கொல்லி வாய் பிசாசு

வன்னியில் மணியம் குளம்., அக்கராயன் குளத்துக்கு மேற்கே, அடர்ந்த ஈச்சம் காட்டைத் தழுவிய ஒதுக்குப் புறக் கிராமம். அக்கிராமத்தின் மேற்கு திசையில் உள்ள; அடர்ந்த காட்டில் சடைத்து வளர்ந்த முதிரை, கருங்காலி, பாலை, காட்டு வேம்பு மரங்களுக்கும் ஈச்சம் பற்றைகளுக்கும் குறைவில்லை.. அந்த மரங்களின் அடர்த்தியான மரச் சோலையில் ஒரு வைரவர் கோவில். அக்

கோவிலுக்கு இரு நூறு யார் தள்ளி ஒரு சுடலை. அதில் தகனத்துக்கு முன், பிரேதத்தைவைத்து கிரிகைகள் செய்வதற்கு சரிந்த நிலையில் ஓரு கொட்டில். அந்தச் சுடலை, மணியம் குளம் வாசிகளினதும். அருகில் உள்ள கிராம வாசிகளினதும் இடுகாடாக இருந்தது அந்த சுடலைக்கு வைரவர் காவல் தெய்வம் என்பதால் அவருக்கு “சுடலை வைரவர்” என்று நாமம் சூட்டி, அடிக்கடி பொங்கி படைப்பார்கள் ஊர் வாசிகள்.

 

வைரவர் கோவிலுக்கு அருகே உள்ள ஆலமரம் கிராமவாசிகளின் பேச்சில் அடிக்கடி அடிபடுவதற்கு ஒரு காரணம் இருந்தது. ஓன்று அந்த கிராமத்தில் உள்ள ஒரே ஒரு ஆலமரம். என்றபடியால் அதன ஆலம் விழுதுகளை கிராமவாசிகள் பல் துலக்க பாவித்ததாலோ என்னவோ அந்த கிராமத்தில் உள்ள எண்பது வயது கிழவர்களின் பற்கள் விழாமல் உறுதியாக இருந்தது. ஆலமரத்ததுக்கு அருகே சுடலையை நோக்கி சடைத்து வளர்ந்த ஈச்சம் பற்றைகள் ஊடாகச் செல்லும் ஆறடி அகலம் உள்ள கிரவல் பாதை. அதன் ஒரமாக யாரோ ஒரு புண்ணியவான் உருவாக்கிய சுமைதாங்கியில். புகையிலை, வெங்காயம், ஆடு மாடு வியாபாரம் செய்து வருவோர் சற்று தம் போதிகைகளை வைத்து இளப்பாறி, அருகில் இருந்த குளத்தில் நீர் அருந்திச் செல்வது’ வழக்கம்,. குளத்துக்கு அருகே சதுப்பு நிலம். அங்கு தமது கிராமத்து. கழிவுகளை கொண்டு போய் கொட்டுவார்கள் மணியம்குளம் கிராம வாசிகள். அந்த. சதுப்பு நிலம் சில உயிர்களைப் பலி வாங்கியதால் “ இது சதுப்பு நிலம். இங்கு கால் வைத்தால் உயிருக்கு ஆபத்து” என்ற எச்சரிக்கை பலகையை மணியம்குளம் கிராமசபை வைத்திருந்தது.

 

அந்த கிராமத்துக்கு மின்சாசரவசதி கிடையாது. தினம்’ காலை ஒன்றும் பின்னேரம் ஒன்றுமாக அக்கரையான் குளத்தில் இருந்து பஸ் கிராமத்துக்கு வந்து போகும். . இரவில் வெளியே போவதென்றால் அரிக்கன் விளக்கு அல்லது தீப்பந்தத்தை நம்பி வாழ்ந்தார்கள். ஊர் மக்கள் சுமார் 500 குடும்பங்கள் வாழும் அக் கிராமத்தில் ஒரு டிச்பென்சரியைத் தவிர வேறு கடுமையான வருத்தங்களுக்கு கிளிநொச்சி அல்லது துணுக்காய் வைத்தியசாலைகள் தான் கதி

 

சிவராசா அபோதிக்கரியாக துணுக்காயில் இருந்து அந்தக் கிராமத்துக்கு மாற்றலாகி போய் மூன்று வருடங்கள் உருண்டோடியது. 10 வருடங்களுக்கு மேல் வேலை செய்த அபோதிக்கரிகளை டாக்டர் பட்டம் சூட்டி அழைப்பது இலங்கையில் வழக்கம். டாக்டர் சிவராசாவுக்கு மூன்று வருட  மணியம்குளம் வாழ்க்கை எதோ கனவு போல் இருந்தது. அந்த காலத்துக்குள் கிராமத் தலைவர் பொன்னையா, விதானையார் விசுவலிங்கம், அக் கிராமத்து பள்ளிக்கூட தலமை ஆசிiரியர் அருள், தேனீர் கடை வைத்திருக்கும் சிங்கராசா ஆகியோரின் அறிமுகம் கிடைத்து, டாக்டர் சிவராசாவின் நண்பர்களானார்கள்.,

