யாழ் குடநாட்டுக்கான நன்னீர் வழங்கல்

                                                           

யாழ் குடாநாட்டின் நீர் தரம் பற்றிய கட்டுரை ஒன்றை யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தை சார்ந்த  கலாநிதி வி நடராஜா , 1994 ஆம் ஆண்டு கொழும்பு 20 WEDC  மகாநாட்டில் சமர்ப்பித்தார்.

 கடந்த காலத்தில்;, யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள நீர் வழங்கல்; பிரச்சினை பற்றி பல்வேறு தொழில் சார்ந்த பல முன்மொழிவுகள்  உண்டு. இதன் அடிப்படையில் பல குழுhய் கிணறுகள்  செயல்படுத்துப்பட்டன. வரும் தசாப்தங்களில் யாழ்ப்பாண குடாநாட்டில்; நல்ல தண்ணீர் பற்றாக்குறை எதிர்கொள்ள வேண்டிவருமென ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

 குடாநாட்டில்  ஒரே ஒரு மழைகாலப்; பருவஆறு, 18 கிமீ; நீளமுள்ள வழுக்கை ஆறு ஒன்றே ஆகும். இவ்வாறு மழைக்கால நீரைச் சேகரித்து  சேகரித்து தெல்லிபளையில் ;ஆரம்பித்து தென்மேற்குத் திசையாக ஓடி. கந்தரோடை, சண்டிலிர்பாய், அளவெட்டி, வட்டுக்கோட்டையூடாக யாழ்ப்பாண ஏரியில், அராலி ஊரருகே விழுகிறது. இவ்வாற்றில் நிரோட்ம் அதிகம் இல்லை.

 இவற்றைத் தவிர்த்து தொண்டமானாறு, தொண்டைமான் என்ற சோழ தளபதியால்; உருவாக்கப்;பட்ட ஆறு. , நாவற்குழியில் உற்பத்தியாகும் உப்பை இந்தியாவுக்கு பருத்தித்துறை ஊடாக  ஏற்றுமதி செய்ய முற்காலத்தில் பாவிக்கப்பட்ட ஆறாகும்.  தொண்டமானாற்றை (உப்பு ஆறு) என்றும் அழைக்கப்பாரகள். இது ஒரு இயற்கையாகத் தோன்றிய நதி அல்ல. இந்த நதி நீரை, வடமராட்சி பகுதிக்கு நன்னீர் பகிர பாவிக்கலாம் எனக் கருதப்பட்டது.

 வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிப்; பகுதியில் நெற்செய்கைக்கு உதவுவதற்காக, பல குளங்கள், பண்டைய தமிழ் மன்னர்களால்; கட்டப்பட்டன. இவற்றில் இரணமடு, வவுனிக்குளம் , பெரியமடுகுளம் (Ginats Tank) , அக்கரையான்குளம், பாவக்குளம்,  கல்மடுகுளம், முள்ளிக்குளம், நம்பன்குளம், நாகமடுவான் குளம் , மாமடுவ குளம், சேமமடு குளம்  போன்ற பல குளங்கள் அடங்கும்;. இக்குளங்களுக்கு மழைக்காலங்களில், ஆறுகளில், மழை நீர் நிரப்பி ஓடிச் சேரும்;. இந்நன்னீரை குடிநீர் விநியோகத்திற்கும் நெல் விளைச்சலுக்கும் பாவிக்கலாம். இதனால் வன்னியை இலங்கை அரிசி கிண்ணம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது. வன்னியர்கள் (விவசாயிகள்) என்ற பெயரில் இருந்து வன்னி என்று அழைக்கப்பட்டது. சோழர்களின் ஆக்கிரமிப்பின் போது வட இலங்கைக்குத் தென் இந்தியாவில் இருந்து வந்த வன்னியர் இனமென வரலாறு சொல்கிறது. தென் இலங்கைக்கு அரிசி வழங்கும் கிண்ணமாக வன்னி இருப்பதால்,; யாழ்குடாநாட்டுக்கு நன்நீர்வழங்கும் பாத்திரமாக ஏன் செயல்படுத்த முடியாது?

 இப்போது  புகையிலை வளர்ப்பதில்; அரசாங்கம் கட்டுப்பாடுகள் கொண்டு வந்துள்ளது. இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட முடிவு. யாழ்குடா நாட்டு விவசாயிகள் புகையிலை வளர்ப்பை நம்பி வாழ்பவர்கள். அவர்;களின் தொழில் இதனால் பாதிப்படைகிறது. சுருட்டுத் தொழில் படிப்படியாக மறைந்து வருகிறது. மாற்று விவசாயமாக ஸ்ட்ராபெர்ரி, ப்ளாக்பெர்ரி, ஆப்பிள்கள், பிளம்ஸ், மா, பலா போன்றவற்றை உற்பத்திசெய்து  ஏற்றுமதிச் சந்தையை குறிவைக்கலாம். இதனால் வடமாகாணத்துக்கு அன்னிய நாட்டுச் செலாவணி கிடைக்கும்.

காலத்தோடு; தொழில்நுட்பம் வளர்ந்ததினால் குறைந்த செலவில் நீர் வழங்கல் முறையைச் செயல்படுத்த முடியும். நீர் வளங்களைப் பகிர்ந்து கொள்ளவும் முடியும் முற்காலத்து “துலா” போன்ற அமைப்புகளை தற்போது காண்பது அரிது. அதற்குப் பதிலாக மோட்டார் பம்புகள் வந்துவிட்டன.

