ONTARIO UNITED TAMIL SENIORS ASSOCIATIONS eGroup -(OUTSAG)

ஓன்றாரியோ ஐக்கிய தமிழ்; முதியோர் சங்கங்களின் சமூக ஊடக வளையக் குழு (OUTSAG.com)

 இந்த சமூக ஊடகக் குழு (இ-குழு) கனேடிய பல் கலாச்சார சூழலில், ஒன்றாரியோ தமிழ் முதியோர் சங்கங்களை ஒருங்கிணைத்து, ஒற்றுமையை நிலைநாட்டி, கணனித் துறை,  படைப்பாற்றல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் தகவல் பகிர்வு  ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கத்தோடு இயங்கி, சங்கங்களின் வளர்ச்சிக்கு துணைபோகிறது. சுமார் 8000 தமிழ் முதியோர்கள் வாழும் ஒன்றாரியோ மாகாணத்தில். 4000 தமிழ் முதியவர்கள்  15 ஆதாயமற்ற சங்கங்களில் அங்கத்தினரகளாக இருக்கிறார்கள். இச்சங்கங்கள்; டொராண்டோ, மசிசாகா, பிரம்டன், மார்க்கம், எட்டபிக்கோ, வோன் போன்ற சுற்றுபுற நகரங்களிலும்,   ஒட்டாவா, வோட்டர்லூ ஆகிய நகரங்களிலும் செயல்படுகின்றன. தமிழ் மரபை ஊக்குவித்தல், கலாச்சார நடவடிக்கைகள், சுகாதார விழிப்புணர்வை ஏற்படுத்தல், கணனி அறிவை விருத்தி செய்தல், வாசிப்பு மற்றும் எழுத்து திறன்களை வளர்த்தல் போன்றவற்றை ஊக்குவிப்பதை  இக்குழு நோக்கமாகக் கொண்டது. இக்குழு ஆங்கிலத்தில் சுருக்கமாக OUTSAG குழு என அழைக்கப்படும்   இணையத்தளத்தில் வெப்பக்கம் www:OUTSAG.Com

OUTSAG இ-குழுவின் குறிக்கோள்கள்

 •                  ஒன்றாரியோ மாகாணத்தில் வாழும் முது தமிழர்கள்  மத்தியில் கணனி அறிவை மேம்படுத்தல்.

•                  மின்னஞ்சல், முகநூல்;, கூகுல், லிங்கின், டுவிட்டர், யூடியூப்  மற்றும் வளைப் பக்கம் வழியாக சங்கங்கள் இடையே ஒரு இணைப்பை சமூக இ-குழு உருவாக்கும்.

•                  தமிழ் முதியோர் சங்கங்கள் நடத்தும் கலாச்சார நிகழ்ச்சிகள், பயிற்ச்சி பட்டறை, கருத்தரங்குகள பற்றிய தகவல்களைப சங்கங்களோடு; பகிர்தல்.

•                  சங்கக் கணக்கு, சங்க ஆவணங்களை மொழிபெயர்த்தல், மானியம் பெற ஆலோசனை வழங்கள், விண்ணப்பம் தயாரித்தல். சங்கத்தின் யாப்பு தொடர்பான சட்ட ஆலோசனை வழங்கள்.

•                  சங்கங்களின் இணையத்தள வெப் பக்கத்தை உருவாக்க உதவுதல்.

சங்க நிகழச்சிகள், அங்க்தினர் மரண அறிவித்தல்கள்,; சுகாதார, இலக்கிய, ஆன்மீக கருத்தரங்குகள் ஆகிய தகவல்கள் உள்ளடக்கிய  மாதாந்த மின் செய்திக் கடிதம் (Electronic News letter)  வெளியிடுதல். இது மின்னஞ்சல் மூலம் விநியோகிக்கப் படுத்தப்படும்;.

•                  சங்க அங்கத்தினர்களின் இறுதிச் செலவுகள் தொடர்பாக பீல்முதுதமிழர் நட்புறவுச் சங்கத்தோடு(PSTBA)  இணைத்தல்.

•                  சங்க அங்கத்தினரிடையே  இலக்கிய படைப்பு.  வாசிப்பு வளர உதவுதல்.; இணைக்கப்பட்ட சங்க உறுப்பினர்களிடையே ஆண்டுக்கு ஒரு தடவை தமிழ் இலக்கிய போட்டிகள் நடத்துவதன் மூலம் முதியோரிடையே தமிழ் இலக்கிய ஆர்வத்தையும், திறனையம் வளர்த்தல். சங்கங்களின் உறுப்பினர் படைப்புகள் மின்புத்தக வடிவில் வெளியிட தொழில்நுட்ப உதவி வழங்குதல்;.

•                  சங்கத்தில் மின்நூல் வாசகசாலையை உருவாக்க உதவுதல்

•                  அங்கத்தினர்களின் படைப்புகள் உள்ளடக்கிய வருடாந்த சங்கச் சஞ்சிகையை மின் சஞ்சிகையாக வெளியிட உதவுதல்.

•                  இலங்கை வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள முது தமிழர் சங்கங்களோடு இணைந்து, வழிகாட்டி , இரட்டை நகரம் திட்டங்களின் கீழ், மற்றும் நிதி உதவி வழங்க ஆவன செய்தல்.

•                  இலங்கை மற்றும் தென் இந்தியாவில் இருந்து ஒன்றாரியோவுக்கு வருகை தரும் தமிழ் பிரமுகரை ஐக்கியமாக முது தமிழர் சங்கங்கள் வரவேற்க ஏற்பாடுசெய்தல்.

முதியோர் சங்கங்கள் நடத்தும் நடைபவனி, சங்கத்திற்காக நிதி  சேர்க்கும் முகமாக நடத்தும் வருடாந்த கலாச்சார  நிகழ்ச்சியும் இரவுபோசனம் போன்றவற்றில் சங்கங்கள் இணைந்து செயலாற்ற வழிகாட்டல்.