 

சிவராசா மூட நம்பிக்கைகளை முற்றாக வெறுப்பவர். முற்போக்கான சிந்தனையுள்ளவர் அறவியலில் ஆர்வம் உள்ளவர். தான் படித்து டாக்டராக வேண்டும் என்று கனவு கண்டவர். முடியாததால் அப்போதிக்கரி என்ற உதவி டாக்டரானார். வன்னியில் பல கிராமங்களில்  வேலை செய்தவர். அவரின் அவரது பூர்வீகம் வடக்கில் உள்ள பருத்தித்துறை. அவர் படித்தது ஹார்ட்லி கல்லூரி. அவரின் பொழுது போக்கு, அறிவியல் நூல்களை வாசிப்பது. அவரும் நண்பர்கள். அடிக்கடி தேனீர் கடையில் கூடி அரசியல். நாட்டு நிலவரம். கிராமத்தில் நடப்பவை, வியாதிகள், அறிவியல் போன்ற பல தரப்பட்ட விஷயங்களை பற்றிப் பேசுவது அவர்களின் பொழுது போக்கு.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேனீர் கடைக்கு முன் இருந்த பெஞ்ச்சில் இருந்து தங்கள் அரட்டையை நண்பர்கள் ஆரம்பித்தார்கள்.

 

“என்ன பொன்னையர் உங்கடை கிராமசபை எச்சரிக்கை பலகை போட்டும் ஒரு சிறுவனை சதுப்பு நிலம் பலி எடுத்து விட்டுதாம். நீர் கேள்வி பட்டனீரே”  டாக்டர் சிவராசா கேட்டார்.

 

“இறந்த சிறுவன் மாடு மேய்க்கும் சிறுவன். ஏழை. பாவம் படிப்பு அறிவு இல்லாதவன்.. அவனுக்குப் படிப்பு அறிவு இல்லாததால், பலகையில் என்ன எழுதி இருக்கிறது என்று வாசித்து அறியத் தெரியாது” பொன்னையர் சொன்னார்.

 

“அது இல்லை பொடியனின் மரணத்துக்கு காரணம். சுடலை வைரவருக்கு இந்த வருஷம் பொங்கி படைக்க சற்று தாமதமாகி விட்டது. அதுதான் வைரவர் பலி வாங்கி விட்டார். உதுபோல தான் அந்த ஆலமரத்திலை தூக்குப் போட்டு ஒருத்தி போன வருஷம் செத்துப் போனாள்,” தேனீரை கொண்டு வந்து சிவராசவிடம் கொடுத்தபடி செய்தி சொன்னார் சிங்கராசா,

 

“ஊர் சனங்கள் கதைக்குதுகள் சுடலை பக்கத்தில் உள்ள ஈச்சம் காட்டில், கொல்லி வாய் பிசாசு இருக்குது எண்டு” விதனையார் விசுவலிங்கம் ஊர் செய்தி சொன்னார்.

 

“கொல்லி வாய் பிசாசா? அது என்ன புதுப் பெயராக இருக்குது. . எனக்கு பிசாசு கதைகளில் நம்பிக்கை இல்லை. எனக்கு தெரிந்தது பணப் பிசாசுகள் மட்டுமே ” டாக்டர் சிவராசா சிரித்தபடியே நக்கலாக சொன்னார்.

 

“ டாக்டர் நீர் சயன்ஸ் படித்தவர். அதுதான் உப்படி சொல்லுறீர். உமக்கு இந்த ஊர் சனங்ககளின் பேச்சில் நம்பிக்கை இல்லை. நான் கூட ஒரு கிழமைக்கு முந்தி அக்கரையன்குளம், கிராமத்துக்குப் போய் திரும்போது, பஸ்சை’ தவறவிட்டு சுடலை வழியாக இரவு நேரம் நடந்து வந்தேன் பாரும். அப்போ யாரோ தீப்பந்தத்தோடு என் முன்னே போவதைப் பார்த்தனான். யாரடா அங்கே போகிறது என்று சத்தம் போட்டு கேட்ட போது, பதில் இல்லை. நான் நடக்க, அந்த தீப்பந்தம் என்னை விட்டு விலகி விலகைச் சென்றது” என்றார் ஆசிரியர் அருள்.