மாற்று நன்னீரைப் பெற வேறு சில தீர்வுகளைக் கருதலாம்:

1 பல மத்திய கிழக்கு நாடுகளில் கடல் நீரைக் குடிநீராக மாற்றும் ஆலைகள் கடல் நீரில் உள்ள  உப்பு நீக்குமுறை (Desalination Process)  செயல்பட்டு வருகிறது.

2. யானையிறவு ஏரியில் உள்ள மழை நீர் யாழ்ப்பாணக் குடநாட்டில் தண்ணீர் வினியோகிக்கப்  பயன்படுத்த வழிவகுக்கலாம். இதற்கான திட்டம் முன்பு வகுக்கப்பட்டதாக கேள்வி. இதற்கு யானையிறவு ஏரியில்  மீன்படித்கும்; மீனவர்கள் இருந்து ஆட்சேபனை வரலாம். ; பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் சங்குப்பிட்டி பாலத்தை அமைக்க மீனவர்களிடையே பலத்த எதிர்ப்பு இருந்ததினால் கைவிடப்பட்டது. அப்பாலம் இப்போது கட்டப்பட்டதால் புத்தளம் மன்னார், பாதை  வழியாக யாழ்ப்பாணம் செல்லும் தூரம் சுமார் 50 மைல்கள் குறுகி உள்ளது. -புத்தளம்-அனுராதபுரம்-வவுனியா-கிளிநொச்சி யாழ்ப்பாணம் ஏ9; பாதை வழியே சுமார் 250 மைல்கள் செல்லவேண்டியிருக்கிறது. - இந்தப் பாலம் இறுதியில், முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் கட்டப்பட்டது.

சேது சமுத்திரத் திட்டம் இந்தியாவால் செயல்படுத்தப்பட்டால், மன்னார் பூநகரி,. காங்கேசன்துறை முக்கியமான துறைமுகங்களாக மாறக் கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. திரு ஆறுமுகம்ட போன்ற தமிழ் நீர்ப்பாசன பொறியாளர்கள் எழுதிய முந்தைய அறிக்கைகளின் அடிப்படையில் யாழ்குடா நாட்டுக்கு நன்னீர் வழங்க வழிகளைச் செயல்படுத்தலாம். பிற நாடுகளில் வாழும்; தமிழர்கள் மூலம் ஒரு முதலீட்டுத் திட்டத்தை உருவாக்கி யானையிறவு ஏரியை நன்னீர் ஏரியாக மாற்ளும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யலாம் .

3. மூன்றாவது மாற்று, வன்னியில்  முதலில் குறிப்பிட்ட பெரும் நல்ல தண்ணீர் குளங்கள் அதிகமாயுள்ளது என்பதை யாவரும் அறிந்ததே. இக்குளங்களில் இருந்து யாழ்ப்பாணத்துக்குக் குழாய்கள் மூலம் நன்னீரைப் பகிரமுடியும். ஆகக் கூடிய தூரம் 100 மைல்களுக்கு மட்டுமே குழாய்கள் புதைக்க வேண்டிவரும்;. இக் குழாய்கள் மூலம் குளங்களில் இருந்து யாழ்ப்பாண குடநாட்டுக்கு எடுத்துச் சென்று, சுத்திதரித்து யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு வழங்கமுடியம். இதனால் நிலத்துக்கடியில் உள்ள நீர் பாவிப்பும் குறையும். இத்திட்டத்தைச் செயல்படுத்த அதிக முதலீடு தேவை,  பல்வேறு நாடுகளில் இருந்து தமிழ் முதலீட்டாளர்கள் இந்தத் திட்டத்தில் பங்கு பெற முன்வருவார்கள்.

மகாவலி கங்கை மூதூர் அருகே கடலோடு கலக்கிறது. ஒரு காலத்தில் இலங்கை அரசாங்கத்திற்கு  மகாவலி கங்கை நீரை யாழ்ப்பாணக் குடாநாட்டுக்கு திiசை  திருப்பும் ஒரு யோசனை இருந்தது. ஆனால் திசை திருப்பும் தூரம், 100 மைல்களுக்கு மேற்பட்டது. வன்னியில் இருந்து குளத்தின் நீரைத் திசை திருப்பவும் விடத் தூரம் அதிகமானது . அதோடு மட்டமல்ல கிழக்கு மாகாணத்தின் ஒப்புதலும் அவசியமாகிறது, இல்லையேல்; கர்நாடகா – தமிழ்நாட்டுக் காவேரி நதி நீர் பிரச்சனை போலாகிவிடும்.

எந்தத் திட்டத்தையும் செயல்படுத்த ஒரு சாத்தியமான ஆய்வு செய்யப்பட வேண்டும் மற்றும் செலவு மதிப்பீடு அவசியம். நிச்சயமாக ஒரு பலம், பலவீனம், வாய்ப்புகள் , அச்சுறுத்தல்கள் (SWOT Analysis)  உள்ளடக்கிய பகுப்பாய்வு தேவை. வெளிநாட்டில் வாழும் தகுதியும் அனுபவம் பெற்ற, படித்த தமிழ் முதியோர்களும், இளைஞர்களும் இந்தத் திட்டத்தில் ஈடுபட ஒரு முதலீட்டு நிதி நிறுவுவதை பற்றிச் சிந்திக்கும் நேரம் வந்துவிட்டது

இதனைச்  செயலாக்க, ஆய்வினை யாழ்ப்பாண பல்கலைக்கழகம், இலங்கை நீர்ப்பாசனத் துறை உதவியுடன் நடத்தப்பட வேண்டும்.; வெளிநாட்டில் வாழும் தமிழ் முதியோர்கள் தங்கள் தாய் நாட்டிற்குச் செய்ய ஒரு கடமை இருக்கிறது என்பது பலர் கருத்து. இது ஒரு  சிறந்த வாய்ப்பாகும்

 

11 தை 2017