே வரிசையில் எனக்கு ஒரு சீட் தள்ளி அமர்ந்தார். அது அவருக்கு என்னோடு கதைக்க  வசதியாயிருந்தது.  சில நமிடங்களில் பஸ் புறப்பட்டது. என் குழந்தை அவரைப் பார்த்து தன் பொக்கைவாயைத் திறந்து சிரித்து தன்கையை அவரிடம் நீட்டியது. அவரும் குழந்தையின் பார்வையால் கவரப்பட்டார்.

 “குழந்தைக்கு என்ன பெயர் நோனா?”

 “மாலினி” என்றேன்.

 “சிங்களப்பெயராகயிருக்கிறதே”, என்று குழைந்தையை தூக்குவதற்கு தன் கைகளை நீட்டினார். நான் குழந்தையை கொடுக்க தயங்கினேன். அவருக்கு விளங்கிவிட்டது எனக்கு விருப்பமில்லை என்று.

 “யோசிக்காதே நோனா.  என் மகளுக்குப் பிறந்த இரண்டு பேரப்பிள்ளைகள் எனக்குண்டு. அதில் இரண்டாவதுக்கு உன் குழந்தையின் வயது தான் இருக்கும்.” என்று சொல்லி என் மனதில் அவர் தன் மேல் நம்பிக்கையை வளர்த்தார். மாலினி அவரைப் பார்த்து கெக்கட்டம் விட்டு சிரித்தது.

 அவரின் ஆசையை ஏன் மறுப்பான். பார்ப்பதுக்கு நல்லவராக இருக்கிறாரே என்று குழந்தையைக் கொடுத்தேன். குழந்தையும் அவரிடம் தாவிச்சென்றது.

                                                                           

                                                      *******

 

ஜன்னலுக்கு வெளியே பார்த்தேன். பஸ் ஹக்கலை பூந்தோட்டத்தைத் தாண்டிக்கொண்டிருந்தது. முழங்கையில் பட்ட மழைத்துளிகள் என் எண்ணங்களை பின்னோக்கி இழுத்துச் சென்றது.  என்வாழ்க்கையை பாழடித்த அந்த சம்பவம் நடந்ததும் ஒரு அடை மழை நாளன்று. அப்போது எனக்கு திருமணப் பேச்சு நடந்து கொண்டிருந்தது. என் ஜாதகத்தில் ஏதோ குற்றம் இருப்பதாக கரைவெட்டி சாஸ்திரி சொன்னதால் எனக்குப் பேசி வந்த திருமணங்கள் தடைப்பட்டன. அந்த சமயத்தில்தான்; சிங்கள இராணுவம் யாழ்ப்பாணக் குடாநாட்டில் தன் அட்டூழியங்களை கட்டுமீ;றி அவிழ்த்துவிட்டது. அதுவும் வல்வெட்டித்துறை, பருத்தித்துறை பகுதிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகின. இராணுவம் பல வீடுகளுக்குள் புகுந்து பெண்களை கற்பழித்ததாக ஊரில் கதைகள் பரவின. பாதுகாப்புக்காக என்னை கொழும்புக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு போகும் படி என் பெற்றோர் வற்புறுத்தினர். ஒரு பாடாக என் சினேகதி ஹேமா மூலம் கொழும்பு கல்வி அமைச்சில் வேலை செய்த ஒருவரைப் பிடித்து கண்டிக்கு மாத முடிவில் மாற்றல் ஓடர் கிடைக்க வழிசெய்தேன். பதுளை எனக்குத் தெரிந்த இடம். அதுவும் ஹேமா படிப்பிக்கும் பள்ளிக்கூடம். துணைக்கு அவளும் அவள் தாயும் இருக்கிறார்கள் என்ற துணிவு. ஆனால் நான் அங்கு போகமுன்பே அந்த சம்பவம் நடந்துவிட்டது.

அன்று நேரம் கழித்து பிரத்தியோக வகுப்பை முடித்துவிட்டு வீட்டுக்கு அடைமழையில் குடையை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். வீதியில் ஒரு வருமில்லை. எனது சேலை மழையால் தோய்ந்து போய் உடம்புடன் ஒட்டிக்கொண்டிருந்தது. வெள்ளை பிரா வேறு நனைந்த ரவிக்கைக்கு கூடாக தெரிவதை என்னால் மறைக்க முடியவில்லை. மழை தீடிரென எதிர்பாராத வாறு பலத்த காற்று, இடி மின்னலுடன் பெரியளவில் பெய்யத் தொடங்கியது. காற்றில் குடையைப்பிடித்தபடி என்னால் நடக்க முடியவில்லை. தூரத்தில் தெரிந்த பாழடைந்த மண்டபத்தில் போய் ஒதுங்கினேன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கட்டிடம் அது. பாதி இடிந்த சுவர்களும் அரைக் கூரையுடன் இருந்த அந்த மண்டபம் என்னை மழையில் இருந்து காப்பாற்றினாலும் ஒரு காமுகனிடமிருந்து காப்பாற்ற முடியவில்லை.

இடிமுழக்கத்துடனும் மின்னிலுடனும் மழை பெய்தது. அந்த மழையில்; ஒரு ஆமி ஜீப், நான் மழைக்காக ஒதுங்கி நி;ன்ற கட்டிடத்தைத தாண்டிச் செல்வதை கண்டேன். பயம் என்னைப் பிடித்துக் கொண்டது. போன ஜீப் சில வினாடிகளில் திரும்பிவந்து நின்ற மண்டபத்தின் முன் வந்து நின்றது. அதை ஓட்டி வந்த ஒருவன் அதில் இருந்து இறங்கினான். ஜீப்பில் வேறு ஒருவரும் அவனைத் தவிர இருக்கவில்லை. அவனது யூனிபோர்மை பார்த்து அவன் ஆமி கெப்டனாயிருக்க முடியும் என யூகித்தேன். என்னை நோக்கி வருவதைக்கண்டேன்.

“ஏய் இங்கை என்ன தனியாக செய்கிறாய். பொம் எதும் வீச நிக்கிறாயா?. என்று ஆங்கிலத்தில் கூறியபடி என்னை அணுகி என் கையைப்பிடித்தான். என்னால் அவன் இரும்புப்பிடியில் இருந்து திமிற முடியவில்லை. என் கையில் இருந்த புத்தகங்கள் கீழே சிதறின. அவனது கழுகுக் கண்கள் என் உடம்பில் ஒட்டிய சேலையை இரசிப்பதைக் கண்டேன்.

“ மழை அது தான ஒதுஙகி நிற்கிறன்:.. என்றேன் ஆங்கிலத்தில்.

“ ஓ நீ இங்கிலீஸ் பேசுவியோ. நல்ல வடிவான படு தான் நீ;” சிங்களத்தில் பேசியபடி  என்னை நெருங்கி அணைத்தான்.”

“ஐயோ என்னை விட்டுவிடு. என்னை ஒன்றும் செய்யாதே” என்று சிங்களத்தில் கதறினேன்.

“ ஓ நீ தமிழ், இங்கீலிஸ், சிங்களம் பேசும் குட்டியா. நல்ல படு (சாமான்) தான்” என்று தன் தடித்த உதடுகளை என் நனைந்த உதடுகளை என் உதடுகள்; மேல் பதித்தான். அவனது கைகள் என்னை இறுக்கத்; தழுவியது. நான் திமிறினேன். என்னால் அவனின் காமுகப் பிடியிலிருந்து தப்பமுடியவில்லை. கீழே தடுமாறி விழுந்தேன். என்மேல் அம்மிருகம் விழுந்தது. அவன் பாரத்தை என்னால் தாங்கமுடியவில்லை. அந்த மிருகத்தின் உஷ்ணம் நிறைந்த மூச்சு என் முகத்தில் பட்டது. எனது சீலையை அவன் கைகள் என் காலில் இருந்து கொஞசம் கொஞ்சமாக மேலே அகற்றுவதை உணர்ந்தேன். என்னால் சத்தம் போட்டு யாரையும் உதவிக்கு கூப்பிட முடியவில்லை. அவனது தடித்த உதடுகள் என் உதடுகளைச் சுவைத்தன. இடியுடன் திரும்பவும் ஒரு மின்னல். அவனைத் என் உடம்பில் இருந்து கழுத்தைப் பிடித்து தள்ளிவிட முயன்றேன் முடியவில்லை. அவன் முகத்தில் இருந்த ஒரு தளும்பு தான் என் கைக்குப் பட்டது. அவ்வளவு தான் எனக்கு உணர முடிந்தது.

அவன் முகத்தைத் தெளிவாக அந்த மழையிருட்டில் பார்க்க முடியவில்லை. அவன் மிருகத்தனமான அழுத்தத்தால் நான் வீரிட்டு கத்தினேன். என் கன்னி கழிந்தது. மயக்கத்தில் கண்ணை மூடியபடி இருந்த நான் கண்விழித்தபோது அந்தக் காமுகன் தன் இச்சையைத் தீர்த்துவிட்டு போய்விட்டான். அந்தச் சம்பவத்தை என் பெற்றோருக்குச் சொல்லாமல் மறைத்துவிட்டேன். ஊருக்குத் தெரிந்தால் கதை பரவிடும் என்ற பயம் வேறு. மாத முடிவில் கண்டிக்குப் புறப்பட்டுச் சென்றேன். அந்த சம்பவத்தின் பின் அவனை நான் சந்திக்க விரும்பவில்லை. கண்டியில் இருந்த என் சினேகிதி ஹேமாவுக்கும் மட்டும் முழு விபரமும் சொன்னேன். அவள் தன் இனத்தைச் சேர்ந்த ஒருவன் செய்த பாவச் செயலை நினைத்து மனம் வருந்தினாள்.

“ நீ யோசிக்காதே எப்போவாவது ஒரு நாள் அவனுக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்”; என்றாள். கண்டிக்கு படிப்பிக்க வந்து சில நாட்களில் என் வயிற்றில் கரு வளர்வதை உணர்ந்தேன். அதை சிதைக்க எனக்கு மனம் இடம் கொடுக்கவில்லை. அந்தக் குழந்தை செய்த பாவம் தான் என்ன?. ஹேமாவும் அதையே சொன்னாள். “சிலவேளை, ஒரு காலம் இந்தக் குழந்தை உங்கள் இரண்டு பேரையும் ஒன்று சேர்க்கலாம் அல்லவா” என்றாள்.

“நடக்கப் போகிற காரியமா அது. என்னைப் போல் எத்தனை பெண்களை கற்பழித்திருப்பான் அவன். அவனோடை வாழமுடியாது என்னால்” என்றேன்

“ காலம் எதுக்கும் பதில் சொல்லும் ? அவள் தாயிடம் இருந்து பதில் வந்தது.

மாலினி கண்டியில் பிறந்தாள். ஹேமாவின் தாய் எனக்கு தாய்க்குத் தாயாய் இருந்து மாலினியை வளர்த்தாள். என் பெற்றோருக்கும் எனக்குக் குழந்தை இருக்கும் கதை தெரியாது. காரணம் அது அவர்களை எவ்வளவுக்குப் பாதிக்கும் என்று எனக்கு தெரியும். எனக்கு கலியாணம் பேச வேண்டாம் என்று எழுதிப் போட்டு விட்டேன். அதற்குப் பின் நான் பருத்தித்துறை குழுநதையோடு போக விரும்பவில்லை. அதன் விளைவுகள் என்ன வென்று எனக்குத் தெரியும்.

                                                        *****

குலுக்கலுடன் ஹோர்ன் அலர, பஸ் வெளிமடை பஸ் நிலையத்தில் வந்து நின்றது. சிந்தனையில் இருந்து விடுபட்டேன். மழை ஓய்ந்திருந்தது. பஸ் டிரைவர் யாரோடையோ பேசுவது என் காதில் கேட்டது. மாலினி முதியவர் மடியில் நம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தாள்.

 

“இனி பஸ் பதுளைக்கு போக முடியாது. இடையே பாதை மலைச்சரிவினால் மூடப்பட்டுவிட்டது. எல்லோரும் இறங்குங்கோ” என்றான் சிங்களத்தில் பஸ்கொண்டக்டர். ஜனங்கள் முணுமுணுத்தபடி இறங்கத் தொடங்கினர்.

 

நான் என்ன செய்வது என்று தெரியாமல் திகைப்பதைக் கண்ட அந்த முதியவர்.

 

“நோனா ஒன்றுக்கும் யோசிக்காதே. இன்று இரவு என் வீட்டில் தங்கிவிட்டு நாளை பதுளைக்குப் போகலாம். வீட்டில் நானும் என் மனைவியும் மாத்திரம் தான் இருக்கிறம். அவளுக்கும் குழந்தைகள் என்றால் விருப்பம்” என்றார். என்னால் அவர் வேண்டு கோளை நிராகரிக்க முடியவில்லை. மழை ஓய்ந்தது. பஸ் நிலையத்துக்கு அருகே உள்ள அவர் வீட்டுக்கு அவருடன் போனேன். அவர் குழந்தையை அவர் தூக்கிக் கொண்டார். நான் எவ்வளவு கேட்டும் மாலினியைத் தரமறுத்துவிட்டார்.

 “நீ சூட்கேசை தூக்கிக் கொண்டு வா. நான் குழந்தையைக் கொண்டு வாறன் “ என்றார்.

 அவர் வீட்டை நாங்கள் அடைந்ததும் அழுகைக் குரல் கேட்டது. சிலர் அங்கு நிற்பதையும் கண்டேன். முதியவர் குழந்தையை என்னிடம் கொடுத்து விட்டு அழுது கொண்டிருந்த மனைவியிடம் பதட்டத்துடன் ஓடிப் போய்  என்ன நடந்தது என்று விசாரித்தார். அவள் தன் கையில் இருந்த தந்தியை அவரிடம் கொடுத்தாள். அவர் அதை வாசித்து விட்டு பேசாமல் சிலையாய் நின்றார். அவர் கையில் உள்ள தந்தியை எடுத்து நான் வாசித்தேன்”

 “Captain Somasiri is killed in the battle at Elephant pass. Please contact HQ” என ஆங்கிலத்தில் சுருக்கமாக செய்தி இருந்தது.

 எனக்கு அவரது மகனுக்கு நடந்ததை விளங்க அதிக நேரம் பிடிக்கவில்லை. அவர் மகன் தான் கெப்டன் சோமசிரி. அவனுக்கு கலியாணம் பேசத்தான் அவர் நுவரேலியாவுக்கு  சென்றதாக அவர் சொன்னது எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. மொளனமாக நின்ற எனக்கு ஹோல் சுவரில் மாட்டியிருந்த மகனின் படத்தை அவர் சுட்டிக் காட்டிவிட்டு “அவன் தான் என் ஒரே மகன் சோமசிரி. இவனுக்குத்தான் கலியாணம் பேசி முடிவாக்கி விட்டு வந்திருக்றன்” என்று சொல்லி விம்மி விம்மி அழுதார்.

 அந்தப் படத்தில் ஆமி யுனிபோர்மில் கம்பீரமாக காட்சியளித்தது வேறு யாருமில்லை, மாலினியின் தந்தையான அந்தக் காமுகன் தான். அவனை அடையாளம் கண்டுகொண்டேன். படத்தில் அவன் முகத்தில் இருந்த தழும்பு அவனை எனக்கு அடையாளம் காட்டிக் கொடுத்துவிட்டது.. நான் இதை எதிர்பார்க்கவில்லை. விதி என்னையும் குழந்தையையும் எப்படி அவனின் பெற்றோரிடம் சேர்த்துவிட்டது.

 “இந்த நல்ல மனிதருக்கா இப்படி ஒரு மகன் ? இவருக்கு இவர் மகன் எனக்கு செய்தது தெரிந்திருந்தால்?” என்றது என் மனம். என் கையில் இருந்த மாலினி வீரிட்டு அழுதாள். அவளின் திமிறலில் என் நெற்றியில் இருந்த குங்குமம் அழிந்தது. என் சினேகிதி ஹேமா சொன்னது தான் என் ஞாபகத்துக்கு வந்தது. கடவுள் அவனைத் தண்டித்துவிட்டார். ஆனால் தந்தையில்லாத மாலினியை வளர்ப்பது என் பொறுப்பு. இதுவும் கடவுளின் சோதனை என்றது என் மனம்.

 சில நிமிடங்களில்  வீட்டுக்காரர்களுக்குத் தெரியாமல் நான் மாலினியோடு பெரியவர்; வீட்டை விட்டு வெளியேறினேன்.

                                                            

                                               ******

           

 

குடை (Umbrella)

 

 

மழை இடி முழக்கத்தோடு வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. “நேற்று எரித்த வெய்யிலுக்குப் பதிலாக இன்று வானம் கண்ணீர் விடுகிறது” என்றாள் கனகம்.  செல்லத்துரையருக்கு தன் பெனசன் விஷயமாக கொழும்பு கச்சேரிக்குப் பஸ் எடுத்துப் போக வேண்டிய அவசியம் இருந்தது. பலதடவை போய்வந்தும் அவர் பிரசனை தீரவில்லை அவருக்கு தடிமன் காச்சல் வந்து சுகமாகி இரண்டு நாட்களாகி விட்டது.; மழைக்குள் போய் நனைந்து வந்து வருத்தத்தை திரும்பவும் தேடிக் கொள்ள வேண்டாம் என அவர் மனைவி கனகம் சத்தம் போட்டாள். கணவனுக்குக் காய்ச்சல் என்று வந்தால் தான் படும் கஷ்டம் அவளுக்குத் தான் தெரியும். மருந்து குடிக்க சிறு பிள்ளை போல் அடம்பிடிப்பாhர் செல்லத்துரையர். வாய் கட்டப்பாடு கிடையாது. கொத்தமல்லித் தண்ணியென்றால் அவருக்கு விஷம்மாதிரி.

 

செல்லத்துரையரின் மகன் லண்டனில் இருந்து அனுப்பிய விலை உயர்ந்த மார்க்ஸ் அன் ஸ்பென்சர் குடை  சுவரில் கம்பீரமாக தொங்கிக்கொண்டிருந்தது. பல காலம் செல்லத்துரையர்; கந்தோருக்குப் போய் வர பாவித்த குடை வயதாகி பளுப்பு நிறத்துடன புதுக்குடையின் வருகைக்கு பி;ன் கவனிப்பரற்று ஒரு மூலையில் முடங்கிக் கிடந்தது. விலையுர்ந்த குடை. அடிக்கடி செல்லருடன் கம்பீரமாக வெளியே பொய் உலாவி வரும். பழைய குடையை எடுத்துச் செல்வதை அவர் தவிhத்தார். நீ எனக்காக உழைதடது என்னை வெய்யிலிலும் மழையிலும் இருந்து பாதுகாப்பு தந்தது போதும். இனி- உனக்கு ரிட்டயர் வாழ்க்கை என்பது போல் பழைய குடையை செல்லத்துரையர் உதாசீனப்படுத்தினார். உள்நாட்டு குடைகைளை மற்றவர்கள் கொண்டு செல்வதைக் கண்டால் புதுக் குடைக்கு ஒரு அலட்சியம். வெளிநாட்டிலிருந்து பீளெனில் வந்த குடை நான் என்ற பெருமை. தனது நண்பர்களிடம் தனது மகன் லண்டனில் இருந்து அனுப்பிய அதிக விலை உயர்ந்த குடையைப் பற்றிப் பெருமையாகப் பேசுவார். சிறீலங்கா காசிலை பவுணில் இருந்து ரூபாவுக்கு மாற்றினால் குறைந்தது 3000 ரூhபாய் பெறுமானம் இருக்கும். அரை மாத சாப்பாட்டு செலவுக்குப் போதுமான பணமது.

 

“ என்ன கனகம் மழை கொஞ்சம் விட்டுது போல கிடக்குத. மணியும் ஒன்பதாகிப் போச்சு. பஸ் எடுத்து கச்சேரிக்கு போய் சேர குறைந்தது ஒரு மணித்தியாலம் வேண்டும். மத்தியானச் சாப்பாட்டு நேரத்துக்கு முதல் போயாகவேண்டும் இல்லாட்டால் இரண்டு மணிமட்டும் கச்சேரியிலை தூங்க வேண்டும். என்னுடைய பென்சனிலை மாதம் பிழையாக  ஐந்நூறு ரூபாய் கூட ஒரு வருஷமாக கழிக்கிறான்.  அதைப் பற்றி போட்ட கடிதங்களுக்குத் தக்க பதில் இல்லை. கச்சேரியிலை வேலை செய்து மூன்று மாதத்துக்கு முந்தி ரிட்டயரான சோமசுந்தரம் என்றவருக்கு இரு நூறு ரூபாய் கொடுத்தனான் என்டை கழிவைச் சரி செய்து எனக்கு வரவேண்டியதை எடுத்துர் தரச்சொல்லி. ஒரு மாதமாச்ச. ஆளிண்டை பெச்சு மூச்சைக் காணோம். நேர போய் சந்தித்து சப்ஜெக்ட் கிளாக்கிண்டை கையிலை வைத்தால்தான் எதும் நடக்கும” செல்லத்துரையர்; புறுபுறுத்தபடி குடையை எடுக்க போனார்.

 “ இஞ்ஞாருங்கோ இந்தக் கொத்தமல்லித் தண்ணியை குடித்துப்பொட்டு போங்கோ. கெதியிலை மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திடுங்கோ. போகிற இடத்திலை கண்டதை கடையதை சாப்பிடாதையுங்கோ. பஸ்சிலை போகிறது கவனம் பர்சை பிட்பொக்கட் அடித்துப் போடுவானகள்;. புதுக் குடை கவனம். அவன் தம்பி உங்களுக்காக பிரண்ட் மூலம் வாங்கி அனுப்பினவன். ஏதோ இருபது பவுணாம். திறமையான குடையாம். இங்கத்து கணக்கிலை ரூபாய் 3000க்கு மேலை பெறுமதி. கவனயீனமாய் விட்டிட்டு வந்திடாதையுங்கோ” கனகம் எச்சரித்தபடி கொத்தமல்லித தண்ணியைச் செல்லத்துரையரிடம் கொடுத்தாள். அவரும் அவசரம் அவசரமாக மடக் மடக்கென்ற குடித்துப்போட்டு சப்பாத்தை மாட்டிக் கொண்டு புதுக் குடையும் கையுமாக வெளியே இறங்கினார். குடை அவரை வெய்யில் மழையில் இருந்து மட்டும் பாதுகாப்பது மட்டுமல்லாமல்  கைத்தடியாகவும் சில சமயங்களில் உதவியது.  அதை வீசி வீசி அவர் பாதையில் நடக்கும் போது ஒரு தனி அதிகராத் தோற்றத்தை அவருக்கு கொடுத்தது.

 காலி வீதிக்கு வந்தபோது போக்கு வரத்து நெருக்கடியைப் பார்த்த போது செலத்துரையருக்கு பயம் வந்திட்டது. நல்லகாலம் வீதியைக் கடந்து மறுபக்கம் போய் பஸ ;எடுக்கவேண்டிய நிலை அவரக்கு இருக்கவில்லை.  பஸ் எடுத்துப் போய்ச் சேர அதிக நேரமாகலாம். அவர் போகிற பஸ் ரூட் நம்பர் போட்ட இரண்டு பஸ்கள் வந்தது. ஆனால் சனம் நிறைம்பி வழிந்து தொங்கிக் கொண்டு போனதால்; அவரால் ஏற முடியவில்லை. மழை விட்டு  வெய்யில் தனது அதிகாரத்தை காட்டிக் கொண்டிருந்தது.

 “ அனே மாத்தயா இந்த ஒரு மாதக் குழந்தைக்கு பசிக்கு எதாவதும் கொடுங்கோ. “ என்று சிங்களத்தில் பஸ்;ஸடாண்டுக்கு அருகே உள்ள பிச்சைக்காரி ஒருத்தியின பரிதாபக் குரல் போவோர் வருவோரின் கவனத்தை கவரவில்லை. அவளுக்கு குறைந்தது இருபத்ததைந்து வயதிருக்கும். கிழிந்த சேலை அவளது அங்கத்தின் சில பகுதிகளை விளம்பரம் செய்தது. அதை கடைக்கண்hல் பாhத்து இரசித்தபடி சென்றவர்கள் அந்த இலவசக் காட்சிக்காவது சில்லரையைப் போடவில்லை.   அவர்களுக்கு அதில் நின்று அவளின் சோகக் கதையை கேட்க நேரமில்லை. கொளுத்தும் வெய்யிலில் குழந்தை வெப்பம் தாங்காமால் அழுது கொட்டியது. யாரோ ஒரு தர்மவான் போட்டு சென்ற பழை பாண் துண்டை எடுத்து ஒரு கடி கடித்து விட்டு குழந்தையின் வாயுக்கள் திணித்தாள் அவள். குழந்தை அதைச்சாப்பிட மறுத்து தாய் பாலைத் தேடி அழுதது. குழந்தை பிறந்து குறைந்தது மூன்று மாதம் இருக்கலாம். அவளைப் போல் எத்தனையோ வாழ்ககையில் வழுக்கி விழுந்த பெண்கள் கைக்;குழந்தைகளோடு பாதை ஓரங்களில் முடங்கிக் கிடப்பதைக் காணலாம்.; இரவு நேரங்களில் கடை ஓரங்களில் உள்ள சிமேந்துப் பகுதிகள் தான அவர்களின் படுககை அறை. மழை வெய்யில் என்று பாராமல் அவர்கள் பிழைப்பு காலி வீதியை நம்பி இருந்தது. யாராவது புதுமுகம் அவர்கள் படுக்கும் இடத்ததை ஆக்கிரமித்து விட்டால் தூஷணவார்ததை ஏவுகணைகளாக பறக்கும். சில சமயம் தலை மயிரைப் பிடித்து சண்டையிலும் இறங்கி விடுவார்கள். சண்டையைத் தீர்க்க தெருச் சண்டியன் வேறு. அவன் அதில் எத்தனை பெண்களுக்கு புருஷனோ அவர்களைக் கேட்டுத் தான் தெரிந்து கொள்ள வேண்டும். அப் பெண்களின் சண்டையைப் பார்த்து இரசிக்க ஒரு கூட்டம் இருக்கத்தான் செய்தது.

  

                                                                                ******

 எதோ ஒரு வழியாக வெள்ளவத்தை விகார லேனுக்கு  முன்னால் இருந்து புறக்கோட்டைக்குப் போகிற பஸ் அவருக்கு கிடைத்தது அவர் அதிர்ஷ்டம். பஸ்சில் அசையமுடியாத கூட்டம். ஒரு கையில் குடையை இறுகப் பிடித்தபடி மறு கையால் பஸ்சுக்குள் தொங்கிய வலையத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டு நின்றார செல்லத்துரையர்;. அந்தக் கலையில் அவர் பழக்கப்பட்டவர்.. பஸ் சாரதி போடுகிற தீடீர் பிரேக்கில தனக்கு முன்னால் நிற்கும் பெண்ணோடு மோதாமல் கவனமாக இருந்தார். மோதினால் அதன் விளைவு அவருக்குத் தெரியும்.  அவருக்கு சற்று முன்னே சேலை கட்டிய பெண்ணொருத்தியை பி;ன்னால் இருந்து தன் உடம்பால உராசியவாறு இன்பம் கண்டுகொண்டிருந்தான் சாரம் கட்டிய பேர்வழி ஒருவன். அவனின் கைகள் அடிக்கடி அப்பெண்ணை பின பகுதியை வருடியதை அவர் கண்டுவிட்டார். அவள் என்ன செய்வது என்று தெரியாமால் நெளிந்தாள். அவள் நெற்றியிலோ ஒரு குங்குமம் பொட்டு. நிட்சயம் திருமணமான தமிழ் பெண்தான். குழந்தைகள் கூட இருக்கலாம். பாவம் குடும்பத்திற்காக பஸ் ஏறி இப்படி அவஸ்தைபட்டு வேலைக்குப் போக வேண்டிய நிலை அவளுக்கு. பஸ் பிராயாணத்தில் தான் எத்தனை காமுகர்களை அவள் சந்திக்க வேண்டி இருக்கிறது.  செல்லத்துரையருக்கு இதெல்லாம் புதுமையான காட்சியல்ல. அவர் கோட்டையில் வேலை செய்த போது தினமும் பஸ்சில் தான் போய் வந்தார். அதனால் பல காட்சிகளைக் கண்டு அனுபவப் பட்டவர். ஒரு தடவை அவர் பணம் செய்தபோது ஒரு பெண் தனக்கு பின்னால் நின்று தன் உடம்பை அழுத்தி சேட்டை விட்டவனுக்கு விட்டு இறங்க முன், குத்தக்கூடாத இடத்தில குத்திவிட்டு, கூட்டததோடு கூட்டமாய தீடீரென இறங்கி மாயமாக மறைந்த சம்பவத்தை அவர் இன்னும் மறக்க வில்லை.  அதே போல் இன்னொரு சேட்டை போவழியை தன் கையில இருந்த குடையால் தாக்கி பலரின் ஆதரவை பெற்ற கவுன் அணிந்த பறங்கிப பெண் ஒருத்தியை நினைத்த போது செல்லருக்கு இந்தப் பெண்ணும் அப்படி ஒரு தமிழ் வீராங்கனையாக மாட்டாளா என்ற எண்ணம் வந்தது.

 செல்லத்துரையரை கொண்டக்டர் டிக்கட் கேட்ட போது எதோ ஒருவழியாக பஸ் குலுக்களில்; சேர்ட் பொக்கட்டில் இருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்தார். பஸ் ஒரு குலுக்களுடன் பம்பலப்பிட்டியில் நின்றது. அவருக்குப் பகத்தில் இருந்த சீட்டில் இருந்த மூவரும் இறங்கினார்கள். செல்லத்துரையருக்கு தனக்கு லொட்டரி போல் கிடைத்த கோர்னர் சீட்டில் போய் அமர்ந்தார். குடையை தனக்கு அருகே பத்திரமாக வைத்துக் கொண்டார். தனது பர்சை அடிக்கடி தடவி பாhத்துக்கொண்டார். பிளேட் பாவித்து பிட்பொக்’கட் அடிக்கும் பேர்வழிகள் சம்பள நாட்களில் பஸ்சில் அதிகம். செல்லத்துரையர் ரிட்டயராகமுன்னர் தபாற் தந்தி திணைக்களத்தில பரிபாலன அதிகாரியாக வேலை செய்தவர் டியூக் பாதையில் உள்ள தலமையகத்தில் எழாதவது மாடியில் அவருக்கென சிறு அறையிருந்தது தினமும் ஒரு கையில் திணைக்களத்தில கறுப்பு நிற தோல் பையும், குடையுமாகத் தான் செல்லத்துரையர் வேலைக்குப்போவது வழக்கம். மத்தியானப் போசனத்தை வேலை செய்வோருக்கு சைக்கிலில எடுத்துச்செல்லும் சாப்பாட்;டுக்கார சோமுவிடம் கொடுத்தனுப்புவாள் கனகம். பிளேட்டில் மத்தியானச் சாப்பாட்டை அழகாகக பரிமாறி செல்லருக்கு பிடித்த மீன் பொரியலையும் மோர் மிளகாய் பொரியலையும், ஊறுகாயையும் ஓரமாக வைத்து இன்னொரு பிளேட்டால் முடி , வெள்ளைத் துணியால் கட்டி, செல்லரின் பெயர் , வேலை செய்யும் விலாசம் , வகிக்கும் பதவியின் பெயர் ஆகியவற்றை உள்ளடக்கிய லேபலையும் கட்டி அனுப்புவாள் கனகம்;. எக்காரண்தைக் கொண்டும் வெளியில் சாப்பிடக் கூடாது என்பது அவருக்கு கனகத்தின் கட்டளை. ஆனால் சாப்பாட்டுக் கரியர் செல்லத்துரையரை போய் அடையும் போது வெள்ளைத் துணியில் குளம்பு ஊறி மஞ்சளாக மாறியிருக்கும். காரணம் பல கைகள் மாறி, சேர வேண்டிய இடத்தை சாப்பாட்டுக் கரியர் போயடையும் போது ஏற்பட்ட குலுக்களின் விளைவே துணியின் அந்த நிறமாற்றம். சில சமயங்களில்  வேறு ஒருவரின் சாப்பாடு அவரைப் போய் அடைவதுமுண்டு. பஸ்சி;ன் ஜன்னலூடாக அவர் சிந்தனைகள் தனது வேலைசெய்யும் போது ஏற்பட்ட கடந்த கால அனுபவங்களை நோக்கிச் சென்றது. தன்னொடு வேலை செய்த சிங்கள நண்பர்களோடு உணவைப் பகிர்ந்துண்டதை நினைக்கும் போது அவருக்கு சிரிப்பாக வந்தது. அந்த சுகமான உறவு 1983ம் ஆண்டு கலவரத்துக்குப் பின் ஓடி மறைந்துவிட்டது.