 

“என்ன மாஸ்டர் சயன்ஸ் படித்த நீங்கள் கூட இந்த கொல்லி வாய் பிசாசு கதையை நம்புறீர்களா?. அது சரி உந்த பிசாசு கதையை ஊரிலை யார் ஆரம்பித்து வைத்தது?”  டாக்டர் சிவராசா கேட்டார்.

 

“வேறு யாரும் இல்லை, வேலை இல்லாமல் இருக்கும் ஒரு கூட்டம் தான். அவர்களுக்கு பொழுது போக வேண்டுமே. கதையைக் கட்டி விட்டிருக்குறார்கள். அதில் அவர்களுக்கு எதோ உள் நோக்கம் இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன் நான் கெதியிலை அது உண்மையா போய்யா என்று கண்டு பிடிக்கிறேன் ” விதனையார் தன் அதிகாரத் தொனியோடு சொன்னார்.

 

“விதனையார் நீங்கள் சொல்வது ஓரளவுக்கு உண்மை. மூன்று நாளைக்கு முன், வேலை இல்லாமல் இருக்கும் சண்முகமும் அவனின் இரு நண்பர்களும் எண்டை கடைக்கு தேனீர் குடிக்க வந்த போது இந்த கொல்லி வாய் பிசாசை பற்றியே அவர்கள் பேச்சு இருந்தது. தாங்கள் பல தடவை கண்டதாக சொன்னார்கள். கொல்லி வாய் பிசாசு இரவில் உலாவுமாம். மனித ரத்தத்தை தேடுதாம். எனக்கு அந்த வேலை இல்லாமல் இருக்கும் அந்த மூவரின் பேச்சில் நம்பிக்கை இல்லை”

 

“ ஏன் அப்படி சொல்லுகிறீர் சிங்கராசா” விதானையார் கேட்டார்.

 

“விதானையார். அவன் சண்முகம் தேனீர் குடித்து, வடை சாபிட்டுவிட்டு போகும் போது ஒரு நூறு ரூபாய் நோட்டை என்னிடம் நீட்டினான், மிகுதி காசை கொடுத்தபோது என்னை அதை வைத்திருக்கும் படி சொல்லி போய்விட்டான். வேலை இல்லாத அவனுக்கு எப்படி அவ்வளவு காசு? அதோடு மட்டமில்லை கொல்லி வாய் பிசாசா தங்கள் கண்டதாகவும், அது ரத்தம் குடிக்க ஈச்சம் பற்றை பக்கம் அலைந்து திரிவதாக அவர்கள் சொன்னார்கள்” ஒரு குண்டைத் தூக்கி போட்டார் சிங்கராசா.

 

“அப்படியா. இது கவனிக்க வேண்டிய விஷயம் தான்” விதானையார் சொன்னார்.

 

“ அது சரி மாஸ்டர் நீர் இந்த கொல்லி வாய் பிசாசை எங்கை பார்த்தனீர்.

 

“ நான் கண்டது அந்த குப்பைகள் கொட்டும் சதுப்பு நிலத்துக்கு அருகாமையில்”

 

“ அப்படி சொல்லுமென். எனக்கு இப்ப கொல்லி வாய் பிசாசை நீர் கண்டதன் காரணம் புரியுது”

 

“ என்ன உமது அறிவியல் விளக்கத்தை சொல்லும் கேட்பம்” ஆசிரியர் அருள் கேட்டார்

 

“மீதென் வாயுவை (Methane gas) பற்றி கேள்விபட்டிருப்பீரே. அந்த வாயு பிராணவாயுவோடு கலந்தால், வெகு விரைவில் தீ பற்றிக் கொள்ளக் கூடியது. அனேகமாக சதுப்பு நிலப் பகுதிகளில் குப்பைகளின் சிதைவால் அதிகமாக மீதென் வாயு வெளியேற வாய்ப்புண்டு. அது சரி நீர் சதுப்பு நிலத்தின் அருகே நடந்து வரும் போது சிகரெட் ஏதும் பற்ற வைத்தீரா”.

 

“ ம்.. அது எப்படி உமக்குத் தெரியும் டாக்டர். ?”

 

“ நீர் சிகரெட் பற்ற வைத்த நெருப்பில் உமக்கு முன் இருந்த மீதென் வாயு தீ பற்றிக் கொண்டது. நீர் நடக்கும் போது அந்த வாயுவானது உம்மிடம் இருந்து விலகிச் சென்றது. அது வாயு என்றபடியால் நீர் கூபிடும்போது அது பேசவில்லை. அதுக்கு வாயும் இல்லை கால்களும் இல்லை” என்றார் சிரித்தபடி சிவராசா.

