கதிர்காம யாத்திரை

 

என் பெற்றோரும் நானும் முருக பக்தர்கள்.  காரணம் யாழ்ப்பாண நகரில் உள்ள  நல்லூர் முருகன்  ஆலயத்திலிருந்து 800.மீ. தொலைவில் எங்கள் வீடு  அமைந்திருந்தது. நல்லூர் ஒரு காலத்தில் யாழ்ப்பாண ராஜஸ்தானியாக  இருந்தது  ஸ்ரீலங்காவில் பிரபல்யமான முருகன் கோயில்கள் பல உள்ளன. அவைற்றில் யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி கோயில், மாவிட்டபுரம் கோயில், செல்வச்சன்னதி கோவில் பருத்தித்துறை, தெற்கில் யால வன பூங்காவில் உள்ள கதிர்காமம். அந்த கதிர்காமக் கோவில் உள்ள  சூழலில் முருகன் வள்ளி காதல் இதிகாச கதை எழுதப்பட்டது.

வள்ளி ஒரு வேடவப்  பெண். வேடவர்களின் குல தெய்வம் முருகன். வேடவர்கள் வேட்டைக்காரர்கள்.  வேலினை வழிபாட்டுக்கு  பயன்படுத்துகின்றனர்..  கிழக்கில் உகந்த மலை, மண்டூர்  போன்று   சில முருகன் கோயில்களுக்கு  வேடவர்கள்  உரிமையாளர்கள்.

கதிர் என்ற வார்த்தை  நெல்லை குறிக்கிறது. சிங்களத்தில்  “கம” என்பது  தமிழ் மொழியில் கிராமம்   என்று அழைக்கப்படுகிறது. இரண்டும் இணைந்து  கதிர்காமம் ஆகிறது.

மேற்கு வங்காள இளவரசன் விஜயன் இலங்கை வந்து, இயக்க  ராணி  குவெனியை மணந்து பின் அவளோடு   சண்டையிட்டு பிரிந்து, பின்னர். மதுரையிலிருந்து ஒரு இளவரசியை மணந்தான். குவெனி மற்றும் அவளின்  குழந்தைகள் ஊவா மாகாணத்தில் காடுகளுக்குச் சென்றனர். இது. இலங்கை வேடர்  சமூகத்தின் பழம்பெரும் கதை வேடவப் பெண் வள்ளிக்கும் முருகனுக்கும் இடையேலான காதல் கதை கதிர்காமம் விவசாய கிராமத்தில் உருவாகியது. முருகனின் சகோதரன் கணேசன் (யானை) முருகனை  வள்ளிக்கு திருமணம் செய்து வைக்க உதவினார் . முருகன் வள்ளி காதல் கதையானது யால வன பூங்காவில் உள்ள கதிர்காமம் சூழலில், நெல் வயல்கள், வேட சமூகங்கள், யானைகள் ஆகியவற்றைப்  பின்னணியாக வைத்து எழுதப்பட்டது.  பூஜையின் போது  கதிர்காமக் கந்தனுக்கு  தீபம் காட்டி, அலாத்தி எடுத்து பிரசாதம் வழங்குவது எல்லாம்  வேடர் சமூகத்தில் உள்ள பெண்கள் . இது ஒரு பாரம்பரிய நடைமுறையாகும்.

யாத்திரை ஆரம்பம்

மரபுவழி வந்த பல நம்பிக்கைகள் எம்மிடேயே உண்டு. தீராத நோய்களுக்கு கடவுளுக்கு நேர்த்தி வைத்தால் நோய் தீரும் என்பது முன்பு இருந்த நம்பிக்கை. எனக்கு பிறந்ததில் இருந்து அடிக்கடி வயிற்று வலி  ஏற்படுவதுண்டு . வைதியர்கலாள்  நோயைத் தீர்க்க முடியவில்லை.. என் அப்பா ஒரு முருக பக்தர். கதிர்காமத்துகுப் போய் வந்த அவரின் நண்பர் சண்முகமும் ஒரு முருக பக்தர். இருவரும் பேசும் போது “கதிர்காமக் கந்தன்” முன்னால், தை அல்லது  ஆடி மாதத்தில் உன் மகன் வயிற்றில் மாவிளக்கு ஏற்றுவதாக நேர்த்தி  வை. உன் மகனின் வியாதிக்கு நிவாரணம் கிடைக்கும் என்று சொன்னார்  பச்சை அரிசி மாவு , சக்கரை .ஏலத் தூள், நெய் கலந்து செய்வதே இந்த மா விளக்கு என்று விளக்கு செய்யும்  முறையையும் சொல்லிக்  கொடுத்தார் . அது போதும் முருக பக்தரான என் அப்பாவுக்கு.

என் அப்பா அப்போது இலங்கையின் மேற்கு கரையில் உள்ள ஒர நகரான புத்தளத்தின்  மாவட்டச்  செயலகம் எனப்படும் கச்சேரியில் பிரதம லிகிதராக  இருந்தார். அம்மாவோடு கலந்து ஆலோசித்து குடும்பத்தோடு கதிர்காமத்துக்கு யாத்திரை போய் என் நேர்த்திக் கடனைத் தீர்க்க முடிவெடுத்தார். என் அம்மா  மாவிளக்கு  செய்வதற்கு தேவையான பொருட்களைத் தயார் செய்தாள்,  என்   பயணம்  1952 ஆம் ஆண்டு  ஜூலை மாதத்தில் நடந்தது. அப்போது நான் பத்தாம் வகுப்பு மாணவனாக இருந்தேன்.  அந்த நேர்த்தியே  எனது முதல் கதிர்காம யாத்திரைக்கு முக்கிய கரரணம்

 

 புத்தளத்தில் இருந்து அக்காலத்தில் சிலாபத்துக்கு  ரயில் சேவை இல்லாததால்,   என் பெற்றோரும் எனது மூத்த சகோதரியும், சகோதரரும் நானும் புத்தளத்தில் இருந்து  காலை ஐந்து மணியளவில் சிலாபம் செல்லும் பஸ்சில் பயணத்தை  ஆரம்பித்தோம்   சிலாபம் . புத்தளம் நகரிலிருந்து 50 கிமீ தொலைவில் உள்ள கரையோர நகரம் . அங்கிருந்து கொழும்புக்கு புகையிரத சேவை உள்ளது . எங்கக் குடும்பத்துக்கு வசதியாக கோர்னர் சீட்டுகள் கிடைத்தன   ரயலில் கூட்டம் அதிகம் இல்லை. பலர் சிலாபத்தில் இருந்து தினமும் கொழும்புக்கு வேலைக்குப்  போகிறவர்கள்.   ரயில் மாதம்பை, வென்னப்புவ நீர்கொழும்பு ராகம ஆகிய இடங்களைத் தாண்டி கொழும்பை போய்   சேர்ந்தது   புத்தளத்தில்  இருந்து கொழும்பை அடைய ஐந்து மணி நேரம் எடுத்தது.

ஒரு மணி நேர இடைவெளிக்குப் பின்னர், கொழும்பிலிருந்து மாத்தறைக்கு நாங்கள் ரயில் எடுத்தோம். அந்த காலத்தில் எக்ஸ்பிரஸ் ரயில் இல்லை.  இப்போது சமுத்திரதேவி  எக்ஸ்பிரஸ் ரயில் இயங்குசிறது

தெற்கே ரயில் பாதை  கடற்கரையோரமாக இருந்ததால் மாத்தறைக்குப் பயணத்தின் போது   சுகமான கடல் காற்று முகத்தில் பட,   ஓயாத கடல் அலைகளைப் பார்த்து, ரசித்து அனுபவித்தேன். அடிவானத்துக்கு அருகே சில பெரிய கப்பல்கள் சிறு உருவமாக பயணிப்பது தெரிந்தது  மீனவர்கள் கரை வலை இழுக்கும் காட்சியை நான் முன்பு கண்டதில்லை  . மாத்தறை  அடைய முன் பிரதான புகையிரத நிலையங்களான பாணம்துறை  , களுத்துறை, காலி ஆகிய ஊர்களைத் தாண்டி செல்ல வேண்டி இருந்தது . நாங்கள் நான்கு மணி நேர பயணம் செய்து கொழும்பிலிருந்து 160 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள மாத்தறையை  பிற் பகல் 2.30 மணியளவில் அடைந்தோம்   நாங்கள் எடுத்து சென்ற மதிய உணவை  உண்டோம்.

எங்கள் பயணத்தின் அடுத்த கட்டம்  திசமஹரகம நகரத்திற்கு நோக்கி பஸ்சில் செல்வது அந்த நகரம்  கதிர்காமத்தில் இருந்து  கிழக்கே 18 கிமீ தூரத்தில்

 உள்ளது. திசமஹரகம  கி மு 3 ஆம் நூற்றாண்டில் ருகுணு இராச்சியத்தின் தலைநகரமாக இருந்தது. துட்டககைமுனுவின் தந்தை காவன்திஸ்ஸாவால் ஆட்சி செய்யப்பட்டது. அம்மன்னன் அமைத்த பெரிய குளம் திஸ்ஸ வேவா ஏரி,. திஸ்ஸமஹாராமவின் அருகே ஐந்து முக்கிய ஏரிகள் உள்ளன. திஸ்ஸ வேவாவில்  ; யானைகள் மற்றும் மான்கள், காட்டு எருமைகள்   குடிநீர் அருந்துவதை  ரசித்து பார்த்தோம் பல்வேறு நாடுகளில் இருந்து மீன்பிடிக்க வந்த கொக்குகள்  பிலமிங்கோ  பறவைகளைப் பார்தது பரவசம் அடைந்தோம் அது  ஒரு அழகிய இயற்கை காட்சி. நாங்கள் அந்த பண்டைய நகரத்தில் இரண்டு மணி நேரம் கழித்தோம்.

கதிர்காமத்திற்கு பஸ் சேவை இல்லாததால் எனது தந்தை ஆறு பேர் பயணிக்கக் கூடிய ஒரு மாட்டு  வண்டியை ஏற்பாடு செய்தார். நாங்கள் எங்கள் பயணத்தை இரவு 7.00 மணியளவில் ஆரம்பித்தோம். கிரவல் சாலையில் வண்டி எங்களை சுமந்து இருட்டில் சென்றது. வண்டிலில் ஆடிக் கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில்  எங்கள் பயணம் இருந்தது  எம் முன்னே நான்கு வண்டிகள் சென்று கொண்டிருந்தன்.  எங்கும் இருட்டாக இருந்தது, ஆனால் நான் நடக்க வேண்டும் என்று அடம்பிடித்தேன்.

“. சரி இந்தா டோர்ச் லைட். என்னோடு வண்டிக்கு பின்னால் நட” என்றார்  அப்பா .

 கிராமப்புற பெண்மணிகள் சாலையோரத்தில்  சுவையான  அப்பம் சுட்டு விற்றார்கள் . நாங்கள் பால்  அப்பம் வாங்கி, வாழைப்பழம்,  கிதுல் வெல்லம், தேங்காய் சம்பலும் சேர்த்து  சாப்பிட்டோம். 18 கி. மீ நீளமுள்ள கிரவல் பாதை ஓரத்தில்  உள்ள சில வீடுகளில்  குப்பி விளக்குகள் மின் மினிப் பூச்சிகள் போல் எரிந்தன. யானைகளின் எக்காள சத்தம் என் காதில் விழுந்தது  அரோஹரா என்று சொல்வதன் மூலம் நாங்கள் தன்  சகோதரன் முருகனின் பக்தர்கள் என்பதால்  யானைகள் எங்களை தாக்க மாட்டாது என்று பக்தர்கள் நம்பினார்கள். யானை பக்தர்களை  ஒரு போதும் தாக்கியதை நான் கேள்விப் பட்டதில்லை.