 காலி முக மைதானத்துக்கு முன்னால் பஸ் நின்றது. என்ஜின் தகராறு செய்ததினால் புறப்புட அரைமணி நேரமாகும்; என்றான் டிரைவர். நல்லகாலம் ஜன்னல் சீட் கிடைத்தபடியால் பாசி மணம் கலந்த கடற்கரை காற்று முகத்தில் பட இதமாக இருந்தது. கடற்கரை யோரமாக போடப்பட்டிருந்த சீமேந்து இருக்கைகளில், ஒரு குடையின் மறைவில் ஒரு சோடி ஜீவன்கள் தங்களை மறந்து சல்லாபத்தில் ஈடுபட்டிருந்தது அவர் பார்வைக்குப் பட்டது. வீதி ஓரத்தில் சல்லாபம் , பஸ்; பணத்தின் போது சல்லாபம் , கடற்கரை ஓரத்தில் சல்லாபம். ஏன் இவர்களுக்கு வீடு வாசல் இலலையா?. மிருகங்களைப் பொலல்லவா நடக்கிறார்கள். நாட்டில் ஒழுக்கம் சீரழிந்து விட்டதா. இவர்களி;;ன் நடத்தைக்கு ஒத்தாiசாயக குடை உதவியது. ஆதுவம் ஊள்ளூர் குடை. ஆடவனின் ஒரு கை குடையை பிடித்திருக்க, மறு கை சிருங்கார விளையாட்டுகளில்  ஈடுபட்டுக்கொண்டிருந்தது. அவர்களி;ன் காதல் விளையாட்டை தினப்பத்திரகை ஒன்றை எதோ வாசிப்பதுபோல் பாவனை செய்தவாறு ஒரு முதியவா,; அடல்ட்ஸ ஓன்லி படம் பார்த்து இரசிப்பது போல் இரசித்துக் கொண்டிருந்தார். அவர்களுக்கு துணையாக இருந்த குடை முதியவர் அக்காட்சியை பார்பதற்கு  இடைஞ்சலாக இருந்தது. வீசியை காற்றில் குடை பறந்து போய்விடாதா என்ற நப்பாசை அக் கிழவனுக்கு மிசை நரைத்தாலும் ஆசை நரைக்வில்லை போலும் என செல்லர் மனதுக்குள் நினைத்துக் கொண்டார். விகாரமகாதெவி பூங்காவிற்கு வரும் இளம் தம்பதிகளி;ன் சிருஙகார விளையாட்டுகளை பார்த்து இரசிப்பதற்காக, துவாரம் செய்த பத்திரிகையும் கையுமாக பூங்காவை வாசிகசாலையாக்க வரும் கூட்டம் ஒரு புறம். முனிதனின் நெறி தவறிய செயல்பாடுகளுக்குத் தான் எல்லை கிடையாதே!

 ஓரு பாடாக பஸ் திரும்பவும் புறப்பட்டது. செல்லத்துரையர்; கைக்கடிகாரத்தை பார்த்தார். பஸ் ஏறி ஒரு மணித்தியாலமாகிவிட்டது. கடந்த தூரமோ ஏழு மைல்கள். மத்தியானப் போசன நேரத்துக்கு முன் கச்சேரிக்குப் போயாக வேண்டும். இல்லாவிட்;டால சப்செஜக்ட் கிளார்கை பிடிக்க முடியாது. கச்சேரியை வந்தடையும் போது நேரம் பதினொன்றாகி விட்டது. வாசலில் நின்ற பீயூனைப் பாhத்து தனக்குத் தொந்த அரை குறை சிங்களத்தில சப்செஜக்ட் கிளார்கின பெயரைச் சொல்லி பென்சன் விஷயமாக பார்க்க வந்திருப்பதாக சொன்னார். பியோன் சொன்ன பதில் அவருக்கு ஏமாற்றத்தை அளித்தது.

 “மாததையாவிணடை அம்மா நேத்து இறந்திட்டா. மாத்தையா ஒரு கிழமை லீவு என்றான் பியோன். நான வெளிக்கிட்ட முழிவியளம் சரியல்லை போலும். இ;ந்த பென்சன் விஷயத்துகாக செயத பிரயாணச் செலவும் நேரமும் கூட்டிப் பாத்;தால் இவ்வளவுக்கு எனக்கு செர வேண்டிய பணத்தைப் பெற இவ்வளவு கஷ்டப்படவேண்டுமா எனத் தனக்குள்  அங்கலாயித்துக் கொண்டார். வெய்யிலின் அகோரம் குறையவிலலை. கச்N;சரி வாசலில் செவ்விளநீர் விறபவனிடம் ஒரு இளனீரை வெட்டிவித்து குடித்த போதூன் அவருக்கு மனதுக்கு ஆறுதலாக இருந்தது.

 பஸ்சைப் பிடித்து வீடு போய் சேருவதற்கு. பஸ் ஸடாண்டை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்த செல்லருக்கு குழநதை அழும் சத்தம் கேட்டது. உடனே அவருக்கு சில மாதங்களுக்கு முன்னர் தன் மகளுக்கு பிறந்த பேத்தி துர்ககாவின் நினைவு தான் வந்தது. அவர் கேட்ட அழகைக் குரல் துர்காவி;ன் குரல் போல் அவருக்கு இருந்தது. குரல் வந்த திசையை நோக்கினார். வீதுp ஓரம் கொளுத்தும் வெய்யிலி திரும்பவும் வெள்வததையில் தான் பார்த்த பிச்சைக்காரி பெண் கைக் குழந்தையோடு. ஆனால் இந்தத் தடவை; கையில் குறைந்தது ஒரு சில நாட்ககுளுக்கு முன் பிறந்த பெண் குழந்தையோன்றுடன் பாதை ஓரத்தில் துணி விரித்து பிசசை எடுத்துக்கொண்டிருந்தாள் ஒரு பிச்சைக்காரி;. வாழக்கையில் ஒரு சில நிமிட சிற்றின்பத்திற்காக ஆடவன் ஒருவனால் வஞசிக்கப்பட்டவள் அவள். வறுமைக்காக தன் கற்பை விலை பேசி விற்றுப் பெற்ற வெகுமதி அவள் iகியல். தோற்றத்துக்கு மலைநாட்டு இந்திய வம்சவழி வந்த பெண்போல் இருந்தது. சிங்களத்திலும் மலை நாட்டுத் தமிழிலும் அவள் பிச்சை கேட்டதில் இருந்து அதை செல்லத்துரையர் ஊகித்துக் கொண்டார்.

 “இது உன் குழந்தையா?” தமிழில் அவளைக் கேட்டார் செல்லத்துரையர்.

 “ ஆமாம் சாமி. பிறந்து ஒரு கிழமை தான் சாமி.”

 “ அது சரி நீ பேசுவதைப் பால்க்க மலைநாட்டை சேர்ந்தவள் போல் இருக்கிறதே”? செல்லத்துரையர் அவளைக்; கேட்டார்.

 “ ஆமாம் சாமி. என் சொந்த ஊர் பண்டாரவளைக்கு அருகேயுள்ள ஒரு சிறு கிராமம். அங்கு தெயிலைத் தோட்டத்தில கொளுந்து பிடிங்கிக கொண்டிருந்தனான். ஒரு சிங்களவன் ஒருவானால் வேலை எடுத்துத் தாறன் என்று கொழும்புக்கு வந்து ஏமாற்றப்பட்டவள் நான். இநத குழந்தை தான் அவன் எனக்குத் தநத பரிசு”

 “ அது சரி அவன் இப்ப எங்கே”?

 “ அவன் என்னை விட்டு போய் மூன்று மாதமாகிறது. ஆளைத் தேடினேன் கிடைக்கவில்லை. என்னைப் போல எத்தனைப் பெண்களை ஏமாற்றினானோ தெரியாது.

 “நீ திரும்பவும் சொந்த ஊருக்குப் போயிருக்கலாமே”.

 “கையில்; குழந்தையோடு போயிருந்தால், கங்காணயாக இருகுகும் என் தந்தை எனனை கொன்றிருப்பார்.”

 “அப்போ இனி உன் வாழ் நாள் முழுவதும் பாதையோரத்தில் இருந்து பிச்சை எடுத்து நீயும் குழநதையும் வாழப் போகிறீர்களா”?

 “ என்ன செய்வது. என் உடல் இருக்கிறது எனக்கும் குழந்தைக்கும் வயிற்றிப் பசியைத் தீர்க்க. ஆண்களின் பசியயைத் தீர்த்து எங்கள் பசியயை தீரத்துக்கொள்ள வேண்டிய நிலை எனக்கு”.

 “ எஙகேயாவது போய் வீட்டு வேலை செய்து பிழைக்கலாமே”.

 “கைக் குழந்தையோடு இருக்கும் எனக்கு யார் வேலை தரப்போகிறார்கள்”?

 தீடிரென்று மழை திரும்பவும் தூறத் தொடங்கியது. தன் முந்தானையல் குழந்தையின் தலையை அவள் மூடினாள். தூரத்தில் வெள்ளவத்தைக்கு போக வேண்டிய பஸ்வந்து கொண்டிருந்தது. அந்தப் பிச்சைக்காரி iயில் ஒரு ஐம்பது ரூபாய் நோட்டைத் திணித்தார் செல்லத்துரையர்.

 “ வேண்டாம் சாமி. இந்த தொகை கூடிப்போச்சு”.

 “பரவாயிலலை. சில நாட்களுக்கு உணவுக்கு உதவும். பிள்ளையின் பசியும் தீரும். இந்தா இதை வைத்துக்கொள். மழை கொட்டப்போகுது. குழந்தையை நனையாமல் பார்த்துக்கொள்” என்று தன் கையில் இருந்த புதுக் குடையை அவள் கைiயில் கொடுத்தார். அவளால் அவர் செய்ததை நம்பமுடியவில்லை.

 “குடை வேண்டாம் சாமி” என்று அவள் அவரைத் தடுக்க முன் அவர் பஸ்சில் போய் ஏறினார் . செல்லத்துரையருக்கே தான் செய்த செயல் ஆச்சாரியமாக இருந்தது. ஏதோ அந்தப் பெண்ணுக்கும் குழநதைக்கும் உதவ வேண்டும் என்ற உந்தல் அவரை அத்தானத்தைச் செய்ய வைத்தது, அப்பெண்ணை தன் வசதி படைத்த மகளின் நிலையுடன் ஒப்பிட்டு அவர்; பார்த்ததும் ஒரு காரணமாகும்.

                                                             *******

 “என்னப்பா இவ்வளவு நேரம் செய்தனீங்கள். எங்க குடையை கையிலைக் காணம்? குடைக்கு என்ன நடந்தது?, கனகம் செலலத்துரையரைப் பார’த்துக் கேட்டாள்.

 “கொஞசம் பொறும் நடந்ததை சொல்லுகிறன். எனக்கு எதாவது கடிதங்கள் வந்ததே”. வந்த களைப்பில் கதிரையில் போய் அமர்ந்தார்.

 “இரண்டு கடிதம் வந்தது. ஹோல் மேசையிலை வைச்சிருக்கிறன். போய் பாருங்கோ. அது போகட்டும். நீங்கள் கொண்டு போன புதுக் குடை எங்கை? அதை முதலிலை சொல்லுங்கோ”?

 “பதட்டப்படாதையும். போகக்கை பஸ்சிலை சரியான நெருக்கடி. சீட்டில் இருக்கும் போது குடையை முன்னுக்கு மாட்டியிருந்தனான். இறங்கும் அவசரத்திலை அதை எடுக்க மறந்திட்டன். என் யோசனை முழுவதும் என் பென்சன் பற்றி இருந்ததே காரணம்”, முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்து பதில் சொன்னார் செல்லத்துரையர்.

 “உங்களுக்கு ஞாபகம் மறதி வர வர கூடிக்கொண்டு போகுது. உதுக்குத் தான், நீங்கள் போகக்கை தம்பி அனுப்பிய புதுக்குடையை விட்டிட்டு பழைய குடையயைப் கொண்டு போங்கோ எண்டு சொன்னான். நீஙகள் நான் சொன்னதைக் கேக்காமல நடப்பாய் கொண்டு போனியள். இப்ப குடையை துளைச்சுப்போட்டு வநதிருக்கிறியள” கோபத்தோடு கனகம் சொன்னாள்.

 “சரி சரி கனகம், என்னைக் கோவியாதையும். நடந்தது நல்லதுக்கே நடந்துவிட்டது. தம்பிக்கு எழுதினால் அவன் இன்னொரு குடையை வாங்கி அனுப்பிவைப்பான். இனி கவனமாக இருக்கிறன்”  எனக் கூறியவாறு தனக்கு வந்திருந்த கடிதத்தின் வெளி பக்கத்தைப்  பார்த்தார். அரசாங்க முத்திரையிட்ட கடிதமாக இருந்தது. அவசரம் அவசரமாக அதை  அவர் கிழித்துப் போது அதற்குள் 15,738 ரூபாயுக்கு ஒரு செக்கும், சிங்களத்தில் ஒரு கடிதமும் இருந்தது. பின பக்கத்தில் அதன் மொழி பெயர்ப்பு இருந்தது. வாசித்த போது செல்லத்துரையருக்கு தலைகால் புரியாத சந்தோஷம். எதற்காக அவர் பஸ்சில் பல தடவை பென்சன் கொடுக்கும் பகுதிக்குப் போய் வந்தாரோ அந்த் பென்சனில் அவர்களால் அதிகம் கழிக்கப்பட்ட மொத்தப் பணம் செக்காக வந்திருந்தது. இனி அவரது பென்சன் மாதம்; ரூபாய் 538.45 அதிகரிக்கும். தான் செய்த தர்மம் தனக்கு வேறு விதத்தில் உதவி செய்துள்ளதை நினைத்த போது அவர் மனம் இறைவனுக்கு நன்றி செலுத்தியது.

 

                                                                             

                             ******

அங்கொட மனநல மருத்துவமனை

அன்று “புதினம்” என்ற வாரப்  பத்திரிகைக்கு ஒரு முக்கிய கட்டுரை ஒன்றை, கோப்பியை சுவைத்தபடி  எழுதிக்கொண்டிருந்தேன். புதினப் பக்திரிகைக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்ததுக்கு காரணம் பல தர மக்களின் வாழ்வில் நடக்கும் அன்றாட பிரச்சனைகளைப் பிரதிபலிக்கும் கட்டுரைகளும் செய்திகளும் அதில் வருவதே. முப்பது வருடங்களுக்கு முன் மாதந்த இதழாக ஆரம்பமாகிய புதினம், ஐந்து வருடங்களுக்குள் மாதம்  இருமுறையாக வெளி வரும் பத்திரிகையாக வளர்ந்தது. வருடா வருடம் அதன் வாசகர் எண்ணிக்கை வளர்ந்து, பத்து இலட்ச எண்ணிக்கையை எட்டியது. பத்திரிகையின் விலையில் மாற்றம் ஏற்படாதது, வாசகர் எண்ணிக்கை அதிகரிக்க ஒரு காரணமாக இருந்தது.

இருபது வருடங்களுக்கு முன் சாதாரண செய்தியாளனாக என் தொழிலை ஆரம்பித்து, படிப்படியாக, எனது கடும் உழைப்பினால் புதினத்தின் உதவி ஆசிரியரானேன்.     ஆந்த பதவிக்கு வர எனக்கு சுமார் இருபது வருடங்கள் எடுத்தது. புதினத்தில் ஆண்களும் பெண்களுமாக அறுபது பேர் வேலை செய்தனர்.

என்னோடு செய்தியாளராக வேலை செய்தவள் தாரிணி. பேராதனை பல்கலைக் கழக்கத்தில் ஊடகவியற் துறையில் படித்துப் பட்டம் பெற்றவள். ஆங்கிலம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் எழுதக்கூடிய திறமை படைத்தவள். அவள் அரசியல் செயதிகளுக்கு பொறுப்பாயிருந்தபடியால் பல அரசியல்வாதிகளின் அறிமுகம் அவளுக்குக் கிடைத்தது. தாரிணியை சுமாரான அழகி என்றே சொல்லலாம். ஐந்து ஆடி ஏழு  அங்குளம் உயரம், நீண்ட அடர்த்தியான முடி. கவரச்சியான பார்வை. அவள் பலரைக் கவரக் கூடிய விதத்தில் உரையாடுவாள். அனேகமாக ஜீன்சை விரும்பி அணிவாள். அவளது அரசியல் பிரமுகர்களின் நேர்காணல் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

தாரிணியின் தந்தை மாணிக்கம், திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்ட அரசாங்க ஊழியர்;. தாரிணியின் தாய் லீலாவதி கிண்ணியாவைச் சேர்ந்த சிங்களப்பெண். மத்திய கல்லூரி ஒன்றில் சிங்கள ஆசிரியை. தாரிணி சிங்களத்திலும், ஆங்கிலத்திலும் அனேகமாக உரையாடுவாள். தமிழ் பேசத்தெரிந்தாலும் பேசுவதைத் தவிர்த்தாள். அதனால் அவளுக்குச் சிங்கள அரசியல்வாதிகளோடு நெருங்கிய நட்பை ஏற்படுத்தியது. 

சிகரட் குடிக்கும் பழக்கம் அவளுக்கு பல்கலைக்கழகத்தில் படிக்கும் காலத்தில் இருந்தே வந்தது. அரசியல்வாதிகளின் அறிமுகத்தினால் மது அருந்தும் பழக்கமும் அவளை ஒட்டிக்கொணடது. நான் எவ்ளவோ சொல்லியும் அந்த இரு கெட்ட பழக்கங்களையும் அவள் விட்டபாடாக இல்லை. என்னை தன்கூடப் பிறந்த அண்ணாக கருதிப் பழகினாள். ஆதற்கு காரணம் மாணிக்கம் தம்பதிகளுக்கு அவள்  அவள் ஒரு பிள்ளாயாகப் பிறந்ததே, அவளுக்கு என் மேல் சகோதரப் பாசம் ஏற்படக்காரணம். அரசியல்வாதிகளோடு தான் எதிர்நோக்கியப் பிரச்சனைகளை எனக்கு எடுத்துச்சொல்வாள்.

தாரணிக்கு அமைச்சர் ரத்னபாலாவின் அறிமுகம் ஒரு நேர்காணலின் போது கிடைத்தது. அதன் பிறகு பல தடவை அவரை இன்டர்வியூ செய்து புதினப் பத்திரிகையில் எழுதியிருக்கிறாள். அதுவே சாதாரண எம்பியாக  இருந்த  ரத்னபாலாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க உதவியது. அவர்களுக்கு இடையேலான சந்திப்புகள் நாளடைவில் காதலாக மாறியது.

அமைச்சர் ரத்னபாலா எற்கனவே ஒரு தடவை திருமணமாகி விவாகரத்து செய்தவர். அது தெரிந்திருந்தும் தாரிணி அவருடன் உறவு கொண்டாடியதை நான் விரும்பவில்லை. நான் எவ்வளவோ புத்திமதிகள் சொல்லியும் அவளது பிடிவாதக் குணம் என் புத்திமதியை கேட்கவிடவில்லை. அதன் விளைவாக, திருமணமாகாமலே அவள் ரத்னபாலாவின் குழந்தையை வயிற்றில்  சுமந்தாள். ரத்னபாலா இரண்டாம் தடவை ஒரு பிரபலயமான தொழில் அதிபர் ஒருவரின் மகளைத் திருமணம் செய்தது தாரிணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. அவள் வயிற்றில் இருந்து நான்கு மாதக் கருவும் கலைந்தது. அதே சமயம் உள்ளநாட்ப் போரின் போது குண்டு வீச்சினால் அவர்களது வீடு தாக்கப்பட்டு தந்தையும் தாயும் இறந்தனர். தொடர்ந்து ஏற்பட்ட அடுத்தடுத்த சம்பவங்களால்; அவளது மனநிலை வெகுவாக பாதிப்படைந்தது. அவள் என்ன பேசுகிறாள் என்று தெரியாத  நிலை ஏற்பட்டது.  சில சமயங்களில் தன்னிலை அறியாது கோபத்தில் தன்னோடு வேலை செய்பவர்களை தூஷண வார்த்தைகளால் பேசுவாள். சிலரை அடித்தும் இருக்கிறாள். சில நாட்களில் வேலைக்கு வருவதில்லை. அவள் வாழ்ந்த அப்பார்ட்மெண்டில் போய் பார்த்தால் கதிரையில் யோசித்படி சிகரட் குடித்து கொணடே இருப்பாள். மேசை நிரம்ப, காலியான பியர் போத்தல்கள். என்னால் கூட அவளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவளது மனநிலை அவள் செய்யும் வேலைக்கு நல்லதல்ல எனத் தீர்மானித்த நிர்வாகம், அவளை வேலையில் இருந்து நிறுத்திவிட்டார்கள். புதினப் பத்திரிகையின் உரிமையாளர் சமரநாயக்காவின் மனைவி ஒரு மனநோய் வைத்தியர். அவர் தன் மனைவியின்   ஆலோசனைபடி தாரிணியை  அங்கொடை மனநோயாளிகளுக்கான வைத்தியசாலையில் சிகிச்சைக்கு சேர்த்துவிட்டார்.

 

                                                            *******

“ ராஜா  அங்கொடை மனநிலை மருத்துவமனையில் உள்ள சோஷல் வேக்கர் உங்களோடை  பேசவேண்டுமாம். லைனிலை நிற்கிறா”, என்று தொலை பேசியை என்கையில் தந்தார் என்னுடைய உதவியாளர் கணேஷமுர்த்தி. எனக்கு உடனை எதற்காக அங்கொடை மனநிலை மருத்துவமனையில் இருந்து அழைப்பு வந்திருக்கிறது என்று புரிந்து விட்டது.

“ யார? புதினப்பத்திரிகையின் உதவி ஆசிரியர் ராஜாவா பேசுகிறது”,  தொலைபேசியில் மென்மையான, நட்புக்குரலில் ஒரு பெண் பேசினாள்.

“ யெஸ்; ராஜா தான் பேசகிறன். ஏன்ன விஷயம். நீங்கள் யார் பேசுகிறது எண்டு சொல்லுங்கோ”.

“நான் அங்கொடை வைத்தியசாலையில் வேலை செய்யும் சோஷல் வேக்கர். என் பெயர்  நெலும் ஹெட்டியாராச்சி.. உங்களால் தயவுசெய்து அங்கொடை ஆஸ்பத்திரிக்கு இன்றே  வர முடியுமா? இங்கு நோயாளியாக இருக்கும் தாரிணி என்ற பெண் உங்கள் பெயரைச் அடிக்கடி சொல்லி கட்டுப்படுத்த முடியாமல் சத்தம் போட்டு குளப்படி செய்கிறா. உங்களைப் பார்க்க வேண்டுமாம். உங்களுக்கு தாரிணி என்ற பெண்ணைத் தெரியுமா மிஸ்டர் ராஜா”

“ஓம் தெரியும். அவ என்னோடை புதினப் பத்திரிகையில செய்தியாளராக பல காலம் வேலை செய்தவ. ஒரு காலத்தில் திறமையான செய்தியாளரெனப் பெயர் வாங்கினவ. தாரணி எனக்கு சகோதரி மாதிரி. பாவம் அவளுடய தற்போiதைய நிலை பரிதாபப்பட வேண்டியது., அவவுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்து நடந்த சில சம்பவங்களால்; மனநோயாளியாகி விட்டா” நான் பதில் சொன்னேன்.

“நல்லது நீங்கள் அங்கொடை ஆஸ்பத்திரிக்கு வந்து ரிசெப்சனில் என் பெயரைச் சொல்லி கேளுங்கள். நான் வந்து உங்களை வோர்ட் நம்பர் 15 க்கு தாரிணியிடம் அழைத்துச் செல்கிறேன். அவளோடு பேசி அவளை அமைதியாக்கப்பாருங்கள். சில சமயம் உங்கடை பேச்சைக் கேட்டு அவள் அமைதியாகக் கூடும்” டெலிபோனில் பேசிய சோஷல் வேக்கர் நெலும்; சொன்னாள்.

“சரி நான் வந்து பார்க்கிறேன்” .பதில் சொன்னார் ராஜா

பத்திரிகை ஆசிரியரிடம் நடந்ததை சொல்லி அவரின் அனுமதியோடு பம்பலப்பிட்டியில் இருந்து அங்கொடைக்குப் போகும் பஸ் இலக்கம் 134யில் ஏறி;, மனநோய் வைத்தியசாலைக்கு  ராஜா போனார்.

சென்னையில் உள்ள கீழப்பாக்கம் மனநோய் வைத்தியசாலை போன்றது அங்கொடை வைத்தியசாலை. கொழும்பு கோட்டையில் இருந்து 10 கிமீ தூரத்தில், அவிசாவலைக்கு போகும் பிரதான பாதையில் அங்கொடை அமைந்துள்ளது. இவ்வைத்தியசாலை விக்டோரியா மகாராணி இலங்கையை ஆட்சி செய்த காலத்தில் 1926 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டது.

அங்கொடை வைத்தியசாலைக்குள் போனபோது என்னை ஆழமான, தீவர சிந்தனை பிரதிபலிக்கும் அனேக முகங்கள் வரவேற்றன. சிலர் சுதந்திரமாக நடமாட முடியாத வாறு சங்கிலியால் கால்கள் பிணைக்கபட்டிருந்தனர். அவர்கள் முகங்களில் சோகம், மற்றும் கொந்தளிப்பு தெரிந்தது. தாங்கமுடியாத சோக சம்பவங்கள்; அவர்கள் வாழ்க்கையில் ஏற்பட்டதால் இரும்பு கம்பிகளுக்குப் பின்னால் கைதிகள் போல் நிற்கவேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆழ்ந்த சிந்தனையோடும் சுருங்கிய முகங்களோடும் படுக்கைகளில் வரிசையாக இருந்தனர். எனக்குத் தெரிந்தவரகள் சிலரும்  இருந்தார்கள்.

“ நான் உனக்காக காத்திருக்கிறேன “என்று கூவிக்கொண்டு என்னிடம் ஒருத்தி ஓடிவந்தாள்.  நெலும், அங்கு நின்ற காவலாளி ஓருவரை அப்பெண்ணை அழைத்து செல்லும் படி கட்டளையிட்டாள்.

இன்னொரு பெண என்னைப்பார்த்து “அட கொலைகாரா. ஏன கணவனை கொன்றாய்? உன்னைப் றாய்ழிவாங்காமல் விட மாட்டேன்” என்று கூக்கிலிட்டாள்.

“ஏய் உனக்கு என் தந்தி கிடைத்ததா”?, சுமார் இருபது வயதுடைய பெண்ணின் ஓலம். பல பெண் வார்டுகளில் பலவேறு மூலைகளில் இருந்து தலை முடிகளை விரித்த தோற்றத்தோடு கூச்சலிட்டு சிரித்தார்கள். என் கண்கள் தாரிணியைத் தேடியது.

“தனக்கு பத்திரிகையாளனாக ஒரு அண்ணன் இருப்பதாக அடிக்கடி சொல்லுவாள். அரசியல்வாதிகளை நம்பாதே என்பாள். தான் நம்பிக்கெட்டவள் என்பாள். தன் குழந்தையைக் காணோம் என்பாள். தாரி;ணி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள் இவை என்று எனக்கு நெலும் சொன்னாள்;.

என் கண்கள், உதடுகள் கருத்து, மெலிந்த பெண்னொருத்தி, விரித்த தலை முடியோது, தலையில் கைவத்தபடி கட்டிலில் யோசித்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டது. நேலும் அவளை எனக்கு காட்டி “அது தான் தாரிணி போய் கதையுங்கள்.”என்றாள்.

என்னால் தாரிணியின் தோற்றத்தைக் கண்டு நம்பமுடியவில்லை.

எனக்குத் தெரியும் தரிணிக்கு வேலை செய்த காலத்தில் இருந்தே கட்பெரீஸ் சொக்கிலேட் என்றால் கொள்ளை விருப்பம் என்று. நான் வைத்தியசாலைக்கு போனபோது ஓரு பக்கட் சொக்கிலேட்டை அவளுக்கு கொடுக்க கொண்டு போயிருந்தேன்ஃ

“நேலும் இதை நான் தாரிணிக்கு கொடுக்கலாமா” என்ற அவள் சம்மதத்தை கேட்டேன்.

நெலும் தலை அசைவு மூலம் சம்மதம் தெரிவித்தது எனக்கு சந்தோஷம்.

 “ தாரிணி உன் அண்ணா ராஜா வந்திருக்கிறன். என்னைத் தெரியுமா?”.

 தாரிணியிடம் இருந்து பதில் வரவில்லை. என்னை விறைத்துப் பார்த்தாள்.

நான்  என் கையில் இருந்த சொக்கிலேட்டை  தாரிணயிடம் நீட்டி “இந்தா தாரிணி உனக்கு விருப்பமான கட்பெரீஸ்” என்றேன் அன்பாக.

 அவள் அதை விறுக்கென வாங்கி சுழற்றி எறிந்தாள்.

 “தாரிணி நான் உன் அண்ணா ராஜா வந்திருக்கிறன் என்னோடு கோபமா’?

 “ எங்கை என் குழந்தை?. எங்கே அந்த கள்ளன்? அப்பாவும் அம்மாவும், கூட்டி வா ” உரத்த குரலில் தாரிணி கேட்டாள்.

 நெலும் என்னை கேள்விக்குறியோடு பார்த்தாள்.

 “ நெலும், தாரிணி இப்போ ஒரு அனாதை. குண்டு வீச்சில் அவளுடைய பெற்றோர்கள் திருகோணமலையில் இறந்து போனார்கள்”.

 “ அப்போ ஏதோ குழந்தை என்றாளே”?