                                              

வெப்பக்கத்தில் சங்கத்தின் பெயரை சொடுக்கினால் இ-குழுவில் உள்ள சங்கத்துக்காக ஒதுக்கப்பட்ட பக்கத்தைப் பார்க்கலாம். அதை பாவித்து விபரங்கள் பெற்று இணையலாம். 

தமிழ் முதியோர் சங்கங்கள்.

  • பீல் முது தமிழர் சங்கம் – மிசிசாகா.
  • ஒட்டாவா முது தமிழர் சங்கம் ஒட்டாவா
  • மார்க்கம் முது தமிழர் சங்கம் மார்க்கம்
  • மிடில் பீல்ட் முதுதமிழர் ஆரோக்கிய சங்கம்- மார்க்கம்
  • பிரம்டன் முது தமிழர் சங்கம் - பிரம்டன்
  • ரொரன்றோ முது தமிழர் சங்கம் ரொரன்றோ.
  • பீல்முதுதமிழர் நட்புறவுச்சங்கம் மிசிசாகா.
  • வசந்தம் முதுதமிழர் ஆரோக்கிய மையம் ரொரன்றோ.
  • வோட்டர்லூ தமிழ்கலாச்சார நிலையம்; - வோட்டர்லூ.
  • சிறீலங்கா தமிழ் முதியோர் எட்டபிக்கோ குழு எட்டபிக்கோ.
  • டர்ஹாம் தமிழர் சங்கம் டர்ஹாம்.
  • பொக்ஸ்குரூவ் சமூக  நலன்புரி சங்கம் - மார்க்கம்

முதுதமிழர் சங்கங்கள் இவ் இ-குழு மூலம் பெறும் பயன்கள்

•                  ஓன்றாரியோ முது தமிழர்களை ஒன்றிணைத்து ஒற்றுமையை நிலைநாட்டுகிறது.

•                  சங்க அங்கத்தினர்களிடையே கணனி ஆற்றலை மேம்படுத்தி சமூக வளையத்தை பாவிக்க வழிகாட்டல்.

•                  கலாச்சார சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய விபரங்களை பரிமாறல்.

•                  கனடா பல கலாச்சாரத்தோடு இணைதல்

•                  சங்கங்களில் மின்நூல் வாசகசாலைளை உருவாக்கி வாசிக்கும் ஆர்வத்தை தூண்டல்.

•                  ஆரோக்கியம், இலக்கியம், இயற்கை, பல் கலாச்சாரம் பற்றிய கருத்தரஙகுகள்,    கலந்துரையாடல் நடத்தல்

•                  வாசித்தல், எழுதல், பகிர்தல் ஆகியவற்றை முதயோரிடையே தூண்டி,   எழுத்தாளர்களை உருவாக்கல். தனிமையை போக்குதல்.

•                  சங்கத்தின் வருடந்த சஞ்சிகையை மின் சஞ்சிகையாக வெளியிட உதவுதல்.

•                  சங்க அங்கத்தினர் எண்ணிக்கையை அதிகரிக்க ஆலோசனை வழங்கள்.

•                  இலங்கையில் உள்ள தமிழ் முது தமிழர் சங்கங்களோடும் பிறநாடுகளில் உள்ள முதுதமிழர் சங்கங்களொடு இணைந்து செயல்படுதல்.

•                  இறுதிச் செலவுக்காக “பீல்” முதுதமிழர் நட்புறவுச்சங்கத்தோடு இணைய வழிகாட்டல்.

               “கணனி மூலம் உலகம் உங்கள் விரல்களுக்குள் அடங்குகிறது:.

                                                                        *******

‘டயாலிசிஸ்’ (DIALYSIS)

யாலிசிஸ்’ (Dialysis) என்ற வார்த்தையை இப்போது எல்லாம் அடிக்கடி கேட்க முடிகிறது. தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என யாரோ ஒருவருக்கு டயாலிசிஸ் செய்யப்படுவதாக கேள்விப்படுகிறோம். “சர்க்கரை நோய் முற்றினால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”, “சிறுநீரகங்கள் பழுதுபட்டால் டயாலிசிஸ் செய்ய வேண்டும்”, “டயாலிசிஸ் செய்யும் அளவுக்கு நிலைமை முற்றினால் ஆள் அவ்வளவுதான். காப்பாற்றுவது கஷ்டம்” என்று ஆளாளுக்கு ஒரு புரிதல். இவற்றில் எவை எல்லாம் உண்மை? டயாலிசிஸ் என்றால் என்ன? கடந்த தலைமுறையைவிட இப்போது மூன்று மடங்குக்கும் அதிகமானவர்களுக்கு டயாலிசிஸ் செய்யப்படுகிறது. இதற்கு என்ன காரணம்? டயாலிசிஸ் செய்துகொள்பவர்களுக்கு ஆயுள் குறைவா? இப்படிப் பல்வேறு சந்தேகங்கள் நிலவுகின்றன.

நமது உடலில் உள்ள இரண்டு சிறுநீரகங்களும் 24 மணி நேரமும் ரத்தத்திலிருந்து கழிவுகளை பிரித்து சுத்தப்படுத்தும் வேலையைச் செய்கின்றன. சிறுநீரகங்கள் பிரித்தெடுக்கும் சிறுநீர், சொட்டுச் சொட்டாகச் சிறுநீர்க் குழாய் மூலம் சிறுநீர்ப்பைக்குக் கொண்டு செல்லப்படுகிறது. தினமும், இரண்டு சிறுநீரகங்களுக்குள்ளும் 180 லிட்டர் ரத்தம் செல்கிறது. சிறுநீரகங்களில் உள்ள 140 மைல் நீளம்கொண்ட சல்லடை போன்ற நுண்ணியக் குழாய்கள் வழியாக ரத்தம் பயணித்து, அதில் உள்ள கழிவுகள் நீக்கப்படுகின்றன. இந்தச் செயல்பாடு 15 சதவிகிதத்துக்குக் கீழ் குறையும் வரை எந்தவிதப் பாதிப்பும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழ முடியும். சிறுநீரகம் செயல்திறன் 15 சதவிகிதத்துக்கும் கீழ் குறையும்போது, அளவுக்கு அதிகமான நீர் வெளியேறாமல் கால், நுரையீரலில் தங்கும். நச்சுக்கள் வெளியேறாமல் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். இதையே சிறுநீரக செயல் இழப்பு என்கிறோம். இதை, திடீர், நாட்பட்டது, முற்றியநிலை என மூன்று வகையாகப் பிரிக்கலாம்.