 

“ நல்ல அறிவியல் விளக்கம் டாக்டர். அனால் இதைப் பாவித்து வதந்தியை கிளப்பிய காரணத்தை நான் கண்டு பிடிக்காமல் விடப் போவதில்லை” என்றார்’ விதானையர் விசுவலிங்கம்

 

******

 

இரு வாரங்களுக்குப் பின் ஒரு நாள் போலீஸ் ஜீப் மணியம்குளம் கிராமத்துக்கு வந்தது. எல்லோருக்கும் அது’ ஒரு’புதுமை. ஒரு போதும் போலீஸ் கிராமத்துக்கு வந்ததில்லை சதுப்பு நிலத்துக்கு அருகே உள்ள ஈச்சம் காட்டுப் பக்கமாக விதானையாரும் இரண்டு போலீஸ்காரர்களும், ஒரு சப் இன்ஸ்பெக்டரும் போய் வந்ததை அவதானித் சிங்கராசா.“ என்ன விதானையார் என்றுமில்லாதவாறு கிராமத்துக்கு போலீஸ் வந்திருக்கு.”? என்று கேட்டார்..

 

“ சிங்கராசா, நீர் சொன்னதை; வைத்து போலிசும் நானும் சண்முகத்தின் வீட்டையும் அவனின் கூட்டாளி இருவரின் வீட்டையும் சோதனை செய்த போது கட்டு கட்டாகப் பணம் இருந்தது. கள்ளச்சாராயம் காச்சியதுக்கான தடயங்கள் கிடைத்தது. என்னால் நம்ப முடியவில்லை. போலீஸ் அவர்களுக்கு நாலு அடி போட்டதும் உண்மையை கக்கி விட்டார்கள். அவர்கள் உழைத்த பணம், கள்ளச்சாராயம் காச்சி விற்று சேர்த்த காசு ”

.

” நாலு போலீஸ் அடிக்குப் பின் என்னவாம் அவர்கள்’?

 

“ வேலை இல்லாததால் ஈச்சங் காட்டுப் பக்கத்தில் இரவில் கள்ளச்சாராயம் காச்சினார்களாம். ஊர் வாசிகள் அந்தப் பக்கம் வராமல் இருக்க கொல்லி வாய் பிசாசு வதந்தியை ஊரில் பரப்பி விட்டார்களாம். போலீஸ் அவர்களைக் கைது செய்து கூட்டிப்போய் விட்டது. குறைந்தது மூன்று வருஷம் ஜெயிலும் அபராதமும் அவர்களுக்கு கிடைக்கும். இனியாவது ஊர் மக்கள் வதந்திகளை நம்பாமல் இருக்கட்டும்” என்றார் விதானையார்.

 

அரசமரத்து ஆவி

இயற்கையின் சக்திகள் பசுமையான மரங்களில் குடி கொண்டிருப்பதாக மனிதன் நம்புகிறான். கனடா பூர்வகுடி மக்கள் மரங்களை தெய்வமாக வழிபடுகிறார்கள். இது இந்தியாவிலும் இலங்கையிலும் மர வழிபாடாய் மலர்ந்தது. நீங்கள் எந்தத் தெய்வக் கோயிலுக்குச் சென்றாலும் அங்கு அந்தத் தெய்வத்திற்கென்று ஒரு மரம் இருப்பதைக் காணலாம். இம்மரம் தலவிருட்சம் என்று கூறப்படும். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒரு மரம் உண்டு. சிவனுக்கு ஆலமரம். கணபதிக்கு அரசு. அம்மனுக்கு வேம்பு.

******

திருகோணமலையில் இருந்த தென் மேற்கே சுமார் 50 கிமீ தூரத்தில். உள்ள கிராமம்” பதவிய”. 6400 எக்கர் பரப்பு அளவுள்ள பதவிய குளம் மகாசேன மன்னனால் கிமு 3 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. சோழர் இலங்கையை ஆண்ட 11ஆம் நூற்றாண்டில் செழித்து இருந்த பகுதி. ஒரு காலத்தில் தமிழர்கள் அதிகமாக’ வாழந்த ஊர். பதவிய. 1948 ஆம் ஆண்டுக்குப் பின் சிங்கள குடியேற்றத்தால் கிராமமாக மாறிது. அதனால் பதிவாவி ( வாவி இருக்கும் ஊர்_ என்ற தமிழ் பெயர் மாறி பதவிய என்ற சிங்களப் பெயராயிற்று வடக்’கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் எல்லைகள் சந்திக்கும் ஊர்/

 

அவ்வூர் வன்னியில் அமைந்ததால் அவ ஊர் மக்கள் பிள்ளையாரை தெய்வமான வழிபடுபவர்கள். யானைகளின் தாக்குதலில் இருந்து தம்மைப் பாதுகாக்கவே அரசமரத்து பிள்ளையார் என நாமம் சூட்டி வழிபட்டனர் .