 நான் நெலுமுக்கு, தாரிணிக்கும் அமைச்சர் ரத்தனபாலாவுக்கும் இடையே இருந்த உறவை பற்றி விபரம் சொன்னேன். அவரின் உறவால்  தாரிணி கற்பிணியானதும், பின்ளர் நான்கு மாதத்தில் கரு கலைந்தைப் பற்றி சொன்னேன். பெற்றோர் குண்டு வீச்சில் இறந்ததை சொன்னேன். அந்த சம்பவங்கள் அவளை மன நோயாளியாக்கிவிட்டது.” என்றேன் அமைதியாக.

 நெலும்உஒன்றுமே பதில் சொல்லாது கேட்டுக்; கொண்டிருந்தாள்.

.“ என்ன நெலும் பேசாமல் இருக்கிறியள். “ நான் கேட்டேன்.

“ ராஜா ஒரு விஷயம் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். எங்கள் இருவருக்கும் இடையே மட்டும் இது இரகசியமாக இருக்கட்டும்”, என்றாள் நா தழும்ப நெலும்.

 “ என் ரகசியம் சொல்லுங்கோ நெலும்”.

 “ நீங்கள் சொல்லும் அமைசர் ரத்தினபால என்பவர் என் அண்;ணன். அவரை என் பெற்றோர் குடும்பத்தில் இருந்து ஒதுக்கிவைத்துவிட்டார்கள். இப்போது அவர் செய்த கர்மாவுக்காக தன் கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்” என்றாள் நெலும்.

 “ என்ன மெடம் சொல்லுகிறீர்கள்”?

 “ ஆம் அவருக்கு குடலில் புற்று நோய் தீவிரம் அடைந்து விட்டது. டாக்டர்கள் கைவிட்டு விட்டார்கள்’” என்றாள் நெலும் தணிந்த குரலில.

 நாங்கள் பேசுவதை சில வினாடிகள் அமைதியாக தாரிணி கேட்டுக் கொண்டிருந்தாள். பின் தீடீரென இரு கைளையும் தட்டி பெலத்து சிரிக்கத் தொடங்கினாள். ஏறிந்த சொக்கிலேட்டை எடுத்து சுவைக்கத் தொடங்கினாள். எனக்க புரிந்து விட்டது நானும் நெலுமும் பேசியது தாரிணிக்குப் புரிந்திருக்க வேண்டும் என்று. அதனால் தான் தன்மனதுக்குள் மகிழ்ச்சியைக் கட்டுப்படுத்த முடியாமல் அப்படி நடந்திருக்கிறாள்.

 ஒரு மணித்தியாலம் நான் தாரிணியோடு கழித்துவிட்டு அவளை சாந்தப் படுத்திய பின் கொழும்பு திரும்பினேன். ஆசிரியருக்கும,; பத்திரிகை நிறுவனத்தின் உரிமையாளர் சமரநாயக்காவுக்கும் தாரிணி பற்றிய விபரத்தைச் சொன்னேன்.

 நான் தாரிணியைச் சந்தித்து இரு கிழமைகளுக்குப்  பின் நெலும் எனக்குப் போன் செய்தாள்.

 “ என்ன நெலும், தாரிணி எப்படி இருக்கிறாள். நான் வந்து போன பின் அமைதியாக இருக்கிறாளா? நான் திரும்பவும் வர வேண்டுமா”?

 “ தேவையில்லை ராஜா. இரு துயரமான நியூஸ் உமக்கு சொல்ல போன் செய்தனான்.”

 “ அப்படி என்ன துயரமான நியுஸ் நெலும்”?

 “ஒரு கிழமைக்கு முன்  என் அண்ணன்; ரத்னபாலா காலமாகிவிட்டார். பேப்பரில் பாரத்திருப்பீரே”

 “ அறிந்தனான். உமக்கு என் அனுதாபங்கள்?. அடுத்த சோகமான நியுஸ் என்ன நெலும்’?

 “ என அண்ணா இறந்து ஒரு கிழமைக்குள் தாரிணி மாடியில் இருந்து குதிதது தற்கொலை செய்த கொண்டாள். இறந்த அவள் கையில் நீங்கள் கொண்டு வந்து கொடுத்த கட்பெரீஸ் சொக்கிலேட் இருந்தது” என்றாள் அழாக்குறையாக நெலும்.

 நான் ஒரு பதிலும் சொல்லவில்லை. என் கண்களில் இருந்து கண்ணீர் வருவதை ஆசிரியர் கண்டுவிட்டார்

 “ என்ன ராஜா. ஏன் அழுகிறீர”?

 “ நான் சுருக்கமாக “ எல்லாம் எப்பவோ முடிந்த காரியம்” எனறேன்.

                   

                                        ******

 

 

 

 

விதி -(Fate)

 

 

 

 

 

(செய்த ஒரு தீய செயலுக்கு எதிராக ஒன்று நடந்தே தீரும். இது பௌதிகத்தினதும், கர்மாவினதும் தத்துவம்.)

 அன்று 2004 ஆண்டு டிசம்பர் 26ஆம் திகதி. ஞாயிற்றுக்கிழமை. சிறீலங்காவில்  போயா தின  நாளாகும்;. கொழும்பு கோட்டை ரயில்வே ஸ்டேசனில் பல குடும்பங்கள் தங்கள் ஆண்டு இறுதி விடுமுறையைக் களிக்க பல இடங்களுக்குப் பயணம் செய்ய மூட்டை முடிச்சுகளோடு தாங்கள் பயணிக்கவிருக்கும் சமுத்திரதேவி கடுகதி புகையிரதத்தின் வருகையை எதிர்பார்த்து, 2 ஆம் பிளட்பாரத்தில் காத்து நின்றனர். இக்கடுகதி ;புகையிரதம் கொழும்பிலிருநது தேற்கு கடற்கரையேரமாக பெலிவத்தை வரை பயணிக்கும் சமுத்திரதேவி என்ற பெயரைக் கொண்டது.  சமுத்திரதேவி; கொழும்பில் இருந்து 98 மைல் தூரத்தில் உள்ள பெலியத்தைக்கு காலை 6-45 மணிக்கு புறப்படுவது வழமை.   சமுத்திரதேவியில் பயணம் செய்ய அன்று எதிர்பாராத கூட்டம் காத்து நின்றது. அதில் பலர் தெற்கே பெலிவத்தைக்கு அப்பால் கிழக்கே 95 கி.மீ தூரத்தில் உள்ள கதிர்காம தெவியோ என்ற முருகனைப் தரிசிப்பதற்காக போகிறவர்கள். பெலிவதையில் இருந்து கதிர்காமத்துக்கு பஸ்சேவையுண்டு. சிலர் விடுமுறை நாட்களை குடும்பத்தோடும்,; இனத்தவர்களோடும் கொண்டாடப் போகிறவர்கள்.

 ஸ்டேசன் மாஸ்டராக ரயில்வே இலாக்காவில் பல வருடங்கள் வேலை செய்யும் சேனாதீர, தெற்கே, அம்பலாங்கொடைக்கு அருகே உள்ள போகொட என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். மருதானையில் உள்ள புகையிரத போக்குவரத்து கட்டுப்பாட்டு மையத்தில் கொண்ரோலராக வேலை செய்துவந்தார். தன் மனைவி சந்திரவதியொடும், ஒரே பதினைந்;து வயதான மகன் சுமனவீரனோடும் மருதானையில் வாடகை வீட்டில் வாழ்பவர். சந்திரவதி மருதானை பெரிய ஆஸ்பத்திரியில் நேர்சாக வேலைசெய்பவள்.

 ரயில்வே இலாக்காவில் வேலை செய்வதினால் சேனாதீராவின் குடும்பத்துக்கு வருடா வருடம் இலவசமாக ரயிலில் பயணம் செய்வதற்கு  வோரண்டுகள் அவருக்கும் அவர் குடும்பத்துக்கும் கிடைக்கும். அதை பயன் படுத்தி தன் குடும்பத்தோடு அடிக்கடி அம்பலாங்கொடையில் உள்ள தன் பெற்றோர் வீட்டிலும் , அனுராதபுரத்தில் உள்ள தன்; மனைவியின் பெற்றோர் வீட்டிலும் விடுமுறையைக் கழிக்க அவர் குடும்பம் போய்வருவது வழக்கம்.

 

                                           ******

 சமுத்திரதேவியின் வருகையை எதிர்பார்த்துக கொண்டு நி;ன்ற கூட்டத்தில் சேனாதீரவின் குடும்பமும் ஒன்று. அவர் அருகே மூன்று பேரைக் கொண்ட இன்அனாரு குடும்பமும், சூட்கேசுகளோடு சமுத்திரதேவியின் வருகையை எதிர்பார்த்து நின்றது. அக்குடும்பத்தின் தலைவர் சுமார் அறுபது வயது மதிக்கக் கூடிய முதியவர்.

 “ இண்டைக்கு டிரேயின் லேட் போல் இருக்கு” முதியவர்  பேச்சை சிங்களத்தில் ஆரம்பித்தார்.

.“ வழக்கத்தில் 6.30 க்கு, நேரத்துக்கு வந்துவிடும்.” சேனாதீர பதில் சொன்னார்.

 “ அதெப்படி சொல்லுகிறீர்’?

 “ நான்  ரயில்வே இலாக்காவில், ஸ்N;டசன்மாஸ்டராக வேலை செய்பவன். இப்போ மருதானை கொண்டிரோல் ரூமில் வேலை செய்கிறன். அதனாலை தான் சொல்லுகிறன்”இ சேனாதீரா முதியவர் கேட்ட கேள்வி பதில் சொன்னார்.

 “ அப்போ நீங்கள்…” முதியவர் கேட்டார்

 “ என்றை பெயர் சேனாதீர. இவர்கள் இருவரும் என் மனைவி சந்திரவதியும் மகன்  ஜெயவீராவும்;. நீங்களும் உங்கள் குடும்பமும்; வெகு தூரத்துக்கே பயணம்” ? சேனாதீர முதியவரைப் பார்த்துக்  கேட்டார்.

 முதியவர் தன்னை  பந்துசேனா  என்று அறிமுகப்படுத்திய பின்னர்; தன் மனைவி சீலாவதியையும், பதினாறு வயதுடைய  மகன்    கருணாத்திலக்காவையும் அறிமுகப்படுத்தினார்;,

 “ நாங்கள் கதிர்காமத்துக்குப் போகிறோம்” என்றார் பந்துசேனா.

 “ உங்;களைப் பார்த்தால்  ரிட்டயரான கவர்மண்ட சேர்வண்ட் போலத் தெரிகிறது”இ சேனாதீர பந்துசேனாவைப் பார்த்துக் கேட்டார்.

 “ அதெப்படி  உங்களுக்குத் தெரியும சேனா?”.

 “ உமது கையில் உள்ள அரசாங்கத்தால் கொடுக்கப்படும் கறுப்பு நிற தோல் பாக் சொல்லுகிறதே . நானும் உதைப் போல் ஒரு பாக் வைத்திருக்கிறன்.”

 “ எனது டிப்பாரட்மெண்டாhல் எனக்குத் தந்த இந்த லெதர் பாகனை; சுமார் இருபத்தைந்து வருடங்களாக எனக்கு சேவை செயதிருக்கிறது. வத்திருக்கிறன். நான் தபால் இலாக்காவில் கிளார்க்காக சேர்ந்து இருண்டு வருஷத்தில் கிடைத்த உறுதியான பாக். நான் முப்பது வருஷம் வேலை செய்து, பரிபாலன அதிகாரியாக ரிட்டையராகி ஒரு வருஷமாகிறது.”

 “ நீங்கள் இருப்பது கொழும்பா”?

 “ கொழும்பு 5 நாரஹன்பிட்டியாவில் உள்ள அன்டேர்சன் பிளட்டில் இருக்கிறோம்.  நேர்திக் கடனை தீர்பதற்காக கதிர்காமத்துக்குப் போகிறோம்”; பந்துசேனா தங்கள் பயணத்தின நோக்கத்தைச் சொன்னார். அவர்களின் சம்பாஷணை சி;ங்களத்தில் தொடர்ந்தது.

 “ கதிர்காம ஸ்கந்த தெவியோ வேண்டுவதை கொடுப்பார். ருகுணு மன்னன் துட்டகைமுனு, அவரைத் தரிசித்து எல்லாயோடு போருக்குப் போன படியால் போரில வென்றார். அதுசரி கதிர்காமத்துக்கு எதற்காக நேர்த்திக கடனா”? சேனாதீர பந்துசேனாவைக் கேட்டார்.

 “எல்லாம் எங்கடை மூத்த மகன சந்திரசேனாவுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கும்படி வேண்டுதல் வைத்து நேர்த்திக், கடனை தீர்க்கப் போகிறோம்” பதில் சொன்னாள் பந்துசேனாவின் மனைவி சீலாவதி.

 “ ஏன் உங்கள் மூத்த மகனுக்கு  ஏதும் சுகமில்லையா”?

 “என் மகன்; வடக்கில், ஆர்மியில் லாண்ட்ஸ் கோப்பிரலாக  வேலை செய்த போது ஒரு தமிழ் மாணவியை கற்பழித்து, கொலை செய்த குற்றத்துக்காக வழக்கு நடந்து, அவருக்கும் அவரோடு வேலை செய்த இரு சோல்சேர்சுககும்  கொழும்பு ஹைகோர்ட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டது“இ என்றார் அழாக் குறையாக முதியவர்.

 “ என்ன சொல்லுகிறீர் ஐயா. உங்கடை மகன் கொலைகாரனா”?

 “ நான் எப்படி சொல்லுவது. அவனை நான் கண்டிப்பாக வளர்த்தனான். எனக்கு அவன் ஆர்மியிலை சேர்ந்தது விருப்பமில்லை. தான் அந்த குற்றத்தை செய்யவில்லை என்றும் தனது அதிகாரிகளின் கட்டளைபடி தான் நடந்ததாகவும், அந்த மாணவியின் உடலை புதைத்தாக நீதிமன்றத்தில் என் மகன் சொன்னான். ஆனால் கோர்ட் ஏற்றுக்கொள்ளவில்லை. அவனுடைய வழக்கு மனித உரிமை மீறல் என்று காரணம் காட்டி சர்வதேச மன்னிப்புச்சபையால் பகிரங்கப் படுத்தப்ட்டுவிட்டது.

 “ இப்ப எனக்கு நீர் சொல்லுகிற உம்முடைய மகனுடைய  கேஸ் என் நினைவுக்கு வருகிறது. என்னோடை வேலைசெய்யும் ஸ்டேசன் மாஸ்டர் கணேஷ் என்பவரின்  தூரத்துச் சொந்தக்கார குடும்பத்தில உள்ள மாணவியைத்தான் உம்முடைய மகனும் இன்னும் சில சோல்சேர்சும் சேர்ந்து  கற்பழித்து, கொலை செய்து, புதைத்ததாக அவர் எனக்குச் சொன்னவர். அதோடு விசாரிக்கச் சென்ற அந்த மாணவியின் தாயையும், தம்பிiயும், சொந்தக்காரர் ஒருவரையும் கொலைசெய்து புதைத்துவிட்டதாகவும் சொன்னது என நினைவுக்கு வருகுது.. 1996 இல் நடந்த கொலைக்காக 1998 இல் உங்கள் மகனுக்கும் அவரோடு சேர்ந்த நான்கு சோல்சேர்சுக்கும் கொழும்பு உயர் நீதி மன்றத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்டதாம். அப்படித்தானே”, சேனாதீர, பந்துசேனாவைக் கேட்டார்.

 “ நீங்கள் சொல்வது சரி. அவனுடைய செயலால் எங்கள் குடும்பம், எங்கள் ஊரில் நாங்கள் தலை காட்ட முடியாமல் போய்விட்டது.  ஊர் மக்களின் விமர்சனத்துக்கு அளவில்லை. அவமானப்பட்டு விட்டோம் கொழும்பில் இருக்க முடியாமல்; கம்பகாவுக்கு இடம் பெயர்ந்து விட்டோம்”இ பந்துசேனா கவலையோடு சொன்னார்.

 “அப்பீல் செய்யவில்லையா”?,

 “அப்பீல்செய்தும் சரிவரவில்லை. சுப்பிரீம் கோர்ட் அப்பீலை நிராகரித்து விட்டது. இது அரசியல் கலந்த கேசாகமாறியதும் ஒரு காரணம். இந்த கொலை கெஸ் வெளிநாடுகளில் மனித உரிமை மீறல் என்று பிரபல்யபடுத்தப் பட்டுவிட்டதே அப்பீல் நிராகரிக்கப்பட முக்கிய காரணம்”

 “இப்ப தண்டனை விதித்து 16வருடங்களாகிவிடடதே. மரணதண்டனை எப்போ நிறைவேற்றப்படும்”?;.

 “தண்டனை கொடுத்து பல வருடங்களாகிவிட்டது என்பது உண்மை. சட்டப்படி மரணதண்டைனை நீக்கப்படவில்லை. இப்போதும் மரணதண்டனைகள் விதிக்கப்படுகின்றன.  ஆனால் அரசியல் கரணத்தால் தற்காலிகமாக மரணதண்டனையை நிறைவேற்றுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கறது. எப்போது திரும்பவும் மரணதண்டiயை நிறைவேற்றத்  தொடங்குவார்கள் என்பது தெரியாது. அப்போது என் மகன் உயிர் போய்விடும். நாங்கள் அப்பீல் செய்தும் சரிவரவில்லை. பல கைதிகளுக்கு மரணதண்டனை இன்னும் நிறைவேற்றப்படாமல் அரசு நிறுத்தி வைத்துள்ளது”.

 “மரணதண்டனை ஆயுள் தண்டனையாக மாற்றப்படவேண்டும் என்று கதிர்காமத்துக்கு நேர்த்தி வைத்திருக்கிறீர்களா”?.

 “ம்... என் குடும்பமே காவடி எடுப்பதாக நேர்த்தி வைத்திருக்கிறோம். ஆயள் தண்டனையாக குறைத்தால் இன்னும் சில வருடங்களில் அவன் வெளியே வந்துவிடுவான்.”

 “நானும் உம்மைப் போல்; ஒரு பௌத்தன். எனக்கும் கதிர்காம ஸ்கந்த தெய்யோ மேல் முழு நம்பிக்கை உண்டு. வருடா வருடம் கோயிலுக்கு குடும்பத்தோடு போய் வருவேன்” என்று சொல்லி முடிக்கும் தருவாயில் சமுத்திரதேவி இரைச்சலோடு மேடைக்கு வந்தது.

 பயணிகள் பிரயாணம் செய்யும் கொம்பார்ட்மென்ட் எனப்படும் எட்டு பெட்டிகளைப் பூட்டிய எண் 591 சமுத்திரதேவி கடுகதி புகையிரதம் சுமார் 1700 பயணிகளை சுமந்து கொண்டு தான் செல்ல வேண்டியிருக்கிறதே என்ற  உறுமும் சத்தத்தோடு ஸ்டேசனில் காலை 7.00 மணிக்கு பிளட்போர்மில் வந்து நின்றது. பிளாட்போர்மில் நின்ற பயணிகள் முண்டி அடித்துக்கோண்டு பயணிகள் பெட்டிகளில் ஏறினார்கள்.

  இரு குடும்பங்களுக்கும் ஒரே கொம்பார்ட்மென்டில். அருகருகே அவர்களுக்கு சீட்கிடைத்த்து, அவர்களுடைய அதிர்ஷ்டம் என்றே சொல்லவேண்டும்;. ஆதனால் அவர்களிடையே சம்பாஷணை தொடர்ந்தது.

 “ அதுசரி நீங்கள் எங்கே பயணம்”? பந்துசேனா சேனாதீராவைக் கேட்டார்.

“ நாங்கள்  அம்பாலாங்கொடையில உள்ள எங்கடை கிராமத்துக்குப் போறோம். எனது தந்தைக்கு  அவ்வளவுக்கு உடம்பு சரியில்லை. சில பிக்குகளுக்கு தானம் கொடுத்து, மந்திரித்து, பிரித் ஓதி, அவர்கையில் நூல் கட்ட என் அக்கா ஒழுங்கு செய்திருக்கிறா. அதில் பங்கு கொள்ள குடும்பத்தோடு போகிறோம்”.

“கொழும்பில் இருந்து வெகுதூரமே அம்பலாங்கொடை’?

“கொழும்பில் இருந்து தெற்கே சுமார் 85 கி.மீ தூரம். இரண்டு மணித்தியாலத்தில் போய் விடுவோம். காலியில் இருந்து அம்பாலாங்கொடை 30 கி.மீ தூரம். எங்கடை ஊரிலை தான் ஆர்மியிலை  பீல்ட் மார்ஷலாக இருந்த சரத் பொன்சேக்கா பிறந்தவர். அவர் எனக்குச் தூரத்துச் சொந்தம் கூட.”

“நீங்கள் பொளத்தன் என்று சொன்னீரே  அனால் உமது உறவினர் பெயர் பொன்சேக்கா என்ற கத்தோலிக்க பெயராக இருக்கிறதே”.

“அதெல்லாம் போரத்துக்கோயர் ஆட்சியின போது  எற்பட்ட மதமாற்றமும் பெயர்; மாற்றமும். இன்னும் அந்த போர்த்துக்கேய பெயர்கள் மறையவில்லை”

சமுத்திரதேவி தெஹிவளை ஸ்டேசனை தாண்டும் போது  மகன் பசிக்கிறது அம்மா என்று கேட்ட படியால் பந்துசேனாவின் மனைவி சீலாவதி, கொண்டு வந்த உணவுப் பொட்டலத்தை அவிழ்த்தாள்.

இடியப்பமும், சீனிசசம்பலும,; சொதியும் கொண்டு வந்திருக்கிறோம். எங்களோடு பகிர்ந்து சாப்பிடுகிறீர்களா”? பந்துசேனாவின் மனைவி கேட்டாள்.

“வேண்டாம். கேட்டதுக்கு நன்றி.; காலை சாப்பாடு முடித்துவிட்டு தான் புறப்பட்டு வந்தோம் இன்னும் இரு மணி நேரத்தில் அம்பலாங்கொடைக்கு போய் விடுவோம். அது சரி உங்கள் மகன் எங்கை,  படிக்கிறார்.”?

“மகன் ஆனந்தா கொலேஜில் ஏ லெவல் படிக்கிறான்”

“என்னவாக உங்கடை மகனுக்கு வர விருப்பம்”?, சேனாதீராவின் மனைவி கேட்டாள்.

“எண்டை மகனுக்கு டாக்டராக வர விருப்பம். என்ன வந்தாலும்; தான் ஆர்மியிலை; சேர மாட்டேன் என்கிறான். அவனுக்குத் தன் தமையனுக்கு நடந்தது தெரியும். அவன் படிக்கும் கல்லூரியில் அவனை, ஆசிரியர்களும், மற்ற மாணவர்களும் கேசை பற்றி பல கேள்விகள் கேட்கிறார்கள்”.

“என்ன செய்வது? குடும்பத்தில் ஒருவருக்கு மரணதண்டனை கிடைத்தால் அதைபற்றி சமூகம் துருவித் துருவி கேள்விகள் கேட்பது சகஜம்”

“நானும் மனைவியும் எங்கள் மகனைப் படிக்க வெளிநாட்டுக்கு அனுப்புவோமா என்று கூட யோசித்தனாங்கள்;. எனது மனைவியின் அண்ணன் அவுஸ்திரேலியாவில் என்ஜினியனிராக வேலை செய்கிறார். அவர்தான் எண்டை இரண்டாவது மகனை தன்னிடம் அனுப்பும்படி என் மனைவிக்குச் சொன்னாh. அவர்தான எண்டை மூத்தமகனின் கேசுக்கு செலவு செய்தவர்.”

“அதுசரி மரணதண்டனை விதிக்கப்பட்டு பல வருடங்களாகிவிட்டதே. காலம் தாழ்த்துவதும் ஒரு தண்டணை போலத்தான். சாவைப் பற்றி தினமும் சிந்தித்து சிந்தித்து மனநிலை பாதிக்கப்படலாம.;”

“உண்மைதான். அவரைப்போல் பல கைதிகள் மரணதண்டனை விதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவ காத்துக்கோண்டு இருக்கிறார்கள்.”

இரு குடும்பகளுக்கிடையே சம்பாஷணை அரசியல், வேலை செய்யும் இடம், தாங்கள் வசிக்கும் ஊர், பிள்ளைகளின் படிப்பு, ஆகியவற்றை பற்றி இருந்ததினால் நேரம் போனது அவர்களுக்குத் தெரியவில்லை.

“அடுத்த ஸ்டேசன் அம்பலாங்கொடை. இன்னும் பத்து நிடங்களில் நாங்கள் இறங்கிவிடுவோம். சந்தர்ப்பம் கிடைத்தால் எப்போதாவது ஒரு நாள் உங்கள் குடும்பத்தைச் சந்திப்போம். இதோ எனது விசிட்டிங் கார்ட் என்று பந்துசேனாவிடம் தன் கார்டை கொடுத்தார் சேனாதீர.

“சேனா, என்னடம் விசிட்டிங் கார்ட் இல்லை. இதோ எனது விலாசம் பற்றி விபரத்தை ஒரு பேப்ரில் எழுதித் தருகிறேன்” என்றார் பந்துசேனா.

 சமுத்திரதேவி அம்பலாங்கோடை ஸ்டசனை அடையும்; போது காலை 9.15 ஆகிவிட்டது.

 ஐந்து நிமிடங்கள் அம்பலாங்கொடையில் நின்று, பயணிகளை ஏற்றிக் கொண்டு சமுத்தரதேவி காலை 9.20க்கு தன் பயணத்தைத் தொடர்ந்தது. அம்பலாங்கொடையில் இருந்து 10 கீமீ தூரத்தில் உள்ள தெல்வததை ஸ்டேசனில் சிவப்பு சிக்னல் லைட் எரிந்ததால் தொடர்நது பயணத்தை தொடரமுடியாமல் சமுத்திரதேவி நிறுத்தப்பட்டது. தெல்வத்தைவுக்கு அருகே உள்ள கிராமம் பெரலிய . புகையிரத வீதியானது கடற்கரைக்கு வெகு அன்மையில் அமைந்துள்ளது. பிரதான காலி வீதியானது கடற்கரையில் இருந்து சுமார் 200 யார் தூரத்தில் உள்ளது.

 சமுத்திரதேவியில் பயணம் செய்தவர்கள் கடலை பாரத்தபோது என்றுமில்லாது கொந்தளித்த நிலையில் இருப்பதைக் கண்டார்கள். பந்துசேனாவோடு பயணம் செய்த ஒரு இளைஞன் கையில் இருந்த டிரான்சிஸ்டர் ரேடியோவில், சிங்கள வானொலி சேவையில் ஒலிபரப்பான சிங்கள பாட்டுகளை கெட்டு இரசித்து கொண்டிருந்தான். திடீரென பாட்டு நிறுத்தப்பட்டு, முக்கிய அறிவித்தல் சொல்லப்பட்டது.  அந்த அறிவிப்பாளன் காலை 6.50 மணியளவில்,  இந்தோனேசியா அருகே கடலுக்கடியில் 9.5 ரிட்சர் ஸ்கேலில் பூகம்பம்; பதிவாகி உள்ளதாகவும், புகம்பம் மையத்தில இருந்து  250 கிமீ தூரத்தில்  உள்ள பண்டாஅசே என்ற  இந்தோனேசிய மாகாணத்தின் கரையோரப் பகுதிகளை சுனாமி அலைகள் தாக்கிப் பேரழிவை ஏற்படுத்திதயாகவும், இவ்வலைகள் இலங்கையை நோக்கி வருவதால் எந்த நேரமும் சிறீலங்காவி;ன் தெற்கும், தென் மேற்கு கரையோரப்பகுதிகளை தாக்கலாம் என்று மிண்டும் மீண்டும் செய்தியாளன் அறிவித்தான்;. அதைக் கேட்ட பந்துசெனவின் மகன்; ஜன்னலூடக கடலைப் பார்த்து, “ தாத்தே கடலைப் உடனெ பாருங்கள்.  கடற் தண்ணீர் படிப்படியாக வற்றி கடல் பின் வாங்குவதை அவதானியுங்கள். கடல் பறவைகள் வானத்தில் சத்தம் போட்டவாறு கூட்டமாக பறக்கின்றன. மீன்கள் கடல் தண்ணீர் வற்றியதால் துடிக்கிறது தெரிகிறது.  ஏதோ நடக்கக் கூடாதது ஒன்று நடக்கப் போகுது அம்மே. ஏனக்கு பயமாக இருக்குது”, பந்துசேனாவின் மகன் சொல்லி முடித்து சில நிமிடங்களில்; முப்பது அடி உயரமுள்ள பெரிய அலை ஒன்று பேரிரச்சலோடு நிறுத்தப்பட்டிருந்த சமுத்தரதேவி என்ஜினையும்; ரயில் பெட்டிகளையும் அதி வேகத்தோடு தாக்கியது. ரயில் பெட்டிகளில் இருந்த பயணிகள் அந்த எதிர்பாராத கடல் அலையின் தாக்குதலை எதிர்ப்பார்க்கவில்லை. ஓரே கூக்குரல்களும் குழந்தைகளின் அழுகைச் சத்தமும் கேட்டது. கடல் நீர, பெட்டிகளை நிரப்பியது. சமுத்திரதேவியின் என்ஜினும்,; முதல் மூன்று பெட்டிகளும் தடம்புரண்டன.  அதைத்தொடர்ந்து சில நிமிடங்களில 40 ஆடி உயரமுள்ள இரண்டாவது முதல் அலையை விட பெரிய அலை வெகு வேகமாக சமுத்திரதேவியை தாக்கியது. மிகுதி இருந்த பெட்டிகளும் தடம்புரண்டு சில அடி தூரத்துக்கு வீசி எறியப்பட்டன. அலைகள் பிரதான வீதியைத் தாண்டி சென்று பல வீடுகளையும் தாக்கி அழித்தது. இரும்பு ரயில் பாதை நெளியும் அளவுக்கு பெரலைகளின் சக்தி இருந்து.

 சமுத்திரதேவியில் பயணம் செய்தவர்களில் ஒரு சிலரே உயிர் தப்பினார்கள். பந்துசேனா குடும்பம் பேரலைகளில் சங்கமமாயிற்று. மூத்த மகன் செய்த குற்றத்துக்காக ஒன்றும் அறியாத பந்துசேனா குடும்பத்தை இயற்கை பழி தீர்த்துவிட்டதா.?

 இந்த சம்பவம் நடந்த பெரலிய கிராம்த்தில் இருந்து வடக்கே சுமார் 15 கீமீ தூரத்தில இருந்த அம்பலாங்கொடையின்  கடலோரத்தில் இருநது சில மைலகளுக்கு கிழக்கே இருந்த பொல்கொட கிராமத்தை சேனாதீர குடும்பம் போயடையும் போது பதினாரு மணியாகிவிட்டது. அவரின் உறவினர் குடும்பம் அவர்களை; வருகையை ஆவலுடன் எதிர்பார்த்து காத்து நின்றனர்.

அவர்களைக் கண்டவுடன் சேனாதீராவின் அக்கா பெருத்த குரலில் “ ஐயோ கடவுளே உன் குடும்பம் சுனாமியின் தாக்குதலில் இருந்து தப்பித்தது. நீங்கள் செய்த புண்ண்pயம்” என்றாள்.

 “ என்ன அக்கா சுனாமி என்று சொல்லுகிறிர்கள். ஒன்றும் விளங்கவில்லையே”.