திடீர் சிறுநீரகச் செயலிழப்பு (Acute kidney failure)

நன்கு வேலை செய்துகொண்டிருந்த சிறுநீரகங்கள், திடீரென செயலிழந்துவிடக்கூடும். விபத்தில் ரத்த இழப்பு, அதீத ரத்த அழுத்தக் குறைவு, சிறுநீரகங்களில் கிருமித் தொற்று, சில வகை மருந்துகளுக்கு எதிர் விளைவு, சிறுநீரக குழாய் கல் அடைப்பு, ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தால் சிறுநீர் அடைப்பு போன்றவற்றால் இது ஏற்படலாம். இவர்களுக்கு தற்காலிகமாக டயாலிசிஸ் சிகிச்சைத் தேவைப்படலாம். பெரும்பாலான சமயங்களில் இரண்டு முதல் நான்கு வாரங்களில் சிறுநீரகங்கள் சரியாகி வேலை செய்யத் தொடங்கும். டயாலிசிஸ் சிகிச்சை தொடர்ந்து செய்ய வேண்டிய அவசியம் இருக்காது. தகுந்த சிகிச்சை எடுப்பதன்மூலம் முற்றிலும் பழைய நிலைக்கு சிறுநீரகங்கள் திரும்பிவிடும்.

நாட்பட்ட சிறுநீரகச் செயலிழப்பு (Chronic kidney failure)

மாதக் கணக்கில் அல்லது வருடக் கணக்கில் சிறுநீரகங்கள் படிப்படியாகப் பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவதால் ஏற்படுகிறது. இதற்கு சர்க்கரைநோய், உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக இருக்கின்றன.

முற்றிய, நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு (End stage kidney failure)

சிறுநீரகங்கள் மீண்டும் வேலை செய்ய வாய்ப்பே இல்லை. இந்தப் பிரச்னை ஏற்பட, நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு, மரபணுக் கோளாறுகள், சிறுநீரகங்களில் கட்டி, சிறுநீரக நாள அழற்சி ஆகியவை முக்கியக் காரணங்கள்.  சிறுநீரகம் முற்றிலும் செயல்இழந்துவிட்டால் டயாலிசிஸ் என்ற செயற்கை முறையில் சுத்தப்படுத்தும் சிகிச்சை தேவைப்படும். இதில், ஹீமோடயாலிசிஸ், பெரிட்டோனியல் டயாலிசிஸ் என இரண்டு வகை உள்ளன. இவை இரண்டும் தற்காலிக தீர்வு மட்டுமே. சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை மட்டுமே இவர்களுக்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும். 

ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis - எந்திர ரத்தச் சுத்திகரிப்பு)

அசுத்த ரத்தத்தைச் செயற்கைமுறையில் சுத்தப்படுத்துவதுதான் ஹீமோடயாலிசிஸ். டயாலிசிஸ் சிகிச்சையின்போது, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், நீர் உள்ளிட்டவை எந்திரங்கள் உதவியுடன் நீக்கப்பட்டும். இதற்கு, உடலில் இருந்து ஒரு ட்யூப் வழியாக ரத்தம் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் அனுப்பப்படும். அங்க அது சுத்திகரித்து, மற்றொரு குழாய் வழியாக உடலுக்குள் திரும்ப அளிக்கப்படும்.

ஹீமோடயாலிசிஸ் செய்யப்படும் முறை

முதன் முறையாக டயாலிசிஸ் செய்யும்போது, தற்காலிகமாக கழுத்துப் பகுதியில் சிறு துளையிட்டு குழாய்கள் பொருத்தப்படும். அதேநேரத்தில், கையில் ஆர்டீரியோவீனஸ் ஃபிஸ்டுலா (Arteriovenous fistula) எனும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதாவது, இவர்கள் இடது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, சிறிய இயந்திரம் பொருத்தப்படும். இது, ரத்தத்தை போதுமான அழுத்தத்தில் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் செலுத்த உதவும். இந்த அறுவைசிகிச்சை செய்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, கழுத்துப் பகுதியில் குழாய் வழியாக டயாலிசிஸ் செய்யப்படும். ஃபிஸ்டுலா தயாரானதும், கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே டயாலிசிஸ் செய்யப்படும். 

இந்தமுறையில், மணிக்கட்டு பகுதியில் உள்ள நல்ல ரத்தம் செல்லும் பெரிய ரத்தநாளத்திலும் (Artery), அசுத்த ரத்தம் செல்லும் சிறிய ரத்தநாளத்திலும் (Vein) ரத்தம் ஏற்றுவதுபோல ஊசி குழாய் செலுத்தப்படும். உடலில் இருந்து வரும் கெட்ட ரத்தம், டயலைஸர் (Dialyzer) இயந்திரத்துக்குள் செல்லும். இந்த இயந்திரத்தின் உள்ளே டயாலிசேட் (Dialysate) எனும் திரவம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். டயலைஸரின் உட்பகுதியில் உள்ள ஃபைபர்கள், வேண்டாத சிவப்பணுக்கள், நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டும். சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மட்டும் மீண்டும் உடலுக்குச் சென்றுவிடும்.

நோயாளிகளின் பாதிப்புக்குத் தகுந்தவாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டும். டயாலிசிஸ் செய்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தாலும், சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான் நிகழும். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டயாலிசிஸ் முறை ஏற்றது. ஆனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு டயாலிசிஸ் உகந்தமுறை அல்ல. இவர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது.