 

அக்கிராம்ந்தில் இருப்பது ஒரே’ ஒரு நாற்கசந்தி. அதன் இடது பக்கத்தில் பாதை’ ஒரமாக ஓங்கி வளர்ந்த அரசமரம். ஆரம்பத்தில் அக்கிராம இந்துக்கள் அரசமரத்தின் கீழ்யுள்ள கணபதி கற்சிலை பதவிய குளத்தில் கண்டேடுத்தாகவும், சோழர காலத்தில் பதவியாவில் கட்டிய கோவில், போர்த்துகேயர் கோவிலை கொள்ளை அடித்த போது, கோவில் குருக்கள் பாதுகாப்பு கருதி பிள்ளையார் சிலையை குளத்துக்குள் வீசி இருக்கலாம் என்று மக்கள் பேசிக் கொண்டனர்,

 

பெளத்தர்களான சிங்களவர்கள் ஒரு புத்தர் சிலையை பிள்ளையாருக்கு துணையாக, ஐம்பது அடி தூரத்தில் வைத்து புத்தரையும் கணபதியையும் வணங்கினர்

.

ஒற்றுமையாக பதவியாவில் வாழ்ந்த இரு இனங்களுக்கிடையே வதந்திகளால் இனக்கலவரம் 1958 இல் வெடித்தது. அக் கிராமத்தின் முன்னேற்றத்துக்காக உழைத்த தொழில் அதிபர் சுந்தரமூர்த்தி சிங்களவன் ஒருவன் வெட்டி பிள்ளையாருக்கு முன் கொலை செய்தான்.. அப்போது புத்தர் சிலை அரசமரத்தின் கீழ் இருக்கவில்லை. இருந்திருந்தால் அவர் கண்ணீர் விட்டிருப்பார். அந்த அரசமரத்தைச் சுற்றி சலவை கற்கள். அதில் இருந்து வம்பு பேச உகந்த இடமாக இருந்தது. இரவில் அக்கற்களில் தூங்குபவர்களும் உண்டு அப்படித் தூங்கிய சிங்களவன் ஒருவன் காலையில் விழித்து எழும்பவில்லை. அரசமரத்தில் உள்ள சுந்தரமூர்த்தியின் ஆவி அவனைப் பழி வாங்கிவிட்டது என்று வதந்தியை ஊர் ஜனம் பரப்பி’ விட்டது. அந்த மரணத்தின் பின் அக் கற்களில் இருந்து வம்பு பேசவோ அல்லது தூங்கவோ பின் ஊர் வாசிகள் வாங்கினார்கள். அனால் பிள்ளை வரம் வேண்டி அரசமரத்தை தமிழ். சிங்கள பெண்கள் சுற்றி வரத் தயங்க வில்லை.

 

******

 

அன்பழகன் (அன்பு) தாவர இயல் பட்டதாரி, 20 வருட ஆசிரியர் அனுபவம் உள்ளவர். எதையும் அறிவியல் ரீதியாக சிந்திப்பவர். திருகோணமலை. கிண்ணியா. மூதூர் வவுனியா ஆசிய இடங்களில் உள்ள கல்லூரிகளில் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றி, பதவியாவில் உள்ள கல்லூரிக்கு வந்தவர். தலமை ஆசிரியராக பதவி உயர்வு கிடைத்தபடியால் மாறுதலை அவரால் நிராகரிக்க முடியவில்லை. அவரோடு ஆசிரியராக வேலை செய்த குணத்திலக்கா (குணா ) என்ற பட்டதாரி சிங்கள ஆசிரியர், வெகு விரைவில் அன்பழகனின்’ நண்பரானார். இருவரும்’ மாலை நேரங்களில் பதவியா கிராமத்தின் இயற்கையை’ இரசித்தவாறு இரு மைல்கள் வாவிக் கரைமீது நடப்பார்கள். நடந்த களைத்துப் போய் அரசமரத்து அருகே உள்ள தேனீர் கடையில் இளநீர் குடித்து விட்டு அரசமரக் கற்களில் வந்து’ அமர்ந்து தமது வேலை அனுபவங்களை பகிர்ந்து கொள்வார்கள். ஓங்கி சடைத்து வள்ர்ந்த அரசமரம், அதன் அருகே உள்ள பிள்ளயார், புத்தர் சிலைகள் அன்பழகனின் கவனத்தை ஈர்த்தது. அவரை சிந்திக்க வைத்தது. இரு சிலைகளையும் பார்த்து அன்பழகன் கெக்கட்டம் விட்டு சிரித்தார்

 

“ என்ன அன்பு சிலைகளைப் பார்த்து ஏன் சிரிகிறீர்”? குணத்திலக்க கேட்டார்.