 “ மல்லி (தம்பி), உனக்கு செய்தி தெரியாதா? நீ வந்த சமுத்திரதேவியை சுனாமி தெல்வத்தையில் தாக்கி சுமார் 1700 பயணிகள் இறந்துவிட்டார்களாம். ஒரு சிலர் தானாம் உயிர்தப்பினார்கள்.”

 “என்ன சொல்லுகிறீர்கள் அக்கா. இது உண்மையான செய்தியா’?

 “ ரேடியயோவிலும,; டிவியிலும்; நியூஸ் போய் கொண்டிருக்கு. வந்து பார்” என்;றார் சேனாதீராவின் மைத்துனர்.

 செய்தி கேட்ட சேனாதீர குடும்பம் அதிரச்சியில் ஒன்றுமே பேசவில்லை.

 “ தாத்தே சுமத்திராவுக்கு கிட்ட கடலுக்கடியில் இன்று காலை 6.50க்கு பூகம்பம் ஏற்பட்டு சுனாமி அலைகள் சிறீலஙகாவை தாக்கும் என்று தெரிந்திருந்தால் ஏன் சமுத்திரதேவியை பயணம் செய்ய உங்கடைகொண்டிரோல் ரூம் அனுமதித்தது”? சேனாதீராவின் மகன் கேட்டான்.

 “ மகன் நான் எதைச் சொல்ல?. கொண்டிரோல் ரூமுக்கு சமுத்திரதேவியின் பயணத்தை நிறுத்தும்படி மேலிடத்தில இருந்து உத்தரவு வந்திருக்காது என நினைக்கிறேன்.”

 “அப்போ எங்களோடை நண்பர்களாக மூன்று மணித்தியாலங்கள் பயணம் செய்த பந்துசேனா குடும்பத்துக்கு என்ன நடந்தது”? சேனாதீராவின் மனைவி சந்திரவதி கணவனைப் பார்த்து கேட்டாள்.

 “ அவர்களுடைய மகன் செய்த குற்றத்துக்காக, பாவம், ஒன்றுமறியாத பந்து சேனாவின் குடும்பத்தை விதி விட்டு வைக்கவில்லை போலத் தெரிகிறது”, என்றார் சோகத்தோடு சேனாதீர. சில மணித்தியால நட்பின் பாதிப்பு  அவரில் தெரிந்தது.

                                                                     ********

 (உண்மைச் சம்பவங்களைக் கருவாகக் வைத்து கற்பனையும் கலந்து எழுதப்பட்டது இக்கதை)

சின்ன வீடு

             ஆதவன் அழகன்;. உயரமானவன். சூரியனைப்போல் பிரகாசமான கண்கள். தோற்றத்தில் ஒரு கம்பீரம். நடையில் தனி மிடுக்கு. பேச்சில் ஒரு துடுக்கு. சிரிப்பில் ஓரு கவர்ச்சி. ஆதவன் அழகாக ஆடை அணிந்து வந்தால் அவைனைப் பார்த்தவர்கள் ஒரு சினிமா நடிகன் என்றே நினைப்பார்கள். யாராவத இயக்குனர்கள் அவனைப் பார்த்து விட்டால் தாங்கள் எடுக்கும் படத்துக்கு; கதாநாயகனாக தேரிவு செய்ய சற்றும் தயங்கமாட்டாhகள். காதல் மன்னன் ஜெமினி கணேசனைப் போல் “அழகரசன் ஆதவன்” என்று பட்டப்யெர் வைக்க இரசிகர்கள் தயங்க மாட்டார்கள்.  அவனது தோற்றத்துக்கு ஏற்ற ஒரு அழகியை பெண்ணை கதாநாயகியாக தேர்ந்தெடுப்பது சற்று கடினம்.

              வாழ்க்கையில் பொறுப்பற்றவனாக வாழ்பவன் ஆதவன். சிறுவயதில தாயை இழந்தவன். பாட்டியாரின் பராமரிப்பி;ல வளர்ந்தவன். தந்தை மகேசன் ஒரு பரிபல்யமான கிரிமினல லோயர். பல குற்றவாளிகளுக்கு தண்டணை கிடைக்காமல் வாதாடி வென்றவர்.  அவருககு மகனைப் பற்றி கவலை இல்லை. தன் தொழில தான் அவருக்கு முக்கியம். மகனின் போக்கைப் பற்றி அவருக்கு பல புகார்கள் வந்ததால் ஆதவனோடு பேசுவதைத் தவிர்த்தார்.

 “பிளேய் போய்” என்று பலரால் அழைக்கப்பட்ட ஆதவனுக்கு கல்லூரியில்   படிக்கும் போது “கேர்ல் பிரண்ட்ஸ்” அனேகர்;. அவனுடைய நட்புக்காக பெண்கள் ஏங்கித்தவித்தவர்கள் பலர். அவனை காதலித்து பின்னர் கைவிடப்பட்ட பெண்களில் ஒருத்தி; தற்கொலைசெய்தது பலருக்கு தெரிந்த கதை.  ஆதவன் பிலேய் போய் என்று பெயர் வாங்கினாலும் படிப்பில் மட்டும் கவனம். படித்து இருபத்தைந்து வயதில் என்ஜனியாரனவன். ஆதவனின் அதிர்ஷ்டம் படித்துப் பட்டம் பெற்ற சில மாதங்களுக்குள் ஒரு அமெரிக்கன் கொம்பெனியில் பெரிய சம்பளத்தில் பல சலுகைகளோடு அவனுக்கு வேலை கிடைத்தது.

 “நெலும்” என்ற பெயரில் இருபது வயது சிங்களப்பெண் ஒருத்தி ஆதவனுக்கு ஸ்டெனோ கிராபராகவும் செக்கரட்டரியாகவும் நியமிக்கப்பட்டாள். சிங்களத்தி;ல “நெலும்” என்றால்  அழகிய தாமரை என்பது அர்த்தம். பெயருக்கு ஏற்ற அழகி அவள். கண்டியில் பிறந்து வளர்ந்தவள். தனது பரம்பரை, கண்டியை ஒரு காலத்தில் ஆண்ட நாயக்கர் வம்சத்தினர் என்று பெருமையாக நெலும் அடிக்கடி ஆதவனுக்கு சொல்லிக்கொள்வாள். “ அப்போ உன்னில் தமிழ் ரத்தம் ஓடுது என்று சொல்” என்பான் வேடிக்கையாக ஆதவன்.  

வேலை கிடைத்த சில மாதங்களில் பணக்கார இடத்தில் உர்மிளாவை நல்ல சீதனத்தோடு திருமணம் செய்து கொண்டான். தனி பங்களா, வெளிநாட்டு கார் , பாங் சேமிப்பிலு ஐம்பதாயிரம். ஆதவன் உர்மிளாவின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இரண்டுவருடங்கள் கழிந்தன. “ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்” என்பது போல் ஆதவனுக்கு உர்மிளாவோடு வாழ்ந்து அலுப்பு தட்டிவிட்டது. எத்தனை நாளைக்குத்தான் ஒரே உணவைத்தான் உண்பது? பல பெண்களோடு தொடர்பு வைத்திருந்த ஆதவனுக்கு நெலும் மேல் ஒரு தனிப்பட்ட ப்ரியம் ஏற்பட்டது. அவர்களிடையே உறவு நட்பாக ஆரம்பித்து காதலில் முற்றுப்பெற்றது. வேலை முடிந்தபின்னர் நெலுமோடு சினிமாவுக்கும், ரெஸ்டொரண்டுகளுக்கு போய் வரத் தொடங்கினான ஆதவன். அவன் வேலை சம்பந்தமாக பல இடங்களுக்குப் போகும் போது நெலுமையும் அழைத்து செல்வான். ஹோட்டலில் ஒரே அறையிலேயே இருவரும் தங்குவார்கள்.

ஆதவன்; திருமணமானவன் என்பது நெலுமுக்கு தெரிநதிருந்தும் அவன மேல் அவளுக்கு இருந்த காதல எல்லை மீறி தன்னை திருமணம் செயது; கொள்ளம்படி ஆதவனை கேட்கும் அளவுக்குப் போய்விட்டது.

“ நெலும், நான் ஏற்கனவே திருமணமானவான். எனது இரு வருட தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக இருக்கவில்லை. எனக்கும் என்மனைவிக்கும் இடையே எப்பவும் வாக்குவாதங்கள். அவள் சிகனக்கரி. அவளது தகப்பனும், சகோதரனும் எதைச் சொன்னாலும் மீறமாட்டாள். எனக்கு ஏன் அவளைத் திருமணம் செய்தோம் என்றாகிவிட்டது. அப்படி இருந்தும்; உன்னை திருமணம் செயவது என்றால் என்மனைவி உர்மிளாவை விவாகரத்து செய்யவேண்டும். அவள் கொண்டு வநத சொத்து எவ்லாவற்றையும் நான் இழக்க வேண்டி வரும். அது அவ்வளவுக்கு உசிதமான காரியமாக எனக்குத் தெரியவில்லை. நாமிருவரும் தொடர்ந்தும் திருமணமாகாவிட்டாலும் கணவன் மனைவி போல் வாழ்வோம். என்ன சொல்லுகிறாய்;”? ஆதவன் நெலுமைக் கேட்டான்.

“ நான் உமக்கு சி;ன்ன வீடாக இருப்பதா? சமுதாயம் என்ன  எங்கனைப் பற்றி என்ன பேசும்?;”, நெலும் ஆதவனைக் கேட்டாள்.

“ ஏன் கண்டியின் கடைசி நாயக்கர் வம்சத்தைச் சே;ந்த ஸ்ரீ விக்கிரமராஜசிங்காவுக்கு நாலு மனைவிகள் இருந்ததில்லையா? கேள்விபட்டிருப்பியே’?

“ நல்லாக இருக்கிறது உமது நியாயம். அவன் ஒரு அரசன். அவன்> தான் நினைத்ததை செய்யலாம். நீர் சாதாரண குடிமகன். சட்டம் என்று ஒன்று இருக்கிறதே. ஆதவன் உமக்கு நான் சின்ன வீடாக இருப்பதற்கு உமது மனைவிக்கும்; அவளது பெற்றோருக்கும் சம்மதமே?”

“ அவர்கள் சம்மதம் எனக்குத் தேவையில்லை. என் போக்கை அவர்களால் மாற்றமுடியாது. நீர் தொடர்நது எனக்கு சி;ன்னவீடாகவே இரும். உமக்கு வேண்டியதை கனவன் போல கவணித்துக் கொள்வேன்.”

நெலும் சிந்தித்தாள். அவளுக்கு ஆதவனோடு உறவைத் துண்டிக்க மனம் இடம் கொடுக்கவில்லை. கணவன் மனைவி போல் இருவருடங்கள் வாழந்;துவிட்டாள்.

“இதற்கு ஒரே வழிதான உண்டு.  எங்களுடைய உறவினால் குழந்தையொன்று எங்களுக்கு கிடைக்காமல் நடந்துகொள்வது  தான் சரியான வழி என எனக்குப் படுகிறது” என்ன சொல்லுகிறீர் ஆதவன்”. நெலும் கேட்டாள்.

 “ எது உன் விருப்பமோ நெலும் அதன் படி நடக்கிறன். உம்மை என்னால் மறக்கமுடியாது.” ஆதவன் நெலுமின் யோசனைக்கு கட்டுப்பட்டான். தொடர்ந்து நெலும் ஆதவனின் சி;ன்ன வீடாகவே இருந்தாள்.

 

                            ******

 எவர் வாயை அடைத்தாலும் ஊர் வாயை அடைக்க முடியாது என்பார்களே அதே போல் ஆதவன்- நெலும் உறவு உர்மிளாவுக்கும் அவளின் பெற்றோருக்கும் விரைவில் தெரியவந்தது> ஆதவன் தன் உறவை மறுக்கவில்லை. தன்னால் நெலுமை மறக்க முடியாது என்று திட்டவட்டமாக மனைவிக்கும் அவளின் பெற்றோருக்கும் சொல்லிவிட்டான். ஆதவன் வேலை நிமித்தம்; அடிக்கடி வெளியிடங்களுக்குப் போய் வருவதாக அவனோடு வேலைசெய்பவர்கள் உர்மளாவுக்கு> ஆதவன்- நெலும் உறவைப்பற்றி பல விதமான வதந்திகளை பரப்பினார்கள். உர்மிளா படிப்படியாக ஆதவனை வெறுக்கத் தொடங்கினாள். அவர்களுக்கிடையேலான தாம்பத்திய உறவு பாதிக்கபட்டது. அவர்களுக்கு குழந்தையிலாததும் அவர்களின உறவுக்கான பாலமாக அமையவில்லை.

 காலப்போக்கில்; ஆதவனின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. முதலில் இருதய நோய் என்று ஆதவன் நினைத்தான். பல பரிசோதனைகளுக்கு பின் அவனது இரு நீரகங்களும்  வெகுவாக பாதிப்படைந்திருப்பதாக டொக்டர்கள் கண்டுபடித்தனர். டயாலிசிஸ் செய்வது அவ்வளவுக்கு உசிதமல்ல. அப்படி டயாலிசிஸ் செய்தாலும் ஒரு கிழமைக்கு மூன்று நாட்கள் ஆஸ்பத்திரிக்குப் போய் செய்யவேண்டும். அதற்கு செலவு வேறு. அதுமடடும்மல்ல;> வேலை நிமித்தம் வேறு நாடுகளுககுக பயணம் செய்யமுடியாது. இந்த சிறுவயதில்ல டயாலிசிஸ் செய்வது உசிதமல்ல. இதற்கு மாற்று வழி ஒரு நீரகமாவது ஆரோக்கியமான மாற்று நீரக ஒப்பிரேஷன் செய்தாக வேண்டும் என்று டொக்டர்களின் ஆலோசனை ஆதவனுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.

 உர்மிளாவுக்க தன கணவனுடைய இரு நீரகங்களும் பாதிபடைந்திருப்பதைப் பற்றி கேள்விப்பட்டதும் அவளது போக்கில் ஒரு திடீர் மாற்றம் ஏற்பட்டது. ஆதவனோடு பேசுவதைக் குறைத்துக்கொண்டாள். எங்கே தனது இரு நீரகங்களில் ஒன்றை தனக்குத் தானம் செய்ய ஆதவன் கேட்டுவிவானோ என்ற பயம் வேறு அவளுககுத்க தோன்றியது.

 “ உர்மிiளா இதைபற்றி யோசியாதே. ஆதவனுக்கு நீரகம் தேவையானால் பொறுத்தமான நீரகத்தை ஏராளமான பணம் கொடுத்து வாங்கலாம். நீரகத்தை பணத்துக்காக விற்பதற்கு எத்தனையோ ஏழைகள் காத்துக்கோண்டிருக்கி;றார்கள். பேப்பரில் ஒரு விளமபரம்போட்டால் மட்டுமே போதும்” என்றார் உர்மிளாவின் தந்தை. அவர் சொன்ன ஆலோசனையை உர்மிளாவின் தாயும் சகோதரனும் ஆமோதித்தனர். ஆதவனுக்கு மாமனார் சொன்னது கோபத்தைக் கொடுத்தது. தன் மருமகனுக்கு உதவவேண்டுமே என்ற எண்ணம் இல்லாதவர். இவர்களும் என் இனத்தவர்களா?” என்று மனதுக்குள் மாமனாரையும் தன் மனைவியையும் ஆதவன் திட்டிக்கொண்டான்.

 தனது பிரச்சனையை நெலுமுக்கு ஆதவன் எடுத்தச்சொன்னாhன்;. ஆதவனின் தேகநலம் இப்படி இளம் வயதில் பாதிபடையும் என்று நெலும் எதிர்பார்க்கவில்லை. ஆதவனின் பிரச்சனைக்குத் தீர்வு காண சில தினங்களாக தனக்குள் நெலும் போராடினாள். முடிவில் ஒரு தீர்மானத்துக்கு வந்தாள். மனைவியும், உறவினர்களும் ஆதவனுக்கு உதவ முன் வராததைச் சிந்தித்து கவலைப்பட்டாள். முடிவில் ஒரு நாள் ஆதவனிடம்.

  “டார்லிங் உங்களோடு ஒரு முக்கிய விஷயம் பேசவேண்டும்; என்று பீடிகையோடு பேச்சை ஆரம்பித்தாள் நெலும்.

 “ என்ன விஷயம் சொல்லேன் நெலும்”.

 “ உங்களது கிட்னி டிரான்ஸ்பிளான்டைப் பற்றியது. பொருத்தமான நீரகம் ஒன்றை விலை கொடுத்து வாங்க உங்களிடம் போதிய பணம் இல்லை. உங்கள் மனைவியும் மாமனாரும் உங்களுக்கு உதவப் போவதில்லை என்று சொன்னீர்;கள். அதோடு உங்கள் சுயமரியாதை அவர்களிடம் நிதி உதவி கேட்க விடாது. உங்கடை பிரச்சனைக்கு ஒரே வழி மட்டும் தான் உண்டு. நான் நன்றாக யோசித்தப் பிறகு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறன்” என்றாள் கரிசனையோடு நெலும்”

 “ என்ன முடிவு எடுத்திருக்கிறாய் நெலும்?”

 “ அமைதியாக நான் சொல்வதைக் கேளுங்கள். எனது இரு சீறுநீரகங்களில் ஒன்றை உங்களுக்கு நான் தானம் செய்யத் தீர்மானித்திருக்கிறன். என் நீரகம் உங்களுக்குப் பொருந்தினால் நான் உங்களது சின்ன வீடு என்ற உரிமையில் உங்கள் சம்மதத்தை கேட்கிறேன்” என்றாள் அமைதியாக நெலும்.

 ஆதவனுக்கு அவள் சொன்னது பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. இந்த வயதில் இப்படியொரு தியாக மனப்பான்மை உள்ள ஒரு பெண்ணா நெலும் என்றது அவன் மனம். அவளைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்தான் ஆதவன்

 

                         ******

 

 

 

                 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பேசும் மனித உருப்படிவம் (Talking Menninquin)

 மோகனுக்குச் சிறுவயது முதற்கொண்டே பொம்மைகள் என்றாலே ப்ரியம். வழக்கத்தில் பெண் குழந்தைகள் தங்கள் பொம்மைகளுக்கு விதம் விதமான ஆடை அணிவித்து மகிழ்வது வழக்கம். ஆனால் மோகன் பெண் பிள்ளைகள் விளையாடுவதைப் போல் பொம்மைகளோடு விiளாயாடுவதைக் கண்டு பலர் அவனைக் கேலி செய்தார்கள். பெற்றோருக்கு மோகன் ஒரே மகன் என்றபடியால் செல்லம் கொடுத்து வளர்த்தார்கள். ஆதனால் அவன் எப்படி விளையாடினாலும் அவர்களுக்கு அதைப்பற்றிக் கவலை இல்லை. அவன் கேட்டதை  வாங்கிக் கொடுத்தார்கள். மோகன் படிப்பில் கவனம். தான் படித்து  மென் பொருள் பொறியியலானாக வரவேண்டும் என்பது அவன் ஆசை. அமெரிக்காவில் மைக்கிரோ சொப்ட் ஸ்தாபனத்தில் மென் பொருள் பொறியியலானாக அதிக சம்பளத்தில் வேலை செய்யும் தாய் மாமனே  இதற்குக் காரணம்.

 பொம்மைகளுக்கு ஆடை அணிவித்து விளையாடும் பழக்கம் அவன் வளர்ந்தும் பெரியவனானாலும் அவனை விட்டு அப்பழக்கம் போகவில்லை.

 அவனின் பொழுதுபோக்கு விண்டோ சொப்பிங் எனப்படும் கடைகளில் உள்ள சாளரத்தினூடாக விளம்பரத்துக்கு காட்சியாக வைத்திருக்கும் பொருட்களைப் பார்த்து இரசிப்பது.  ஓரு சேலைக் கடையில், அழகிய மெனன்குவின் என்று அழைக்கபபடும் பெண் உருவப் படிவத்துக்கு தினமும்  காஞ்சிபுரம், தர்மபுரம் சில்க், திருபுவனம், சின்னாலம்பட்டு, பெனாரிஸ், மணிபுரி சேலைகளை தினத்துக்குத்; தினம் மாற்றி அணிவித்து சாரளத்தினூடாக வாடிக்iகாயளர்களின பார்வையைக் கவர்ந்தார் “வள்ளி எம்போரியம் என்ற பிரபல சேலைக் கடையின் சொந்தக்காரர் சின்னச்சாமி செட்டியார். அவரது வணிக யுக்தியால் அவருக்கு சேலை வியாபாரம் ஓகோ என்று நடந்தது.

 சாரளத்தினூடாக பெண் மெனன்குவின்; உருவத்தைப் பார்த்து ரசித்த சில வாடிக்கையாளர்கள் அப்பொம்மை அணிந்திருக்கும் சேலை போன்று ஒன்று இருந்தால் தாருங்கள் என்று கடைக்குள் போய் கேட்பார்கள்.அந்த அளவுக்கு அந்த வாய் பேசாத  பெண் உருவப்படிவம் மக்களை கவர்ந்துவிட்டது.

 பல கடைகளின் சாரளத்தினூடாக பெண் படிவங்களை பார்த்து இரசித்துபடி நடந்து கொண்டிருந்த மோகனுக்கு ஒரு பெண்  மெனன்குவின்  உருவப்படிவம் மிகவும் பிடித்துக் கொண்டது. தனக்கு வரப்போகும் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்று கனவு கண்டு அவன் மனதில் பதிந்த உருவத்தை அப்படியே அது  ஒத்து இருந்ததே அதற்கு காரணம். ஆனால் ஒரு வித்தியாசம் அந்த மெனன்குவின்னின் தலையில் மல்லிகைப் இருக்கவில்லை. கழுத்தில் நகை இருக்கவில்லை. அது கண்சிமிட்டவில்லை. பேசவில்லை. அதைப்பற்றி; மோகன் கவலைப்படவில்லை. அவனுக்கு உடலின் தோற்றமும்,; அழகிய முகமும், நிண்ட கண்கள் , துடி இடை, மெல்லிய விரல்கள் அதெல்லாம் அவன் கண்ட தன்ன வருங்கால மனைவியைப் போலவே இருந்தது.

 தினமும் மோகன் அக்கடைக்குப் போய் சாளரத்தினூடாக அப் பெண் படிவத்தை உற்று பார்த்து இரசித்தபடி பல நிமிடங்கள் நிற்பான். அதோடு பேசுவதாக நினைத்து தன் வாயுக்குள் முணமுணுப்பான். அது பேசாது. அதே நிலையில் அது அசையாது நின்றது அவனுக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தாலும் தன் முணுமுணுப்பை அவன் நிறுத்துவதாக இல்லை.

 மோகனின் விசித்திரமான நடத்தையைக் கடைவாசலில் காவலுக்கு நின்ற செக்கியூரிட்டி கவனித்து விட்டான்.

“என்ன இவன் ஒருவன், தினமும் வந்து அந்தப் பொம்மையைப் பார்க்கிறான்.; தன் வாயுக்குள் ஏதோ முணுமுணுக்கிறான். ஒருவேலை பைத்தியக்காரனோ, அல்லது கடையைக் கொள்ளை அடிக்கத் திட்டம் போடுகிறானோ என்று நினைத்தான் செக்கியூரிட்டி. ஒரு நாள் மோகன் அப்பெண் உருவப்படிவத்தைப பார்த்து இரசித்த படி நின்றபோது செக்கியூரிட்டி அவன் முதுகில் தட்டி,

 “ ஏய் உன்னைத்தான். ஏன் அப்படி தினமும் வந்து இந்தப் பொம்மையைப் விறைத்து பார்த்தபடி பல நிமிடங்கள்  நிற்கிறாய். வாயுக்குள் முணுமுணுக்கிறாய். உனக்கென்ன பைத்தியமா? வேறு வேலை உனக்கு இல்லையா? அது ஒரு வெறும் பொம்மை. உன்னோடு பேசாது. அசையாது “ என்றான் செக்கியூரிட்டி.

 “அது பரவாயில்லை. என் மனதில் நான் கற்பனையில் கண்ட என் வருங்கால மனைவியின் தோற்றத்தைப் போல் இருக்கிறது. அது தான் அதன் அழகை இரசிக்கிறேன்” என்றான் மோகன். 

 அவன் சொன்ன பதிலைக் N;கட்டுவிட்டு “ அத வெறும் பொம்மை அப்பா. அதோ பார் உன்னைப் பார்த்து கண் சிமிட்டக்கூட இல்லை“,  என்றான் செக்கியூரிட்டி..

“ஏன் அதனால் பேசவோ கண் சிமிட்டவோ முடியாது? “

 “நீ என்ன சொல்லுகிறாய். பொம்மை எப்படி பேசும்”? அதிசயத்தோடு செக்கியூரிட்டி  கேட்டான்.

“நான் ஒரு மென்பொருள் பொறியியளாலன். ஆதனால் தான் சொல்லுகிறன்.; இந்தப் பெண்ணைப் பேசவும் கண்சிமிட்டவும் வைக்க என்னால் முடியும் என்றான்”

“நீ என்ன விசர் கதை சொல்லுகிறாய்;? எனக்கு ஒன்றுமே விளங்கவில்லை” செக்கியூரிட்டி மூளை குளம்பி மோகனைக் கேட்டான்.

 “உனக்கு விளங்கும்படி சொல்லப்போனால் நான் ஒரு கொம்பியூட்டர் சொபட்வெயர்  என்ஜினியர். மைக்கிரோ சொப்ட் ஆராச்சி ஆய்வகத்தில்  வேலை செய்கிறேன். புதுப் புது கண்டுபிடிப்புகளுக்கு புரோகிறாம் எழுதுவது என் தொழில். தற்போது குரல் கேட்டு பதில் சொல்லும் ; கருவிகளைப் பற்றி ஆராச்சி செய்கிறேன். இதை ஸ்பீச் ரெகக்னிஷன்(Speech Recognition) செயல் முறை என்பார்கள்.”

 

“அப்படி என்றால் என்ன?

 

“உதாரணத்துக்கு நீ ஒரு கடிதம் எழுதும் போது முதலில் என்ன செய்கிறாய்”?

 

“கடிதத்தை கொம்பியூட்டர் கீபோர்ட்டை பாவித்து டைப் செய்கிறேன்”

 

“உனக்கு டைப் அடிக்கத் தெரியாவிட்டால் என்ன செய்வாய்?

“கொம்பியூட்டரைப் பாவிக்காமல் பேனாவைப் பாவித்து பேப்பர் ஒன்றை எடுத்து; கடிதத்தை எழுதுவேன்”.

 

“உனக்கு எழுதவும் தெரியாவிட்டால் என்ன செய்வாய்.”?

செக்கியூரிட்டி விழித்தான்.

 

“உன் பிரச்சனையைத் தீர்க்க வழி உண்டு”.

 

“என்ன வழி”?

“அது தான்  பேசும் குரலை எழுத்தாக மாற்றும் செயற்பாடு. அதாவது நீ எதை சொல்ல விரும்புகிறாயோ அதை உன் வாயால் சொன்னால், அது அதை எழுத்தாக மாற்றி உன் கடிதத்தை தாயார் செய்யும். சிலர் தங்களது செக்கரட்டரிக்கு கடிதத்தை டிக்டேட் செய்வார்கள். அதை அவள் சுருக்கெழுத்து மூலமாகவோ, அல்லது நெரடியாகவோ டைப்செய்வாள். நான் சொன்ன செயல் முறையைப் பாவித்தால் செக்கரடடரி தேவையில்லை” என்றான் மோகன்.

 “நீ சொல்வது இது சாத்தியமா?”

 “ஏன் சாத்தியமில்லை. இப்பொது செய்கிறார்களே என்பது உனக்குத் தெரியாதா.”

“இல்லை. எனக்குத் தெரியாதே.

“நான சொல்லவந்தது அதை விட ஒரு படி மேல். அதாவது நான் பேசினால் கொம்பியூட்டர் எழுத்தாக மாற்றாமல் குரலாக மாற்றும். உதாரணத்துக்கு உன் பெயர் என் என்று கேட்டால், என் பெயர் மல்லிகா என்று பதில் தரும். உன் வயது என்ன என்று கேட்டால் அதற்கு என் வயது பதினாறு என்று பதில் அளிக்கும். நீ உடுத்திருக்கும் சேலை எந்த ரகம் என்று கேட்டால், காஞ்சிபுரம் சில்க் என்று பதில் சொல்லும். விலை என்ன என்று கேட்டால் ஐயாயிரம் ரூபாய் என்று பதில் சொல்லும்.”

 “அதுக்கு எப்படி விலை தெரியும்?” செக்கியூரிட்டி கேட்டான்.

 “இது தெரியாதா உனக்கு. ஏற்கனவே சீலைக்கு ஏற்ற விலையை கடை சொந்தக்காரன் கொம்பியூட்டரில் பதிவு செய்திருப்பான். செய்யச் சொன்னதைச் செய்வது தான் கொம்பியூட்டரின் வேலை. அதைச் செயற் படுத்த வைப்பது புரோகிராமர். கொம்பியூட்டருக்கு  சுயமாக சிந்திகத் தெரியாது” என்றான் மோகன்.

 “நீ சரியான புத்திசாலி. சரி வா உன்னை இந்த கடை முதலாளியிடம் அழைத்து செல்கிறேன். அவருக்கு நீ எனக்குச் சொன்னதைச் சொல்லி விளங்கப்படுத்து. அவருக்கு உன் திட்டம் பிடித்திருந்தால்  நிட்சயம்  ஏற்றுக்கொள்வார். அதன் பிறகு உன் கனவுக் கன்னியைப் பேசவைக்கலாம்.” என்றான் சிரித்தபடி செக்கியூரிட்டி .

 

                                                            ******

 

செக்கியூரிட்டியோடு போய் மோகன் வள்ளி எம்போரியம் முதலாளி சின்னச்சாமி செட்டியாரைச் சந்தித்தான். செக்கியூரிட்டி நடந்த கதை முழுவதையும் முதலாளிக்கு எடுத்தச் சொன்னான். அவர் சற்று நேரம் வாயில் விரல் வைத்து யோசித்தார். மோகன் கொடுத்த பிஸ்னஸ் கார்டை வாங்கிப் பார்த்தார்.

 

“தம்பி உன்னால் நீ சொல்வதுபோல் செய்து காட்ட முடியுமா? உண்மையில் நீ இதைச் செய்ய முடியுமென்றால் இது ஒரு புதுமையான வணிக யுக்தியாக அமையும். நான் எப்பவும் புதுமையை விரும்புகிறவன்” என்றார் செட்டியார்.

 

“ஐயா உங்களுக்கு ஒன்றை மட்டும் சொல்ல விரும்புகிறேன். உண்மையாகவே ஒரு பெண்ணை, அந்தப் பெண் மெனன்குவின் இருக்கும் இடத்தில், சாரளத்தில் கண்காட்சியாக பல மணி நேரம் சற்றும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்க வைக்க நினைத்தால் அதுக்கு பலர் சம்மதிக்கமாட்டார்கள். அப்படி சம்மதித்தாலும் அவர்களுக்கு அதிக ஊதியம் கொடுக்கவேண்டிவரும்;. மெனன்குவின் சொல்லப் போகும் சேலயின், விலையை நீங்களே தீர்மானித்து மெனன்குவின்  அணியும் சேலைக்கு ஏற்ப பதிவு செய்யலாம். அதோடு சேலை பற்றிய விபரங்களையும் பதவி செய்யலாம். வாடிக்கையாளர்கள் அனேகமாக என்ன கேள்விகள் கேட்பார்கள் என்பது உங்களுக்கத் தெரியும் தானே. அதற்கேற்ற பதில்களை தாயாரிப்போம். கடுமையான கேள்விக்குப் பொருத்தமான பதில் பதிவு செய்திருக்காவிட்டால் மெனன்குவின் “மன்னிக்கவும் உங்கள் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியாது” என்று சொல்லிவிடும்”. மெனன்குவின் பேசும் போது கண்களை சிமிட்டவும், உதட்டை அசைக்கவும் செய்யலாம். பார்ப்பவர்களுக்கு உண்மையாகவே ஒரு பெண் பேசுவது போல இருக்கும்”,  மோகன் விளக்கம் கொடுத்தான்.