“அப்பா  அரோஹரா என்பதன் அர்த்தம் என்ன”? என்று நான் கேட்டேன்

“அரோஹரா' அல்லது 'அரோகரா' என்பது 'அர ஹரோ ஹரா' என்ற சொற்களின் சுருக்கம்., இதற்கான பொருள்
'இறைவனே, துன்பங்களை நீக்கி எங்களுக்கு நற்கதியை அருள்வாயாக' என்பதாகும்
“எப்போ இருந்து இது  ஆரம்பித்தது அப்பா “?
“கிபி. ஏழாம் நூற்றாண்டில் முன்பு, சைவர்கள் இதனைச் சொல்வது வழக்கமாக இருந்தது. திருஞானசம்பந்தர் ஒருமுறை பல்லக்கில் அமர்ந்து பயணம் செய்யும்போது, அவரைச் சுமந்துகொண்டு வந்தவர்கள் 'ஏலே லோ ஏலே லோ' என்று களைப்பைக் குறைப்பதற்காக பாடிக்கொண்டு வந்தனர். இதைச் செவிமடுத்த திருஞானசம்பந்தர், பொருளற்ற ஒன்றைச் சொல்வதைவிட பொருளோடு ஒன்றைச் சொன்னால் நல்லது என்று, 'அர ஹரோ ஹரா' என்பதைக் கற்றுக்கொடுத்தார். அதன் பிறகு 'அர ஹரோ ஹரா' என்றுச் சொல்வது வழக்கமாயிற்று. காலப்போக்கில் சைவர்கள் இதனைச் சொல்லும் பழக்கம் குறைந்தது. ஆனால், முருகனடியார்கள, 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' ... என்றுச் சொல்லி வந்ததால் இச்சொற்கள் முருகனோடு இணைந்துவிட்டன! பக்தர்கள் 'வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா' என்றுச் சொல்வது, 'வெற்றி வேலைக் கொண்ட முருகனே, எங்கள் வாழ்க்கையில் இருக்கும் துன்பங்களைப் போக்கி, நற்கதியை அருள்வாயாக' என்பதாகும்” என்றார் என் அப்பா.

****
இலங்கை தீவின் கிழக்கு கடற்கரையோரமாக  400 மைல் தொலைவில் உள்ள கதிர்காமனைத் தரிசிக்க சுமார் 300 முருக பக்தர்கள் வடக்கில் உள்ள செல்வச்சன்னதியில்  இருந்து ஆரம்பித்து நான்கு மாதங்கள்   பாத யாத்திரை செய்கிறார்கள் இதில் புத்த  மதத்தவர்களும்  கலந்து கொள்கிறார்கள் .

கதிர்காமத்தில் உள்ள முருகன் கோயில் கி.மு.  5 ம் நூற்றாண்டளவில் புத்தர் பிறக்க முன் உருவாக்கப் பட்டது. யாரால் என்பதற்கு போதிய ஆதாரம் இல்லை. இந்தக் கிராமம் யால வன பூங்காவில் உள்ளது  மாணிக்க கங்கை  கதிர்காமத்தை தழுவி 71 மைல்கள்   ஓடி இந்து சமுத்திரத்தோடு கலக்கிறது

இரவு 12 மணிக்கு கதிர்காமத்தை அடைந்தோம். நாங்கள் எல்லோரும் சோர்வாக தூக்க நிலையில் இருந்தோம். ஆலயத்தின் சுற்றி உள்ள பகுதிக்குச் செல்ல மாணிக்க ஆற்றின் மீது ஒரு தொங்கு பாலம் இருந்தது. கோவில் வளாகத்தில் ஸ்ரீலங்காவின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக  வந்திருந்தார்கள்;. எங்களுடைய மூட்டை முடிச்சுகளை வைத்து தூங்க இடமில்லை. புத்தளத்தில் இருந்து , புகையிரதம், பஸ் மற்றும் மாட்டு வண்டி, நடை மூலம் 450 கி மீ தூரம் பதினெட்டு மணித்தியாலப் பயணத்தின் பின்  பின், நாங்கள் சோர்வாக இருந்தோம்.. என் தந்தை முருகன் பக்தன். அவர் கதிர்காமத்தில் முருகனுக்கு பிரார்த்தனை செய்தார்.
“ முருகா , நீண்ட  தூரத்திலிருந்து என் குடும்பத்தாரோடு  உன்னைத் தரிசிக்க வந்திருக்கிறேன், தயவுசெய்து என் குடும்பத்தை பரதவிக்க விட்டு விடாதே”

அவர் குரல் கேட்டோ என்னவோ தெரியாது  , அந்த நேரத்தில் நெற்றியில் திரு நீறும் . சந்தனப் பொட்டுமாய்  தாடியோடு ஒரு முதியவர் அப்பாவிடம் வந்தார்

" சாமி நீயும் உன் குடும்பமும் நீண்ட தூரத்திலிருந்து கதிர்காமக் கந்தனை வழிபட வந்திருக்கறீர்கள் போலத் தெரிகிறது, உங்களுக்கு ஏதும்  உதவி தேவையா?" முதியவர் கேட்டார் .அவரது முகத்தில் பிரகாசம் தெரிந்தது.

"ஆமாம் சாமி. எங்களின் மூட்டை முடிச்சுகளை ஒரு இடத்தில வைத்து  தூங்க இடம்  தேடுகிறோம் இடம் கிடைக்கவில்லை. அது தான் என்ன  செய்வது என்று யோசிக்கிறோம் “  என் தந்தை அவரிடம் சொன்னார்,

 "யோசிக்க வேண்டாம். சாமி, நான் உங்கள்  பிரச்சனையைத் தீர்க்கிறேன்  என்னுடன் வாருங்கள் உங்களுக்கு  நான் ஒரு அறையைக் காட்டுகிறேன் நீங்கள்  அங்கே பாதுகாப்பாக இருப்பீர்கள். உங்கள் மூட்டை முடிச்சுகளை அங்கே வைத்து நிம்மதியாக தூங்குங்கள் "  என்றார் அந்த  முதியவர். என்  அப்பா அந்த உதவியை எதிர்பார்க்கவில்லை.

 அந்த முதியவர் நம்மை கூட்டிக் கொண்டு போய்  ஒருவரும்  இல்லாத ஒரு  அறையைக் காட்டினார்,

"உங்கள் சாமான்களை இங்கே வைத்து நிம்மதியாக தூங்குங்கள் இது பாதுகாப்பான இடம்" என்றார் அந்த முதியவர்.

என் தந்தை அவருக்கு நன்றி சொன்னார், அவருக்கு பத்து ரூபாய்களை கொடுத்தார்.  1952 ஆம் ஆண்டில் அந்த பணம் உயர் மதிப்பு கொண்ட ஒரு தொகை.

அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து, "சாமி  கோவிலுக்கு அதைக் கொடுங்கள் " என்று சொல்லி சில வினாடிகளில் மறைந்தார்  
ஓய்வெடுக்க ஒரு அறையைப் பெற்று தந்ததுக்கு , தந்தை கொடுத்த  பணத்தை முதியவர்  ஏற்றுக்கொள்ளவில்லை என்று என் தந்தை கவலைப் பட்டார் . நானும் அப்பாவும் அவரைத் தேடினோம்  ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. அங்கிருந்த  ஒரு பக்தரிடம் விசாரித்த போது அவர், "சாமி நான் ஒரு முதியவர் ஆலயத்தை நோக்கி  செல்வதை  கண்டேன்." என்றார் .
அந்த பக்தருக்கு என் தந்தை அந்த முதியவர் செய்த  உதவியை விளக்கினார். 

அந்த பக்தர்  சொன்னார் “ சாமி இதுபோன்ற  அதிசயங்கள் இங்கு நடப்பது  உண்டு. இது முருகனின் ஆலயம்.  . அவர் எப்போதும் தனது பக்தர்களுக்கு உதவுவார்  இது கதிர்காம கந்தனின் திருவிளையாடல் “.

என் அம்மா அதை முழுமையாக நம்பினாள்..

****

அடுத்த நாள் காலை 5 மணிக்கு எழும்பி    மாணிக்க கங்கையில் குளித்து விட்டு  கோவிலுக்கு சென்றோம் 'இது தோற்றத்தில் பெரிய கோயில் அல்ல வழக்கமான கோயில் போன்ற கோபுரமும் இல்லை. மிகவும் பழமையான கட்டிடக்கலையில் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோவில் சிறு வீடு போன்றது. ஒரு காலத்தில் ஓலைக் குடிசையாக காட்டு மத்தியில்  இருந்திருக்கலாம்   பல வருடங்களுக்கு  ஒரு தடவை  கோவில் கூரையின் ஓடுகள் மாற்ற வேண்டி வரும்  என்று பக்தர்கள் சொன்னார்கள். ஓடுகளை மாற்றியவர் வெகு காலம்  வாழ்வதில்லை காரணம் மாற்றியவர் மூலஸ்தானத்தில் இருக்கும் யந்திரத்தை  கண்டிருப்பார். அதன் ரகசியத்தை பிறருக்கு சொல்லாமல் இருக்க அவர் வாழ்வு விரைவில் முடிந்துவிடும் என்றார் ஒரு  பக்தர். 

 அறுகோண வடிவம் உள்ள யந்திரம் இரு முக்கோணங்கள்  ஒன்றின் மேல் ஒன்றாக தங்க இலை போன்றது. நடுவில் ஓம்  என்ற எழுத்து உண்டு என்கிறார்கள் பக்தர்கள்.  இந்த யந்திரத்தை பெட்டிக்குள் வைத்து  ஊர்வலமாக  அருகில் உள்ள வள்ளியம்மையின் கோவிலுக்கு எடுத்து சென்று, அங்கு முப்பது நிமிடங்கள் வைத்து திரும்பவும்  கதிர்காம கோவிலுக்கு கொண்டு வருவார்கள். இந்த ஊர்வலத்தைப் பெரஹரா என்பர் .