 

“ இல்லை குணா இந்து, பெளத்த மதங்களுக்கு இடையே எவ்வளவு ஒற்றுமை பார்த்தீரா? குணா இந்து’ மதத்தில் இருந்து பிறந்தது தான் பெளத்தம். இரண்டும் கர்மாவை பற்றியும், ,மறு பிறப்பு பற்றியும் சொல்கிறது. இந்து மதத்தின் படி கணபதியின் மாமன் விஷ்ணு’. விஷ்ணுவின் மறு அவதாரமே புத்தர் என்று என் அம்மா சொல்லிக் கேள்விப் பட்டனான். இந்த அழகிய சடைத்த அரச மரத்தின் நிழலில் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறார்கள். சில பெண்கள் மரத்தை சுற்றி வந்து கணபதிக்கு பால் வார்த்து, புத்தருக்கு தாமரை பூ வைத்து கும்பிட்டு செல்கிறார்கள். என்ன தமிழர் சிங்களவர் ஒற்றுமை பார்த்தீரா, உம்மையும் என்னையும் போல்"

 

“அன்பு, நான் இந்த’ ஊர் வாசி. நீரோ திருகோணமலை வாசி உமக்கு இந்த மரத்ததின் சரித்திரம் தெரியாது. இந்த; மரத்தின் கீழ், இரு நூறு வருடங்களுக்கு’ முன் பதவிய குளத்தில் கண்டு எடுக்கப் பட்ட கணபதி தெய்யோவின் சிலை இது . அதன் பின்பு தான் அரசமரத்துக்கு’ கீழ் புத்தர் வந்தவர். இந்த சந்தியில் 1958 இல் நடந்த இனகலவரத்தின் போது’ பதவியாவில் இருந்த பிரபல பிஸ்னஸ்மன் சுந்தர் மூர்த்தி, வெட்டிக்’ கொலை செய்யப் பட்டார். அவர் என் நண்பர். நல்ல மனுசன். அதன் பின்; இந்த அரச மரத்தில் அவரின் ஆவி குடிபுகுந்து விட்டது” குணா கவலையோடு சொன்னார்.

 

“ நீர் அந்த வதந்தியை நம்புறீரா குணா”? அன்பு குணாவைக் கேட்டார்.

 

“ என் இல்லை. இனக்கலவரம் நடந்து சில மாதங்களுக்குப் பின்; ஒரு நாள் இந்தக் கல்லில் இரவில் படுத்திருந்த ஒருவர் காலையில் எழும்பவே இல்லை. அவர் மரணத்துக்கு இந்த அரசமரத்தில் உள்ள சுந்தரமூர்த்தியின் ஆவிதான் காரணம் என்ற வதந்தி பரவத் தொடங்கியதால் இந்த கல்லில் இரவில் ஒருவரும் தூங்குவது கிடையாது” என்றார் குணா.

 

“ நான் இந்த ஆவி கதையை நம்பவில்லை குணா”

 

“. நீர் தான் தாவர அறிவியலில் நிபுணராச்சே. விளக்கம் சொல்லுமன்”

 

“ மரங்களில் முக்கியமான மரம் அரசமரம் அம்மரத்தை வணங்ககுவதற்கு பல காரணங்கள் உண்டு அரச மரத்தின் வேரில் இருந்து அதன் இலைகள் வரை மருத்துவ பயன் உள்ளது; பல விதமான நோய்களை குணமாக்கக் கூடியது. அரச மரத்தின் முக்கியத்துவத்தை நமது பழங்கால முனிவர்கள் அறிந்திருந்தனர். காரணம், இதை தேவதாரு மரம், கடவுளின் தெய்வம். என்று வணங்கினர். கிமு 1300 இல் இருந்த இந்து நதி பல்லத்; தாக்கு நாகரீகம் பற்றி கேள்வி படிருப்பீரே”

 

“ம் ..வாசித்தனான்.. மேலே சொல்லும் அன்பு”

 

“அந்த நாகரீகத்தின் அகழ்வாய்வின் போது அரசமரத்தின் பயன் கண்டறியப் பட்டுள்ளது.. தமிழ் மொழியில் அரசமரம் என்றும் ஆங்கிலத்தில் பீப்பல் (Peepal) என்று அழைக்கிறார்கள் மரத்தை வணங்குகின்றனர். குழந்தைள் இல்லாத பெண்கள் சுற்றிச் சுற்றி வந்து அதன் ஆசீர்வாததைப் பெற்றால் விரும்பிய காரியமோ அல்லது குழந்தைகள் பெற முடியும் என்பது தோண்டு தொட்டு இருந்து வரும்’ நம்பிக்கை.. விஞ்ஞான ரீதியாக, அந்த மரத்தின் சாறு குழந்தையை வயிற்றில் சுமக்கும் பலத்தை கொடுக்கிறது. இந்த அற்புதமான மரத்தின் மிக முக்கியமான மதிப்பு என்ன வென்றால், பாம்பு கடியால் இறக்க இருக்கும் ஒருவரை குணப்படுத்த முடியும். அரச மரம் சிறந்த மாற்று மருந்தாக இருப்பதாக அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது நீர், காற்று, சத்தம் மாசுபாட்டை மரம் நீக்க வல்லது

 

“ அதுசரி அன்பு இரவில் இந்த; மரத்தின்’ கீழ் தூங்க கூடாது என்கிறார்களே?”