 

“சரி மோகன் இதை செயல் படுத்திக்காட்ட எவ்வளவு காலம் எடுக்கும் என்று நினைக்கிறீர்” செட்டியார் கேட்டார்.

 

“உங்கள் ஒத்துழைப்பு இருந்தால் ஒருமாதத்துக்குள் செயற்படுத்திக் காட்டுவேன். ஆனால் ஒன்று…”

 

“ ஆனால் என்ன மோகன்? முன் பணம் ஏதும் உமக்குத் தேவையா?”

 

“ பணம் தேவையில்லை ஐயா.  ஆனால்  நகல் உரிமை எனப்படும் கொப்பிரைட்’ எனது”.

 

“அது நியாயமானதே. எனக்கு திருப்தியாக இருந்தால் மட்டுமே பணம் தருவேன்” என்றரர் செட்டியார்

                                                  ******

 

நாட்கள் சென்றன. அன்று மோகன் தான் உருவாக்கிய பேசும் மெனன்குவின் எப்படி செயலாற்றுகிறது என்பதைப் பார்க்க செட்டியாரின்  “வள்ளி எம்போரியம்” கடைக்கு போயிருந்தான். அவ் மெனன்குவின்னின் பாதத்தில் “ நான் ஒரு பேசும் மடந்தை” என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் காட்சியைப் பார்த்து அவனுக்கு மனதுக்குள் சந்தோஷம். சாளரத்தில் உள்ள பேசும் மெனன்குவின்னின் இனிமையான குரலைக் கேட்க ஒரே கூட்டம்.

 

“இனி நான் தினமும் வந்து அதோடு பேசப்போகிறேன். என் காதலியின் குரலை தொடர்ந்து கேட்டு எனக்கு அலுப்பு தட்டிவிட்டது” என்றான் பேசும் மெனன்குவினைப் பார்த்து இரசித்த ஒரு இளைஞன் ஒருவன்;.

மோகன் தனக்குள் சிரித்துக் கொண்டான். மோகனைக் கண்ட செக்கியூரிட்டி உடனே அவனிடம் வந்து, அவன் முதுகில் தட்டி, “நீ சாதித்து விட்டாய் தம்பி” என்றான்.

 

*******

வைரஸ் (Virus)

 

 மார்க்கண்டனும் (மாரக்), ஜெயதேவியும (தேவி); ஆகிய இருவரும் கொம்பியூட்டர் சயன்ஸ் துறையில் பட்டம் பெற்றவர்கள். படிக்கும் போது இருவருக்குமிடையே பலத்த போட்டி. அதுவே அவர்களுக்கிடையே, காதலுக்கு வித்திட்டு,  திருமணத்தில் முடிந்தது. வைத்திய துறை நிறுவனம் ஒன்றில் இரத்தபரிசோதனை செய்யும் பகுதியில் மார்க் புரோகிறாமராக வேலை செய்யத்தொடங்கினான். தேவி, பல்கலைகழகம் ஒன்றில் லெக்சரராக வேலை செய்தாள். திருமணமாகி இரு வருடத்தில் தம்பதிகளுக்கு  இந்திரன் என்ற இந்திரஜித் பிறந்தான்

 இந்திரன் பத்துவயதாக இருக்கும்போதே  புரோகிறாம் எழுதுவதில் ஆர்வம் காட்டினானன். அதற்கு முக்கிய காரணம் அவனது பெற்றோர்கள். பெற்றறொர்கள் புரோகிறாம் எழுதுவதைக் கண்வெட்டாமல் இந்திரன் பார்த்துக் கொண்டிருப்பான். அவனுடைய நச்சரிபு தாஙகாலம் அவனக்கு புரோகிறாம் எழுதும் மொழிகளை சொல்லிக கொடுத்தார்கள். பல கேள்விகளை கேட்டு தன் சந்தேகததை நிவர்த்தி செய்வான். விiவில் மொழிகளை அவன் கற்றதை அவர்களால் நம்பமுடியவிலலை. தங்களைப்போல கணனித் துறையில் இந்திரன் படித்து பிரபலயமாக வேண்டும் என்பது அவனது பெற்றறொரின் ஆசை. அவர்களின்  விருப்பத்தினபடி இந்திரன் கொம்பியூட்டர் சயன்ஸ் துறையில்; படித்து, முதலாம் வகுப்பில் பட்டம் பெற்றான்..

 தன்னோடு ஒன்றாகப் படித்த நணபர்களான நந்தனும், தேவனும் அதிக சம்பளத்தில் பல சலுகைகளோடு அமெரிக்காவில் உள்ள பிரபல்யமான கணனி நிறுவனம் ஒன்றில் வெலை கிடைத்து இருவருடங்களுக்கு முன் சென்றது இந்திரனின் வாழக்;கையில் தனிமையைக் கொடுத்தது. தானும்; அமெரிக்கா போய் வேலை செய்து பிரபல்யமாக வேண்டும் என்ற ஆசை அவன் மனதில் படிப்படியாக வளரத்தொடங்கியது. தங்களின் ஒரே மகன் தங்களை பிரிந்து, பிறந்த நாட்டை விட்டு அமெரிக்கா போக நினைப்பது மார்க்கிற்கும், தேவிக்கும் விருப்பமில்லை.

 “இந்திரா நீ கல்வி பயின்றது நீ பிறந்த நாட்டில். அதை மறக்காதே. உன் திறமையை; காலம் சென்ற விஞ்ஞானி அப்துல் கலாமைப் போல் நாட்டுக்கு உபயோகி. ” என்று அடிக்கடி மார்க் மகனுக்கு சொல்லுவார்.

 இந்;திரனுக்கு தான் எதையும் புதுமையாகச் செய்யவேண்டும், எவர்களாலும் தீரத்து வைக்க முடியாத பிரச்சளைக்கு திர்வு காண வேண்டும், அதன் மூலம் பலரின் கவனத்தை பெறவேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். அவன்  ஒரு நிதி முதலீடடு செய்யும் நிறுவனம் ஒன்றில் கணனி பகுதியில் வேலை கிடைத்து போன போது, அந்த நிறுவனம்  வளருவதற்கு புதபு; புது புரோக்கிறாம்கள் அவசியம் என்பதை அறிந்தான். முதலீடு செய்த வாடிக்கையாளர்கள் தமது பங்கு விபரததையும், பங்கு விலையில் ஏற்படும் மாற்றங்களையும் ஆன்லைன்னில தகவல் தளத்தில் பார்த்து, தேர்ந்தெடுந்த நிறுவனங்களின பங்குகளில் முதலீடு செய்ய வீpரும்புவார்கள் என்பதை அவன் அறிந்தான். பலர் அதனால் பணக்காரர்களானார்கள்.

 இந்தரனின் வேலைத்திறமையை அறிந்த அவனது மனேஜர் சுரேஷ் பல வருடஙகளாக  அந்த நிறுவனத்தில் வேலை செய்பவர். நிறுவனத்தில் முதலீடு செய்த வாடிக்கையாளர்களின் பங்குகள் பற்றிய தகவல்களுக்கு, தகவற் தளத்தில் போதிய பாதுகாப்பு இல்லை என இந்திரன் பல தடவை சுரேசுக்கு எடுத்துச் சொன்னான்.  அதற்கான புரொகிராமை உருவாக்குவது அவசியம் என்று அவன் சொல்லியும் அதிக செலவாகும் என்பதாலும் அந்த புரோகிராமை உருவாக்க கொம்பியூட்டர் செக்கியூரிட்டி துறையில் அனுபவம் வாயந்த ஒருவர் தேவை என்று மனேஜர் சொன்ன பதில் இந்திரனை திருப்தி படுத்தவில்லை.

 வாடிக்கையாளர்களின் முதலீட்டு தகவல்களின் பாதுகாப்பு பற்றிய தனது அக்கறையை தனது பெற்றோரிடம் கலந்து பெசினான். ஆதற்கு அவர்கள் “இந்திரா உனது அக்கறையை எழுத்து மூலம் உன மனேஜருக்கு அறிவித்துவிடு. ஆதைபற்றி அவர் முடிவு எடுக்கட்டும. உனக்கு உன் திறமையைக் வெளிக்காட்ட நிட்சயம் சந்தர்ப்பம் வரும்.” என்றார்கள்.

                                                  ********

                                                              

ஒரு நாள் நிறுவனத்தின் துணைத்தலைவர் உடனடியாக தன்னை வந்து இந்திரனை சந்திக்கும் படி சொன்னார் என்றார் மனேஜர் சுரேஷ்.

 இந்திரனும் மனேஜரும்; துணைத்தலைவரைப் போய் சந்தித்த போது அவர் சொன்னதை கேட்டு இருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

 “ தலைவருக்கும,; எனக்கும் கவலையைக் கொடுக்கும் சில முறைப்பாடுகள் எமது நிறுவனத்தின்  வாடிக்கையாளர்களிடம் இருந்து வந்திருக்கிறது. தங்களது முதலீட்டு தகவலகளை யாரோ ஒருவர் களவாடுகிறார் போல் தெரிகிறது. அதோடு முன்பு மாதிரி சரியான தகவல்களை ஒன் லைனில பெறமுடியாமல் இருக்கிறது என்பது தான் அவர்களின் முறைப்பாடு. நானும் உடனே ஒன்லைனில எனது பங்குகளின விபரத்தை தேடியபோது பிழையான தகவல் கிடைத்தது. நான் நினைக்கிறேன் யாரொ ஒருவர் எங்கள் கொம்பியுட்டரின பாதுகாப்பை மீறி வைரசை புகுத்தியிருக்கிறார்கள்.  இதற்கு எதாவது உடனடியாக செய்தாக வேண்டும். இல்லையேல் எங்கள் நிறுவனம் வெகுவாக பாதிப்படையும்” கவலையொடு துணைத்தலைவர் சொன்னார். சுரேஷ், தணைத்தலைவர் சொன்னதைக் கேட்டவுடன் இந்திரனைப் பாரத்தார்.

 “சேர் நான் இது எப்போதாவது ஒரு நாள் நடக்கும் என எதிர்பார்த்தனான். தகவற் தளத்தில் உள்ள வாடிக்கையாளர்களின் தகவல்களை  பாதுகாப்பதற்க வேண்டிய புரோகிறாமை நான் நேற்று எழுதிமுடித்துவிட்டேன். அதை டெஸ்ட் செய்த பார்த்தால் தகவந் தளத்துக்குள் புகுந்த வைரஸை அழித்துவிடலாம். தகவற் தளத்தில் உள்ள வாடிக்கையாயளர்களின் தகவலகளுக்கு எது வித பாதிப்பும்; ஏற்படாது” என்றான் இந்திரன்.

 “அப்படியா? உடனடியாக நேரம் தாழ்த்தாது நீர் எழுதிய வைரஸை அழிக்கும்  புரொகிறாமமை  டெஸ்ட் செய்யும். அதற்கு நான் அனுமதி தருகிறேன். ஆனால் ஒன்று சொல்ல விரும்புகிறேன், இந்த விஷயம் எங்கள் மூவருக்குள் மட்டுமே இருக்கட்டும். பலருக்கு எமது கொம்பியூட்டர் அமைப்பின்  தகவற் தளத்துக்குள் வைரஸ் புகுந்துவிட்டது என்று தெரிந்தால் எமது நிறுவனத்தின பெயர் கெட்டு விடும். வாடிக்கையாளர்கள் பதட்டப்படுவார்கள். நான் தலைவருக்கு தகுந்த நடவடிக்கை எடுக்கிறோம் என அறிவிக்கிறேன்; “என்றார் துணைத்தலைவர்.

 இவர்களின் சந்திப்பு நடந்து சில மணிநெரத்தில் தான் ஏற்கனவே எழுதிய வைரஸை அழித்து தகவல் தளததைப் பாதுகாக்கும் புரொகிறாமை கொம்பியூட்டரில் அப்லோட் எனப்படும் பதிவேற்றத்தை இந்திரன் செய்தான். தனது புராகிறாம் சரியாக வேலை செய்கிறதா என்று அறிய அதன் விளைவை டெஸ்ட் செய்தான்.

 இந்திரனின் மனேஜர் சுரேசால்  நம்பமுடியவில்லை. வைரஸ் அழிபட்டு விட்டது என்று மொனிட்டரில் பதில் வந்தது.

 “இந்திரா நீ உண்மையில் வெகு கெட்டிக்காரன். இந்த நிறுவனம் உனக்கு பதவி உயர்வு கொடுத்து சமபளத்தையும், சலுகைகளையும் கூட்டும் என்பது நிட்சயம்” என்றார் சுரேஷ்.

 “நன்றி சேர். இந்த வெற்றியை எனது பெற்றோருக்கு நான் உடனடியாக அறிவிக்க வேண்டும்” என்றான் இந்திரன். அவள் சொல்லி வாய் மூட முன் அவனது மொபைல் போன் அடித்தது.

 போனில் பதிவாகி இருந்த நம்பரைக் கண்டவுடன் வீட்டில் இருந்து தனக்கு கோல் வந்திருக்கிறது என்பதை இந்திரன் அறிந்தான்.

 “யார் அம்மாவா பேசுகிறது’? இந்திரன் கேட்டான்

 “ஓம் அம்மா தான். இந்திரா நீ உடனடியாக விஜயா ஹொஸ்பிடலுக்கு புறப்பட்டு வர முடியுமா? அப்பா  தீவிர சிகிச்சை பிரிவில் அட்ம்மிட் ஆகியிருக்கிறார். அவர் நிலமை மோசமாயிருக்கிறது என்கிறார்கள் டாகடர்கள். அவரை  ஒருகு வைரஸ் தொற்று நோய்; பாதித்திருக்கலாம்” தேவியின் குரல் தளும்பியது

 இந்திரனுக்கு தன வெற்றியை அடுத்து ஒரு கவலைப்படும் செயதி வந்ததை நம்ப முடியவில்லை.

 இந்திரனின முகத்தில் ஏற்பட்டதிடீர் சோகத்தைக் கண்ட சுரேஷ், “ என்ன இந்திரன் எதாவது பிரச்சனையா”? என்று கேட்டார்.

“ஓம் சேர். நான் உடனடியாக விஜயா ஹொஸ்பிடலுக்கு போகவேணும். அப்பாவுக்கு ஏதோ வைரஸ் இன்ஸ்பெக்சனாம்”.

“என்ன வைரஸா. என்ன சொல்லுகிறீர் ” சுரேஷ் பதட்டத்தோடு கேட்டார்

“ஆமாம் சேர் நான் இங்கை வைரஸை கொம்பியூட்டரிலை அழித்துவிட்டேன். டாக்டர்கள் உதவியோடு  அப்பாவின் உடலில் உள்ள வைரஸ் இன்ஸ்பெக்சனை அழிக்க வேண்டும். கடவுள் தான துணைபுரிய வேண்டும்.;” என்றான் இந்திரன்.

“எப்படி அவருக்கு இன்ஸ்பெசன் வந்தது இநதிரன்”?;.

“அப்பா வேலை செய்வது   இரத்தபரிசோதனை செய்யும் பகுதியில். அங்கிருந்துதான் வைரஸ் தொற்றியிருக்க வேண்டும் என நினைககிறேன்;”, என்றான் இந்திரன்.

 “நீர் உடனே ஹொஸ்பிடலுக்குப் போய் அப்பாவின் நிலமையைப் பாரும். நான் நடந்ததை துணைத் தலைவருக்குச் சொல்லுகிறன்” என்றார் சுரேஷ்

 

                                                          *******

அமரத்துவம்; (Immortality)

லோகநாதன் சிறுவயது முதற்கொண்டே அறிவியல் துறையில் அதிக ஆர்வமுள்ளவன்;. லோநாதனின் தந்தை சிவநாதன்,; பௌதிகத்துறை பேராசிரியராக இருந்து 55 வயதில் காலமானவர். அவரின் துனைவி பார்வதி, உயிரியல் துறையில் பேராசிரியையாக இருந்து ஐம்பது வயதில் மார்பு புற்று நோய் காரணமாக இறந்தவள். இவர்களுக்குப் பிறந்த இரு ஆண் குழந்தைகளில் மூத்தவன் லோகநாதன். பயோ கெமிஸ்டிரி துறையில் பட்டம் பெற்று உயிரி வேதியியலில் பல ஆய்வுகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில்   நடத்தி வருபவன். அவனது திறமை அறிந்த அவனது புரோபெசர் வில்லியம், அவன் வருங்காலத்தில புதிய கண்டுபடிப்புகளை; செய்து மனித இனத்துக்குப் பேருதவி செய்வான் என்று சக பேராசிரியர்களிடம் அடிக்கடி  சொல்லுவார். 

கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழக ஆய்வு கூடத்தில்; மரபபணு சிகிச்சை மூலம் மனிதனின் ஆயுள் காலத்தை நீடிக்க முடியமா என்பதில் ஆராய்ச்சி நடத்தி வந்தான் லோகநாதன். அவ் ஆராய்ச்சியில் அவன் முக்கிய சிரத்தை எடுதத்துக்கு காரணம், அவனது பெற்றோர்கள் குறைந்த வயதில் மரணித்ததே. அவனது பெற்றோரின்; பரம்பரையைச் சார்ந்தவர்கள்,  குறைந்த காலம் வாழ்ந்வர்கள்.. அதனால் அவனது பரம்பரையைச் சார்ந்தவர்களின் மரபணுக்கள் வெகு விரைவில் சிதைந்ததால் அவர்களின் ஆயுற் காலாங்கள் குறைவாக இருந்திருக்கலாம்; என்று லோகநாதனுக்கு புரொபெசர் வில்லியம் சொன்னதை அவன் அடிக்கடி நினவு படுத்திக்கொள்வான். தனக்கும் அவர்களைப் போல் ஆயுள்காலம் குறைவாக இருக்கலாமோ என்று அவன்pன் புரெபசரிடம் கேட்ட போது அதற்கு அவர்,

“ லோகா, உன் ஆயுளைப் பற்றி இப்ப யோசிக்காதே. வெகு விரைவில் ஆயுளை நீடித்து, நுண்ணறிவு கூடிய டொல்பின்கனைப் போல் 150 வருடங்கள் மனிதன் வாழக்கூடிய வழியை நீ கண்டு பிடித்து விடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு”என்றார்.

லோகனாதனுக்கு  ஆராய்ச்;சியில் துணையாக இருந்து, பின் துணைவியானவள் மேரி இசபெலா. அவளுடைய தந்தையும் வேதியியல் துறையில், லண்டன் பல் கலைக்கழகத்தில் பேராசிரியாரக இருந்து ரிட்டடையராகி, அறுபது வயதில் ஹார்ட் அட்டாக்கால் காலமானவர். அவரின் மனைவியும் இளமை வயதில் மார்பு புற்று நோயால் காலமானவள்.  பெற்றோர் இளம் வயதில் மரணித்தது மேரியை வேகுவாக பாதித்தது. லோகநாதனிதும், மேரியினதும பரம்பரையைச் சார்ந்தவர்கள் குறைந்த ஆயுள் உள்ளவர்களாக வாழ்ந்ததால், மனிதனின் ஆயுளை அதிகரிக்க “ஜீன் திரபி” (புநநெ வுhநசயிhல) எனும்  மரபணு சிகிச்சை பற்றிய ஆராய்ச்சியே அவர்களின் இருவரினதும் குறிக்கோள்.

“ லோகா, நீர் இந்தியாவைச சேர்ந்தபடியால் ஜாதகத்தின் மேல் அதிகம் நம்பிக்கை உள்ளவரா”? வில்லியம் கேட்டார்

“ ஏன் சேர் அப்படி கேட்கிறியள்”?

“ இல்லை, இங்கு கணித பேராசிரியராக இருக்கும் சுப்பிரமணியன் ஜாதகப் பொருத்தம் பார்த்துத்தான் தன் சாதிக்குள்  திருமணம் செய்ததாக எனக்குச் சொன்னார். அந்தப்பொருத்தத்தில் தாலிப் பொருத்தம், ஆயுள் போருத்தம் , மனப் பொருத்தம், பிள்ளைப் பொருத்தம்; ஆகியவையை முக்கியமாக பார்த்து தன் பெற்றோர் தனக்குத் திருமணம் செய்து வைத்ததாக எனக்குச் சொன்னார். ஆதனால் தான் கேட்டேன்.”

“இருக்கலாம் சேர். அப்படி பொருத்தம் பார்த்து திருமணம் செய்தவர்கள் கூட வெகு விரைவில் பிரிந்து இருக்கிறார்கள். இறந்தும் இருக்கிறார்கள். மேலைத் தேசங்களில் ஜாதம் பார்பதில்லையே, ஆனால் திருமணத்துக்கு முன் பிளட் டெஸ்ட் செய்வதாக கேள்வி”.

“ உண்மைதான் உலகில் ஆயுள் கூடிய மக்கள் வாழும் தேசங்களில் மொனொக்கோ (ஆழழெஉழ) முதலிடத்தில் இருக்கிறது. பல பில்லியனியர்கள் இத்தேசத்தில்  வாழ்கிறார்கள். அதற்கு அடுத்த  ஆயள் கூடிய மக்கள் வாழும் நாடு ஜப்பான். ஆனால் ஆகஸ்ட் 1945 இல் அமெரிக்கா வீசிய அனுக்குண்டால் குறைந்த ஆயுளோடு போனவர்கள் பல்லாயிரக கணக்கான ஜப்பானியர்கள்;. ஆயுள் அதிகமுள்ள மக்களைக் கொண்ட மூன்றாவது நாடாக ஹொங்கொங்.”

“கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து போன்ற தேசங்களில் வாழும் மக்களின் சராசரி ஆயட்காலம்,  பல இடங்கள் கீழே உள்ளது . இதோடு ஒப்பிட்டுப் பார்க்கும் போது இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ, தென் கிழக்கு ஆசிய  நாடுகளில் வாழும் மக்களின் சராசரி ஆயுள் குறைவு. இதற்கு வறுமையம், பொருளாதாரமும் காரணமாக இருக்கலாம்”, லோகநாதன் சொன்னார்.

“ மனிதனின் ஆயுளை அதிகரிக்கும் ஆராயச்சி நல்லுது தாhன், ஆனால் எதிர்பாராத விதமாக ஏற்படும் மரணம் தவிரக்க முடியாதது ஒன்று. உதாரணத்துக்குப் விபத்து, போர் , பூகம்பம், சூறாவளி,  சுனாமி, போன்றவையால் ஏற்படும் மரணம் தவிர்க்க முடியாதவை”இ புரொபெசர் சொன்னார்.

“ எதற்காக வெகுவிரைவில் மனிதனுக்கு வயது அதகரிக்கும் போது, தோல்கள் சுருங்கி, நடக்கும் சக்தி இழந்து, பல வித நோய்கள் வந்து உறவு கொண்டாடுகிறது என்பதைப் பற்றியே நான் ஆராய்ச்சி செய்து வருகிறேன். அதிபுத்திசாலியான டொல்பினைப் பாருங்கள். அது சுமார் 150 முதல் 200 வயது வரை வாழ்கிறது. ஆமை, 400 வயது வரை வாழ்கிறது. ஏன் யானை கூட 90 வருடங்கள் வரை வாழ்கிறது. ஆனால் மற்றைய உயரினங்களை அடக்கி ஆட்சி செய்யும் மனிதன் மட்டும்; சராசரி 70 ஆண்டுகளே வாழ்கிறான்”, லோகநாதன் சொன்னார்.

 

“வயதாகும் போது நமது உடலில் உள்ள மரபணுக்களும் செல்களும் படிப்படியாக சிதைவதால் செயல் குறைந்து நோய்களை எதிர்க்கும் சக்தியை இழந்து விடுகிறது. அதனால் டயபடீஸ், கிட்னி வியாதி, அல்செய்மார். புற்ற நோய், இருதைய நோய் போன்றவை உடலில் சேர்ந்துவிடுகிறது. ஆனால் மரபணுக்களும்;, செல் எனபபபடும் கலங்கள்; வேகமாக சிதையாமல்  இருக்க வழிவகைகள் உண்டு சேர். சிதைவை குறைத்;தால் நோய்கள் வராமல் இருக்கமுடியும். அதனால் ஆயுளும் நீளலாம்.”இ மேரி கருத்து தெரிவித்தாள்.

“ மேரி நீர் சொல்வதில் ஓரளவுக்கு உண்மையிருக்கிறது. ஆனால் செல்கள் சிதையாமல் இருக்கும் சிகிச்சையை வெகு இலகுவாக செய்யமுடியாது என நான் நினைக்கிறேன்”இ வில்லியம் சொன்னார்..

“ சேர், செல்லின் வளர் சிதைவு பிரச்சனை உருவாக்கலாம். எமது செல்கள் கழிவுப்பொருட்களை சேகரிக்கிறது. இதனால் உயிரியல் செயல்முறைகள் சீரகுலைந்து போய்விடுகிறது.” லோகநாதன் சொன்னார்.

 “லோகா. ஓன்றை நீர் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இறுதியாக, உடல் உறுப்புகள் மறு உருவாக்கம் பிரச்சினைகளை எதிர்கொண்டால் ஒவ்வொரு குரோமோசோமினில் இருக்கும் டெலிமெரஸ் எனும் மரபணுக்கள் கலங்கள் பிரியும்போது சுருங்கிக் கொண்டு போகிறது. இந்த சுருக்கத்தை தவிரக்காவிடில் செல்கள் செயல் இழந்து விடுகிறது. ஒரு கட்டத்தில செல்கள் இறுந்து விடுகின்றன. அதனால் பல்வேறு நோய்கள் உடலைப் பாதித்து மரணத்தைக் கொண்டுவரலாம்.

இதை நீங்கள் கவனத்தில் கொண்டு ஆராய்ச்சியை நடத்தவேணடும்;” பேராசிரியர் வில்லியம், லோகனாதனுக்கும் . மேரிக்கும் அறிவுரை வழங்கினார்,

   

“சேர் உதாரணமாக, ஒரு பொதுவான நீரிழிவுக்கு எடுக்கும் மெட்ஃபோர்மின் மருந்தை, பொறுத்தவரை, எலிகளில் செல்களின சிதைவு மெதுவாக நடக்கிறத. ஆதகால கூடிய காலம் வாழக் கூடியதாக இருக்கிறது. ஒரு (சுழரனெறழசஅ) என்றவட்டப்புழுவில் உள்ள உயிரணு வளர்ச்சிதை ஈடுபட்ட ஒரு மரபணு மாற்ற அதன் பெற்றோர்கள் விட நீண்ட ஆயுளேடு விவகுக்கும. இயற்கையானது எப்படியோ சில உயிரினங்கள தமது ஆயுளை நீடிக்கும் வழியை  கண்டுபிடிக்க உந்துகிறது.

“ லோகாஈ உமது உணரம் என்ன”?

“ ஏன் சேர் திடீரென்று என் உயரததை கேர்கிறர்கள்”?

” காரணத்தோடு தான்”.

“ ஆறடி மூன்று அங்குலம் சேர் “.

“ உயரமானவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்றும,; செல்கள் சிதைவடைவது குறைவென்றும் எங்கையோ நான் வாசித்தது நினைவிருக்கிறது. அதனால்தான் கேட்டேன். நீங்கள் இருவரும் விடாமுயற்சியாக உங்கள் ஆராய்ச்சியை தொடருங்கள். என் உதவி உங்களுக்கு எப்போதும் இருக்கும்”.

                                                            *******

 

கினி பன்றிகள் (Guinea Pig) மருத்துவ ஆராய்ச்சி பெரிதும்  பயன்படுகின்றன? அவை ஆய்வுத் துறைகளில் பயனுள்ள பாலூட்டிகள். அவைக்கும் , மனிதர்களுக்கும் பல உயிரியல் ஒற்றுமைகள் உண்டு. பல நூற்றாண்டுகளாக அவை பரிசோதனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றன்.'கினி பன்றி ஒரு மனித சோதனை பொருள். கினிப் பன்றிகள், சுமார் 4 முதல் 8 வருடங்கள் வாழக்கூடியவை. வைட்டமின் சி, காசநோய் பாக்டீரியம், இரத்த ஏற்றம், சிறுநீரக நோய், இரத்த உறைதல் போன்ற நோய்களுக்கான மருந்துகளை  கண்டுபிடிக்க பாவிக்கப்பட்டன. இக்காரணத்தால்; தங்களின் ஆராய்ச்சிக்கு கினி பன்றியை ஆரம்பத்தில் பாவித்தனர்.

 

லோகநாதனும் மேரியும் ஆரம்பத்தில்; கினி பன்றியில் செல் சிதைவைப் குறைக்கும்  மருந்தைக் கண்டுபிடித்து, பரீட்சித்துப் பார்த்தார்கள். அவ் உயிரினத்தில் செல் சிதைவின் விகிதம்  குறைந்ததை கண்டான்கள். ஆதன் காரணமாக கினி பன்றி; 15 வருடங்கள் வரை கூடிய காலம் வாழக்கூடியதாக இருக்கும் என்பது அவர்கள் கணிப்பு. லோகநாதனும், மேரியும் தங்கள் ஆராய்ச்சியின் முடிவைப்பற்றி பேராசிரியர் வில்லியத்துக்கு சொன்னபோது அதற்கு அவர்:>

 

“எனக்கு இப்போது வயது அறுபது. எனது தோல் சுருங்கத் தொடங்குவதைக் அவதானிக்;கிறேன். அடிக்கடி எனக்கு தடிமன், இருமல், உடம்புவலி போன்றவை வருகிறது. மறதியும் வருகிறது. வெகு தாரம் நடக்க முடியாமல் இருக்கிறது. வெகு காலம் நான் வாழ்வனோ தெரியாது, அதனால் நீங்கள் உங்கள் ஆராய்ச்சிக்கு என்னைப் பயன் படுத்தினால் என்ன?” புரொபெசர் கேட்டார்.

 

“என்ன சேர் இப்படிச் புதுமையாக சொல்லுகிறீர்கள். நீங்கள் என்ன கினி பிக்கா (Guinea Pig)”?

 

“அப்படிச் சொல்லவேண்டாம். உடலின் 25 வெவ்வேறு மனித உறுப்புககளை, மாற்று நன்கொடையாக கொடுக்க முடியும். சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண்கள், ; சிறு குடல் . இரத்த நாளங்கள், எலும்புகள், இருதய வால்வுகள், மற்றும் தோல் இத்தானத்தில் ஆகியவை அடங்கும். அதேபோல் என் உடலை உங்கள் ஆராய்ச்சிக்கு பயன் படுத்த நான் ஒத்துக்கொவதால் மனித இனத்துக்கு சேவை செய்வதாக நான் கருதுகிறேன். ஊடலில் உள்ள மனித உறுப்புகள் தானம் செய்வதில்லையா? அதே போல் எனது முழு உடலையும் உங்கள் ஆராய்ச்சிக்கு நான் தானம் செய்வதாக எடுத்துக்கொள்ளுங்களேன். நான் இன்னும் பத்து வருடம் வாழ்வதாக இருந்தால், எனது ஆயள் காலம் 100  வருடங்களுக்கு மேல்  நீடிக்கலாம் அல்லவா?. என்ன இருவரும் சொல்லுகிறீர்கள்”? புரொபெசர் வில்லியம் உறுதியோடு அவர்களைக் கேட்டார்.