ஹீமோடயாலிசிஸ் (Hemodialysis - எந்திர ரத்தச் சுத்திகரிப்பு)

அசுத்த ரத்தத்தைச் செயற்கைமுறையில் சுத்தப்படுத்துவதுதான் ஹீமோடயாலிசிஸ். டயாலிசிஸ் சிகிச்சையின்போது, ரத்தத்தில் உள்ள நச்சுக்கள், நீர் உள்ளிட்டவை எந்திரங்கள் உதவியுடன் நீக்கப்பட்டும். இதற்கு, உடலில் இருந்து ஒரு ட்யூப் வழியாக ரத்தம் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் அனுப்பப்படும். அங்க அது சுத்திகரித்து, மற்றொரு குழாய் வழியாக உடலுக்குள் திரும்ப அளிக்கப்படும்.

ஹீமோடயாலிசிஸ் செய்யப்படும் முறை
முதன் முறையாக டயாலிசிஸ் செய்யும்போது, தற்காலிகமாக கழுத்துப் பகுதியில் சிறு துளையிட்டு குழாய்கள் பொருத்தப்படும். அதேநேரத்தில், கையில் ஆர்டீரியோவீனஸ் ஃபிஸ்டுலா (Arteriovenous fistula) எனும் சிறு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதாவது, இவர்கள் இடது கை மணிக்கட்டுக்கும் முழங்கைக்கும் இடைப்பட்ட பகுதியில் சிறிய அளவில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டு, சிறிய இயந்திரம் பொருத்தப்படும். இது, ரத்தத்தை போதுமான அழுத்தத்தில் டயாலிசிஸ் இயந்திரத்துக்குள் செலுத்த உதவும். இந்த அறுவைசிகிச்சை செய்து ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும். அதுவரை, கழுத்துப் பகுதியில் குழாய் வழியாக டயாலிசிஸ் செய்யப்படும். ஃபிஸ்டுலா தயாரானதும், கையில் உள்ள ரத்தக் குழாய் வழியே டயாலிசிஸ் செய்யப்படும். 

இந்தமுறையில், மணிக்கட்டு பகுதியில் உள்ள நல்ல ரத்தம் செல்லும் பெரிய ரத்தநாளத்திலும் (Artery), அசுத்த ரத்தம் செல்லும் சிறிய ரத்தநாளத்திலும் (Vein) ரத்தம் ஏற்றுவதுபோல ஊசி குழாய் செலுத்தப்படும். உடலில் இருந்து வரும் கெட்ட ரத்தம், டயலைஸர் (Dialyzer) இயந்திரத்துக்குள் செல்லும். இந்த இயந்திரத்தின் உள்ளே டயாலிசேட் (Dialysate) எனும் திரவம் ரத்தத்தைச் சுத்திகரிக்கும். டயலைஸரின் உட்பகுதியில் உள்ள ஃபைபர்கள், வேண்டாத சிவப்பணுக்கள், நீர் மற்றும் கழிவுகளை வடிகட்டும். சுத்திகரிக்கப்பட்ட ரத்தம் மட்டும் மீண்டும் உடலுக்குச் சென்றுவிடும்.

நோயாளிகளின் பாதிப்புக்குத் தகுந்தவாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிசிஸ் மேற்கொள்ள வேண்டும். டயாலிசிஸ் செய்வதற்கு மூன்று முதல் நான்கு மணி நேரம் வரை ஆகும். வாரத்துக்கு மூன்று முறை டயாலிசிஸ் செய்தாலும், சிறுநீரகத்தின் வேலையில் 30 சதவிகிதம்தான் நிகழும். வீட்டில் இருப்பவர்களுக்கு இந்த டயாலிசிஸ் முறை ஏற்றது. ஆனால், வேலைக்குச் செல்பவர்களுக்கு டயாலிசிஸ் உகந்தமுறை அல்ல. இவர்கள் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதே சிறந்தது.

 பெரிடோனியல் டயாலிசிஸ் (Peritoneal Dialysis - வயிற்று ஜவ்வு வழி திரவச் சுத்திகரிப்பு)

சிறு அறுவைசிகிச்சை மூலம் வயிற்றில் ட்யூப் ஒன்றை நிரந்தரமாகப் பொருத்தி, அதனுள் டயாலிஸேட் எனும் சுத்திகரிப்பு நீரைச்செலுத்தி, நோயாளிகளே டயாலிசிஸ் செய்துகொள்வது பெரிட்டோனியல் டயாலிசிஸ். பொதுவாக, நமது நாட்டில் இந்த சிகிச்சைமுறை மேற்கொள்ளப்படுவது இல்லை. எனவே, ஹீமோடயாலிசிஸ் சிகிச்சையைத் தவிர்க்க வேண்டும் என்றால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சையே பரிந்துரைக்கப்படுகிறது.

சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை (Kidney transplantation)
தொடர்ந்து டயாலிசிஸ் செய்வதால் ஏற்படும் சோர்வு உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்கவும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆரோக்கியமாக உள்ள ஒருவரின் இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை தானமாகப் பெற்றோ, விபத்து போன்ற காரணங்களால் மூளைச்சாவு அடைந்தவர்களிடம் தானமாகப் பெற்றோ பாதிக்கப்பட்டவருக்கு சிறுநீரகத்தைப் பொருத்தலாம். பொதுவாக, சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், தங்கள் வாழ்நாள் முழுவதும் நோய் எதிர்ப்பு சக்தி, சிறுநீரகத்தை   தாக்காமல் இருப்பதற்கான மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பிலும் இருக்க வேண்டும்.

 

சிறுநீரகம் செயலிழப்பு நோயாளிகளுக்கான டயட்

தண்ணீர் அளவாகக் குடிக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் குடிப்பதால், கால், நுரையீரலில் நீர் கோத்து பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தத்தில் நச்சுக்கள் அளவும் அதிகமாகிக்கொண்டே செல்லும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் அதிகமாகிறது.

அன்றாட உணவில் உப்பைத் தவிர்க்க வேண்டும். உப்பு சேர்க்கப்பட்ட கொழுப்பு நிறைந்த நொறுக்குத்தீனிகளைத் தவிர்க்க வேண்டும். உப்பு தாக்கத்தை அதிகரிக்கும்.

ஜூஸ், குளிர்பானங்கள், காபி, டீ போன்றவற்றைத் தவிர்க்க வேண்டும்.