முருகனுக்கு  வனப்பகுதியுடன்  உள்ள  தொடர்பைக் காட்ட கோயிலுக்கு முன்னால் உள்ள பந்தலுக்கு காடுகளில் இருந்து காய்ந்த  இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.  முருகனின்  காதலுக்கு உதவியர்ர   அவரின் சகோதரர் கணேசர் அவருக்கு அருகில் கோவில் உண்டு. அவரது முருகனின் முதல் மனைவியான தேவயானிக்கும் கோவில் பக்கத்தில் உண்டு 

“அப்பா ஏன் . முருகனுக்கு  இரு மனைவிகள். இதன் தத்துவம் என்ன”? நான் கேட்டேன்

“ முருகனுக்கு இந்திரன் மகளான தெய்வானை என்ற மனைவியும், குறத்திப் பெண்ணான வள்ளி என்ற பெண்ணும் மனைவிகளாவர். முருகு" என்ற சொல்லிற்கு அழகு, இளமை என்று பொருள்படும். ஆகவே முருகன் என்றால் அழகன் என்பதாகும்.  முதல்  மனைவி  கிரியா சக்தியையும் இரண்டாவது   மனைவி இச்சா  சக்தியையும்   குறிக்கும்”: என்றார்  அப்பா

எதோ எனக்குப் அவர் சொன்னது  புரிந்த மாதிரி தலை  ஆட்டினேன்

நீண்ட வருடங்களுக்கு முன்பு ஆலயத்தில் தூய்மை இருந்தது. பக்தர்கள் ஒரு தொங்கு பாலம் மீது மாணிக்க  கங்கையை  கடந்து சென்றனர்.  பெரிய ஹோட்டல்கள் என்று  நான் சென்ற  போது எதுவும் இல்லை. ராமகிருஷ்ணா மிஷன், பக்தர்களுக்கு தங்குமிடம் மற்றும் இலவச உணவு வழங்கியது  பல வணிகர்கள், ராமகிருஷ்ணா மிஷனுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை இலவசமாக வழங்கினார்கள் . ஆனால் அரசியல் தலையீட்டால்    , ராமகிருஷ்ண மிஷனால்  வழங்கப்பட்ட இலவச சேவையை 1960 இல் நிறுத்தி, மிஷன் மூடப்பட்டு புத்தபிக்குகளின் வாசஸ்தலமாக்கப்பட்டது .      அதன் பின் காலப் போக்கில்  வெளி நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக ஹோட்டல்கள் கட்டப்பட்டது. மது,  மற்றும் அசைவ உணவை ஹோட்டல்கள் வழங்கியது.  பஸ் சேவை இப்போது கதிர்காம முருகன் கோவில்  வாசல் வரை  இருக்கிறது

****
செல்லக் கதிர்காமம்  என்று அழைக்கப்படும் கணேஷ் கோவில்  மாணிக்க கங்கைக் கரை  ஓரத்தில் பிரதான  கோவிலில் இருந்து  3 மைல் தூரத்தில் அமைந்துள்ளது. முருகன் வள்ளி காதல் விவகாரத்தில் கணேஷ் ஒரு கருவியாக இருந்தார். கும்புக் மரங்கள் பக்தர்களுக்கு நிழலை வழங்குகின்றன.

 

கதிர்காமத்தில்  விக்கிரக வழிபாடு கிடையாது. பூஜை  செய்பவர் பிராமணர் அல்லர் . அவரை கபுரால என்பர் அவர் வள்ளி இனத்தவர் என்பது மக்கள் கருத்து.   வெள்ளை நிற ஆடை உடுத்து பூஜை செய்வார்.  நாதஸ்வரம் மேளம் கிடையாது . பூஜைக்கு பிரசாதம் கொண்டு வருவது வேடுவப் பெண்கள்.  கபுரால என்ற பூசாரி வாயையும் காதையும்  வெள்ளை துணியால் கட்டியபடி  பூஜை செய்வார். இந்த முறை பருத்தித்துறைக்கு அருகே உள்ள செல்வ சன்னதி கொவிலிலும்  உண்டு.

பூஜை முடிந்ததும்   ஒரு பெட்டியை யானை  மேல் வைத்து ஊர்வலம் வருவார்கள். காவடி  ஆட்டம். நாதஸ்வரம் தூக்குக் காவடி  கண்டிய நடனம்  அப்போது உண்டு..  வீதியை  சுற்றி  வந்து  பெட்டியை இறக்கியதும் யானை  மலம் சலம் கழிக்கும் .


கதிர்காம  சித்தர்கள்

முருகனிடம் பற்றும், மரியாதையும் பக்தியும் . கொண்ட பல சித்தர்கள் (யோகிகள்) மற்றும் பெரியவர்கள் வாழ்ந்து, தியானம் செய்து அங்கு சமாதி அடைந்தனர். அந்த சூழலில் பெரிய[PK1]  அதிர்வு சக்தி உண்டு


தென் இந்தியாவில் இருந்து , பதினொரு வயதில், குருநாதர் பாபாஜி சித்தரைத் தேடி கதிர்காமம் சென்றார்.  ஒரு மரத்தின் கீழ பாபாஜி ஆறு மாதங்களுக்கு தியானம் செய்தார். ஆரம்பத்தில், அவர் 24 மணி நேரம் தியானம் செய்தார், பின்னர் 48 நாட்களுக்கு தொடர்ச்சியாக தியானம் செய்தார். பாபாஜி தியானிப்பதைத் கவனித   ஒருவன்  அவர் தியானம் செய்த மரத்தை வெட்டினான் . மரத்தை வெட்டியவன் அவன் விரைவில் பைத்தியம் பிடித்தது, தற்கொலை செய்து கொண்டான் . கதிர்காமம் கோவிலின் முக்கிய சன்னதிக்கு வெளியில் ஒரு சிறிய கறுப்பு கல் சிலை உள்ளது.

பாபாஜி கிரியா  யோகா  முறையை இலங்கையில் அறிமுகப் படுத்தினார். அத்தோடு  தேவயானி அம்மனின்  வழிபாட்டையும்   கோவிலையும் கதிர்காமத்தில் நிறுவினார் 

இந்தியாவில்  கதிர்காமம் பிரபல்யமாவதற்கு கல்யாண கிரி சுவாமிகளே காரணம் இவரை இலங்கையில் முத்துலிங்க சுவாமி என்று அழைத்தனர்  கல்யாண கிரி சுவாமிகளுக்கு பின் பால்குடி பாபா பிரபல்யமானார்  இவர்  அலகாபாத்தை செர்ந்த  பிராமணர் . தினமும் அவர் பால் குடித்ததால் அந்த பெயர் வந்தது  .

பிள்ளைகள் இல்லாத ஒரு மன்னன், கதிர்காமத்தில் பிரார்த்தனை செய்தான், ஒரு குழந்தை பிறந்து விட்டால், குழந்தையை கோவிலுக்கு நன்கொடையாக அளிப்பேன். பாலசுந்தரி என்ற பெயரில் அழகான மகள் ராஜாவுக்கு பிறந்தாள். மன்னர் மகளை கதிர்காம கந்தனுக்கு  சேவை செய்ய அங்கு அவளை விட்டுவிட்டார். அவர் கோவிலில் ஒரு கன்னியாஸ்திரியானாள். கண்டி மன்னன் ஸ்ரீ விக்ரம இராஜசிங்க பாலசுந்தரியின் அழகு பற்றி அறிந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கோரி தூதுவர்களை அனுப்பினார். ராஜாவின் வேண்டுகோளை அவள் மறுத்து விட்டாள். கண்டி மன்னன் தனது வீரர்களில் சிலரை கதிர்காமத்துக்கு அனுப்பி அவளை, கைதுசெய்து வரும்படி கட்டளை இட்டார். தன்னை காப்பாற்றும்   படி முருகனை பாலசுந்தரி பிரார்த்தித்தாள். முருகனும்  அவளுடைய வேண்டுகோளை நிறைவேற்றினார். அந்த நேரத்தில் பிரிட்டிஷ் படைகள் கண்டி இராச்சியத்தின் மேல் படையெடுத்து, ராஜாவை கைது செய்து அவரை தமிழ்நாட்டில் வேலூர்க்கு கைதியாக அனுப்பியது இறுதியில் வேலூரில் மன்னர் இறந்தார்.

பாலசுந்தரியின் உதவியாளரான மங்களபுரி ஸ்வாமிகள் கதிர்காமத்தில் வாழ்ந்தார். கோவில் வளாகத்தில்  பாலசுந்தரிக்கு ஒரு நினைவிடம் உள்ளது.

பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​பதுளை கச்சேரியில் பணியாற்றிய ஒரு நிர்வாக அதிகாரி.  ஒரு தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர். அவரது நோயால் அவர் எந்த ஊக்கத்தையும் பெறவில்லை என்று அவர் கவலை கொண்டார். அவரது நோயை குணப்படுத்த முடியாது. அவர் கதிர்காமமக் கடவுளிடம் பிரார்த்தனை செய்தய கோவிலுக்கு சென்றார். அவர் பால்குடி பாபாவைச் சந்தித்தார், நோயுற்றதை விளக்கிச் சொன்னார். ஒரு நாள் அவர் கதிர்காமம் கடவுளின் மகத்துவத்தைப் பற்றி பக்தர்களுடன் உரையாடும்போது, ​​ஒரு பைத்தியக்காரர் அவரை சந்தித்து "நீங்கள் பதுளை கச்சேரிக்குத் திரும்பும்போது, ​​வடக்கு நோக்கி செல்வதற்கு உங்களுக்கு உத்தரவு இருக்கும்  அங்கு உங்கள் வியாதி நீங்கும் . பைத்தியக்காரனின் கணிப்புப்படி, வட மாகாணத்துக்கு மாற்றப்பட்டார், அங்கு அவர் ஒரு ஆயுர்வேத மருத்துவரை சந்தித்து சிகிச்சைபெற்றார்.  ஆயுர்வேத மருத்துவர் அவர் நோயை குணப்படுத்தினார் , அவர் கதிர்காம கடவுளின் வலுவான பக்தராக மாறினார் . இப்படி பல  சித்தர்களின் விபரங்களை பக்தர்களுடன் பேசி அறிந்து குறிப்பு எடுத்துக் கொண்டேன்

வேடவரின் உகந்த மலை முருகன் கோவில்

எனது யாத்திரையில் நான் சந்தித்துப் பேசிய  முருக பக்தர்களுள் உகந்த  மலையை  செர்ந்த  வேலுசாமியும் ஒருவர்  உகந்த மலை என்ற குன்றம். உள்ள  கிராமம் கடற்கரை ஓரமாக பொத்துவில்லில் இருந்து தேற்கே B355 பாதையில் பாணம நோக்கி  34 கி.மீ. தூரத்தில் உள்ளது. எங்கு குன்றம் இருக்கிறதோ அங்கு முருகன் இருப்பார். அங்குள்ள பண்டைய முருகன் கோவில். சக்தி வாய்ந்தது முருகன் சூரபத்மனோடு போர் புரிந்த சோர்வினால் அங்குள்ள குன்றத்தில் உட்கார்ந்த படியால் அந்த குன்றத்துக்கு உட்கார்ந்தது, உகந்தம் என மருவியது என்பர் அந்த ஊர்வாசிகள். இது மரபு வழி வந்த கதை” விளக்கம் கொடுத்தார் முருக பக்தர் வேலுசாமி

 “ வேறு என்ன அகோவிலில் விசேசம்’” நான் அவரை கேட்டேன் 

“வள்ளியம்மை கோயில் குன்றத்தின் உச்சியிலும், முருகன் கோயில் முன்றத்தின் அடியிலும் இருக்கிறது. இக்கோவில் கிழக்கு - தெற்கு மாகாணங்கள் சந்திக்கும் இடத்தில் உள்ளது இந்த இடத்தில சிவ பக்தன் இராவணன் திருக்கோணேஸ்வரதுக்குப் போக முன் தங்கி சென்றதாக மரபுக் கதை உண்டு. இது போன்று இன்னும் இரு மரபு வழி வந்த கதைகள் உண்டு” வேலுசாமி சொன்னார்

 “சொல்லும் கேட்போம்:” நான் ஆவலுடன் கேட்டேன்

“இந்தக் கதைப் படி வகூர் மலையில் இருந்து முருகன் விட்ட அம்பு உகந்த மலைஉச்சியில் விழுந்தது என்பர். மற்ற கதை முருகனும் வள்ளியும் தனித் தனியே இரு கற் படகுகளில் வந்து மலையில் வாசம்செய்ததாக கதை உண்டு. உகந்த மலைக்கு அருகே உள்ள. குன்றதுக்’கு உச்சியில் எட்டு சிறு நீர் தடாகங்கள் உண்டு. இதை” முருகனும் வள்ளியும் நீராடிய சரவணப்.பொய்கை என்பர் ஊர்வசிகள் ஆக மொத்தமாக 32 சிறு தடாகங்கள் உண்டு”