 

லோகநாதனாலும் , மேரியாலும் அவர் சொல்வதை நம்பமுடியவில்லை. அவரது வேண்டுகோளை நிராகரிக்கவும் முடியவில்லை.

 

“சேர் எங்களுக்கு சில மாதங்கள் தாருங்கள் எங்கள் முடிவைச் சொல்ல. நாங்கள் தற்போது செய்யும் பரிசோதனைகள் நூறு விகிதம் வெற்றி என்று அறிந்த பின், நாங்கள் கலந்து ஆவோசித்து முடிவெடுத்து, உங்கள் உடலைப் பரிசோதனைக்கு பாவிக்க சம்மதமா இல்லையா என்று சொல்லுகிறோம்”, மேரி சொன்னாள்.

 

“ சரி ஆறுமாதங்கள் தருகிறேன். நான் ரிட்டையராக இன்னும் 9 மாதங்கள் மட்டுமே இருக்கு. அதற்கு முன் உங்கள் முடிவை சொல்லவேண்டும்” என்றார்  புரோபெசர் வில்லியம்.

 

                                                                                ******

 

நாட்கள் மாதங்களாயிற்று. புரொபெசர் சொன்ன ஆறு மாதங்ஙகள் முடிய இன்னும் இரு கிழமைகளே இருந்தன. தாங்கள் செய்த ஆயள் நீடிப்பு பரிசோதனைகள் வெற்றி என்பதைக் கண்ட லோகநாதனும் மேரியும், புரொபசரின் வேண்டுகோளுக்கு சம்மதிக்க அவர் வீட்டுக்குப் போய் கதவைத்தட்டினாரகள். அவர்களுக்கு புரொபசர் வில்லியத்தின் மகன் பீட்டர் சொன்ன செய்தி அவர்களை அதிரவைத்தது.

 

“ என்ன புரபெசர் வில்லியம் கார் அக்சிடென்டில் இறந்துவிட்hரா?. எப்போது இது நடந்தது”?  லோகநாதன் பீட்டரைக் கேட்டார்.

 

“ ஆமாம் நேற்று அப்பா யூனிவர்சிட்டியாலை வீடு திரும்பும் போது ஹைவேயில் ஒரு லொரியோடு அவர் கார் மோதியதால் அவர் அந்த இடத்தலேயே  இறந்திட்டார்” அழுதுகொண்டே மகன் பீட்டர் சொன்னார்.

 

 லோகநாதன் மேரியைப் பார்த்தார். மேரி அதிரச்சியால் பேசாது நின்றாள்.

 

“பார்த்தாயா மேரி நாம் எவ்வளவு ஆராயச்சி செய்து ஆயுளை நீடிக்க மருந்து கண்டு பிடித்தாலும், எது எது எப்ப எப்ப நடக்க வேண்டுமோ, அது அது அப்ப அப்ப நடக்கும். அதை என்ன ஆராய்ச்சி செய்தும் யாராலும் நிறுத்த முடியாது” என்றார் லோகநாதன்.

 

                                                                                *******

காலம் (Time)

 

எனது ஒரே மகன் அகஸ்த்தியன் ஒரு பைலட். என்  மருமகள் வத்சலா  ஒரு டாக்டர்;. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எனதும், என் மனைவி பூர்ணிமாவினதும் சம்மதத்தோடு தோடும் தான் அவர்கள் திருமணம் நடந்தது. அகஸ்த்தியன் எங்களின் ஒரே மகன் என்றபடியால் சம்மதித்துதானே ஆகவேண்டும். அவர்களுக்கு  அகஸ்த்தியன் தம்பதிகளுக்கு அபிமன்யூ என்ற மகன் பிறந்தான்.  அபி படிப்பில் வெகு கெட்டிக்காரன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே வருவான்.   பங்களூரில் வசிக்கும் அகஸ்த்தியன் குடும்பம் அடிக்கடி லீவில் சென்னை வருவார்கள். அகஸ்த்தியனுக்கு தான் எப்போதாவது ஒரு நாள் விண்வெளிப் பயணியாக வேண்டும் என்ற கனவு பல காலமாக இருந்து வருகிறது.

 “நான் நினைப்பது நடக்குமா அப்பா”? என்று என்னை அடிக்கடி கேட்பான்.

“அகஸ்தியா. உன் கனவு நனவாகுமா என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம்  கேட்டு விடு

வோமே” என்று அவனுக்குச் சொன்னேன்.

“அப்பா அது நல்ல ஐடியா தான். நாடி சாஸ்திரத்தைப்பற்றி கேள்விபட்டிருக்கிறன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அப்பா” என்றான். மூன்று நாள் லீவில் தனது வருங்காலத்தைப் பற்றி அறியும் திட்டத்தோடு அவன் மட்டுமே சென்னைக்கு வந்தான்  .

 அவனை அழைத்துக்கோண்டு வைதீஸ்வரன் கோவில் இருக்கும் ஊருக்கு நாமிருவரும் மட்டுமே போனோம். ஏன் மனைவிக்கு பூர்ணிமா உடம்பு சரியில்லாததால் எங்களோடு வரவில்லை.  இக்கோவில் உள்ள ஊர் சென்னையில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்திலும், சீரகாழிக்கு அருகே 7 கிமீ தூரத்திலும் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான கோவிலது. .  நாடி சாஸ்திரக்கார்கள் பலர் வாழும்;   ஊர்.  அனேகர் தமது சென்ற காலம் , நிகழ் காலம், வருங்காலத்தைப் பற்றி அறிய  இங்கு செல்வதுண்டு. அவர்கள் நாடி சாஸ்திரம் சொல்வதற்கு பாவிக்கப்படுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வட்ட எழுத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள். இது வேதகாலத்தில் சித்தர்களால் எழுதப்பட்டது என்பது பலர் நம்பிக்கை. இந்த சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறது. நாடிச்சென்று சாஸ்திரம் கேட்பதால் நாடிசாஸ்திரம் என்ற பெயர் வந்தது என்பர் சிலர். சாஸ்திரம் கேட்பவர் ஆண் ஆகில் வலது கையின் பெருவிரலின் ரேகையும்,; பெண்ணாகில்;; இடது கையின் பெரு விரல் ரேகையும் பிரதி எடுத்து, ஓலைச்சுவடிகளைத் தேடியபின் பல கேள்விகளை சாஸ்திரம் கேட்க வருபவர்களிடம் கேட்டு,  ஆம் அல்லது இல்லை என்று அவர்கள் சொல்லும் பதில்கள் மூலம் தாம் சாஸ்திரம் சொல்லப் போவது சரியானவருக்கா என உறுதி செய்த பின்னர் சாஸ்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

 அவ்வூரில்; நாடி சாஸ்திரம் பார்த்துவிட்டு நானும்  மகன் அகஸ்தியனும் வீடு திரும்பும் வழியில் அவன் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லவேண்டி இருந்தது.

 “அப்பா, நாடிசாஸ்திரக்காரர், உங்கள் பெயர் சந்திரசேகரன் , அம்மா பெயர் பூர்ணிமா, என் பெயர், என் மனைவி பெயர் எல்லாம் சரியாகச் கொன்னார். உங்களுக்கு நான் ஒருவன்தான் பிள்ளை என்றும், நான் காதலித்து க்டித்த பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் சொன்னார் .  நான் பிரபல வான்வெளி பயனியாவேன் என்றும் என் மகன் வைத்தியத் துஙையில் சேர்ஜனாவான் என்றும்   என் மனைவி அரசியலில் ஈடுபட்டு அமைச்சராவாள்  என்றார். என் குடும்பத்தின் வருங்காலத்தைப் பற்றி அவரி சொன்னது நடக்குமா என்பது எனக்குச் சந்தேகம். டாக்;டர் தொழில் செய்யும் என் மனைவி வத்சலா எப்படியப்பா அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக முடியும்? எனது மகள் சேர்ஜனாவன் என்று சாத்திரத்தில் சொன்னபடி நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். அது தான் நான் எதிர்பார்பதும். நாடி சாஸ்திரம்  சொன்னவர் பெயர் என்னப்பா”?

 “ அவர் பெயர் சிவசங்கர். அவர் எனக்குத் தெரிந்தவர்களுக்கு  சொன்னது நடந்திருக்கிறது.; பிரானசில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  தீர்க்கத்தரிசி மைக்கல் நொஸ்டடெமஸ் என்பவர் பற்றி கேள்விபட்டிருப்பியே. அவரை போல் என்று சொல்”

 “நாடி சாஸ்திரம் சொல்லும் போது அவர் கையில் இருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து வாசித்தாரே. அச்சுவடிகள்  என்ன அவரின்  டைம் மெசினா? கடந்த காலத்துக்கும,; நிகழ்காலத்துக்கும், நிகழப்போகும் காலத்துக்கு கையில் இருக்கும் ஏட்டைபார்த்து சொல்லுகிறாரே அதெப்படி?

 “அகஸ்தியா காலத்தில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றிய சார்புக் கொள்கையினை  பௌதிக விஞ்ஞானி அல்பேர்ட் அயன்ஸ்டைன் எற்கனவே சமன்பாடுகள் மூலம் விளக்கியிருக்கிறார். ஒளியின் வேகமானது ஒரு செக்கண்டுக்கு சுமார் மூன்று இலட்சம கிமீ.  இதுவே  நாமறிந்த ஆகிய கூடிய வேகம். ஓளி, ஒரு வருடத்தில் செல்லும் தூரத்தை  ஒளி வருடம் என்று வான்வெளியாளர்கள் அழைப்பார்கள். அந்த தூரத்தை ஆங்கிலத்தில் லைட் இயர் (Light Year) என்பார்கள்;.”

 என்  மகன் பௌதிகத்திலும் விண்வெளித்துறையிலும் அதிக ஆர்வம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியும். சந்திரனில் முதல் கால் அடி எடுத்து வைத்த ஆரம்ஸ்டோரங் என்பவரைப் பற்றி  வாசித்து அறிந்த பின், பைலட்டாக வேலை செய்யும் தானும் ஒரு விண்வெளி வீரனாக வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவான்.  வானியல் பற்றிய பல நூல்கள் அவன் கேட்டு, நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனுக்குப் பௌதிகத்துறையில் பேராசிரியரான நான் வாண்வெளிப் பயணம் பற்றி விளக்கம் கொடுத்தேன்.

 “அகஸ்தியா நீ விண்வெளி வீரனாக வர வேண்டுமானால் விண்வெளியில் தூரத்தை கணிப்து எப்படி என்று முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும்”, நான் சொன்னேன்.

 “அப்பா, நீங்கள் பொளதிகத் துறை பேராசிரியராச்சே. வாண்வெளியில் பூமிக்கும் கிரகங்களுக்கும் இடையிலான தூரத்தை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள்.”.

 “ கஸ்தியா விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொண்டபடி ஒளியின் வேகம் தான், நாமறிநத வேகங்களில் ஆகக்கூடிய வேகம். ஓளி செகன்டுக்கு சுமார் 300,000 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என பரிசோதனைகள் மூலம் கணித்துள்ளார்கள். ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரத்தை கணிப்பதென்றால் 300,000 கிமீ  தூரத்தை ஒரு வருடத்தில் உள்ள செகன்டுகளை 300,000 கீமீ ஆல் பெருக்கினால் சுமார் 9.5 டிரிலியம் கிமீ தூரம் வரும்.. இத’ தூரத்தை ஒரு ஒளி ஆண்டு தூரம் என்றார்கள் பல வாண்வெளி ஆராச்சியாளர்கள்.”

 “ அடெயப்பா நினைத்து பார்க்க முடியாத அவ்வளவு தூரமா அப்பா”?

 “ஆமாம் பூமியில் இருந்து சூரியனதும் ,நட்சத்திரங்களினதும் கிரகங்களினதும் தூரத்தை ஒளி வருடத்திலும் அல்லது வானியல் அலகு எனும் அஸ்டிரோனோமிக்கல் யுளிட்டிலும் (Astronaumical Unit) சொல்லுவார்கள். ஒரு வானியல் அலகு   பூமிக்கும் சூரியனுக்கு இடையிலான தூரம் கிட்டத்தட்ட 150 மில்லியன் கிமீ. அதாவது  ஓளி சூரியனில் இருந்து பூமியை வந்து சேர கிட்டத்தட்ட  8.3 நிமிடங்கள் எடுக்கும். இத்தூரத்தை ஒரு வானியல் அலகுவாகக் கருதுகிறார்கள். ஒரு ஒளி வருடத்தையும் வானியல் அலகை இணைக்கும் ஒரு ஒளி வருடமானது 63241 வானியியல் அலகுக்கு சமனாகும். பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு போகும் தூரம் சுமார் 29 வானியல் அலகாகும். இவ்வலகை 63241ஆல் பெருக்கினால் ஒளி ஆண்டு தூரம் வரும்.

 “முடிவில்லா தூரம் என்று சொல்லுங்கள். இகனால் தான் இந்து மதத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வானியல் தூர கணிப்பைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன் அப்பா”

 “சரியாகச் சொன்னாய். அகஸ்தியா இன்னொன்றை தெரிந்து வைத்துக்கொள். நேரமானது வேகத்தாலும் , ஈரப்பு விசையாலும் பாதிப்படையும். வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, நேர மாற்றம் அதிகரித்து கொண்டே போகும். இதை விண்வெளி வீரர்கள் அவதானித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் மட்டுமே நேர மாற்றத்தை அவதானிக்க முடியும் என்பதில்லை. ஈரப்புச் சக்தி அதிகம் உள்ள பிளக் ஹோல் (Black Hole)  என்ற கரும் துளைக்கு அருகே சென்றால் அதன ஈரப்பு விசை நேரத்தை  பாதிக்கும்.”

 “அப்பா நான் நாடிசாஸ்திரத்தில் சொன்னபடி விண்வெளி பயணியாக வந்தால் நான் யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைப்பேன்”

 “ என்ன சாதனை படைப்பாய் அகஸ்தியா”?

 “ பூமிக்கு அருகே உள்ள கருந்துளைக்கு பயணத்தை மேற் கொண்டு காலத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்து அது உண்மையா என்று அறிய விரும்புகிறேன்”.

 “ நல்ல சிந்திக் முடியாத இலட்சியம் தான், ஆனால் அகஸ்தியா நீ நினைப்பது சாத்தியமாகுமா என்பது எனக்கு சந்தேகம். வெகு தூரத்தில் உள்ள கருந்துளையை அடைவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்தால் மாத்திரமே கருந்துளையை அடைய முடியும். அதற்குள் போனால் அதன் ஈரப்பு விசையில் இருந்து தப்பமுடியாது என்பதை நீ அறிந்து கொள்.”

 “ தெரியும் அப்பா. நான் பங்களுரில் உள்ள  இந்திய விண்வெளி ஆராச்சி நிலையத்துக்கு நான் விண்வெளி வீரனாகும்  விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பிக்கப் போறன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள ரொக்ட் விண்வெளிக்கு அனுப்பும் தும்பா என்ற இடத்தில் பயிற்சி கிடைக்கும். அதுசரி அப்பா நீங்கள் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறை பேராசிரியராயிற்றே கருந்துளை பற்றி மேலும் சொல்லமுடியுமா”

 “கருந்துளை (Black Hole) என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந் துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஈரப்புச் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' (Quarsar) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு கருந்துளையை சீனாவில்; உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கி உதவியுடன் கண்டு பிடித்துள்ளனர். கருந்துளைகளை  அதன நிறையை வைத்து நான்கு வகையாக வகுத்துள்ளனர். நான்காம் வகையைச் சேர்ந்த சூரியனை விட பல கோடி அதிகமான நிறையுள்ள கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி (Chile) நாடும் உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. நட்சத்திர இறப்பினால் தோன்றும் கருந்துளை; சூரியனின் நிறையிலும் சுமார்  மடங்கு கூடியது. சூரியனிலும் பார்க்க பல மில்லியன் நிறை கூடிய கருந்துளைகள் உயர் வகுப்பை சேர்ந்தவை . சூப்பர் நோவாவில் (Super Nova)  உள்ள நட்சத்திரஙகள் இறநதபோது தோன்றிய கருந்துளை இதில் ஏ616 மொன் (Mon) என்று பெயரிடப்பட்ட கருந்துளை பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இகருந்துளை சூரியனின் நிறையை விட 9 முதல் 13 வரை கூடுதலான நிறை உள்ளது என கணித்துள்ளார்கள்;. இதற்கு அடுத்த அருகே உள்ள கருந்துளை 6000 ஒளி ஆண்டுகள் துராத்தில் உள்ளது. இது சூரியனை விட  15 மடங்கு நிறை கொண்டது.

 “ கேட்பதற்கு எவ்வளவு சுவர்சியமாக இருக்கிறது அப்பா. இதைபற்றி மேலும் வாசித்தறிய விருப்பப்படுகிறேன். நான் விண்வெளி வீரனாகும் சந்தரப்பம் கிடைத்தால் இதைப்பற்றி அறிந்து வைத்;திருப்பது நல்லதல்லவா. ஒருவேளை என்னை இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் நேர்காணலுக்கு அழைத்து கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கவேண்டாமா”?

 “வீட்டுக்குப் போனதும் எனக்கு நினைவு படுத்து, கிப்ஸ் தோர்ன் (Kips Thorn) எழுதிய “கருந்துளையும் நேர பாதிப்பும்” (Black Hole Time Impact) என்ற  நூலொன்று எனது லைப்பிரரியில் இருக்கிறது. அதைத் தருகிறேன், அந்நூலை வாசி. அப்போது பிரபஞ்சத்தைப் பற்றி அறிவாய்”, நான் அகஸ்தியனுக்குச் சொன்னேன்.

 அகஸ்தியனும் நானும் வீடு திரும்பியதும், இரவு உணவு சாப்பிட்டபின்  பின், நித்திரைக்குப் போக முன், அந்நூலை மறக்காமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டான்;. தூங்கமுன் நூல் முழுவதையும் வாசித்துவிட்டு அதை தன் நெஞ்சில் வைத்தபடியே அதன் நினைவாகவே தூங்கிவிட்டான்.

                                                                      ******

ஆகஸ்தியன் எதிர்பார்த்தபடியே ஏ616 மொன் என்ற கருந்துளை நோக்கி பயணிக்க இருக்கும் 3 பேரைக் கொண்ட  விண்வெளி வீரர்களில் அகஸ்தியனும் ஒருவனாக தேர்ந்து எடுகக்ப்பட்டான். மற்ற இருவரும்; வடநாட்டவர்கள். மூவரில் குழுவுக்கு பூனாவைச் சேர்ந்த பாரத் என்பவர் கப்டனாக இருந்தார்;. மற்ற வீரரின் பெயர் கல்கத்தாவை சேர்ந்த சௌதிரி.; கருந்துளையைபற்றிய அகஸ்தியனின் அறிவைக் கண்டு பயணிகள் குழுவின் தெரிவுக்காக நேர்காணல் கண்டவர்கள் வியந்தார்கள்.

 அவன் விரும்பியபடி  அவனது விண்வெளிப் பயணம் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி காலை 9 மணிக்கு கேரளாவில் உள்ள பாம்பா (Pampa) விண்வெளி ரொக்கட்டுகள் பயணிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பமானது என்பதை ரொக்கட்டில் உள்ள கடிகாரம் காட்டியது. அகஸ்தியன் பயணம் செய்த ரொக்கட்டின் பெயர் “சட்டேர்ன்” (SATURN)). கருந்துளை நோக்கிய பயணமாவதாலோ என்னவோ சனியை குறிக்கும் சட்டேர்ன் பெயர் ரொக்கட்டுக்குப் பொருத்தமாக இருந்தது. பெற்றோர்,; மனைவி வத்சலா, மகன் அபிமின்யூ ஆகியொரிடமிருந்து உயிரை பணயம் வைத்து> அகஸ்தியன் விடைபெற்றான். அப்போது நான் ரிட்டையராக ஆறுமாதங்களே இருந்தன.

 ஓளியின் வேகத்தின் தொன்னூற்றி எட்டு வகிதத்தில் ரொக்கட் பயணம் செய்தால் சில வருட பயணத்தின் பின் பல கிரங்களைத் தாண்டி கருந்துளையை நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தது.

பயணத்துக்கு போதுமான எரிபொருள் இருக்கிறது என்பதை மீட்டர் காட்டியது,  குழுவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. குழுவின் கப்டன் பாரத்; பல தடவை வாண்வெளியில் பணம் செய்த அனுபவசாலி. குழுவில் இரண்டாவது பயணி சௌத்ரி, ஒரு பிரமச்சாரி. அவரும் இரு தடவை வாண்வெளியில் பயணம் செய்தவர். அகஸ்தியனுக்கு இப்பயணம் புது அனுபவம். பயிற்சியின் போது ரொக்கட்டில் உள்ள கருவிகளை இயக்குவதையும், மீட்டர்களை வாசிப்பதை பற்றி கற்றுக்  கொடுத்திருந்தார்கள். உண்பதற்கு சத்தள்ள மாத்திரைகள் உற்கொள்ளவேண்டியிருந்தது. ஈரப்பு சக்தியில நடக்கக்  கூடிய வித்தில் ஆடைகள் அணிந்திருந்தான். அதறகான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தூரம் ரொக்கட்; பயணித்துள்ளது என்பதை  ஒளி ஆண்டு; அலகுவில் மீட்டர் காட்டியது. ரொக்கட் பயணிக்கும் வேகத்தை ஒளியின் வேகத்தின் விகிதத்தில் காட்டியது. வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது நேர மாற்றம் பெரிதாகிக் கொண்டு போகும் என்று தன் தந்தை சொன்னது அகஸ்தியன் ஞாபகத்துக்கு வந்தது.  அதுவமல்லாமல் கருந்துளையை வெகு சீக்கிரம் போயடையலாம் எனப் பாரத் சொன்னார்

 கருந்துளைக்குள் போனால் வெளியேறமுடியாது என்று விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை செய்து பயணிகளை அனுப்பியிருந்தது. 2900 ஒளி ஆண்டு தூரத்துக்கு பயணம் செய்து கருந்துளைக்கு அன்மையில் ரொக்கட்டை நிறுத்தி கருந்துளையை அவதானித்து குறிப்புகள் எடுத்து திரும்பவேண்டும் என்பது குழுவுக்கு ஆராய்ச்சி நிலையம் இட்ட கட்டளை. அதனபடி சட்டெர்ன் ரொக்கட்;  கருந்துiளையில் இருந்து 10 ஒளி ஆண்டு தூரத்தோடு பயணத்தை தொடராமல் நிறுத்தியது. 

 தங்கள் குழுவுக்கு ஐஎஸ்ஆர்ஓ (ISRO) என்ற இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் இட்ட வேலையை  சரிவர செய்து முடித்து, திரும்பவும் பூமிக்கு குழு திரும்பிய போது ரொக்கட்டில் உள்ள கடிகாரம் ஜனவரி 20 திகதி 2015 ஆண்டு எனக் காட்டியது. ரொக்கட்டில் இருந்த கடிகாரம் காட்யபடி  கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கருந்துளைக்குப் போய் வர எடுத்தது என்பதை நினைத்து பார்க்கும் போது தாம் எவரும் கிடைக்காத சாதனையைப் படைத்துவிட்டோம் என குழு நினைத்தது. பூமியை ரொக்கட் வந்தடைந்த போது பாம்பாவில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ பரிபாலன நிலையத்தில் இருந்த கடிகாரம் 2038 ஆண்டு ஜுன் மாதம்  20 ஆம் திகதியைக் காட்டியது. 

 “ பூமியின் நேரத்தின்படி நான் என்ன 23 வருடங்கள் இளமையாகிவிட்டேனா? அப்போ நாஙகள் புறப்படும் போது இருந்தவர்கள் இப்போது விண்வெளி ஆராச்சி நிலையத்தில்  வேலை செய்யமாட்டார்களே”, என்றார் குழுவின் கப்டன் பாரத்.

 23 வருடங்கள் இளமையாகி வீடு திரும்பிய அகஸ்தியனுக்கு இன்னொரு அதிரச்சி காத்திருந்தது, ரொக்கட் இறங்கிய நிலையத்துக்கு தன்னை வரவேற்க மனைவி வத்சலா ஒரு பெரிய கூட்டத்தோடு, பல பொலீஸ் அதிகாரிகள் புடைசூழ வந்திருந்தாள். அவளோடு அபிமன்யு தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் வந்திருந்தான். அகஸ்தியனின் கண்கள் அவனது பெற்றோரைத் தேடிற்று. அபிமன்யுவிலும் வத்சலாவிலும்; பல  மாற்றங்கள்;. வத்தசலாவின் முகத்தில் வயதின் முதுமை தெரிந்தது. தலை மயிர் நரைத்தவிட்டது.

 “ அப்பாவும் அம்மாவும் எங்கே” ? பதட்டத்தோடு அகஸ்தியன் மனைவி வத்சலாவைக் கேட்டான்.

 “ அவர்கள் இறந்து 15 வருடங்களாகிவிட்டது” வத்சலா சொன்ன பதில் அவனை அதிர வைத்தது.

 “ அது சரி வத்சலா டாக்டரான உனக்கேன் இவ்வளவு பொலீஸ பாதுகாப்பும் கூட்டமும் ”?

 “ நான் இப்போ டாக்டராக வேலை செய்வதில்லை . நான் இப்போ மாநில கல்வி அமைச்சர், இவர்கள் என் மக்கள் திராவிட தமிழர் கழக கட்சித் தொண்டர்கள்.” வத்சலாவிடம் இருந்து பதில் வந்தது.

 குழப்பம் அடைந்த  அகஸ்தியன் அபிமன்யுவைப் பார்த்தான்.

 

“ அப்பா நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள். என்னை யார் என்று அடையாளம் தெரிகிறதா? நான் தான் உங்கள் மகன் அபிமன்யூ. இது என் மனைவி அகிலா. இவ ஒரு கிட்னி கொன்சல்டன் டாக்டர். அவளுக்கு பக்கத்தில் நிற்பது என் மகன் சேகரனும், மகள் பூர்ணிமாவும். உங்கள் அப்பா அம்மா நினைவாக அவர்கள் பெயரை என் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன். நானும் அகிலாவும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.”

 “அபி நீ இப்ப என்னவாக வேலை செய்கிறாய்”? அகஸ்தியன் மகனைக் கேட்டான்.

 “நான் ஒரு ஹார்ட் சேர்ஜன் அப்பா. “அவனிடம் இருந்து பதில் வந்தது

 “உங்கள் அனுமதி பெறாமல் உங்களை வரவெற்க நாங்கள் வந்ததுக்கு மன்னிக்கவும்” வதசலா சொன்னாள்.

 ஐயோ கடவுளே நாடி சாஸ்திரக்காரன் சொன்னது போல நடந்துவிட்டதா? காலம் அவ்வளவு கெதியிலை கடந்து விட்டது” தன்னையும அறியாமலே புலம்பினான் அகஸ்தியன்.

 அவன் புலம்பல் குரல் கேட்டு நானும் மனைவியும் அவன் அறைக்குள் போனோம்.

 “தம்பி அகஸ்தியா ஏன் புலம்புகிறாய்? எதாவது கெட்ட கனவு கண்டாயா”?, நான் அவனின் உடலை உசுப்பியபடி கேட்டேன்.

 “அகஸ்தியா இப்டித்தான் வெகு நேரம் உன் வீட்டில் தூங்குவாயோ?. காலை பத்து மணியாகிவிட்டது. இதோ சூடான காப்பி கொண்டுவந்திருக்கிறன். குடித்துவிட்டு முதலிலை வத்சலாவுக்கு போன் செய். வத்சலா வைத்தியசாலையில் இருந்து உன்னைக் கேட்டு போன் செய்தவள். எப்போ நீ பிளைட்டில் பங்களுர் திரும்புகிறாய் என்று கேட்டாள்”, பூர்ணிமா மகனுக்கு செய்தி சொன்னாள்.

 “ என்ன அதஸ்தியா நான் தந்த கருந்துளை நூல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டாய் போலத் தெரிகிறது. கருந்துளை பற்றி கனவு ஏதும் கண்டாயா” நான் சிரித்தபடி அவனைக் கேட்டேன்.

 அவன் திரு திரு என்று முழித்தான். நடப்பது யாவும் அவனுக்கு குழப்பமாயிருக்கிறது என்பதை அவன் முகம்; காட்டிற்று, அவனுக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் இரவு பல மணி நேரம் வாசித்த என் “கருந்துளையும் நேர பாதிப்பும்”  என்ற நூல் அவனைப்பார்த்து கண்சிமிட்டியது.

                                                                                ******

  (யாவும் கற்பனையே)

 

விண்கல் (Meteorite)

 

 பௌதிகத் துறை பேராசிரியர் ராஜன்  அஸ்டிரோ பிசிக்சில் (Astro Physics) எனப்படும் வான்யியற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். விண்கல் தோற்றமும் அதனால் பூமியின் பாதிப்பு பற்றி அவர் ஆராச்சி செய்து முனைவர் பட்டம்  பெற்றவர்.  வானியற் சம்பந்தப்பட்ட பல கட்டுரைகளை விஞ்ஞானி என்ற சஞ்சிகைக்கு எழுதிவருபவர். வாண் சாஸ்திர வல்லுனர்கள் பலரின் வரலாறு பற்றி அறிந்து வைத்திருந்தார். அவ்வல்லுனர்களில் அவரை முக்கியமாக கவர்ந்தவர்கள் அல்பேர்ட் அயின்ஸ்டைனும், ஸ்டீபன் ஹோகின்சுமேயாகும். உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனின் நினைவாகத் தன் மகனுக்கு அல்பேரட் எனப் பெயர் சூட்டினார் ராஜன்.

அல்பேர்ட்  தன்னைப்போலவே வான்யியற்பியலில் படித்து பட்டம் பெற்று  உலகம் போற்றும் அல்பேர்ட் அயின்ஸ்டைனைப் போன்று விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதே அவர் ஆசை. மகனை ஊக்குவிப்பதற்காக 500 டொலர்கள் கொடுத்து வானில் நடக்கும் காட்சிகளைத் தெளிவாகப் பார்கக்;கூடிய திறமை வாய்ந்த ஓரியன்  டெலெஸ்கோப் ஒன்றை பிறந்த நாள் பரிசாக மகனுக்கு புரொபசர் ராஜன் வாங்கிக் கொடுத்தார். அல்பேர்ட் வான்யியற்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளை வாசிப்பதில் அதிக ஆர்வம் காட்டிவந்தான். வானில் நடக்கும் விசித்திரங்களைப் பற்றி அறிவது அவனது பொழுது போக்கு. ஆத்தர் சி கிளார்க் (Arthur C Clerk)  , அசிமோவ்  (Asimov). ஏச் ஜி வெல்ஸ் (H G Wells) ;போன்ற எழுத்தாளர்கள் எழுதிய அறிவியல் நாவல்ளை வாசித்து தானும் அவர்களைப் போன்று அறிவியல் கதைகள் எழுதும் எழுத்தாளனாக வரவேண்டும் என்பது அவன் ஆவல்;.