அதிகம் நீர் நிறைந்த காய்கறிகள் மற்றும் பழங்களைக் குறைவாகச் சாப்பிட வேண்டும். 

பொட்டாசியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும். புரதச்சத்துள்ள உணவை மிதமான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.


சிறுநீரகப் பாதிப்பைத் தடுக்க...

சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், மருந்தே தேவை இல்லை. நமது உணவுப் பழக்கத்தின் வாயிலாகவே அதனைச் சரி செய்துகொள்ள முடியும்.

ரத்தத்தில் கலந்திருக்கும் யூரியா, கிரியாட்டினின் உள்ளிட்ட நச்சுக்களை வெளியேற்றவும், உடலின் நீர் சமநிலையைக் காக்கும் பணியையும் சிறுநீரகம் செய்கிறது. எனவே, அதன் பணியைக் குறைக்கும் பொருட்டு எளிமையாகச் செரிமானம் ஆகக்கூடிய காய்கறிகள், கீரை வகைகள் மற்றும் இயற்கை உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். முள்ளங்கி, வெள்ளரிக்காய், தர்பூசணி என நீர்ச்சத்து உள்ள பழங்கள் மற்றும் காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மசாலாக்கள் மற்றும் மோனோசோடியம் குளுட்டமேட் போன்ற உப்புகள் உள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது. உணவுப்பொருட்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளில் இருக்கும் ரசாயனங்களைத் தவிர்ப்பதும் அவசியம்.

அதிகாலையில் எழுந்து மூச்சுப் பயிற்சி செய்யும்போது ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. இதனால் சிறுநீரக ரத்த நாளங்கள் வலுவாகின்றன.


சிறுநீரகச் செயலிழப்பின் அறிகுறிகள்

சிறுநீரகங்கள் படிப்படியாகச் செயலிழக்கும்போது, ஒருகட்டத்தில் அவற்றின் செயல்திறன் 70 சதவிகிதத்துகுக் கீழ் குறையும்.அது வரை பெரும்பாலானவர்களுக்கு பெரிய தொந்தரவு என்று எதுவும் வராமலும் இருக்க வாய்ப்பு உள்ளது. கீழ்கண்ட அறிகுறிகள் சிறுநீரகச் செயலிழப்பினால் ஏற்படலாம்.

சிறுநீர் வழக்கத்தைவிடக்  குறைவாகவோ அல்லது அதிகமாகவோ கழித்தல்

கை, கால், முகத்தில் திடீர் வீக்கம் 

உயர் ரத்த அழுத்தம்

பசியின்மை, குமட்டல், வாந்தி

வாயில் கசப்புத்தன்மை

உடல் சோர்வு, களைப்பு, மயக்கம்

எதிலும் ஆர்வமின்மை, இரவில் தூக்கமின்மை, பகலில் தூக்கம் போன்ற உளவியல் பிரச்னைகள்

தலைவலி, உடல்வலி, எலும்புகளில் வலி

 

வி.மோ.பிரசன்ன வெங்கடேஷ்

நன்றி ஆனந்த விகடன்..

சர்க்கரைநோய். (Diabetes)

 

Drக.பரணீதரன்

சர்க்கரை நோய் சிறப்பு வைத்தியர்

21 -ம் நூற்றாண்டில், உலகின் மிகப் பெரிய தொற்றாநோயாக உருவெடுத்துவருகிறது சர்க்கரைநோய். ஒவ்வோர் ஆண்டும் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. கடந்த ஆண்டின் புள்ளிவிவரப்படி, உலக அளவில் 41.5 கோடி சர்க்கரை நோயாளிகள் உள்ளனர். 2040-ம் ஆண்டில் இது 64.2 கோடியாக அதிகரித்துவிடும். அதாவது, உலகில் பத்தில் ஒருவர் சர்க்கரை நோயாளியாக இருப்பார்.

சர்க்கரை நோயாளிகள் ஒருபக்கம் என்றால், உலகில் 31.8 கோடி பேர் சர்க்கரை நோய் ஏற்படக்கூடிய நிலையில் உள்ளனர். இவர்கள் முறையான சிகிச்சை, வாழ்க்கைமுறை மாற்றத்தைப் பின்பற்றவில்லை எனில், இவர்களுக்கு விரைவிலேயே சர்க்கரைநோய் வந்துவிடும் ஆபத்து உள்ளது. ஆனால், தங்களுக்கு இந்த பாதிப்பு இருக்கிறது என்பதையே அறியாமல் இவர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் அதிர்ச்சியான விஷயம்.

இந்தியாவில் 6.9 கோடி பேர் சர்க்கரை நோயாளிகள். இது 2040-ம் ஆண்டில் 12.3 கோடியாக அதிகரிக்கும் எனக் கணிக்கிடப்பட்டுள்ளது. சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, போதிய விழிப்புஉணர்வு இல்லை என்பதே முக்கியக் காரணமாக இருக்கிறது. அனைவரிடமும் சர்க்கரைநோய் பற்றிய விழிப்புஉணர்வைக் கொண்டு சேர்ப்பதன் மூலம், சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கையைக் குறைக்க முடியும்.

நம்பிக்கை  சர்க்கரை நோய் ஒரு தீவிர பாதிப்பை ஏற்படுத்தும் நோய் அல்ல.

உண்மை நிலை: இது தவறான கருத்து. சர்க்கரை நோய் பாதிப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் மார்பகப் புற்றுநோய், எய்ட்ஸ் நோயால் இறப்பவர்களின் எண்ணிக்கையில் பாதிதான். ஒருவருக்குச் சர்க்கரைநோய் இருந்தால், அவருக்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு இரட்டிப்பாகிறது. அதுபோல், உடலின் ஒவ்வோர் உறுப்பையும் பாதித்து உயிரிழப்பு, உடல்நலக் குறைவுக்கான வாய்ப்பை அதிகரிக்கச் செய்கிறது சர்க்கரைநோய். எனவே, இதை ஒரு சாதாரண பாதிப்பு என்று கருதி ஒதுக்கிவிட முடியாது. ஆனால், சர்க்கரைநோயால் ஏற்படக்கூடிய சிக்கல்களைத் தவிர்த்து, ஆரோக்கியமான வாழ்க்கை வாழ முடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.