 “சாமி ஏப்பொது இந்த கோயில் தோன்றியது “?அப்பா கேட்டார்  

“இராவணன்  காலத்தில், கி மு 5000 ஆண்டு மட்டில் இக்கோவில் இருந்ததாக வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது . அதே காலத்தில் கதிர்காமமும் வேடவர்களால் உருவாக்கப் பட்டிருக்கலாம் . இரு கோவில்களுக்கும் யால வன பூங்காவடாக  நெருங்கிய தொடர்புண்டு “ வேலுசாமி சொன்னார்

கதிர்காமத்தில் பிற மதங்கள்

கிரி விஹாரா என்ற புத்த கோவில் கதிர்காம்தில் இருந்து 800 மீட்டர் தூரத்திள் அமைந்துள்ளது. இந்த டகோபவின் உயரம் 90 அடிகளாகும். வெள்ளரசுக் கிளையை சங்கமித்தா இலங்கைக்கு கொண்டு  வந்த பின் அதன் பல கிளைகள் பலஇடங்களில்  நடப் பெற்றன  , அதில்  கிரி விஹாராவும் ஓன்று   

"கடவார போதிய்யா என்ற புத்த கோவிலும் கதிர்காம  முருகன் கோவிலுக்கு அருகே உள்ளது

1845 இல் சயித் ஜப்பார் அலி ஷா என்ற இஸ்லாமியர் தெய்வம் அழைத்ததில் கதிர்காமம் வந்து தியானத்தில் ஈடுபட்டார் மலாயா நாட்டில் இருந்து ஹம்பான்தொட்டாவுக்குப் பல வருடங்களுக்கு முன் வந்த ஒரு இஸ்லாமியர்.  அவரின் மசூதி கதிரகாமத்தில் உண்டு.

யாத்திரை முடிவு  

எங்கள் யாத்திரை முடிய இரு தினங்ககளுக்கு  முன் மூன்று மாவிளக்குகள் என் வயிற்றில் ஏற்றும் நேர்த்தி  என் பெற்றோர் செய்து முடித்தனர். என் வயிற்றில்  சூடு 

ஏறும் மட்டும் விளக்கு எரிந்தது. அது ஒரு வகை  மருத்துவம் என்றே சொல்லலாம்.

யாத்திரை முடிந்து  கதிர்காமத்துக்கு  வந்த   வழியே  ஊர் திரும்பும் பொது , கொழும்பில் எங்கள் உறவினர் வீட்டில் மூன்று நாட்கள் தங்கிய பின்  புத்தளம் திரும்பினோம்.

கொழும்பில் இருந்து வெளியான தமிழ் வீரகேசரி பத்திரிகைக்கு என் கதிர்காம பயணத்தை பற்றி தமிழில் எழுத முடிவு செய்தேன். நான் எடுத்த குறிப்புகள் எனக்கு பெரிதும் உதவின.  கட்டுரையை அந்த பத்திரிகைக்கு அனுப்பினேன், இரு வாரங்களாக   அந்த கட்டுரை வெளிவந்தது.  அதை வாசிக்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது. என் தந்தைக்கு அது பெருமையாக  இருந்தது. அவர் தன் அலுவலகத்தில் தனது நண்பர்களிடம் இந்த கட்டுரையை காட்டினர்.  . வீரகேசரி  பத்திரிகை  எனக்கு புத்தகங்களை வாங்குவதற்காக பரிசு சீட்டு ஒன்றை  எனக்கு அனுப்பியது. முருகனின் ஆசீர்வாதம் இது என்று நான் நினைத்தேன்.

*****


 [PK1]

புலம்பெயரும் பறவைகள்.

“அதோ அந்தப் பறவை போல வாழ வேண்டும்” எனக் கவிஞர் கண்ணதாசன் இயற்றிய சினிமாப் பாடல் எமது காதுகளில் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. சுதந்திரமாய், தமது விருப்பத்திற்கேற்ப கூட்டமாகவும,; ஒற்றுமையாகவும் வானில் பறந்து, குடிவரவு, மொழி, பாதுகாப்பு போன்ற கட்டுப்பாடுகளின்;றி, தேசம் விட்டுத் தேசம் செல்லும் பறவைகளைப் போல மனிதன் வாழ நினைப்பதில் தவறில்லை. அந்த நிலை மனிதனுக்கு வருமா என்பது சந்தேகம். பொருளாதார, அரசியல் காரணத்தால் நாடுகளுக்;கிடையே பயணக் கட்டுப்பாடுகள் மனிதனால் உருவாக்கப்பட்டவையே. தன் சொந்த நாட்டுக்குள்ளும் ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்குப் போவதற்கும் பாதுகாப்பு வலையம் என்ற பெயரில் தடைகளுண்டு. இத்தகைய தடைகளுக்கு அப்பாற்பட்டவை மற்றைய ஜீவராசிகள். அதிலும் பறவைகள் தாம் நினைத்த மாதிரி எங்கு வேண்டுமென்றாலும் பறந்து செல்லக் கூடியவை. அதன் மேல் பொறாமைப் பட்டோ என்னவோ துப்பாக்கி ஏந்தி தமது ஊருக்கு விருந்தாளிகளாக வரும் அப்பறவைகளை மனிதன் வேட்டையாடி மகிழ்கிறான். பறவைகள் போன்று மொனாக் ( ஆழயெசஉh) என்ற இனத்தைச சேர்ந்த வர்ணத்துப் பூச்சிகள், மற்றும் தத்துக்கிளிகள் கூட வட ஆபிரிக்காவில், வெகு தூரம் பாலைவனத்தினூடாக பயணம் செய்கின்றன. மொனாக் வர்ணத்துப் பூச்சிகள், பெரும் கூட்டமாக வட அமெரிக்கா, தென் கனடா பகுதியிலிருந்து சுமார் 3000 மைல்கள் வாரக்கணக்கில் பறந்து சென்று மெக்சிக்கோ, கலிபோர்னியா போன்ற இடங்களை அடைகி;ன்றன. சில வேளைகளில் திசை மாறி அட்லான்டிக் சமுத்திரத்தையும் கடந்து ஐரோப்பாவை அடைகிறது என்றால் சிலர் நம்புவதற்கு தயங்குவார்கள். இவ்வாறே தண்ணீரும் உணவும் தேடி, ஆபிரிக்காவில் வன விலங்குகள் கூட்டமாக இடம் பெயர்கி;ன்றன. அதனால் ஆறுகளைக் கடக்கும் போது சக்தி குறைந்த விலங்குகள் பல பலியாகின்றன. அதுவுமல்லாமல் சக்தியிழந்து மேலும் பயணத்தைக் கூட்டத்துடன் தொடரமுடியாமல் வேறு விலங்குகளுக்கு இரையாகின்றன.

 

இடப்பெயர்வுக்கான பண்டையக் கால கருத்து

உயிரினங்களில் விரைவாகவும், வேண்டியவாறும் திசை மாறி இயங்கக் கூடிய திறமை படைத்தவை பறவைகள். பருவகாலத்துக்கு ஏற்ப, மட்டான தட்ப வெப்ப நிலை (வுநஅpநசயவந உடiஅயவந)  உள்ள தேசங்களை நாடி தற்காலிகமாக புலம் பெயர்வதற்காக, வானத்தில் நீண்ட பயணத்தை ஆரம்பிக்கும் பறவையினங்களைப் பற்றிய ஆராய்ச்சிகள் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே இருந்து வந்தது. பைபிளிலும் பறவைகளின் புலம்பெயர்வைப் பற்றி கூறப்பட்டுள்ளது. கிரேக்க இயற்கைவாதியும் தத்துவஞானியுமான அரிஸ்டோட்டல் பறவைகள் புலம் பெயர்வதை பற்றி ஆராய்ச்சி செய்து எழுதினார்.

 

குளிர்காலங்களில் பல இனப் பறவைகள் உறைந்த சீதோஷ்ண நிலையில் வாழ்கின்றன. அரிஸ்டோடலின் மாணவர்கள் குளிர்காலங்களில் பறவைகளின் மறைவிற்கு இந்த உறைந்த நிலையே காரணமெனக் கருதினர். ஆனால் இக்கருத்து தற்போது ஏற்றுக்கொள்- ளப்படவில்லை.; பறவைகளின் இன மாற்ற தத்துவத்தை அரிஸ்டோட்டல் முன்மொழிந்தார். இதன் படி வடக்கில் இருந்து பறவைகள் தெற்கு நோக்கி போகும் போது தெற்கிலிருந்து பறவைகள் வடக்கு நோக்கி இடம் மாறுகிறது என்பதே. ஆனால் உண்மையில் இப்பறவைகள் இனம் ஒன்று என்பதையும் குளிர்காலங்களிலும் அவை இடம் மாறுகின்றன என்ற உண்மை காலப்போக்கில் அறியவேண்டிவந்தது.

 

இடப்பெயர்வை அவதானிக்கும் முறைகள்.

பறவைகளின் குடிபெயர்ப்வை பற்றிய பல விடயங்களை தொடர்ந்து நேரடியாக அவதானிப்பதன் மூலம் அறிந்துகொள்ளாலாம். பருமன், நிறம், பறவைகள் எழுப்பும் ஒலி, அவை பறந்து செல்லும் பாதை போன்றவை மூலம் அறியலாம். பல இனப் பறவைகள் இரவில் குடிபெயர்கின்றன. காரணம் குளிர்மையும், சக்தி விரயமடைவது குறைவுமாகும். பௌர்ணமி தினங்களில் அவை பறப்பதை ஆராச்சியாளர்கள் அவதானிப்பது இலகு. பறவைகள் எழுப்பும் ஒலியினை பரவளைவுள்ள பிரதிபலிப்யொன்றினைப் ( Pயசயடிழடiஉ சுநகடநஉவழச)பாவித்து ஒலி நாடாவில் பதிவு செய்து ஆராய்ச்சி நடத்தினர். இரவில் எந்த நேரத்திலும் ஒலியைப் பதிவு செய்யக் கூடிய தன்மை இந்த முறையில் இருந்தாலும், பறவைகள் செல்லும் பாதையை இம்முறைப்படி அறிவது கடினம். சுமார் 11,000 அடி உயரத்தில் பறக்கும் பறவைகளின் ஒலிகளை இந்த முறைப்படி பதிவுசெய்யலாம். சில பறவைகள் பகலில் எழுப்பும் ஒலியை விட இரவு நேரங்களில் எழுப்பும் ஒலியானது வித்தியாசமானது. இதனால் சில சமயம் தகவல்களை பகுப்பதில் சந்தேகம் ஏற்படலாம்.

பறவைகளை பிடித்து அடையாளமிட்டு, பின் பறக்கவிட்டு, அவை போய் சேரும் இடத்தில் அவ்வடையாளம் உள்ள பறவைகளை கண்டுபிடித்து அவதானிப்பது இன்னொரு வழிமுறையாகும். வானொலி, ரேடார் போன்றவற்றை பாவித்தும் பறவைகளின் குடிபெயர்ச்சி பற்றிய விபரங்களைச் சேகரிக்கலாம். 