 

தினமும் தனது ஓரியன் டெலஸ்கோப்பினூடாக வானத்தைப் பார்த்து ஆராச்சி செய்தபடியே அல்பேபர்ட் தினமும் இருப்பான். டெலஸ்கோப் இல்லாமல் நேரடியாகப் பார்க்க முடியாத பல கிரகங்களை அவனால் பார்க்கக்கூடியதாக இருந்தது,

ஓரியன் டெலஸ்கோப்பின் முக்கிய கண்ணாடியின் விட்டம் பெரிதாக இருப்பதால் வானில் காட்சிகள் தெளிவாகத் தெரிந்தன.

சூரிய குடும்பத்தில் பெரிய கிரகம் வியாழன். அதன் மேகப் பட்டைகளையும் கலியியோ கண்டுபிடித்த  நான்கு பெரிய சந்திரன்களையும் அல்பர்ட்டால் பார்க்கமுடிந்தது. பூமியை விட விட்டத்தில் பதினொரு  மடங்கு பெரிதான வியாழன் கிரகத்தில் பெரிய விண்கற்கள் அடிக்கடி  தாக்குதலை கண்டு அதிசயத்தான். 67 சந்திரன்களை கொண்ட வியாழனானது எல்லா சந்திரன்களையும் தன் டெலஸ்கோப்பில் அல்பர்ட்டால் பார்க்க முடியவில்லை என்பது கவலை.

சனி கிரகத்த சுற்றி உள்ள  வளையங்கள் அத்குப் பெருமையைத் தேடி கொடுத்தது. வியாழனுக்கு அடுத்தாக அதிக எண்ணிக்கை உள்ள சந்திரன்களை இக்கிரகம் கொண்டது. பூமியைப் போல் எல்லாக் கிரகங்களுக்கும் சந்திரன்கள் உண்டு என்பதையும் வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு 14 சந்திரன்களும்? யுரேனசுக்கு 27 சந்திரன்களும் இருப்பதை அறிந்தாலும் அச்சந்திரன்களை தன் டெலஸ்கோப்பினூடாகப் பார்க்கக் கூடியதாக இல்லை என்பது அவனுக்குப் பெரும் ஏமாற்றம்,

 வின்கற்கள் கிரகங்களை தாக்குவது கண்கொளாக் காட்சியாக இருந்தது. தன் தந்தைiயிடம் தான் டெலஸ்கோப்பினூடாக கண்ட காட்சியின் சந்தேகத்தைக் கேட்டான்.

 “அப்பா, விண்ற்கள் எரி மழை போல் பொலிகின்றனவே அது ஏன். அவை எங்கிருந்து தோன்றியுள்ளன?”.

 “வளிமண்டலத்தினூடாக வேகத்துடன் வின்கற்கல் பயணம் செய்வதினால் உராய்வு ஏற்பட்டு, வெப்ப நிலை அதிகரித்து, எரியத் தொடங்குகிறது அதனால் விண்கல்லை எரிகல் என்றும் அழைப்பாரகள். கிரகங்கள் எப்படி பெரும் வெடிப்பின் போது தோன்றினவோ அதே போன்று தோன்றியவைதான் அவை. அதனுடைய பருமனை வைத்து பெரிதாயின் விண்கோள் (Asteroids) எனவும் . சிறுதாயின்  விண்கல்   (Metyeriods); எனப் பெயரிட்டுள்ளார்கள். இதில் விண்கற்கள் சிறுது என்பதால் பூமியை வந்து தாக்கும் சந்தர்ப்பங்கள் அதிகம் உண்டு.”

 “தாக்கினால் என்ன நடக்கும் அப்பா”?

 “பலர் விண்கல்   தாக்குதலினால் பூமி அழிந்துவிடும் என்;று பீதியை அடிக்கடி உருவாக்குறார்கள். விண்கல்   பூமியை வந்து தாக்கும் வாயப்பு கல்லின் பருமன் கூடும் போது, குறைந்து கொண்டு போகும்.. உதாரணத்துக்கு 4 மீட்டர் விட்டம் உள்ள விண்கற்கள்  அடிக்கடி பூமியைத் தாக்கக் கூடியவை. 100 கிமீ விட்டம் உள்ள விண்கல்   சுமார்; 5000 ஆண்டுகளுக்கு ஒரு தடவைதான் பூமியைத் தாக்கும். 1000 கி.மீ விட்டம் உள்ள விண்கல்   கிட்டத்தட்ட 450இ000 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தான் தாக்கும் என ஆராச்சியாளர்கள் கணித்துள்ளார்கள்.

 “பெரிய விண்கல்   வந்து பூமியைத் தாக்கினால் பாதிப்பு பெரிதாக இருக்குமே அப்பா”?

 “ஆமாம். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டயனோசோர்ஸ் என்ற மாபெரும் உயரினம் திடீரேன ஒரு நாள் மறைவதற்கு விண்கல்   தாக்குதலே காரணம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அதுமட்டுமல்ல பல நாடுகளில் திடீரேன  தோன்றிய பள்ளங்கள் இப்பள்ளங்களில் 300 கி.மீ நீளமுள்ள மிகப்பெரிய பள்ளம் தென்ஆபிக்காவின் ப்ரீ ஸ்டேட் (Free State) மாகாணத்தில் உள்ளது. இப் பள்ளம் விண்கல்   தாக்குதலினால ஏற்பட்டது. இது போன்றே உலகில் இரண்டாவது பெரிய பள்ளம,; கனடாவில் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள சட்பெரி நகரத்தில் விண்கல்   தாக்குதலால் இரண்டு பில்லியன் வருடங்களுக்கு முன் உருவாகியது . 1908 இல் சைபீரிய பாலைவனத்தில் தோன்றிய பள்ளம் சுமார் 10 கிமீ விட்டம் உள்ள விண்கல்  லின் தாக்குதலினால் தோன்றியிருக்கலாம் என்பது ஆராச்சியாளர்கள் கணிப்பு”

 

“ அப்போ அப்பா பூமியை தாக்கும் விண்கல்   மக்கள் வாழும் நிலப்பகுதியைத் தாக்காமல் கடலில் வந்து விழுந்தால் என்ன நடக்கும்”?

 “2004ஆம் ஆண்டு டிசம்பரில் கடலுக்குக் கீழ் நடந்த பூகம்பத்தால் தோன்றிய சுனாமி போல் பல அடிகள் உரமான பேரைலகள் தோன்றி கரையொரப் பகுதிகளையும், தீவுகளையும் அழித்துவிடும். கடலுக்கடியில் ஏற்படும் பூகம்பம் மட்டும் தான் சுனாமியை ஏற்படுத்தும் என்பதில்லை. ஜாவா, சுமத்திர தீவுகளுக்கு இடையேயுள்ள கரகோட்டா என்ற எரிமலை 1883 ஆம் ஆண்டில் வெடித்ததாலும், பங்களா தேசத்தையும்  தனுஷ்கோடியை தாக்கிய புயலாலும் பேரலைகள் தோன்றலாம் அல்பர்ட்”.

 “கேட்கப் பயங்கரமாக இருக்கிறது அப்பா”

 “ஆங்கிலத்தில் டீப் இம்பக்ட (Deep Impact) என்ற ஆழமான தாக்கம் என்ற பெயரில் பிரபல அறிவியற் படங்களை தயாரித்த ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் (Stephen Spillberg) படத்தின் வீடியோ கஸட் எனது லைப்ரரியில் இருக்கிறது. நீ அதை அவசியம்; போட்டுப் பார் அப்போது விண்கல்   தாக்குதலால் ஏற்படும் அழிவைப் பார்ப்பாய்.

 “நன்றி அப்பா. அவசியம் பார்க்கிறேன்”

. அல்பர்ட் தந்தையோடு கதைத்த பின் விண்கல்   பூமியைத் தாக்கினால் என்ன விளைவு பற்றிய ஸ்டீபன் ஸ்பில்பேர்க்கின் டீப் இம்பக்ட் படத்தின் வீடியோ கஸட்டை எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் சென்றான்

                                                                                 *******

டீப் இம்பெக்ட் படத்தை பார்த்து முடித்துவிட்டு பல வித சிந்தனைகளோடு தன் கட்டிலுக்கு அல்பேர்ட் நித்திரைக்குப் போன போது அவன் மனதில் அடிக்கடி தோன்றியது டெலஸ்கோப்பில் தான் அவதானித்த ஒரு பெரும் விண்கல்லின் தோற்றம். அக்கல் பூமியை நோக்கி வருவதாக அவனது கணிப்புக்கு பட்டது. முதலில் அது ஒரு வால்நடசத்திரமாக இருக்குமோ என நினைத்த அவன,; பின் அதன் தோறத்தையும் செல்லும் பாதையையும் கணித்து நிட்சமாக அது பெரிய விண்கல்லாகத் தான் இருக்கும் என்பது அவன் முடிவு. அதற்குப் தன் கற்பனையில் “அல்பா: என பெயர் வைத்தான். டீப் இம்பெக்ட் படத்தின் கதைப் படி முதலில் விண்கல்லை தனது டெலஸ்கோப்பில் கண்டது ஒரு வாண்சாஸ்திரி.   நான் கண்ட அல்பா விண்கல்லைப் பற்றி அப்பாவிடம் நான் சொல்லவில்லையே. சொல்லி யிருந்தால் நான் பார்த்த விண்கல் பூமியைத் தாக்கும் சாத்தியக்கூறு இருக்குதா என்று கணித்துச் சொல்லியருப்பார். அமெரிக்காவில் நிட்சயம் நாசா (NASA)  விஞ்ஞானிகள் அந்த விண்கல்லை அவதானித்திருப்பார்கள். கட்டாயம் நாசா தக்க நடவடிக்கை எடுக்கும்.  என்ற நம்பிக்கையோடு அல்பேர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான். அவன் கனவில் டீப் இம்பக்ட் படத்தில் வந்த காட்சிகள் அடிக்கடி வந்து போயிற்று. அடேயப்பா என்ன கற்பனை திறமைவாயந்த டைரக்டர் ஸ்பில்பேரக்;. இடி (ET) என்ற வெளிக்கிரகவாசி பற்றிய பிரபல்யமான படத்தை உருவாக்கியவர் ஆயிற்றே. அது போல் அவரது ஜெரசிக் பார்க் டயனோசோரஸ் பற்றிய படம். எவ்வளவு தத்ரூபமான படம்.; அப்பா சொன்ன மாதிரி அந்த ஜவராசிகள் திடிரென அழிந்ததற்கு விண்கல்   தாக்குதலா காரணம்? நம்பமுடியவில்லையே. இதுபோன்ற கனவுகளைக் கண்டவாரே அல்பேர்ட் தூக்கத்தில் ஆழ்ந்தான்.

                                                            *******

காலை ஒன்பது மணியாகியும் அல்பேர்ட் தூக்கத்தைவிட்டு எழும்பவில்லை.

“அல்பேர்ட் கெதியலை எழும்பிப் போய் டிவி நியூசைப் பார்” என்று மகனைத் தட்டி எழுப்பினார் பேராசிரியர் ராஜன்.

“என்னப்பா அப்படி முக்கியமான நியூஸ் போகுது”?

“நேற்று நாங்கள் இருவரும் பேசிய விசயத்தோடு சம்பந்தமுள்ள நியூஸ்தான்” பேராசிரியர் பதில் சொன்னார்.

தன் கட்டிலுக்கு முன்னால் இருந்த டிவையை ரிமோட் கொண்டுரோல் மூலம் இயக்கி நியூஸ் சனலை அல்பேர்ட் பார்த்தான்.

“200 மீ விட்டமுள்ள விண்கல்   பூமியை ஜ. எம்.டி (GMT) நேரம் இரண்டு மணிக்கு வட துருவத்தை தாக்கியுள்ளது. நல்ல வேலை தாக்கிய பகுதியில் பனி மலைகளைத் தவிர மக்கள் குடியிருப்புக்கள் இல்லை. இந்த தாக்குதல் பூமியின் வடதுருவத்தில் இருந்து கிரீன்லாண்ட் தீவு இருக்கும் திசையில் 200 கீ மீ தூரத்தில் இடம்பெற்றுள்ளது. விண்கல்   தாக்குதலின் போது வெப்பசக்தியால் பல பனி மலைகள் பாதிக்கப்பட்டு உருகத் தொட்ங்கிவிட்டன. இதனால் கடல் மட்டம் உயரலாம் என நாசா கருதுகிறது. ஆகவே வடதுருவத்துக்கு அருகே உள்ள நாடுகளான கனடா, கிரீன்லாண்ட். ருஷ்யா, நோர்வே ஆகிய நாடுகளின்; வடக்கு கரையோரப் பகுதிகள் சுனாமி தாக்குதலுக்கு உற்படலாம்” எனச் செய்தி வாசித்தவர் சொன்னார்.

“அப்பா நான் டெலஸ்கோப்பில் கண்ட அல்பா விண்கல்   பூமியை நான் நினைத்த மாதிரி தாக்கிவிட்டது. உங்களுக் நான் கண்ட அல்பாவைப் பற்றி சொல்லாதாதற்கு மன்னிக்கவும்.  கடவுள் புண்ணியத்தில் அது தாக்கிய பகுதி ஆர்டிக் பகுதியான வட துருவம்”, என்றான் அல்பேர்ட்.

 

                                                                                *******

(யாவும் கற்பனையே)                  

 

நன்கொடை (Donation)

காலிங்கத்துக்கு யாழ்ப்பாணம் கச்சேரியில் இருந்து மட்டகளப்பு கச்சேரிக்கு மாறுதல் கடிதம் வந்தபோது அவனுக்கு மனத்தில் சந்தோஷம் இல்லை. வீட்டிலும் அதை வரவேற்கமாட்டார்கள் என்று அவனுக்குத் தெரியும். யாழ்ப்பாணத்தில், நல்லூர் எம் பியின் உதவியோடு ஆறு வருஷங்கள் யாழ்ப்பாணத்தில்; வேலை செய்து விட்டான்.  அரசாங்க ஊழியர் சங்க விதிகளின்படி நான்கு வருடங்களுக்கு மேல் சொந்த ஊரில் வேலை செய்வதை அவனது சங்கம் வரவேற்பதில்லை. மற்றவர்களுக்கும் சொந்த ஊரில் வேலை செய்ய வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பது அவன் இணைந்திருந்த தொழிற் சங்கத்தின் நியதி.             

 

மகாலிங்கத்தோடு வேலை செய்பவர்கள மகாலிங்கத்தை மகான் என்றே அழைப்பார்கள். ஆனால் அவனுடைய தாயோ அவனை “மகன்” எனறே அழைப்பாள். ஏ லெவல் படித்து, பல்கலைகழகம் புக முடியாத நிலை மகாவிங்கத்துக்கு,  ஜெனரல் கிளரிக்கல் சேர்வீஸ் எனப்படும்; பொது அரசாங்க லிகிதர் சேவையில் 1980 இல் லிகிதராகச் சேர்நதான். மேலும் தொடர்ந்து படிக்க, வீட்டு நிலமை அவனுக்கு இடம் கொடுக்கவில்லை. வரிசையில் திருமணத்துக்காக காத்திருக்கும் அவனது இரு சகோதரிகளான ராசாத்தியும், மலருமே காரணம்.

 

யாழ்ப்பாணத்தில் பல குடும்பங்களில், பொறுப்பு என்று வந்துவிட்டால் வீட்டுக்குத் தலை மகன் அதை பாரம் எடுப்பது வழக்கம். பெற்றோரும் அதை எதிர்பார்ப்பார்கள். ஆதனால் மகாலிங்கம் திருமணத்தின் போது சீதனத்தோடு நன்கொடை என்ற டொனேஷன வாங்கி அதை மகள்களுக்கு கொடுப்பதை பெற்றோர் எதிரபார்த்தை குறை சொல்லமுடியாது. 

 

 

மகாலிங்கத்தின் தந்தை சினத்தம்பி ஒரு தமிழ்ப் புலவர். அவரை தம்பி புலவர் என்றே  பெருமையாக ஊரில் அழைப்பார்கள். நாமும் இக்கதையில் அவ்வாரே அவரை அழைப்போம்;. துமிழில் அழகாக உச்சரித்து பேசவும். இலக்கணத்தமிழில் எழுதவும் வல்லவர். அதனால் அரசியல்வாதிகள் அவரின் உதவியை  அரசியல் பேச்சுகள் எழுதுவதற்கு நாடுவது உண்டு. பாராட்டி கவிதைகள் எழுதுவதிலும் வல்லவர். அவருடைய தந்தையாரான பெரியதம்பி புலவரும் தமிழில் பாண்டித்தியம் பெற்றவர். தந்தை எவ்வழியோ அவ்வழியே மகனும். கோப்பாய்; ஊரில்  உள்ள கல்லூரி ஒன்றில் தம்பி புலவர் தமிழ் ஆசிரியராக இருந்தார்.

 

தம்பிப்புலவர் குடும்பம் பழமைவாதிகள். புலவரின் மனைவி பவளமும் அதே கல்லூரியில் ஒரு தமிழ் ஆசிரியை. படிதாண்டா பத்தினி. எதையும் கணவனைக் கேட்டுத் தான் நடப்பாள்.; கணவன் சொல்லே அவளுக்கு வேத வாக்கு. இருவருட இடைவெளியில், மூன்று பிள்ளைகளையும் பெற்றெடுத்தவர் புலவர். பொருளாதார வசதியின்மையால் மேலும் தனது உற்பத்தித் திறமையை ஊருக்கு காட்ட அவருக்க விருப்பம் இருந்;தும் அவரால் முடியவில்லை. மூன்றே பொதும் என்று தனது தயாரிப்பை நிறுத்திவிட்டார்.

 

வீட்டுப் பரிபாலனம் தம்பி புலவர் கையில் இருந்தது.; முக்கியமாக வரவு செலவு கணக்கு பார்த்து செலவு செய்தார் புலவர.. மகாலிஙகம,;; மாதாதச் சம்பளம் கிடைத்தவுடன் அப்படியே சுளையாக கொண்டு வந்து தகப்பன் கையில், அரசாங்கம் கொடுக்கும் சம்பள விபர ரசீதோடு கொடுததாக வேண்டும். அதன் பின்னரே மகனின் சொந்தச்; செலவுக்கு தம்பி புலவர் பணம் கொடுப்பார். இது அவரின் மகனுக்கு ம்டடுமல்ல அசிரியர்களாக இருக்கும் பவளத்துக்கும்,  மூத்த மகள் இராசாத்திக்கும், ஸ்டெனோகிராபராக நீதி மன்றத்தில் வேலை செய்யும் கடைக்குட்டி மலருக்கும்; பொருந்தும். குடும்பத்தில் உள்ள நான்கு பேர்; உழைக்கும் சம்பளத்தில் ஒரு பகுதி சீட்டாக மிச்சம் பிடிப்பதும், அதன் கணக்கை வைத்திருப்பதும் தம்பி புலவர் பொறுப்பு.

 

தம்பி புலவர் சரியான சிக்கனக்காரர் என்று ஊர் சொன்னாலும்;  அதைப்பற்றி அவர் கவலைப் படுவதில்லை. காரணம் கடன் வாங்காமல தன் மகள் இருவரையும் தான் ரிட்டையராக முன்பே கரை சேர்க்க வேண்டும் என்பதே அவரின் முழு நோக்கம்.

 

மனைவி பவளத்தின் பரம்பரைச் சொத்தான ஆறு பரப்பு காணியோடு சேர்ந்த கோப்பாயில் இருநத மூன்று அறை கல் வீடு தான் அக்கும்பத்தின் குடியிருப்பு. அந்த வீட்டை மலருக்கும் இராசாத்திக்கும் பங்குவீடாகவும் தனக்;கும் பவளத்துக்கும் சீவிய  உருத்து வைத்து எழுவது தான் புலவரது திட்டம். அவர்கள் இருந்த வீடோ, தன்னை பாவிப்பவர்கள் கவனிக்க மாட்டார்களா என்று காட்டும் சுவர்களோடு இடிந்த நிலையில் இருந்தது, சுவர்களுக்கு வெள்ளையடித்து; பல வருடங்களாயிற்று. வரும் வருமானத்தை சிக்கனமாக மிச்சம் படித்து சேமித்து வைத்தாhர் புலவர் தன் இரு மகள்மாருக்கும் சீதனமாக கொடுக்க. அதோடு மட்டுமல்ல மகனின் திருமணத்தின் பொது சீதனத்தோடு ஒரு பெரிய தொகையை நன்கொடையாக பெறவேண்டும் என்பதும் அவர் திட்டம். தன் சேமிப்போடு அந்த நன்கொடையையும் சேர்த்து சீதனமாய் மகள் இருவருக்கும்; கொடுது;து நல்ல இடத்திலை, உயர் உத்தியோகத்திலை உள்ள மாப்பிளகைளை  திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பதே தம்பி புலவரின் யோசனை.  தன் இரு மகள்மாரின் திருமணத்துக்கு, மகன் மகாலிங்கத்தையே முழுக்க நம்பி இருந்தார் தம்பி புலவர்.

 

அவர்; இரு திட்டங்களை மனதில் வைத்திருந்தார். ஒன்று இரண்டு இலட்சம் ரூபாய்களை மகனின் திருமணத்தில் நன்கொடையாக பெண் வீட்டாரிடம் ; இருந்து பெற்று, அதை ஒரு இலட்சம் பணமாக பிரித்து, தலா இரு பெண்களுக்கும் தாங்கள் இருக்கும் வீட்டை பங்குவீடாக சீவிய உருத்து வைத்து சீதனமாக கொடுப்பது. இரண்டாவது திட்டம் மகனுக்ம் முத்தவள் இராசாத்திக்கு; மகாலிங்கத்துக்கு வரும் பெண்ணின் சகோதரனோடு மாற்றுத் திருமணம் செய்து வைப்பது. ஆனால் இரண்டாவது திட்டத்தை அவர் அவ்வளவுக்கு விரும்பவில்லை. இந்த மாற்றுத் திருமணத்தால் பிரிந்த சில குடும்பங்களைப் பற்றி அவர் அறிந்திருந்தார். அதோடு நன்கொடை பெற்று மலருக்கு திருமணம் செய்ய முடியாவிட்டால் சீவிய உருத்து வைக்காமல் முழு வீட்டையும் மலருக்கு கொடுக்க வேண்டி வரும். அப்படி நடந்தால் தானும், மனைவி பவளமும் இருக்க வீடில்லாமல் போக வேண்டிய நிலை ஏற்படும். அதனால் முதல் நன்கொடைத் திட்டத்தையே நம்பி இருந்தார் தம்பி; புலவர். அவர் மனைவி பவளமும் அவர் சொன்னதையே  மறு பேச்சில்லாமல் ஆமோதித்தாள். இராசாத்தியும், மலரும் தங்களுக்க எந்த வழியிலும் திருமணமானால் சரி என்று இருந்தனர்.

                   

பவளத்தின் அன்பு மகன் மகாலிங்கம்.  அவனுக்கும் தாய் மேல் சொல்லமுடியாத அளவுக்குப் பற்று. தன் ஓபீஸ் பிரச்சனைகளை தாயோடு அடிக்கடி பகிர்ந்து கொள்வான். தந்தையோடு பேசுவது குறைவு.  அவரின் கட்டுப்பாடு அவனுக்குப் பிடிப்பதில்லை.

                                                                               

                                                       *******

 

கையில், மட்டக்களப்புக்கு போக, மாறுதல் கடிதத்தோடு வீட்டுக்கு மகாலிங்கம் வந்த போது பவளம் கைவேலையாய்; குசினிக்குள் இருந்தாள். இராசாத்தியும், மலரும் வேலையால் வீடு திரும்பவில்லை

 

“அம்மா நீ எங்கை இருக்கிறாய். கொஞ்சம் இங்க வாவன்” என்று சொன்னபடி அவன் எப்போதும் அமரும் கதிரையில் போய் அமர்ந்தான். தன கைப்பையை திறந்து, கடிதத்தை எடுத்து தாயுக்குச் செய்தியை சொல்ல தயாரானான்.

 

“நீ வேலையாலை வந்திட்டியா மகன்? கொஞ்ம் பொறு, இப்ப வாறன், பனியாரத்தோடையும்; கோப்பியோடையும்” என்று குசினியில் இருந்து பதில் அளித்தாள் பவளம்.

 

தன் அறைக்குள் பள்ளிக்கூட வேலை செய்து கொண்டிருந்த தம்பி புலவர,; மகனின் குரல் கேட்டு இலக்கணப்; புத்தகமும் கையுமாக ஹாலுக்குள் வந்து, அவர் வழமையாக அமரும்; சாய்மானக் கதிரையில் புத்தகம் வாசிப்பது போல் பாவனை செய்தபடி அமர்ந்தார்.

 

பவளம் புலவருக்கும்  மகனுக்கும் பனங்காய் பணியாரமும் கோப்பியும் தட்டில் கொண்டு வந்து கொடுதாள்;

 

“ அம்மா பனங்காய் பணியாரம் இராச்சத்திக்கும் மலருக்கும் வச்சிருக்;கிறியா’? மகாலிஙகம் தாயை கேட்டான்.

 

“ நீ அதைப் பற்றி யோசிக்காதே. அவர்களின் பங்கு வைத்திருக்கிறேன். உனக்கு எப்பவும் தங்கச்சி இருவரிலும் எவ்வளவுக்கு அக்கரை? அதுசரி மகன் என்ன இன்று அசதியாயிருக்கிறாய்”?, பவளம் மகனைக் கேட்டாள்;. அலுவலகத்தில் வேலை அதிகமா? கடந்த மூன்று நாட்களாக நீ அலுவலகத்திலை இருந்து தாமதமாக வரும்; காரணத்தை நான் கேட்க விரும்பவில்லை", பவளம் கரிசனையோடு சொன்னாள்.

 

தம்பி புலவர்,  மனைவி மூலம் கொடுத்த பணியாரத்தை சுவைத்து, கோப்யை அருந்தியபடி  மனைவிக்கும் மகனுக்கும்; இடையே நடைபெற்ற உரையாடலை அமைதியாகக் கேட்டுக் கொண்டிருந்தார்;

 

"ஓம் அம்மா, ஓவர் டைம் வேலை வரும்; போது , நான் வேலை செய்யும் வாய்ப்பை தவறவிடக் கூடாது. என் தேர்தல் அதிகாரி என்னிலை நல்ல விருப்பம் . அவர் என்னை ஒவ்வொரு நாளும் கூடுதல் மணி நேரம வேலை; செய்ய அனுமதித்திருக்கிறார். நான் இந்த சனிக்கிழமையும் அலுவலகத்திற்கு சென்று வேலை செய்ய முடியும்."

 

"மகன் நீ அதிகமாக வேலை செய்து உடம்பை  கஸ்டப்படுத்தாதே” பவளம் சொன்னாள்.

 

மகாhலிங்கதின் கையில் கடிதத்தைக் கண்ட புலவர் “ தம்பி என்ன கையிலை கடிதம்”? என்று கேட்டார்.

 

 "அடடா கதையிலை, உங்கள்; இருவருக்கும் ஒரு கெட்ட செய்தி சொல்ல மறந்திட்டன்";.

 

"கெட்ட செய்தியா? அது என்ன? அலுவலகத்தில் ஏதாவது பிரச்னையா? "

 

"இல்லை ஐயா. என்னை மட்டக்களப்பு கச்சேரிக்கு மாற்றி இருக்கினம். அந்த மாறுதலுக்கான கடிதம் தான் இது. "

 

"என்ன மாறுதலா? எப்ப இருந்து?" புலவர் கேட்டார்.

 

"அடுத்த மாதம் முதல் தேதியிலிருந்து. நான்கு வருஷங்களுக்கு மேலாக நான் யாழ்ப்பாணத்தில் வேலை செய்திட்டன். அதுதான் என்னை வேறு ஊருக்கு மாத்தி இருக்கனம.”;

 

"மாறுதலை ரத்து செய்ய எம்.பியோடை நான் பேச வேண்டுமா? அவரது மேடைப் பேச்சை அவர்கேட்டு நான் எழுதி வச்சிருக்கிறன். அவரைச் சந்திக்கும் போது உன் மாறுதலைப் பற்றிப் பேசுகிறன் "

 

"வேண்டாம் ஐயா. நான் மட்டக்ளப்புக்குப் போக மறுத்தால், அது என் பதவி உயர்வைப் பாதிக்கும். மேலும், நான் எழுது வினைஞர் சேவையாளர் சங்கத்தில் அங்கத்தினராக இருக்கிறேன். சங்க விதிகளுக்கு கட்டுப்பட்டு நடக்கவேண்டும். அதுவுமல்லாமல் மட்டக்களப்பு அரசாங்க அதிபரின் தனிப்பட்ட உதவியாளராக பணியாற்ற மாற்றப்படடிருக்கிறன்;. ஒரு பொறுப்பான பதவி” என்றான் மகாலிங்கம்

 

"அப்ப தம்பி எங்களை விட்டிட்டு வெகு தொலைவான இடத்துக்குப் போகப் போறியா? என்றார் பெருமூச்சோடு தம்பிப் புலவர்.

 

"ஐயா கவலைப்படவேண்டாம் ஒரு வருஷம,; அல்லது இரண்டு வருஷம் அங்கை வேலை செய்துவிட்டு  பிறகு நான் மியூச்சுவல் டிரான்ஸ்வர் எடுத்துக் கோணடு திரும்பவும் யாழ்ப்பாணம் கச்சேரிக்கு வரத் தெண்டிக்கிறன்"

 

"மகன் நீ; இங்கே  இல்லாமல் நாங்கள் என்ன செய்ய”? . உன் இரண்டு தங்கச்சிமாருக்குத் திருமணங்கள் ஏற்பாடு செய்ய நீ இருந்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்" பவளம் விசனப்படடு மகனைக் கேட்டாள்.

 

"ஐயா இருக்கிறார்தானே எல்லாததையும் கவனிக்க. அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். அவரட தான் வீட்டில் முடிவுகளை எடுப்பவர்".

 

"தம்பி நீ மட்டக்களப்பு போக வேண்டும் என்று சொன்ன போது நான் சரியாக கவலைப்படுகிறேன். உம்முடைய மாறுதல் கொழும்புக்கு என்றால் நான் கவலைப்பட்டிருக்க மாட்டன்", தம்பிப் புலவர் தன ஆதங்கததைத் கவலையோடு தெரிவித்தார்.