நம்பிக்கை: அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவதால் சர்க்கரை நோய் ஏற்படுகிறது.

உண்மை நிலை: டைப் 1 சர்க்கரைநோய் மரபியல் ரீதியாக ஏற்படலாம். சிலருக்கு எதனால் ஏற்பட்டது என்றேகூடக் கண்டறிய முடிவதில்லை. டைப் 2 சர்க்கரைநோயை ஏற்படுத்துவதில், மரபியல் மற்றும் வாழ்க்கைமுறைக் காரணிகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உடல்பருமனாக இருப்பதும், உடல் எடை அதிகரிக்கக்கூடிய அதிக கலோரி கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வதும்கூட டைப் 2 சர்க்கரைநோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அதேபோல், சர்க்கரை அளவு அதிகமாக உள்ள உணவுகள், பானங்களை அருந்துவதும்கூட டைப் 2 சர்க்கரைநோயை ஏற்படுத்தலாம்.

நம்பிக்கை: என்னுடைய குடும்பத்தில் யாருக்கும் சர்க்கரைநோய் இல்லை. எனவே, நான் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறேன்.


உண்மை நிலை: டைப் 2 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான பல காரணிகளில், குடும்ப மரபியல் என்பது ஒன்று. ஆனால், அது மட்டுமே சர்க்கரைநோய் வருமா, வராதா என்பதை நிர்ணயிப்பது இல்லை. 

உடல் உழைப்பு அற்ற வாழ்க்கைமுறை, அதிக கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக மனஅழுத்தம், உடல்பருமன் ஆகியவை இருந்தால், யாருக்கு வேண்டுமானாலும் சர்க்கரைநோய் ஏற்படலாம்.

நம்பிக்கை: சர்க்கரைநோய் அறிகுறிகள் எனக்குத் தெரியும். அறிகுறிகள் தென்படும்போது பார்த்துக்கொள்ளலாமே!

உண்மை நிலை: எல்லா நேரங்களிலும் இது சரியாக இருக்காது. சில நேரங்களில் அறிகுறிகள் மிகவும் தாமதமாகவே வெளிப்படும். சிலருக்கு எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாமலேயே வந்துவிடும்.

நம்பிக்கை: சர்க்கரைநோய் உள்ள பெண்கள் கருத்தரிக்கக் கூடாது.

உண்மை நிலை: சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் பெண், இயல்பான முறையில் கருத்தரிக்கவும் சுகப்பிரசவம் ஆகவும் வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்குப் பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியமும் நன்றாகவே இருக்கும்.

நம்பிக்கை: கர்ப்பக் கால சர்க்கரைநோயைப் பெரிதாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. பிரசவத்துக்குப் பிறகு, அது தானாகவே மறைந்துவிடும்.

உண்மை நிலை: பிரசவத்துக்குப் பிறகு சர்க்கரைநோய் மறைந்துவிடும் என்றாலும், கர்ப்பக் காலத்தில் ஏற்படக்கூடிய சர்க்கரைநோய், தாய்க்கும் குழந்தைக்கும் எதிர்காலத்தில் டைப் 2 சர்க்கரைநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. எனவே, கர்ப்பக் காலத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலமே இந்தப் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.

ம்பிக்கை: சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவின் ஏற்ற இறக்கங்களை உணர முடியும். இதனால் அடிக்கடி பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.

உண்மை நிலை: எப்போதும் இது சாத்தியமில்லை. சிலருக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவது தெரியவே தெரியாது. இதனால், ஹைபோகிளைசீமியா பாதிப்பு ஏற்படலாம். இது மிகவும் ஆபத்தானது. மேலும், சர்க்கரை அளவு குறைவதால் ஏற்படக்கூடிய அறிகுறிகள் சளி, ஃபுளு காய்ச்சலின்போதும் ஏற்படலாம். சர்க்கரை அளவு அதிகரித்ததால், அடிக்கடி சிறுநீர் வெளியேறும். சிறுநீர்ப்பாதையில் நோய்த்தொற்று இருந்தால்கூட அதிக அளவில் சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்படும். எனவே, இந்தக் குழப்பங்களைத் தவிர்க்க, அவ்வப்போது ரத்தப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

நம்பிக்கை: சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளைச் சாப்பிடக் கூடாது.

உண்மை நிலை: சர்க்கரை நோயாளிகள் இனிப்புகளை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்றில்லை. சிறிய அளவில், வழக்கமான உணவுகளை எடுத்துக் கொள்வதுபோல இனிப்புகளையும் எடுத்துக்கொள்ளலாம். இது, உடனடியாகச் செரிமானம் ஆகி ரத்தத்தில் கலப்பதைத் தாமதப்படுத்தும். அதிக சர்க்கரை உள்ள குளிர்பானங்கள், உணவுகள் மிக எளிதில் செரிமானம் ஆகி, ரத்தத்தில் உடனடியாக அதிக அளவில் சர்க்கரை அளவை அதிகரிக்கச் செய்துவிடும்.

நம்பிக்கை: சர்க்கரை நோயாளிகளுக்கென உள்ள பிரத்யேக உணவுப் பழக்கத்தைத்தான் பின்பற்ற வேண்டும்.

உண்மை நிலை: அனைவருக்கும் ஏற்ற ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தையே சர்க்கரை நோயாளிகளும் பின்பற்றலாம். அதாவது, அதிக அளவில் முழு தானியங்கள், காய்கறிகள், பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம். கொழுப்பு மற்றும் அதிக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை எடுத்துக்
கொள்வதைக் குறைக்க வேண்டும். பொதுவாக, சர்க்கரை நோயாளிகளை வண்ணமயமான உணவுகளை எடுத்துக்கொள்ளச் சொல்வோம். அதாவது கீரைகள், காய்கறிகள், பழங்கள்! வெள்ளையானதைத் தவிர்க்கச் சொல்வோம். அதாவது, அரிசி, மைதா, சர்க்கரை உள்ளிட்டவை.