 

பயணத்துக்கு வழிகாட்டிகள்

விமானம் பறப்பதற்கு தொழில் நுட்டபத்தையும் செய்மதியையும் பாவித்து அவை  மூலம் தகவல்கள் பரிமாறப் படுகின்றன. ஆனதால் பறவைகள் தமது சுய அறிவையும் மரபு வழிவந்த பழகக்த்தையும் இயற்கையன்னையின் துணையுடனும் தம் பயணங்களை மேற்கொள்கின்றன. அதனைப் பார்த்து மனிதன் கற்றவை பல. ஆனால் பறவைகள் மனிதனிடம் கற்கவில்லை. தாம் செல்லும் பாதை சரியானாதா என்பதை எவ்வாறு பறவைகள் அறிகிறது என்பது சுவாரஸ்யமானது. பல வழிகளின் மூலம் அவை தாம் செல்லும் பாதையை அறிகின்றன. அவை:

-                   இரவில் பறக்கும் போது வானில் ஜொலிக்கும் நட்சத்திரங்களின் உதவியுடன் திசையை கண்டுபிடிக்கின்றன. வானசாஸ்திரத்தை பறவைகள் அவ்வளவுக்கு அறிந்து வைத்திருக்கின்றனவா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது.

-                   மணத்தை வைத்துப் பறவைகள செல்லும் பாதையை கண்டுபிடிக்கின்றன. காடு, மலை, வனாந்தரம் போன்ற பகுதிகளுக்கு மேல் பறக்கும் போது அவை நுணரும் மணம் வழிகாட்டியாக அமைகிறது.

-                   நதிகள், மலைகள், கடற்கரை ஓரங்கள், பாலைவனஙகள் போன்றவைகளை  குறியாக வைத்து பறக்கி;ன்றன.

-                   கூட்டமாக முக்கோண வடிவில், வானத்தில் பறக்கும் போது தம் கூட்டம் போகும் வழியையே பின்பற்றுகின்றன.

-                   பூமியின் காந்தப் புலத்தை அடிப்படையாக வைத்து அதன் உதவியுடன் பறவைகள் பறக்கின்றன.

பறக்கும் யுக்திகள்.

பறவைகள் வெகுதூரம் பறப்பதற்கு பல யுக்திகளைக் கையாளுகின்றன. கனடாவின் வாத்து ( ஊயயெனயைn புநநளந) இனம் பயணத்தி;ன் போது “நாங்கள் வருகிறோம் எங்களுக்கு வழி விடு” என்று குவா குவா சத்தம் போட்ட வாறு வானில் பறப்பதைக் காண்கிறோம். அவை பறக்கும் போது சிறகைத் தொடர்ந்து அடித்துக்கொண்டே இருக்கும். அவ்வளவுக்கு சக்தியை அவை உள்ளடக்கி உள்ளன. களைத்தவுடன் கீழே உள்ள மலை . அல்லது குளம் குட்டையில் ஓய்வெடுத்து, தமது சக்தியை மேலும் அதிகரிக்க உணவருந்த இறங்கிவிடும். அந்த சமயம் பார்த்து மனிதன் ஒளிந்திருந்து அவைகளை வேட்டையாடுகிறான். வான்கோழியினத்தை சேர்ந்த பறவையினம், சூரிய வெப்பத்தால் சூடாகிய காற்றினால் ஏற்படும் உந்தலைப் பாவித்து பகல் நேரங்களில் பறக்கும். இவை அனேகமாக நிலப்பரப்பி;ன் மேல் தமது பயணத்தை செய்யும். சிறிது நேரம் சிறகை அடித்துவிட்டு பின்னர் வானில் சறுக்கிச் செல்வது இன்னொரு பறவை இனம் கையாளும் யுக்தி. இந்த முறையைப் பாவித்து மனிதன் புடனைநச என்பதை கண்டுபிட்டதானோ என்னவோ. உயரம் குறைந்தவுடன் மேலும் சிறகை அடித்து மேலே எழும்பும். இதனால் அவை செல்லும் பாதை சீராக இல்லாமல் மேலும் கீழுமாக அமைகிறது

நீண்ட பயணம்

பறவைகள் குளிர்காலங்களில் உணவுக்காகவும், தம்மை கடும் குளிரிலிருந்து பாதுகாப்பதற்காகவும் புலம்பெயர்கின்றன. இது மரபு வழி வந்த பழக்கமாகும். சில பறவையினங்கள் குளிரிலும் உண்ண போதிய உணவிருந்தால் புலம் பெயராமல் தமது நாட்டிலேயே வாழும். ஆயிரக்கணக்கான மைல்கள் அவை பறந்து சென்று உணவைத் தேடுகின்றன. ஸ்வலோஸ் ( ளுறயடடழறள) என்ற பிரித்தானிய நாட்டு பறவைகள் குளிர்காலங்களில் வெகு தூரத்தில் உள்ள மத்திய ஆபிரி;க்க நாடுகளுக்கு பறந்து செல்கின்றன. தென் ஆபிரிக்காவின் பருவ நிலையை அவை பெரிதும் விரும்பினாலும் மேலும் சில ஆயிரம் மைல்கள் பறந்து தமது உயிருக்கு ஆபத்தை தேடிக்கொள்வதை அவை தவிர்க்கின்றன. வட துருவங்களில் வாழும் யுசவiஉ வநசளெ- கடற்பறவை வகை  ஒரு வருடத்தில் புலம்பெயர்ந்து தென் துருவம் சென்று திரும்பும் பயணத்தின் போது சுமார் 25,000 மைல்கள் பறக்கின்றன. குடி பெயர்ந்து செல்லும் பறவைகளின் பாதைகள் பெரும்பாலும் பருவமாற்றத்தால் மாற்றமடையும். தூரப் பயணத்துக்கு தேவையான உணவை உண்டு, சக்தியை சேகரித்த பின்னரே தம் நீண்ட பயணத்தை ஆரம்பிக்கின்றன. சில பறவை இனங்கள் போகும் வழிகளில் உணவை அருந்தி, இழந்த சக்தியினைப் பெற்று, மேலும் பயணத்தை தொடர்கின்றன. பறவைகள் 20,000 அடி உயரத்தில் பறக்கக் கூடியவை. காற்று வீசும் திசை, வெப்பநிலை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தங்களி;ன் பயணத்தை  தொடர்கின்றன.

 

விசாவின்றி இலங்கை வரும் பறவைகள்

கவிஞர் காசி ஆனந்தன் சைபீரிய வாத்துக்களை தனது கவிதையொன்றில் குறிப்பிட்டுள்ளார். நெடுந்தீவைப் பற்றி குறிப்பிடும் போது அங்கு, பிறதேசத்தில் இருந்து வரும் பறவைகள் ஊர்ப் பறவைகளுடன் உறவாடுவதைப் பற்றி ஒரு கட்டுரையில் ஆசிரியர். குறிப்பிட்டுள்ளார். இந்த உறவில் இன, மொழி, நிற வேறுபாடு கிடையாது. வன்னியில் உள்ள இரணமடு, அூனையிறவு வாவி, முருங்கன் அருகே உள்ள பெரிய குளம் ( புயைவெ’ள வுயமெ) மற்றும் யாழ் குடா நாட்டில் உள்ள தொண்டமானாறு, பண்ணை வாவி போன்ற நீர்த் தேக்கங்கள் தூரப் பயணத்தின் பின் அவை வந்திறங்கும் இடங்களாகும். அக் காட்சிகள் கண்கொள்ளாக் காட்சிகளாகும். “வெளிநாட்டாரை வரவேற்று உணவளிக்கும் ஈழத்திரு நாடே” என்று ஒரு கவிஞர் இனி கவிதை புனைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்தியாவினூடாக இலங்கைத் தீவுக்கு விசாவின்றி வருகைதரும் பறவைகள் மேலும் தமது பயணத்தை தொடராது அங்கு தங்கிப் பின்னர் பருவகாலம் மாறும் போது தமது நாடு நோக்கி பயணம் செய்கின்றன. இலங்கையின் தென் பகுதியைத் தாண்டி வெகு தூரம் கடல் மேல்; பறந்து சென்றால் தென் துரவத்தை அடையலாம். வேறு நிலப்பரப்புகள் இல்லாததே அவை தமது பயணத்தை இலங்கைத் தீவுடன் நிறுத்திக் கொள்கின்றன. அதுவுமன்றி தீவின் அழகிய சுற்றாடல் பறவைகளை கவர்ந்ததும் ஒரு காரணமாகும். இது, தென் மேற்கு பருவக்காற்று காலமான மே மாதம் முதல் ஒக்டோபர் மாதம் வரை நடைபெறும் பறவைகளின் சுற்றுலாப் பயணமாகும். இக்காலத்தில் குளங்கள் வாவிகள் மழை நீரினால் நிரம்பி இருக்கும். அவைகளைக் கண்டு இரசிக்க பல சுற்றுலாப் பயணிகள் கிழக்கு, தெற்கு வட மத்திய மகாணங்களில் உள்ள நீர் தேக்கங்களுக்குச் செல்வார்கள். பறவைகளைப் பார்த்து இரசிப்பது பலரின் பொழுது போக்காகும். அதற்கென ஒரு சங்கம் உண்டு. இலங்கைத் தீவுக்கு சுமார் 190 பறைவ இனங்கள் கோடைகாலத்தில் வந்து செல்கின்றன. இப்பறவைகளில் பிலெமிங்கோ ( குடநஅiபெழ) என்ற பறவை தனது மாட்;சிமையான உருவத்தால் பலரைக் கவரக்கூடியது. தீவின் கிழக்குஇ வடக்குஇ தெற்கு பகுதிகளில் உள்ள வாவிகள், உப்புத்தளங்கள் இவை விரும்பும் இடங்கள்.  சுமார் 8000 முதல் 10இ000 எண்ணிக்கையுள்ள பிலெமிங்கோ பறவைகள் இலங்கைகக்கு வருகை தந்து யால, வில்பத்து தேசிய வனங்களில் உள்ள குளங்களை நிரப்பும். சுமார் 50 விதமான கடற்பறவைகள மேற்கு பகுதியில் அடையாளம் காணப்பட்டன. இலங்கையைப்  போன்று தமிழ்நாட்டில்; உள்ள வேடந்தாங்கல் வன பாதுகாப்பு பகுதியில் சைபீரியா பிரதேசத்தில் இருந்து குளிர்காலத்தில் புலம் பெயர்ந்து வரும்; ஒரு இலட்சத்துக்கு அதிகமான பறவைகளைக் காணலாம். இவ்விடம், சென்னையில் இருந்து 90 கி.மீ தூரத்தில் உள்ளது. அங்குள்ள 74 ஏக்கர் பரப்பளவுள்ள வாவியில் “நீர் மருது” என்ற தாவரத்தை பறவைகளின் வசதிக்காக பயிரிட்டுள்ளனர்.

முடிவுரை

மனிதன் பறவைகளின் பயணத்திலிருந்து கற்கவேண்டிய பாடங்கள் பல. தற்போது ஆயிரக் கணக்கான லீட்டர் எண்ணையை வானில் எரித்து, சூழலை அசுத்தப்படுத்தி, விமானத்தில் பயணம் செய்கிறான் மனிதன்;. செல்லும் திசை அறிய தொழில் நுட்ப உதவியை நாடுகிறான். பறவைகள் கையாளும் யுக்திகளை ஏன் மனிதன் கையாள ஆராச்சிகள் நடத்தக் கூடாது?. பறவைகள் நம் நாட்டு;க்கு வருகை தருவதினால் சுற்றுலாப் பயணிகள் மூலம் அன்னிய செலவாணி நாட்டுக்கு வருகிறது. சூழல் புனிதமாகிறது. அதனால் விருந்தாளிகளை வேட்டையாடாது வசதிகள் செய்து கொடுப்பதன் மூலம் அவர்கள் எடுத்துச் செல்லும் செய்திகள் மூலம் மேலும் கூடிய எண்ணிக்கையில் பல தேசங்களில் இருந்து பறவை இனங்களை நம்நாட்டுக்கு வரச் செய்யலாம். இதற்கு முக்கியமாக இயற்கையையும் சூழலையும் மதித்து வாழ நாம் கற்க வேண்டும்.