 

பகல் நேரத்தில், சூரிய ஒளியின் போது தாவரங்கள் கரியமில வாயுவை (Carbon diooxide) பயன்படுத்துகின்றன மற்றும் ஒளிச்சேர்க்கை ( Photo synthesis) செயல்பாட்டில் கரியமில வாயுவை உள் எடுத்து பிராணவாயுவை (Oxygen) வெளியிடுகின்றன. ஆனால் இரவில், தாவரங்கள் ஒளிச்சேர்க்கை செய்யாது, அதனால் அவை கரியமில வாயுவைப் பயன்படுத்த முடியாமல் போகலாம், இது மேலும் காற்றில் உள்ள கரியமில வாயுவை அதிகரிக்கும். இரவு நேரங்களில் மரங்கள் பிராணவாயுவை உள் எடுத்து கரியமில வாயுவை விடுவிக்கின்றன. அரசமரத்தின் கீழ் தூங்கினால், காற்றில் கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கும். அகவே அது நிட் சயமாக ஆரோக்கியத்தை பாதிக்கும். எனவே இரவில் மரங்கள் கீழ் தூங்குவதை தவிர்க்க வேண்டும். அரசமரத்தின் கீழ் படுத்த. அவர் மூச்சுத்திணறல் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. அவர் மார்பு மீது அதிக எடையை உணர்ந்து ஹார்ட் அட்டாக் ஏற்பட்டிருக்கலாம். அரசமர ஆவிக்கும் அவர் மரணத்துக்கும் தொடர்பு இல்லை. இந்த சம்பவத்தை, சில கிராமப்புற மக்கள் கற்பனை செய்து, அரசமரம் அல்லது ஆல மரங்கள் கீழ் தூங்கினால் பேய்கள் வந்து தங்கள் மார்பில் உட்கார்ந்து விடும் என அஞ்சுகின்றனர். இது தான் அறிவியல் விளக்கம். இதை புரியாது பேய்; ஆவி, முனி கதைகளை பரப்புரார்கள் “இரவில் கூட பிராண வாயுவை வெளிப்படுத்தும் ஒரே மரம் அரச மரமாகும்.” அன்பு அறவியல் விளக்கத்தை சொன்னார்.

 

"அரச மரத்துக்கும் ஜோதிடத்’துக்கும் தொடர்பு உண்டு என்கிறார்கள் அது உண்மையா அன்பு”:?

 

“ எனக்கு ஜோதிடம் பற்றி அவ்ளவுக்கு தெரியாது.என் அம்மா சொன்னவ அரச மரம் வியாழன் கிரகத்துடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. என்று. நன்மதிப்புள்ள பெரிய கிரகம் வியாழன். அதனால் வியாழ சுகம் உண்டு என்பார்கள். அரச மரமும் நல்ல பயன்களைத் தரும் பெரிய மரம் அதனல் இரண்டுக்கும்’ தொடர்பிளது என்று கருதுகிறார்கள். அரச மரத்தின் சுவாரஸ்யமான அம்சம் இது எங்கும் வளரும் மரம்,”

 

"கௌதம புத்தர் அரசமரத்தின் கீழ் முக்தி பெற்றதால். புத்த சமையத்தவர்கள் மரத்தை தெய்வமாக கருதுகிறாராகள்” என்றார் குணா

 

“அது தெரியும் குணா அதனால் தான் இலங்கையில் அரசமரம் வளர்ந்த இடமெல்லாம் புத்தர் சிலையை அதன் கீழ் வைத்து விடுவார்கள். எல்லாம் நம்பிக்கை. சரி இருட்டு படுகுது. இங்கை இருந்தால் ஒரு வேளை உமது நண்பர் சுந்தர மூர்த்தியின் பேய் எங்களையும் பிடித்து விடும், வாரும் நாங்கள் வீட்டுக்குப் போவோம்.” என்று நக்கலாக சொல்லியபடி அன்பழகன். குணதிலக்காவை அழைத்துக் கொண்டு அரசமராத்தை விட்டுப் புறப்பட்டார்.