நம்பிக்கை: சர்க்கரை நோயாளிகளுக்கு கார்போஹைட்ரேட் மிகவும் கெடுதலானது.

உண்மை நிலை: ஆரோக்கியமான டயட் முறையில் கார்போஹைட்ரேட்டும் இடம் பெறும் என்பதால், மொத்தத்தில் கார்போஹைட்ரேட் என்றாலே தவறு என்று ஒதுக்கிவிட முடியாது. பட்டை தீட்டப்பட்ட, ப்ராசஸ் செய்யப்பட்ட கார்போஹைட்ரேட்டைத் தவிர்க்க வேண்டும். இயற்கை வடிவில் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டில் நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுஉப்புக்கள் நிறைவாக உள்ளன. எனவே, நல்ல கார்போஹைட் ரேட்டைத் தேர்ந்தெடுத்துச் சாப்பிட வேண்டும்.

நம்பிக்கை: சர்க்கரை நோயாளிகள் உடல் எடையைப் பெருமளவு குறைத்தாலே போதும், சர்க்கரைநோய் பாதிப்பு குறையும்.

உண்மை நிலை: உடல் எடையில் ஏழு சதவிகிதம் அளவுக்குக் குறைத்தாலே நல்ல பலனைப் பெறலாம். அதாவது, 70 கிலோ எடை கொண்ட ஒருவர் 5 கிலோ குறைத்தாலே போதும். 

நம்பிக்கை: இன்சுலின் எடுத்துக்கொள்ளும் நிலையில் உள்ள சர்க்கரை நோயாளிகள் மிகவும் ஆபத்தான நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.

உண்மை நிலை: அப்படியல்ல! சர்க்கரைநோய் என்பது கொஞ்சம் கொஞ்சமாக முதிர்ச்சியடையும் பாதிப்பு. அதனால், சிலருக்கு இன்சுலின் தேவைப்படலாம். இன்சுலின் பயன்படுத்துவதன் மூலம் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வரலாம். இதனால், எதிர்காலத்தில் சிறுநீரகச் செயல் இழப்பு உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

டிப்ஸ்...

*சர்க்கரை அளவு சாப்பிடுவதற்கு முன் 80-110 மி.கி/டெசிலிட்டர் என்ற அளவிலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து 120-140-க்குள்ளும் இருக்க வேண்டும்.

*தினசரி உடற்பயிற்சியும், 30 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சியும் செய்யலாம்.

*உடல் எடை குறைப்பு, உப்பைக் குறைத்துக்கொள்வது, மனஅழுத்தத்தைத் தவிர்ப்பதன் மூலம் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்.

*போதுமான அளவு தூக்கமும் ஓய்வும் தேவை.

*எங்கே செல்வதாக இருந்தாலும், எந்த வகையான சர்க்கரைநோய், என்ன மருந்து, எவ்வளவு எடுத்துக்கொள்கிறீர்கள் என்கிற விவரம் அடங்கிய அட்டையைக் கையில் வைத்திருக்க வேண்டும்.

*டாக்டரின் பரிந்துரைக்கு ஏற்ப மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

 

                                          ********

Northern Province Chief Minister's Visit to Peel Tamil Seniors.

on 13nth January 2017 the Chief Minister of Northern Province Sri Lanka, Hon C V Wigneswaran visited Senior Tamils Society of Peel and addressed a large crowd. The President of the association Mr Nadarjah Moorthy welcomed the CM and spoke on the issues faced by the youths in the Northern province. The members unanimously agreed to support him in his “HELPING BRIDGE”  project to develop the Northern Province. Many memebers donated money for the  project "Helping Bridge " initiated by the Chief minister.

 Former President of the association , Mr Pon Kulendiren a retired Telecommunication and Marketing professional and a dual language writer, who worked in several countries including Sri Lanka. presented six of his English and Tamil Books to the Chief Minister.

வடக்கு மாகாண முதலமைச்சர்.;

            மாண்புமிகு வடக்கு மாகாண முதலமைச்சர்.;

      பீல் தமிழ் முதியோர் சங்கத்துக்கு வருகை

 வெள்ளி 13 மேற்கத்திய மூட நம்பிக்கையின்படி ஒரு துரதிர்ஷ்டமான நாளாகக் கருதப்படுகிறது. 2017 ஆம் ஆண்டில், ஜனவரி 13 ஆம் திகதி ஒரு வெள்னிக்கிழமை. ஆனால் அத்தினம் மிசிசாகா ஒன்றாரியோவில் உள்ள பீல் தமிழ் முதியோர்; சங்கத்திற்கு; ஒரு முக்கியமான  நல்ல நாளாகும்..

 இலங்கையில் வடக்கு மாகாணத்தின் கௌரவ முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன், பீல் முது தமிழ்ர் சங்கத்திற்கு  இரு மணி நேரத்துக்கு வருகைதந்து, உறுப்பினர்களோடு தனது கருத்துக்களைப் பகிர்ந்தார். இச் சங்கம் 1999 இல் நிறுவப்பட்டு 900 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. பல சமூக நடவடிக்கைகளில் ஈடுபாடுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தகுதி. ; திறமையான முதியவர்களை  உள்ளடக்கியது.