 

Death Penalty.

  History says that death penalty was practiced in several forms in several countries. In  India,  historical records  show that death penalty was done by stampeding the convict by a n elephant, burying the convict, be heading ( The famous Silapathikaram epic refers to this punishment). sitting the convict by Impalement, a method of execution  by the oenetration of a human bidyby an object such as a stake, pole, spear, or hook, often by complete or partial perforation of the torsoo.  The sharp spear called Kaluhu. Even in south India,  During 7nth Century 8000 Jains were given capital punishment by  The Pandyan king, variously called "Koon Pandiyan" or "Sundara Pandyan" in the legend is identified with the 7th century for religious reason. 8,000 Jains died by impalment. The same method was adopted by Christianity in the west. According to the one version of the legend, the newly-converted king from Jainism to Saivism  ordered the Jains to be massacred at Sambandar's instigation. According to another version, the Jains voluntarily impaled themselves in order to fulfill their vow after losing the debate to Sambanadar. The site of the event is identified as Samanatham . South India near Madurai.

In the Tamil  epic Silapathikaram (100-300 CE). the story relates how Kannagi took revenge on the Pandiyan King ,  Nedunj Cheliyan of Madurai, Kovalan, Kannagi’s husband was accused of having stolen the anklet and was immediately beheaded by the king without trial.. Kannagi proved that her husband was innocent as such the king wrongfully put her husband Kovalan to death, a such she  cursed the ruler of the  city of Madurai and burnt. Realizing the fault, the king Nedunj Cheliyan committed suicide in shame, after having delivered such a huge miscarriage of justice.. Her chastity is respected and worshiped din Tamil Nadu, Sri Lanka and Kerala as Pathini god. Will in the similar manner the Saudi King commit suicide for innocently beheading underage girl Razeena?.

 

Hindu, Christian, Buddhist, Catholic religions practiced Capital punishment. In Islam people blindly follow the Sari law. In one place it says kill the man who changed religion from Islam to another religion. In another statement, Religion is an individuals decision. It also says that capital punishment could be changed provided that affected party agrees to accept blood money. In Saudi there few cases blood money was accepted and the convict escaped death penalty. At the same time innocents were also killed.

A typical case is that of a 17 year old house made from Sri Lanka. Her name was Razeena. You could see  shebeing beheaded in Saudi ub the Youtube, and people; watching the killing of an innocent girl with delight. Her pas port was forged by the Agnetm by changing in the  passport the date of birth to be more than 17 years, and sent to Saudi as house maid. She had no experience if caring a child. She was only a house maid to do cooking, and keep the house clean.. It all happened within 2 weeks of her arrival in Saudi. Her masters were Saudi’s.

One day it happened that the lady of the house left her 3 months old baby to be cared by the house maid Razeena. When the baby started crying, she was bottle fed by Razeena. It is pure fate that the bay choked and died. She tries her best to save the baby, but failed. The lady of the house accused Razeena for killing the baby. She complained to the Police. The Police arrested Razeena. Razeena knew only Tamil and knew  no knowledge of Arabic. No proper legal support was given to her to defend her case. The translator was from Kerala who had no precious experience as a translator from Arabic to Tamil. The postmortem report staid that the baby died because of choking and not stranklimg as complained by the lady of the house . How can the lady of the house accuse Razeena say that she strangled and killed he baby>.The case went up to the President of Sri Lanka and Saudi King. The King was papered to change the capital punishment provided the baby’s parents prepared to accept blood money. Sri Lankan government and the King were prepared to pay the money as Razeena was from a very poor family from a village called Moothur in the Eastern province in Sri Lanka. She went to Saudi as house maid through an agent to support her family and the sisters.

After few years she was beheaded publicly. The Saudi government did not give the body of Razeena to her parents.

All over the world there were protests about her death penalty. UN and Human rights violation organization to raised the issue with the Saudi government, but an innocent girl from a poor family was mercilessly beheaded. There are several such cases in Saudi and in other countries including USA.

 Death penalty for a Terrorist is accepted by many because innocent civilians are killed such as 9/11 attacked of world Trade Center at New York, causing death to about 4000 innocent people, Oklahoma bombing of Federal building in 1995, Bali Bombing of Tourist areas in 2002 and 2005 by Muslim Terrorist, Sri Lankan bombings during civil war etc. There are  many such killings all over the world.

 I would suggest that United nations should pass a resolution after discussing with several countries specifying the conditions for passing death penalty. It should not be linked to Religion, Dictatorship. Traditions.

No man has the right to take away the life of another man for his dislike or political reason.  Is It Better That Ten Guilty Persons Go Free Than That One Innocent Person Be Convicted?

 

                                         ********

 

“ஜல்லிக்கட்டு” ஒரு பார்வை


காளை மாட்டின் கொம்புகளில் பணத்தை (சல்லியை) துணியில் முடிந்துக் கட்டி, அதன் பின் அக்காளையை விரட்டி, அதுமிரண்டு ஓடும் போது அடக்கி, அவ் முடிச்சை அவிழ்த்தால் அப்பணம் அடக்கிய வீரனைப் போய்ச் சேரும். இந்த வீரவிளையாட்டு தமிழர்களின் வீரத்தைப் பிரதிபலிக்கும், பல நூற்றாண்டுகளாக இருந்து வரும் மரபு வழிவந்த விளையாட்டுஎன்பதை எவரும் மறுக்கமுடியாது. திராவிட மாநிலங்களில் இவ் விளையாட்டு நடக்கிறது. மிருக வதை அடிப்படையில்அவ்வீர ;விளையாட்டுக்குச் சட்டத்தின் படி தடை உருவாகியது. 

காலப்போக்கில், ஜனநாயகத்தின் புது சட்டங்களோடு மனித உரிமை மீறல்கள் ,மிருகவதை, சிறுவர், முதியோர் வதை, ராகிங் என்ற பகிடி வதை போன்றவற்றை எதிர்த்துப் பல சமூகக் குழுக்குள் உருவாகியுள்ளன. தமிழ்நாட்டில் மரபுவழிவந்த ஜல்லிக்கட்டை எதிர்த்து மிருக வதை என்ற பெயரில் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. 

காளை, நதிபல்லத்தாக்கு காலம் முதற்கொண்டு தமிழரின் சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது. இதில்முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, காளை சிவனின் வாகனம். ஆகவே காளை வணக்கத்துக்கு உரிய மிருகம். நந்திக்குஇந்துக்கள் தீங்குவிளைவிக்க முடியமா என்ற கேள்வி வருகிறது? இந்துக்களின் நாடான இந்தியாவில் அம்மிருகத்தைஎப்படி சித்திரவதை செய்ய அனுமதிக்க முடியும் என இந்து மத வாதிகளான ஆட்சியாளர்களும் நீதிமன்றமும் வேறு ஒருகோணத்தில் சிந்தித்திருக்கலாம். 

க வதை என்பது மிருக மாமிசம், கோவில்களில் ஆடு, கோழி பலி கொடுப்பது போன்றவையும் அடங்கும். மிருகங்களின் மேல் சினிமா நட்சத்திரங்களுக்கு விளம்பரத்துக்காகவோ என்னவோ அதிகப் பற்றுண்டு என்பதைபிரிட்ஜட் பார்டோ போன்ற பிரான்சு தேசத்து நடிகையில் இருந்து தமிழ்நாட்டு திரிஷா போன்ற நடிகைகள் வரை உண்டுஎன்பதை அறியலாம். மிருகங்களின் மேல் பற்று, அவர்களின் உரிமை. பல கோணங்களில் பல விருப்புகள் உள்ளவர்கள்மனிதர்கள். அதனால் ஒருவரின் விருப்பு எங்களுக்கு ஒத்து வராவிட்டால் அவரை இகழ்வது தமிழர் பண்பாகாது. 

சிலம்படி, கராத்தேயும் மரபு வழிவந்த விளையாட்டுகளாகும். குத்துச் சண்டை, மல்யுத்தம் போன்ற வீர விளையாட்டுகள்;ஆபத்து நிறந்தவை . இதற்கு உதாரணம், கசியஸ் கிளே ( முகமது அலி) என்ற பிரபலயமான குத்துசண்டை வீரன்,றுதியில் பார்கின்சன் (Parkinson)  என்ற நடுங்கும் வியாதியால் மரணத்தைத் தழுவியது பலர் அறிந்தது. 

இந்த ஆபத்தான விளையாட்டுகளோடு ஒப்பிடும் போது ஜல்லிக்கட்டு ஆபத்தான விளையாட்டாகக் கருத முடியாது. ஜல்லிக்கட்டுவின் போது காயையின் கொம்பு குத்தி மரணம் சம்பவித்ததை எவரும் அறியவில்லை. அதேபோல் காளைமாடுதுன்புறுத்தப்பட்டு மரணித்ததை எவரும் ஆறியவில்லை. கற்பகம் போன்ற சினமா படத்தில்; அது நடந்திருக்கலாம். அதனால் ஜல்லிக்கட்டு மரபு வழிவந்திருப்பதால் தடைசெய்வது நல்லதல்ல. அப்படி சட்டத்தின் மூலம் தடைசெய்வதானால் மரபு   வழி வந்த கலைகள், மூடப் பழக்க வழக்கங்கள் சிலவற்றையும்; தடைசெய்யவேண்டும். 

ஸ்பெயின் நாட்டில் ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டு மரபுவழியாக நடந்து வருகிறது. அதற்குத் தடையில்லை. ஆனால்அங்கு காளைகளின் மேல் ஈட்டி எறிந்து, காயப்படுத்தி அடக்குவார்கள். சிவப்பு நிறத் துணியைக் காளைக்கு காட்டி, காளையை மிரளச் செய்வார்கள்.; இது ஒருவித மிருக வதையாகும். ரொடியோ விளையாட்டு; வட, தென் அமெரிக்காவில்; குதிரைகளையும் காளைகளையும் அடக்கும் விளையாட்டு. அதற்குத் தடையில்லை. 

பல இடங்களில் தீ மிதிக்கும் வைபவம் கோவில்களில் நடந்து வருவதைப் பலர் அறிந்ததே . சிறுவர்களும் பெண்களும், ஆண்களும் சேர்ந்து தீ மிதிக்கிறார்கள். அது நேர்த்திக்காகச் செய்யும் செயல். தூக்குக்காவடியும் நேர்த்திக்காகச்செய்வது. இவை ஆபத்தான செயல்கள்;, ஆனால் தடையில்லை. 

கிரிக்கட், கால்பந்தாட்டம் போன்ற விளையாட்டுகளைப் பாவித்து அரசியல் நடத்துவதும், பணம் சேர்ப்பதும், விளம்பரம்தேடுவது தற்போது; பழக்கமாக வந்துவிட்டது. தயவு செய்து மரபுவழிவந்த விளையாட்டுகளோடு அரசியலைக்கலக்காதீர்கள். மரபுவழிவந்த கலைகள், விளையாட்டுகள் அழியக் கூடாது. வருங்காலத்தில் ஜல்லிக்கட்டு ஒலம்பிக்சில்ஒரு விளையாட்டாக வந்தாலும் வரலாம். 