 

"ஐயா கவலை வேண்டாம் ? மட்டக்களப்பும் யாழப்பாணத்தைப் போல  ஓரு தமிழ் பகுதிதானே. மேலும் அரசாங்க அதிபரும்  ஒரு தமிழர். ஆனால் பயணம் தான் ஒரே ஒரு பிரச்சனை. யாழ்ப்பாணத்தில் இருநது ரயில்pல் போவதெண்டால் மாஹோவில ரயில் மாற வேண்டும். பல மணித்தியாலப் பயணம் "

 

"நான் ரயில் பயணம் குறித்து  பேசவரவில்லை. யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்புக்கு மாற்றப்பட்ட இளம் அரசாங்க ஊழியர்களுக்கு அங்கை திருமணம் என்ற பொறியில் சிக்குப்பட்டதைப் பற்றி பல கதைகள் கேள்விபட்டிருக்கிறேன். மட்டக்களப்புப் பெண்களுக்கு யாழ்ப்பாணத்துப்  பெடியன்கள் மேல ஒரு கண்ணாம். அதோடை, யாழ்ப்பாணத்துப் பெடியன்களை மயக்க விசேடமாக தயாரிக்கப்பட்ட ஒரு மந்தரித்த காத்தான்குடி பாயைப் பாவிப்பார்களாம்”, என்று சொல்லி மகனின் முகத்தை புலவர் பார்ததார்

 

"ஐயோ கடவுளே! ஐயா நீஙகள் சொல்வதெல்லாம் உண்மையிலi;ல. நானும் உது போன்ற கதைகள் கேள்விபட்டிருக்கிறேன். எனககு என் ஒபீசில் என்னோடு வேலை செய்யும் மட்டக்களப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பரை நன்கு தெரியும்;. அவர்  உதெல்லாம் கட்டுக்கதை என்றார்”.

 

"நான் மட்டும் சொல்லவில்லை.நம் சமூகத்தில் மக்கள்; பேசியதைத் தான் சொல்கிறேன்.”

 

“ ஐயா  உங்களுக்கு மட்டக்களப்பு மக்கள் பற்றி மிகவும் நல்ல கருத்து இல்லை என்று எனக்கு நன்றாகத் தெரியும். உங்களைப் போல் அந்த ஊரிலை நல்லாய் படித்த தமிழ் அறிஞர்கள் பலர் உண்டு. அவர்கள் எங்கள் தமிழ்மொழியை நேசிக்கிறவர்கள். அவர்களின் பழக்க வழக்கங்கள் யாழ்ப்பாணம் மக்களைப் போலவே உள்ளது.  நல்ல மனிதர்கள். அங்கு தமிழர்;கள்  முஸ்லீம்,  சிங்கள மக்களோடு இணைந்து வாழ்கிறார்கள்”, மகாலிங்கம் தகப்பனுக்க விளக்கம் கொடுத்தான்.

 

"ஆனால் எங்கள் கிராமத்தில் இருந்து யாராவது மட்டக்களப்பில் திருமணம் செய்தால் அவர்கயை; நாம் மதிப்பதில்லை. என் மாமா, புகையிலை  விறபனைத் தரகர். அவர் மட்டகளப்புவுக்கு வியாhபாரம் செய் போனபோது அவரின மட்டக்களப்பு வியாபார கூட்டாளியின்  மகளைக் கண்டு விரும்பி வீட்டிலை சொல்லாமல் கலியாணம் செயதவர்.; எனது மாமாவின் தந்தை  அவரோடு; இணைப்பைத் துண்டித்து, அவரை அவரது வீட்டில் நுழைய அனுமதிக்க வில்லை.  அது மட்டுமல்ல, என் பள்ளி தலைமை ஆசரியர்; பொன்னுசாமி மாஸ்டரின் மூத்த மகளுக்கு என்ன நடந்தது  என்று உனக்குத் தெரியும் தானே ? அவளும் மட்டக்களப்பு பல்கலைக் கழகத்துக்குப் படிக்க போன போது மட்டக்களப்பு பெடியன் ஒருவனை காதலித்து  திருமணம் செய்து கொண்டாள்;. அது போல உனக்கும் ஏதும் நடந்துவிடக்கூடாது தம்பி "

 

"அவள் ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளரை திருமணம் செய்தது எனக்குத் தெரியும் ஐயா. நான் அவரை ஒரு முறை சந்தித்தனான்;. மிகவும் நல்ல மனிதர். அவர் தமிழில் இரண்டு புத்தகங்கள் கூட எழுதியிருக்கிறார்;. அவர் அவளை விரும்பி திருமணம் செய்வதில் என்ன குற்றம்? நாஙகள ஒரு வட்டத்துக்குள் மட்டுமே  வாழாமல்; மற்ற பகுதிகளில் வாழும் மக்களோடு ஒருங்கிணைய வேண்டும் ஐயா”

 

"தம்பி, நாங்கள் அவர்களின் வேர்களைத் தெரியாமல் எப்படி ஒருங்கிணைங்க முடியும்? அவரது முதல் மகள் மட்டக்களப்பு திருமணம் செய்ததால், பொன்னுசாமியின் இரண்டாவது மகள் திருமணத்தில்; பல பிரச்சினைகள். இறுதியாக அவர் அவளுக்கு திருமணம் செய்து வைக்க ஒரு பெரிய வரதட்சணை கொடுக்கவேண்டி வந்தது. "

 

"ஐயா நாங்கள் வாழ்வதோ ஒரு சிறிய தீவு.  நீங்கள் அடிக்கடி தமிழ் ஈழம் பற்றி பேசுவீர்களே. வடக்கும், கிழக்கும் இணைய வேண்டும் என்பீர்களே. அப்ப ஏன் இந்தப் பாகுபாடு”?

 

“ மகன், எனக்கு உன்னிலை நல்ல நம்பிக்கை உண்டு. நீ எங்கடை  ஊருக்குள்ளை தான் முடிப்பாய் எண்டு”

                   

                                                            ********

 

மகாலிங்கம் மட்டக்களப்புக்கு மாறுதலாகிப் போய் கிட்டத்தட்ட ஒரு வருஷமானது. அந்தக் காலத்தில் இரு முறை மட்டுமே ஊருக்கு வந்து போனான். தாய் காரணம் கேட்டதுக்கு, வேலை அதிகம் என்று சாக்குப் போக்குச் சொல்லி சமாளித்து விடுவான். மகாலிங்கத்தின் பிரிவை வீட்டில் எல்லோரும் உணர்ந்தார்கள்;. . மாதாந்தம் தன் செலவு போக தன் சம்பளத்தில் ஒரு பகுதியைத் தவறாது தகப்பன் பெயருக்கு மணியோடர் எடுத்து அனப்பிவிடுவான். அதோடு சுருக்கமாக வீட்டில் எல்லோரையும் சுகம் விசாரித்தும,; தான் நலமாக இருப்பாதாகவும் குறிப்பிட்டு ஒரு பக்த்தில் கடிதம் எழுதுவான்.

 

அவனுடைய நண்பன் பாலகிருஷ்ணன் வீட்டில் தான் தற்காலிகமாக தங்கியிருப்பதாகவும், வேறு வீடு கிடத்தவுடன் பொய்விடுவதாகவும் ஒரு கடிதத்தில் எழுதியிருந்தான். கடையில் சாப்பிடாமல் பாலகிருஷ்ணனின் தாய் சமைத்த உணவை மகன் சாப்பிடுகிறான என்று கேள்விப்பட்டதும் பவளத்துக்கு மனதுக்குள் சந்தோஷம். பாலகிருஷ்ணன் லீவில் மட்டக்களப்புக்குப் போனபோது, பவளம்;; எலுமிச்சம் ஊறுகாயும், வடகமும், ; முறுக்கு தயார் செய் மகனுக்கு பாலா மூலம் அனுப்பினாள். பாலா வீட்டில் இரு மாதஙகள் தங்கியிருந்த பிறகு,  ஆறு தமிழ் அரச ஊழியர்களால் நடத்தப்படும் சம்மரி ஒன்றில் மகாலிங்கத்துக்கு தங்க இடம் கிடைத்தது. ஒரு சமையலகாரன் சம்மரியில் இருப்போருக்கு உணவு தயார் செய்யதான். ஆந்த செய்தி அறிந்த போது தம்பி புலவர குடும்பத்துக்குப் பெரும் நிம்மதி. பாலாவுக்கு சகோதரிகள் இல்லை என எனபதும் அவரகளுக்கு நிம்மதியை கொடுத்தது. தனது கடைசி கடிதத்தில், தீபாவளிக்கு ஒரு வார விடுமுறை நாட்கள் எடுத்துக்கோண்டு; வருவதாக  மகாலிங்கம் அவர்களுக்கு எழுதியிருந்தான்; ;. முழு குடும்பமும் அந்த கடிதத்தைப் படித்து சந்தோஷப்பட்டனர்.

 

தம்பி புலவர், கோண்டாவிலில் மகனுக்கு திருமணம் பேசி ஏற்பாடு செய்திருந்தார்.; அவர் கேட்ட  வரதட்சனை, வீடு  நன்கொடை போன்ற தேவைகளச் பெண்ணின் பெற்றோர் சந்திக்கத் தயாராக இருந்தனர்.  நன்கொiடாயக ரூபாய் ஒரு லட்சம் ஐம்பதாயயிரம்; கொடுக்க ஒப்பு கொண்டனர். பெண் யாழ்ப்பாணம் மருத்துவமனையில் நேர்சாக வேலை. நல்ல சாதி சனம். பெண்ணின் தகப்பன் அரசாங்கத்தில் சேவேயராக வேலை செய்து ரிட்டையரானவர். தாய் ஒரு ஆசிரியை. பெண்ணுக்கு மணமான ஒரு சகோதரன் மட்டுமே. ஆனால் பெண் கொஞ்சம் கறுப்பு. வாக்குக்  கண்பார்வை. உயரம் குறைவு. தம்பிப்புலவருக்குத் தனது வருங்கால  மருமகளின் அழகு பற்றி கவலை இல்லை. அவருக்கு நன்கொடை தான் முக்கியம். அவருக்கத் தான் கீறின கோட்டை மகன் தாண்ட மாட்டான் என்று தெரியும். வரதட்சணை அவரது எதிர்பார்ப்பை விட அதிகமாக இருந்ததும், மற்றும் நல்ல ஜாதகம் பொருத்தம் இருந்ததும் அவர மனதுக்கு திருப்தி. மகன் வந்து திருமணத்துக்கு தலையாட்ட வேண்டியது மட்டும் தான் . தன் தலையிடி முடிந்த மாதரி என்று மனைவிக்கு தம்பி புலவர்சொன்னார்.

 

"அம்மா  நாங்கள் அண்ணாவின் உணர்வுகளை மதிக்க வேண்டும். அவர் எங்களுக்கு நிறைய செய்திருக்கிறார். நாம் அவர் தன் மனைவி எப்படி இருக்கவேண்டும் என்ற விருப்புவதைநாம் ஏற்க வேண்டும", இராசாத்தி தாயுக்கு சொன்னாள்.

 

“மகள் அண்ணருடைய கலியாணத்திலை நீ தலையிடாதே அப்பா அதெல்லாம் முடிவெடுப்பார்”; என்றாள் பவளம்.

 

ழூழூழூழூழூ

தபால்காரன் சைக்கில் மணியை அடித்து ஒரு பதிவுக்கடிதத்ததை தம்பி புலவர் வீட்டில் கொடுத்துச் சென்றான்.

“ ஏதோ புதுமையாக அண்ணாவிடம் இருந்து பதிவுக்கடிதம் ஒன்று; வந்திருக்கிறது அம்மா” என்றாள் கடிதத்தை கையெழுத்திட்டு வாங்கிய மலர்.

“ தீபாவளி பண்டிகைக்கு அவன் வருவதுக்கு  இரண்டு வாரங்கள் மட்டுமே இருக்கிறது. அதுக்குள்ளை ஏன் கடிதம்; போடுகிறான். அதுவும் பதிவுத் தபாலில் கடிதம் போட்டிருக்கிறான்” என்றாள் யோசனையோடு பவளம்.

 

தம்;பிப் புலவர் கல்லூரியில்; இருந்து வீடு திரும்பியதும் கடிதத்தை அவரிடம் இராசாத்தி கொடுதாள்;. அவர் தன் சாய்மானக் கதிரையில் அமர்ந்து, கடிதத்தை கவரில் இருந்து  எடுத்து வாசிக்கத் தொடங்கினார்.

 

அன்புள்ள ஐயா, அம்மா , சகோதரிகளுக்கு மகாலிங்கம் எழுதுவது

 

நான் நலம் உங்கள்; நலமறிய ஆவல். பதிவு அஞ்சல் மூலம் என் கடிதத்தைப்; பெற உஙகளுக்கு ஆச்சரியமாக இருக்கலாம். என்னை பற்றி நீஙகள் கண்ட கனவை நான் ஏமாற்றயதுக்கு முதலில் வருத்தம் தெரிவிக்கிறேன். நான் இப்போது ஒரு திருமணமானவன் என்று சொன்னால் உங்கள் எல்லோருக்கும் அதிர்ச்சியாக இருக்கலாம். உங்கள் மருமகள் பெயர் ரஞ்சிதம். அவளது தந்தை மட்டக்களப்பில் ஒரு தொழில் அதிபர். அவள்  அவருக்கு ஒரே ஒரு மகள். ரஞ்சிதத்துக்கு மட்டக்களப்பு கச்சேரியில் வேலை. அவள் என் அரசாங்க அதிபரின் கிட்டத்து உறவு. அவளை நான் ஒரு மீட்டிங்கிளை முதலிலை சந்தித்த போது எனக்கு; அவளுடைய அணுகுமுறை மற்றும் நடத்தை பிடித்திருந்தது. அவள் ஒரு எளிமையான தோற்றம் உள்ளவள் அமைதியான பெண். தன் தந்தை பணக்காரன் என்ற பெருமை இல்லாதவள். வேலையிலும் கெட்டிக்காரி. சமூக சேவை பகுதியில் அதிதாரியாக இருக்கிறாள். சமூகத்தில் ;;கான பல தொண்டு; வேலைகளில் ஈடுபட்டவள்;. அவளுக்கு எனனை பிடித்துக்கொட்டது. எனக்கும் அவன்ட தான மனைவி என தீர்மானித்து, அரசாங்க அதிபரின் உதவியொடு அவளின் பெற்றோரை சந்தித்து எங்கள் காதலைப் பற்றிப் சொன்னேன். அவர்களும் எங்களின் திருமணத்துக்குச் சம்மதம் தெரிவித்தனர். எங்கள் திருமணம் மாமாங்கம் பிள்ளையார்; கோவிலில் போன மாதம் நடந்தது. இந்த விவகாரம் பற்றி என் முந்தைய கடிதங்களில் நான் எழுத விரும்பவில்லை. ரஞ்சிதத்தின் தகப்பன்; உங்களை நன்கு அறிந்தவர் என்று; சொன்னார். பல வருஷங்களுக்கு முன் , அவர் மட்டக்களப்புவுக்கு வியாபார விஷயமாக வந்த போது அவரின் பிஸ்னஸ்; பார்ட்டினர்; மகளை திருமணம் செய்துகொண்டாதாகச் சொன்னார். நீங்கள் ஒரு தடவை, மட்டக்களப்பில் திருமணம் செய்து கொண்ட உங்கள் மாமா முறையானவர் பற்றி என்று என்னிடம் சொல்லியது என் நினைவுக்க உடனே வந்தது. அவர் தான் ரஞ்சிதத்தின் தந்தை, என்றால் ஆச்சரியப ;படுவீர்கள்.; நான் அவரோடு என திருமணததைபற்றி பேசிய போது  எனது; இரு சகோதரிகள் திருமணம் தொடர்பான பிரச்சினை பற்றி சொன்னேன். அவர்; உடனே என்னுடைய தங்கைமார்களின் திருமணத்துக்கு உங்களுக்குத்  தேவையான பணத்தைத் தான் தருவதாக உறுதியளித்தார். அவர் தநத பணம் இரண்டு இலட்சம் ரூபாய்களுககு  ஒரு வங்கி டிராப்ட் எடுத்து  இக் கடிதத் தோடு அனுப்புகிறேன். மறுக்காமல் இப்பணத்தை ஏற்று, என்னையும் ரஞ்சிதத்தையும் நீங்களும், அம்மாவும,; தங்கச்சிமாரும் ஆசீரவதியுங்கள். எங்களை ஏற்றுக் கொண்டதாக பதில் போட்டால் தீபாவளிக்கு உங்கள் மருமகளையும் கூட்டிக்கொண்டு ஊருக்கு வருகிறேன்

இப்படிக்கு

எங்கள் மகன் மகாலிங்கமும் மருமகள் ரஞ்சிதமும்.

;

கடிதத்தை வாசித்ததும் தம்பி புலவரின் கைகள் நடுங்கத் தொடங்கியது. அவர் நெற்றியில் வியர்வைத் துளிகள் தெரிந்தன. கடித உறைக்குள் வங்கி டிராப்ட் இருக்கிறதா என்று அவருக்குப் பார்க்க விருப்பமில்லை. அவ்ளவுக்கு அவருக்கு மகன் மேல் ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, கடிதத்தையும் கவரையும் மேசையில் வைத்து அமைதி ஆனார்.

 

இராசாத்தி கடிதத்தை எடுத்து, உரத்து தாயும் மலரும் கேட்க வாசித்தாள்.

கவருக்குள் இரண்டு இலட்சம் ரூபாய்களுக்கு ஒரு வங்கிச் செக் தம்பி புலவர் பெயரில் இருந்தது.

 

“அப்பா நான் முந்தியே சொன்னேனே அண்ணாவின உணர்வுகளை நீங்கள் மதிக்கவேண்டும் என்று. உங்களுக்கு, எங்கள் திருமணத்துக்குத் தேவையான நன்கொடை பணத்தை அண்ணா அனுப்பிருக்கிறார். இனி அதை ஏற்பதா இல்லையா என்பது உங்கள் இஷ்டம்” என்றாள் மைதியாக இராசாத்தி

 

“ அக்கா சொல்வது சரியப்பா “ என்றாள் மலர். பவளம் வாய் திறக்வில்லை.

 

சற்று நேரம் கதிரையில் இருந்து தலையில் கைவைத்து யோசித்துவிட்டு கடிதத்தையும் பாங் டிராப்டையும் எடுத்துக்கோண்டு தன் அறைககுள் போனா தம்பி புலவர் சற்று நேரத்தில் திரும்பி வந்து, முத்த மகளைப் பார்த்து.

“ ராசாத்தி அண்ணாவுக்கு போன் செய்து சொல்லு தலைத் தீபாவளிக்கு அண்ணியோடை வரச்சொல்லி” என்ற சுருக்கமாக சொல்லிலிட்டு தன் அறைக்குள் திரும்பவும் தம்பி புலவர் போனார்.

ஏல்லோர் முகங்களிலும் புன்சிரிப்பு தெரிந்தது.

அவர் அறைக்குள் போன பின,; ராசாத்தி தாயை பார்த்து அம்மா பார்த்தியலா, பணம் பத்தும் செய்யும்; என்பது எவ்வளவுக்கு உண்மை என்பதை” என்றாள் சிரித்தபடி.

                                             ********

முடிவு

முடிவு

( அகில உலக சிறு கதை  போட்டியில்  3 ஆம் பரிசு பெற்ற கதை )

 

“ அம்மா நான் இண்டைக்கு ஸ்கூலிலை இருந்து சுணங்கித்தான் வருவன். என்னைத் தேடவேண்டாம்” தாயுக்குச் சாந்தன் சொன்னான்

 

“ஏன்டா ராசா அப்படி என்ன விசேசம் ஸ்கூலிலை நடக்குது? செல்லம்மா மகனை கேட்டாள்

 

“ இண்டைக்கு எண்டை ஏ லெவல் பௌதிக பாடத்தில் பரீட்சைக்கு வரக்கூடிய கேள்விகளையும்’ அதற்கான விடைகளையும் ஸ்டுடன்சுக்கு சொல்லப் போறார் எங்கடை பௌதிக மாஸ்டர் நாதன். போன வருஷம் அவர் சொன்ன கேள்விகள் பல வந்தது. நான் அந்த கிளாசை மிஸ் பண்ணக்கூடாது. பௌதிக படத்திலை நல்ல மார்க்கஸ் நான் எடுத்தால் நிட்சயம் மெடிக்கல் கல்லூரிக்கு போக எனக்கு இடம் கிடைக்கும். மற்றைய பாடங்களில் எனக்குப் பிரச்சனை இல்லை” சாந்தன் திடமாகச் சொன்னான்.

 

“ அப்ப சரி ராசா. உனக்கு பிடித்த புட்டும், கோழி இறச்சிக் கறியும், முட்டை பொரியலும் செய்து வைக்கிறன். போகக்கை டோர்ச் லைட்டையும் கொண்டு போ. உண்டை சைக்கில் டைனமோ வேலை செய்யுதில்லை என்று உன் அப்பா சொன்னார்”

 

“ சரி அம்மா” என்று அறைக்குள் போய் டோர்ச் லைட்டையும் நோட் புத்தகத்தையும் எடுத்துக் கொண்டு தன் சைக்கிளில் சாந்தன் எறிப்போனான்.

 

சாந்தன், மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் ஏக புத்திரன். மாணிக்கம் வைத்திய சாலையில் மருந்து தயாரிக்கும் கொம்பௌன்டர் வேலை செய்பவர். செல்லம்மா அரச வைத்தியசாலையில் நேர்ஸ். மருத்துவர் முதலில் மருந்துகளை பரிந்துரைக்கிறார், அதன் பின்னர் கொம்பௌன்டர் அவசியமான பொருட்கள், கலவைகள் ஆகியவற்றை எடுத்துக்கொள்கிறார், மேலும் முழுமையான டாக்டரின் ஆலோசனையின் பேரில் நோயாளிக்கு மருந்தை வழங்குகிறார்.

 

மாணிக்கம் தம்பதிகளுக்கு டாக்டர்களோடு நெருங்கிய தொடர்புண்டு. இருவரும் தங்கள் மகன் வெள்ளை யுனிபோர்ம் அணிந்து, கழுத்தில் ஸ்டேதஸ்கோப் தொங்க நடந்து வரும் காட்சியை எப்போது காணலாம் எனக் கனவு கண்டனர். அவர்களின் ஆசையைப் பூர்த்தி செய்யவோ என்னவோ சாந்தன் படிப்பில் கெட்டிக்காரனாக திகழ்ந்தான். தனது தாய் மாமன் தன் மகன் சுகுமார் ஒரு டாக்டர் என்பதை அடிக்கடி பெருமையாக பலருக்கு சொல்வதை சாந்தன் .கேட்டபோது தானும் படித்து டாக்டராக வேண்டும் என் முழு மூச்சாக படித்தான். தாயும் தகப்பனும் அவனுக்குத் தேவையான புத்தகங்களை செலவு பாராது வாங்கிக் கொடுத்தார்கள். சாந்தனும் தன் அறையில் மருத்துவம், படிப்பு.. இலக்கியம் சம்பந்தப்பட்ட நூல்களை அழகாக பிரோவில் அடுக்கி வைத்திருந்தான்.

 

சாந்தன் படித்த கல்லூரி பிரின்சிபால் சிவலிங்கம், மாணிக்கத்தை சந்தித்த போது “மாணிக்கம் எங்கடை கல்லூரில் இந்த முறை மருத்துவக் கல்லுரிக்கு தேர்வாகும் மாணவர்கள் மூவர் என்பதை ஆசிரியர்கள் எதிர்பாக்கினம். அந்த இருவரில் உம்முடைய மகன் சாந்தனும் ஒருவன். ஆனால் ஓன்று மட்டும் உமக்கு சொள்ளவிரும்புகிறன்;”

 

“என்ன சேர் அந்த விஷயம்” மாணிக்கம்

 

“ எவ்வளவு கடுமையாகப் படித்தாலும் மருத்துவக் கல்லூரிக்கு தேர்வாகுவது அவ்வளவு இலேசு இல்லை. போட்டி அதிகம். அதோடு புதிதாக அரசாங்கத்தினால் அமுல்படுத்தப் பட்ட தரப்படுத்தல் கொள்கையால் பல கெட்டிக்கார தமிழ் மாணவர்கள் பாதிக்கப் பட்டு இருக்கிறார்கள். அதை உமக்கு சொல்லி வைக்க விரும்புகிறேன்”

“ அதென்ன அரசாங்கத்தின் கொள்கை சேர்”

“ஒரு காலத்தில் இந்த தரப்படுத்தல் கொள்கை இல்லாதபோது படித்து மருதுவக்கல்லூரிக்கும், போறியியல் கல்லூரிக்கும் எடுபட்டவர்கள் பெரும்பாலோர். தமிழ் மாணவர்கள். அதோடு பரீட்சைகுப்பின் பௌதிகம். இரசாயனம், விலங்கியல். தாவரவியல் ஆகிய பாடங்களில் பரிசோதனை பரீட்சைகள் நடப்பதுண்டு. அது இப்பொது அரசால் நிறுத்தப்பட்டு விட்டது.. காரணம் நல்ல கல்லூரிகள் தமிழ் பகுதிகளில் மிஷனேரிகள் உருவாக்கியதே. கிராமத்துக் கல்லூரிகளில் லப் வசதி குறைவு. இதை காரணம் காட்டி பின் தங்கிய பகுதிகளில் வாழும் சிங்கள மாணவர்கள் டாக்டராரக வேண்டும் என்பதால் அப் பகுதிகளில் படிக்கும் சிங்கள மாணவர்களுக்காக சிங்கள அரசியல் வாதிகள் கொண்டுவந்தது தரப் படுத்தல் சட்டம். இதனால் குறைந்த புள்ளிகள் எடுத்த கிராமப்புற சிங்கள மாணவர்கள் டாக்டர் அகும் வாய்புண்டு”

 

“இது சிங்களம் மட்டும் சட்டத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசாங்க ஊழியர்களைப் போல் அல்லவா இருகிறது. நானும் அதனால் பாதிக்கபட்ட அரசாங்க ஊழியன் சேர்” மாணிக்கம் சொன்னான்

 

”சரியாகச் சொன்னீர் மாணிக்கம். அனால் சாந்தன் கெட்டிக்காரன். அவன் உமது கனவை நிறைவேற்றுவான் என்ற நம்பிக்கை எனக்குண்டு.. நீர் ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்” பிரின்சிபால் சொன்னார்.

 

*******

மனிதன் நினைப்பது ஓன்று கடவுள் தீர்மானிப்பது வேறோண்டு. பரீட்சை முடிவுகள் வந்தவுடன் சாந்தன் கல்லூரியில் முதல் மாணவனாக சித்திடைந்திருந்தான். ஆசரியர்கள் எல்லோரும் சாந்தன் கல்லூரியில் இருந்து நிட்சயம் மருத்துவக் கலூரிக்கு தேர்வாகுவான் என எதிர்பார்த்தனர். ஈழத்து போர் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. அரச விமனபடை ஈவிரக்கம் பாராது குண்டு வீச்சுத் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தது.

 

கல்லூரி பிரின்சிபால் சாந்தனை தன் ஒபீசுக்கு அழைத்தார். எதோ நல்ல செய்தி பிரின்சிபால் சொல்லப்போகிற’ என்ற ஆர்வத்தில் சாந்தன் . ஒபீசுக்கு போனபோது பிரின்சிபால் சொன்னது அவனுக்கு ஏமாற்றத்தை கொடுத்த்து

“சாந்தன் நீ மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்து எடுகப்படவில்லை”

“என்ன சேர் சொல்லுறியல்”

“எங்கடை கல்லூரியில் இருந்து ஒருவரும் மருத்துவக் கல்லூரிக்கு தேர்ந்து எடுக்கப்படவில்லை”

“ஏன் சேர்”

“இது அரசின் தரப்படுத்தல் கொள்கையின் பாதிப்பு. உம்மிலும்; பார்க்க குறைந்த மார்க்ஸ் எடுத்த சிங்கள கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிக்கு எடுபட்டிருக்கலாம். அடுத்த முறையும் முயற்கித்துப் பாரும்”

சாந்தன் அதை கேட்டு அதிர்ந்து போனான். ஓன்று பேசாமல் வீட்டுக்கு சென்ற போது விமான குண்டு வீச்சின் சத்தம் கேட்ட படி இருந்தது. சனங்கள் பதறி அடித்து ஓடுவதைக் கண்டான். அந்தக் கூட்டத்தோடு தன் தாயும் தகப்பனும் சேர்ந்து ஓடுவதைக் கண்டான்

“ அப்பா எங்கை இப்படி ஓடுகிறீர்கள்” சாந்தன் அவர்களைப் பார்த்துப் பதறியபடி கேட்டான்.

” சாந்தன் இங்கை நிற்காதே. குண்டு உன் தலையில் எபோது விழும் என்று தெரியாது. எங்கள் வீட்டில் விழுந்து வீடு எரிகிறது. இங்கை நிற்காதே வா பாதுகாப்பான ஊருக்குப் போவோம்” என்றான் மாணிக்கம்.

“ அப்பா என் புத்தகங்களுக்கு என்ன நடந்தது”?

“ அதை பற்றி யோசிக்க இப்ப நேரமில்லை. அவையும் வீட்டோடு எங்கள் மத்திய நூலகத்தைப் போல் தீயுக்கு இரையாகி இருக்கலாம். பேசிக் கொண்டிருக்காமல் வா எங்களோடை” என்றார் மாணிக்கம்.

 “ அப்ப நான் படித்து டாக்டர்ராக முடியதா”?

“: அதைப்பற்றி பிறகு யோசிப்பம்.” என்றாள் தாய்.

மாணிக்கம் குடும்பம் உயிரைக் காப்பாற்ற மக்களோடு மக்களாய் பாதுகாப்பு தேடி ஓடினார்கள்

“கொழும்பிலை சிங்களவனிடம் அடி வாங்கி கப்பலில் இங்கை சொந்த

ஊருக்கு வந்தோம் இங்கையும் எங்களுக்குப் பாதுகாப்பு இல்லையா?.. இந்த அடுக்குமுறையை நிருத்த வழியில்லையா. அடிமைகளாக நாம் வாழ வேண்டுமா அப்பா” விசனத்தோடு சாந்தன் கேட்டான். அவனது பேச்சில் விரக்தி தெரிந்தது

“ நீ இப்ப அதிகம் பேசாமல் வரப்போகிறாயா இல்லையா”? மகனை மாணிக்கம் அதட்டினார்.

********

பல மாதங்கள் சென்றன. வெளிநாடுகளின் அழுத்தம் காரணாக குண்டுவீச்சு நிறுத்தப்பட்டாலும் இராணுவத்தால் மனித உரிமை மீறல்கள் தொடர்ந்தன. சாந்தனோடு ஒரே வகுப்பில் படித்த இரு மாணவிகள் இராணுவத்தால் கடத்தப்பட்டனர். ஊர் மக்கள் பலர் வன்னி நோக்கி புலம் பெயர்ந்தனர்.

.ஒரு நாள் சாந்தனின் கல்லூரி பிரின்சிபால் மாணிகத்தை சந்தித்தார்.

“ என்ன மாணிக்கம் இப்ப ஏன் உமது கெட்டிக்கார மகன் சாந்தன் ஸ்கூளுக்கு வருவதில்லை”? பிரின்சிபால் மாணிக்கத்தை கேட்டார்

“ அதை ஏன் சேர் கேட்குறீர்கள். சாந்தன் மேலும் படிப்பை தொடர விருபவில்லை. சாந்தனும்அவனோடு படித்த மூன்று நண்பர்களும் இனி படித்து பிரயோசனம் இல்லை. எமது தமிழ் இனத்தைப் பாதுகாக்க வேண்டும். எமது உரிமைகளைப் பெற வேண்டும். பேனாவல்ல துவக்கு தான் தனக்கு என்று முடிவு செய்து தமிழர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் எங்களுக்குச் சொல்லாமல் தன்னோடு படித்த நண்பர்களோடு சேர்ந்து விட்டான் சேர். அவன் முடிவு சரியென நான் நினைக்கிறன்” என்றார் அமைதியாக.

 

*****