 கௌரவ முதலமைச்சர் தமிழ் தேசிய உடையான வேட்டியோடும் நெற்றியில் குங்குமப்; பொட்டோடும் சமூகம் தந்து, தமிழ் பாரம்பரியத்தை நிலைநாட்டினார்.. அவரது முகத்தில் ஆன்மீகத் தன்மை பிரதிபலித்தது. குத்துவிளக்கேற்றி, மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி,  ; தேசிய கனடிய கீதம் மற்றும் தமிழ் கீதம் பாடியபின் நிகழ்வு ஆரம்பித்தது, சில அறிமுக உரைகளின் பின்,  சங்கத்தின தலைவர் வடமாகாணத்தில் உள்ள இளைஞர்கள் எதிர்நோக்கும்; பிரச்சனைகளை வரவேற்பு உரையில் குறிப்பிட்டுப் பேசினார்

 தமிழில் உரையாற்றிய கௌரவ முதலமைச்சர் வட மாகாண  வளர்ச்சி தொடர்பான  எதிர்நோக்கும் பிரச்சினைகள் பற்றி குறிப்பிபட்டுப் பேசினார் கனடாவில் வதியும் ஈழத் தமிழர்கள்.; யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மாகாணங்களின் வளர்ச்சியில் மிகவும் ஆர்வமாக உள்ளவர்களாக இருப்பதைத் தான் உணர்ந்தாக சொன்னார். தங்கள் சொந்த நிதி பங்களிப்பு மூலம் மாகாண  வளர்ச்க்கு பல உறுப்பினர்கள் முன் வந்தார்கள். " உறவுப் பாலம் " என்ற திட்டத்தின கீழ் வடமாகாணத்தில் உள்ள முக்கிய நபர்களின் விருத்திக்கான திட்டத்துக்கு, புலம் பெயரநத மக்களின் ஆதரவை  மாகாண மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதைக் குறிப்பிட்டார். இதில் மார்க்கம்-முல்லைத்தீவு, பிராம்ப்டன்-வவுனியா இரட்டை நகரத்; திட்டங்கள் மூலம் நிரூபணம் ஆகிறது. காலப்போக்கில் இந்த இரட்டை நகரத்; திட்டங்கள், மன்னார் மற்றும் கிளிநொச்சி நகரங்களுக்கு நீ;டிக்க வேண்டும். இதே முயற்சியை கிழக்கு மாகாணசபையும் தொடரலாம் என்றார்..

 இலங்கை காலம்சென்ற முன்னால் ஜனாதிபதி பிரேமதாச ஆரம்பித்த ஆனாதைபிளளைகளுக்கான திட்டத்தைர் பற்றிக் குறிப்பிட்டு பேசினார். ஆதில் தனது அனுபவத்தை  குறிப்பிட்டுச் சொன்னார். அந்த அடிப்படையில் அனாதைப் பிள்ளைகளை பராமரிக்கும் திட்டமொன்றினை வடமாகாணம் நடத்தி வருவதாகச் சொன்னார்.; வெளிநாடுகளில் வாழும் தமிழர்பளிடையே இத் திட்டத்துக்கு  வரவேற்பு இருக்கும் என்ற நம்பிக்கை தனக்குண்டு என்றார். இதற்கான நிதியின் பொறுப்புடைமை, வெளிப்படைத்தன்மை பற்றி குநிப்பிட்டு நிர்வாகச் செலவைக் குறைத்து திட்டம் செயல்படுத்தப் படும் என்றார்..

 கூட்டத்திற்கு வந்தவர்கள் உறவுப் பாலத்தை வலுவான பாலமாக்க ஆர்வமாக இருந்தனர்.;

அந்த நாளும் வந்திடாதோ?

                                                                                

பசுமை நிறைந்த நினைவுகள்

முதியோர் எம்மனதை விட்டகலுமா?

அந்த நாளும் வந்திடாதோ.

 

காலங்கள் போகலாம்

காலன் பலரை கொண்டு போகலாம்

பாதைகள் பரிதாப நிலையையடையலாம்

ஊர்கள் பல சிதைந்து போகலாம்.

 

மக்கள் புலம் பெயரலாம்

தேசம் விட்டு தேசம் ஓடலாம்

வீடுகள் பல பாழடையலாம்

தோட்டங்கள் பல காடாகலாம்.

 

எல்லைகள் பல மறையலாம்

கலாச்சாரம் உரு மாறலாம்

அன்றைய நினைவுகள் என்றும்

மனதைவிட்டு மாறுமா?

அந்த நாளும் வந்திடாதோ.

 

தகரக் கொட்டகை

வெலிங்டன் தியேட்டரின்

55 சதத்துக்கு

வாங்கு போட்ட கலரியும்

 

நாடோடி மன்னரை

வரவேற்க மாவிலைத் தோரணமும்

வின்ஸர் தியேட்டரில்

கட்டபொம்மன் ஆட்சியும்

 

அதோடை கெவா கலர் விளம்பரமும்

எம் ஜி ஆர்இ சிவாஜி. ஜெமினி

இரசிகரர்கள் கைகலப்பும்

படங்களுக்கு மாவிலை தோரணமும்

 

ரீகல் தீயேட்டரில்

அடல்ட்ஸ் ஓன்லி

“பிரிஜிட் பார்டோ” படமும்

முhர்லின் மொன்ரோவின் சிரிப்பும்

 

 

கொலேஜ் போர்டிங் பொடியள் கூட்டமும்

ராணி தியேட்டருக்குள்

வியர்வையின் நாற்றமும்

சிகரட் புகையின் படலமும்

 

செகன்ட் சோ பார்த்தோரின்

சைக்கில் மணி சத்தமும்

நம் மனதை விட்டு அகலுமா?

அந்த நாளும்  வந்திடாதோ

 

முத்த வெளியில்

முனியப்பர் பொங்கலும்

மணிக் கூட்டடியில்

சென் ஜோன்ஸ் சென்ட்ரல் கிரிக்கட்டும்

 

அம்மன் கோயில் வீதியில்

எட்டுமூலைக் கொடியின்

விண் கூவும் சத்தமும்

நல்லூர் தேர் சனத்திரளில்

இடிவாங்கின அனுபவமும்

 

மலேயன் கபேயின்

மணியான கோப்பியும்

கனகலிங்கம் சுருட்டின்

காரமான  சுவையும்

 

சின்னக் கடையில்

     சில்லரைக்குத் திரளியும்

கோண்டாவில் சந்தியில்

கொழுப்போடு இறைச்சியும்

நம் மனதை விட்டு அகலுமா?

 

சமாதானமும் மாகாணசபையும் வந்துவிட்டது

யாழ்தேவி திரும்பவும் ஓடுகிறது

ஏ9 பாதை திருத்தியாச்சு

அந்த நாள் திரும்பவும் வரப்போகுது!

 

- நல்லூரான்