                                                         *******                                                                                   

 

                                          *****

இயற்கையில் உருமறைப்பு

ஏமாற்று வித்தை

போரில் மறைந்திருந்து தாக்குவது ஒரு வகை யுக்தியாகும். இம்முறை புரட்சியாளர்களிடையே பிரபல்யமானது. கெரில்லா போர் முறையில் தம்மை இலை குழைகளால் மூடியவண்ணம் முகத்துக்கு பச்சை கறுப்பு அரிதாரம் பூசி போரிடும் முறை பல யுத்தங்களில் கடைப்பிடிக்கப்டுவதை நாம் அறிந்ததே. இந்த யுக்தி காட்டுக்கள் கெரில்லா யுத்தம் புரியும் போது அவர்கள் இலை குழைகளுக் கிடையே மறைந்து நின்று தாக்குவதுக்கு உதவுகிறது. இதனை ஆங்கிலத்தில் ஊயஅழரகடயபiபெ என்பர். பிரென்சு மொழிச் சொல்லில் இருந்து இந்த ஆங்கிலச் சொல் பிறந்தது. இதன் பொருள் உண்மைத் தோற்றத்தை மூடி மறைப்பது அல்லது பார்ப்பவர்களுக்கு வித்தியாசமான தோற்றத்தைக் கொடுப்பது என்பதாகும். 1800ம் ஆண்டு அமெரிக்க ஓவியரான அபொட் தாயர் என்பவர் இயற்கை மிருகங்களின் உடம்பில் உள்ள வர்ணங்கள் உரு மறைப்புக்கு உதவுகிறது என்பதைச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக திருக்கை மற்றும் மீன் வகைகளில் இதை அவதானிக்கலாம். நீருள் மேலிருந்து பார்க்கும்போது கீழ்ப்பகுதி கருiமாகவும் மேற் பகுதி ஒளிமயமாக வெள்ளையாகவும் இருப்பதால் இவை தப்பிக்க ஏதுவாகிறது.  அவ்வாறே மிருகங்களின் மேற் பகுதியான முதுகுப் பகுதி கருமையாகவும், படிப்படியாக நிறம் மாறி அடிவயிற்றில் வெள்ளை நிறத் தோற்றம் உள்ளமை என்பதாம். இந்த முக்கிய நிறமாற்றத்தின் பண்பு   மிருகங்களின் உரு மறைப்புக்கு உதவுகிறது. கருமையில் இருந்து வெண்மைக்கு படிப்படியாக நிறம் மாறும் போது மிருகத்தை அவதானிக்க கடினமாகிறது.; 1915ல் பிரான்ஸ் தேசத்து இராணுவத்தினால் உரு மாற்றம்  கொண்ட  வீரர்களை அடங்கிய பகுதி ஒன்று அமைக்கப்பட்டது. இராணுவம் ஓவியர்களை வரவழைத்து முதலாம் உலக யுத்தத்தின் போது உரு மாற்றத்துக்கு தேவையான ஆலோசனைகளைப் பெற்றது.

இராமாயணத்தில் உரு மறைப்பு

இராமாயணத்தில் கூட உரு மறைப்பு இடம் பெற்றிருக்கிறது. மாரீசன் என்ற அரக்கன் இராவணணின் வற்புறுத்தலின் பெயரில் பொன் நிற மான் உருவம் எடுத்து மாயமானாக இராமரும் சீதையும் இலக்கமணனும் வாழ்;ந்த பஞ்சவடி என்ற காட்டுப் பகுதியில் உள்ள மாடத்துக்கு சென்றான். அதன் நோக்கம், உரு மாற்றத்தின் மூலம் சீதையை தன் மேல் ஆசை கொள்ளுமபடி செய்து இராமனையும் இலக்குமனையும் அவளிடம் இருந்து பிரித்து இராவணன் சீதையைக் கடத்த  உதவுவதே. மாய மானின் தோற்றத்தைக் கண்டு அவள் மயங்கினாள். மானின் குளம்புகள் நீல மாணிக்கக்கல்லின் நிறத்திலும், இரு கன்னங்களில் ஒன்று செந்தாமரை நிறம் போன்றும் மறு கன்னம் நிலத்தாமரை நிறம் போன்றும் முகத்தின் சில பகுதிகள் வெள்ளைநிறமும், அதன் கழுத்தும் வயிறும் நீல மாணிக்கக் கல் நிறமாகத் தோற்றமளித்தது என்கிறது இராமாயணம். அரக்கர்களின் தோற்றத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்ட தோற்றமது.  பூ பறிக்க வந்த சீதை அந்த மானின் தோற்றததைக் கண்டு மயங்கினாள். மான்pன் பல மாணிக்ககற்கள் பதிக்கப்பட்ட தோற்றத்தைக் கண்டவுடன் சீதை அதிசயப் பட்டாள். அந்த அதிசய மானை பிடித்துத் தரும்படி கணவனிடம் வேண்டினாள். மனைவியின் ஆசையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு மானை பிடிக்க இராமன் சென்றான். மான் விலகி ஓடியது. அதைத் தொடர்ந்து வெகு தூரம் இராமன் ஓடினான். இராமன் அதிக நேரம் சென்றும் வராததால் அவனைத் தேடிச்செல்ல இலக்குமணனை சீதை  அனுப்பினாள். அதுவே சீதையை இராவணணன் கடத்திச் செல்ல உதவியது என்கிறது இராமாயணம். இதில் வரும் உரு மாற்றம் இன்னொருவருக்கு உதவுகிறது. இந்த முறை தற்போது யுத்தக்களங்களில் பாவிக்கப் படுகிறது.

வரிக் குதிரை வரிகளின் வித்தை

வரிக் குதிரையின் உடம்பில் உள்ள கறுப்பும் வெள்ளையும் கலந்த வரிகள் அதனை கூட்டமாக நிற்கும் போதோ அல்லது தனித்து நிற்கும் போதோ சிங்கம், புலி பொன்ற எதிரிகளின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கிறது. வரிக் குதிரைகள் அருகருகே கூட்டமக நின்று புல் மேயும் பொது உரு மறைவினினால் பாதுகாப்பு அதிகரிக்கிறது. அவற்றில் உள்ள வரிகள் ஒரு பொய்த் தோற்றத்தை தாக்கவரும் எதிரிகளுக்கு கொடுக்கிறது. பார்க்கும் போது வரிகள்; ஒன்றோடு ஒன்று பிணையும் தோற்றத்தைக் கொடுப்பதால் எதிரியின் மனதில் குழப்பத்தை உருவாக்கி குதிரைகளை தனித்தனியாக பிரித்து அடையாளம் காணமுடியாதவாறு செய்கிறது. குதிரைகள் எல்லாம் அடிக்கடி திசை மாறி ஓடுவதினால் வரிகளின் அசைவு கொடுக்கும் தோற்றம் மேலும் குழப்பத்தை உருவாக்குகிறது. அதனால் சிங்கத்திற்கு ஒரு தனி வரிக்குதிரையை தேர்ந்தெடுத்து தாக்கிக் கொல்வது கடினமாகிறது. மனிதனின் விரல் அடையாளத்தைப் போல் வரிக்குதிரையின் உடம்பில் உள்ள வரிகள் குதிரைக்கு குதிரை வித்தியாசப்படும். இவ்வரிகளை வைத்தே தனித்தனியாக குதிரைகளை அடையாளம் காணமுடிகிறது. தாய் வரிக்குதிரை இந்த வரிகளை வைத்து தன் குட்டிகளை அடையாளம் கண்டு, கூடி வாழ்கிறது.

புலிகளின் மேல் உள்ள வரிகள் கூட ஒரு விதத்தில் அடர்நத புற்பற்றைக்குள் மறைந்திருந்து தாக்க உதவுகிறது.

மீன்களின் உருமாற்றம்

கடலில் வாழும் மீன்கள் செய்யும் உரு மறைப்பு அதிசயமானது. மீன்கள் மறைந்திருந்து வேட்டையாடவும், ,எதிரிகளின் தாக்குதலில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் இந்த உரு மாற்றம் பயன்பெறுகிறது. கல்மீன்(கலவாய்) என்ற ஒரு வகை மீன் கடலின் அடித்தளத்தில் கற்பாறையின் தோற்றத்தில் அசையாது தன் இரை தன்னருகே வரும் வரை   நிற்கும். இரை அருகே வந்தவுடன் கண்சிமிட்டும் நேரத்தில் லபக் என்று வாயைத் திறந்து பிடித்துண்ணும். சில மீன்கள் கடல் மண்ணுக்குள் புதைத்து இருக்கும். சமயம் வரும் போது இரையைப் பிடிக்கும்.

மூன்று வால் மீனின் மூளைத்திறன்

மூன்று வால் ( Triple Tail) என்ற ஒரு வகை மீன் உருமாற்றம் செய்யும் தனிச் சிறப்பான பண்புடையது. இந்த மீன், தான் இணைந்துள்ள சூழ்நிலைக்கேற்ப தன் உடம்பின் நிறத்தை உடனடியாக மாற்ற வல்லது. கடும் மஞ்சள் நிறத்திலிருந்து கருமை, வெள்ளி நிறம், பச்சை, அல்லது வெள்ளை நிறம் போன்ற பல வர்ணங்களைப் பெறக்கூடியது. அதுவுமன்றி இலைத்தொகுதி, குப்பை ஆகியவற்றைப்போன்ற தோற்றத்தையும் பெறக் கூடிய திறமை அதுக்குண்டு. தனக்கு அருகே நீந்தும் மீனைப் போன்று தானும் உருமாறும் தன்மை பெற்றது.

ஆராச்சியின் போது விஞ்ஞானிகள் மூன்று வால் மீன் ஒன்றையும் பறக்குடா என்ற சாதி மீனையும் தண்ணீர் நிரம்பிய போத்தில்  ஒன்றினுள் விட்டனர். பறக்குடா என்ற சாதி மீன் மற்றைய மீன்களை தாக்கி உடனே இரையாக்கும் குணம் படைத்தது. போத்திலுக்குள் மாவிலைகளும் மிதக்கவிடப்பட்டது. மூன்று வால் மீன் தன் நிறத்தை மாவிலையின் நிறத்துக்கு மாற்றி பறக்குடா மீனின் தாக்குதலில் இருந்து தப்பித்துக் கொண்டது. ஒரு கடுகளவு மூளையைக் கொண்ட மூன்று வால் மீன் எவ்வாறு தனது நிறத்தை சூழ்நிலைக்கு ஏற்றவாறு 6 நிறங்களாக மாற்றுகிறது என்பது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகயிருக்கிறது.

எண்காலியின் மை நடனம்.

எண்காலி எனப்படும் ஒக்டொபஸ் ( Octapus); கடல் வாழ் ஜந்து. மூன்று வால் மீனைப் போன்று மாநிறம், வெள்ளை, பச்சை, நீல நிறங்களாக தான் இருக்கும் சுற்றாடலுக்கு எற்றவாறு தன் நிறத்தை மாற்றும் தன்மை படைத்தது. சில சமயம் பல வர்ணங்களாக ஓரெ நேரம் தோற்றமளிக்கும். தன் உருவத்தை விதவிதமாக மாற்றிக் கொள்ளும். தன்னை எதிரிகள் தாக்கவரும் போது பயம் காரணமாக ஒரு வகை கருப்பு நிறமுள்ள மையை வெளியேற்றும். அதைச்சுற்றியுள்ள நீர் உடனே கருமை நிறமாகி எதிரிக்கு தன் இரையான எண்காலியை பார்க்க முடியாதவாறு செய்து விடும். மையினால் தோன்றும் மேகத்தைப் போன்ற தோற்றம் எண்காலியின் உருவத்தைப்போன்று ஒரு மாயைத் தோற்றத்தைக் கொடுக்கும். அதானல் தாக்க வரும் ஜந்து எமாற்றப்படுகிறது. அதுவுமன்றி வேட்டையாட வரும் ஜந்து அந்த மையினால் நுகரும் சக்தியை இழக்கிறது. . எண்காலியின் உடம்பின் தோலானது வரிகள், புள்ளிகள், திண்மமாக மாறக்கூடியது. வாய்க்கருகே இரு பெரிய பிதுங்கிய விழிகளுண்டு.

நண்டுச் சிலந்தி (Crab Spider)

நண்டு சிலந்தியானது தான் உட்காரும் மலர்களின் நறத்திற்கேற்ப தனது மேலாடையை மாற்றிக் கொள்ளும். உதாரணத்துக்கு வெள்ளை நிற மலர் மேல் அது அமரும் போது வெள்ளையாக மாறும் அதே போன்று மஞ்சள் பூவின் மீது அமரும் போது அந்நிறத்தைப் பெறும். நண்டைப்போல் அசைவதினால் அப்யெரைச் சிலந்தி பெற்றது. தான் இருக்கும் சுற்றாடலுக்கு ஏற்றவாறு தனது நிறத்தை மாற்றுவதினால் பறவைகளின் பார்வையில் பட்டு இரையாகமல் தப்பித்துக் கொள்ளும். தான் இரை தேடும் போது இலைக்கு கீழ் அல்லது மலரின் இதழ்களுக்கு கீழ் அந்நிறத்துடன் மறைந்திருந்து தாக்கும்.

முதலைக் கண்ணீர் (Crocodile Tears)

நீலிக் கண்ணீர் வடிப்பதை முதலைக் கண்ணீர் வடிக்காதே என்று சொல்வதுண்டு. முதலை தன் இரையைப் பிடிக்கமுன் கண்ணீர் வடிக்குமாம் என முற்காலத்தில் ஆங்கிலேயா,; பிரென்ச் எழுத்தாளர்களிடையே ஒரு நம்பிக்கையிருந்தது.  அந்த நம்பிக்கையை வைத்தே “முதலைக் கண்ணீர்” என்ற சொற்பதம் உருவாகியது. ஆனால் உண்மையில் முதலை, கண்ணீர் விடுவதில்லை. தண்ணீருக்கள் பெரும்பாலும் தன் நேரத்தைக் கழிப்பதால் அந்த அவசியம் அதற்கில்லை.  தண்ணீருக்கு வெளியே வரும் சமயத்தில் கண்களை நனைக்க ஒரு வித தண்ணீர் பசையொன்றை வெளியேற்றுகிறது. தண்ணீரில் நீந்தும் போது அதன் கண்கள், மூக்கின் துவாரங்கள், காதுகள் நீருக்கு வெளியே இருக்கும். ஒவ்வொரு உணவுக்கு இடையேயும் பல காலம் காத்திருக்கக் கூடியது. சில சமயம் சேற்றில் தன்  உடம்பை நனைத்து அந்நிறத்துடன் இரை தன்னைத் தேடி வருமட்டும் அமைதியாக ஆடாது அசையாது படுத்திருக்கும். தண்ணீருக்குள் ஒரு மணித்தியாலத்துக்கு மேல் இருக்கக் கூடியது முதலை. அதன் ஆயுள் ஒரு நூற்றண்டுக்கு மேற்பட்டது. தண்ணீரில் சிறு சல சலப்பு ஏற்பட்டால் கூட அதை உணர்ந்து அசைந்து இரையை தாவிப் பிடிக்க வல்லது.

முள்ளுப் பூச்சி

முள்ளுப் பூச்சிக்கும் இலைகள் காய்ந்த மரத்தடிகளுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது கடினம். பலர் முள்ளுப் பூச்சியைப் பார்த்து தடி என் நினைத்ததுண்டு. நிறம், அமைப்பு எல்லாம் தடியைப் போன்றது. அதை அறியாது அதன் மேல் அமர்ந்த சில சிறு புச்சிகள் அதற்கு இரையாவதுண்டு. தன்னையும் பறவைகளின் பார்வையிலிருந்து ஏமாற்றி அது காப்பாற்றிக் கொள்ளும். முள்ளுப் போன்ற அதன் உருவ அமைப்பினால் பறவைகள் அதை உணவாக உண்ணத் தயங்கும்.

பச்சோந்தி(chamelion)

பச்சோந்தி போல் நேரத்துக்கு நேரம் உன்னை மாற்றி வாழாதே என்று பேசும் போது பாவிக்கப்படும் உவமைச் சொல் “பச்சோந்தி”. பச்சோந்தி ஓணான் வர்க்கத்தைச் சேர்ந்தது.  மால்டீஸ் தீவில் இவற்றை அதிகமாக காணலாம்.   உணவைத் தேடும் போது தன் உடலை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்றக் கூடியது. மரத்தில் அதன் பச்சை நிறத்தோடு ஒட்டிக் கொண்டு தன் இரைக்காக காத்திருக்கும.; பச்சோந்தி கீழே இறங்கி வருவது மிக அரிது. அதன் அசைவுகள் மிக மெதுவானது, ஆனால் சில சமயம் விரைவாக ஓடினாலும் தப்பித்துக் கொள்ளும் அளவுக்கு அதன் வேகம் இருக்காது. பச்சோந்தியின் தோலானது  கறுப்பு, சிகப்பு, மஞ்சள் நிறக் கலங்களைக் கொண்டது. பார்க்க பயங்கரத் தோற்றததைக் கொண்ட படியால் அதன் அருகே செல்ல மக்கள் சற்று அஞ்சுவார்கள். இலைகளில் மறைவாக இருக்கும் போது பச்சை நிறமும். நிலத்தில் இருக்கும் போது மண்ணின் நிறத்தையும் கொண்டிருக்கும். பச்சை நிறத்தில் அது சாந்தமாக தோற்றமளிக்கும்..  கோபம் வரும் சமயம்  அதன் உடல் நிறம் மாறி வாயை பிளந்தபடி ஓசையைக் கிளப்பும். சிலர் நினைப்பார்கள் பச்சோந்தி நிறம் மாறுவது இரையைப் பிடிக்கவோ அல்லது எதிரிகளிடம் இருந்து தப்புவதற்காகவோ என்று. ஆனால் உண்மையில் சூரிய ஒளி அதன் தோலில் உள்ள கலங்களில் பட்டுத் தெறித்து நரம்புகளைப் பாதிப்பதினால்   நிறத்தை கொடுக்கிறது. இந்த நிறக் கலங்கள் விரிவடைந்து சுருங்கக் கூடியவை. அதனால் நிற மாற்றம் அடைகிறது. 

தொட்டாச் சிணுங்கி

தாவரங்கள் கூட சில உரு மாற்றத்தினால் இரையைத் தேடிக் கொள்கிறது;. தொட்டாச் சிணுங்கியைத் தொட்டவுடன் அது சிறு பூச்சிகளை இரையாகக் தன்னை மூடிக்கொள்கிறது. ;றே நெபந்தஸ் என்ற செடியானது ஒரு தொப்பியைக் கொண்ட விழு விழுப்பான குழாயைக் கொண்டது. பூச்சிகள் அந்த குழாயில் உள்ள பசையின் மணத்தால் கவரப்பட்டு அதன் விளிம்பில் போய் அமர்ந்தவுடன் குழாயின் மூடி மூடிவிடும். பூச்சியானது அத்தாவரத்துக்கு இரையாகிறது. இது போன்று தம் கவர்ச்சியையும் மணத்தையும் காட்டி ஏமாற்றி இரையைத் தேடும் தாவரங்கள் பலவுண்டு. அதே போன்று தான் விலை மாதர்களும். நாம் தூண்டிலில் சிறு மீன் போட்டு பெரிய மீன் பிடிப்பது போலத்தான் மரங்களும் செயலாற்றுகின்றன. 

ஊனுண்ணித் தாவரங்கள்.

(Utricularia)  என்ற தாவரம் தண்ணீருக்குக்கீழ் கண்ணியை உருவாக்கி நுளம்பு, ஈ, மீன் குஞ்சுகள் , மற்றும் தண்ணீருக்குக்கீழ் வாழும் பூச்சிகளை இரையாக்கிக் கொள்கிறது. ஊனுண்ணி தாவரங்கள் சத்தில்லாத மண்ணிலும் வளரக் கூடியவை. அவை பெரும்பாலும் உயிரினங்களை இரையாக்கி வாழ்வதே இதற்குக் காரணமாகும். நான்கு விதமான கண்ணி முறைகளைத் தாவரங்கள் பாவிக்கின்றன. மூடும் கண்ணி , கதவைப் போன்று இயக்கும் கண்ணி , வீழ்த்துப் பொறி, ஈ ஒட்டும் பசைக் கண்ணி ஆகியன. வீழ்த்தும் பொறியை யானை, புலி போன்ற மிருகங்களைப் பிடிக்க மனிதர்கள் பாவிப்பார்கள். எலிப் பொறியின் இயக்கத்தையும் தாவரங்களின் கண்ணி முறையில் இருந்து கண்டுபிடித்தான். மனிதர்;களையும் பிடித்துண்ணும் செடிகள் இல்லையென்று கூற முடியாது. பெரிய வால்போன்ற தண்டினால் பெரிய மிருகங்களையும் மனிதர்;களையும் கூட சுற்றிப் பிடித்து இவை இரையாக்குகின்றன.

முடிவுரை

மனிதன் பூச்சிகளையும் , நீரில் வாழும் உயினங்களையும் , பறவைகளையும். மிருகங்களையும் தாவரங்களையும் பாhத்து செயற்கையான உரு மாற்றம் செய்து தனது எதிரியைத் தாக்கவும் அவனிடம் இருந்து தன்னைப் பாதுகாத்து கொள்ளவும் வழிவகைகள் வகுக்கிறான். ஆனால் அதே சமயம் அந்த முறைகளைப் பயன் படுத்தி, இயற்கையின் சிருஷ்டிப்புகளையும் அழிக்கிறான். தவிர உலகம் என்ற  நாடக மேடையில் வேஷமெனும் உருமாற்றத்தையும் போடுகிறான். பொதுவாக  சிவாஜி போன்ற மேடை நடிகர்கள் தம் வாழ்வில் நடிப்பதில்லை. ஆனால் மேடையில் திறமையாக நடிக்க  முடியாதவர்கள் வாழ்வில் உருமாறி நடித்து விடுகிறார்கள். ஆக மொத்தத்தில் உருமாற்றம் என்பது தாவர விலங்கு வகைக்குள் அடங்கும் அனைத்து ஜீவராசிகளிற்கும் வேண்டிய ஒரு அம்சமாகிவிட்டது. அது இயற்கையானதா செயற்கையானதா என்பதைவிட அதன் நோக்கம் சமூக நலன்; நிறைந்ததாக இருப்பது வரவேற்கத்தக்கது.

 

*******