 

*****

 

 

 

 

 

 

கிரகணம்

 

கொழும்பில் இருந்து தேற்கே, 100 கிமீ தூரத்தில் களுகங்கையைத்  தழுவிச் செல்லும் நகர் இரத்தினபுரி. சிங்கள, தமிழ், முஸ்லீம் இனத்தவர்கள் வாழும் நகர். கடும் மழையின் போது அடிக்கடி வெள்ளத்தில் அந்த நகர் மூழ்கும். அந்நகரை சுற்றியுள்ள கிராம மண்ணில்  இரத்தினக்கற்கள் விளைந்தன.

சுண்ணாகத்தை பிறப்பிடமாகக் கொண்ட சின்னத்தம்பி அரசாங்கத்தில் சாதாரண கிளார்க்காக வேலை செய்தவர். அவரோடு கொழும்பு சஹிரா கல்லூரியில் படித்த காசிமின் தந்தை ஹனீபா பேருவளையில் வைரவியாபாரி. அவர் மறைவுக்குப் பின், காசிம் தந்தையின் வியாபரத்தை எடுத்து நடத்தினார்.

 

இரத்தினபுரி கச்சேரியில் கிளார்க்காக வேலை செய்த காலத்தில் சின்னத்தம்பிக்கு, ரணவீர  என்ற சிங்களவரின் நட்பு கிடைத்தது அவரின் தொடர்பால் சின்னதம்பிக்கு இரதினகற்கலில் ஆர்வம் ஏற்பட்டது ரணவீரவோடு, இரத்தினபுரிக்கு அருகில் உள்ள இடங்கொட (Idangoda) கிராமத்தில் வயல் காணியில் நிலத்தை தொண்டியபோது விலை உயர்ந்த  நீலமாணிக்கக் கல் (Blue Saphire) ஓன்று சின்னதம்பிக்கு கிடைத்தது. அதை தொடர்ந்து தனது’ அரசு வேலையை’ உதறித் தள்ளிவிட்டு ரணவீரவோடு’ சேர்ந்து  ரத்தினகற்களை தேடி இரத்தினபுரிக்கு அருகே

உள்ள  இடங்கொட கிராமத்தில் வயல் காணிகளில்,  கூலிகளை வைத்து இரத்தினக் கற்களைத் தேட ஆரம்பித்தார். அவர் கண்டேடுத்த  மாணிக்கக் கற்களை காசிம் தனது கடைக்கு வரும் அரேபியர்களுக்கும் வெளி நாட்டவருக்கும் விற்றுப் சின்னத்தம்பிக்கு பணம் கொடுத்தார். அதிர்ஷ்ட தேவதையின் பார்வை சினத்தம்பியின்  பக்கம் திரும்பியது. வெகு விரைவில் இரத்தினபுரியில் மாணிக்க கல் வியபரம் செய்யத் தொடங்கினர்’.

 

அவரின் மகன் பிறக்க இரு வருடங்களுக்கு முன், பல மாணிக கற்ளைக் கண்டு எடுத்து லட்சாதியானார். அவரின் இரத்தினக்கல் வியாபாரத்துக்கு அவரின் சஹாரா கல்லூரி நண்பன் காசிம் பெரிதும்’ உதவினார். 1955 இல் பிறந்த தன் மகனுக்கு தன் வியாபாரம் நினைவாக நவரத்தினம் எனப் பெயர் வைத்தார்

******

சினத்தம்பி கொடுத்த நவரத்தினத்தின்  ஜாதகத்தை பல தடவை பார்த்து விட்டு தன் உதட்டைப் பிதுக்கினார். ஊரெழு சோதிடர் சாம்பசிவம்  சுண்ணாகத்தை பூர்வீமாக.. கொண்ட சின்னதம்பியின் குடும்ப சோதிடர் அவர். சாம்பசிவம் பெயரை ஊரெழு  சுற்றி உள்ள கிராமங்களில் தெரியாதவர் இல்லை. செம்மண் பகுதியான இந்த ஊர், நல்ல வளமான மண்ணையும், நல்ல நிலத்தடி நீர் வசதியையும் கொண்டுள்ளது. சோதிடர் சாம்பசிவத்தின் பூட்டனார் நல்லசிவம் நல்லுரை ஆண்ட சங்கிலி அரசனின்’ ஆஸ்தான சோதிடரும், ஆலோசகரும். மன்னன் அவரின் சேவைக்க்காக ஊரெழுவில்.  கொடுத்த முப்பது பரப்புக் காணியில் அவரது பரம்பரை வாழ்ந்து வருகிறது, 

 

“ சாத்திரியார் என்றை மகனின்; சாதகம் எப்படி இருக்கு?  அவன்  பிறந்த நட்சத்திரம் எப்படி?. அடிக்கடி மூக்குக்கு மேல் கோபம் வரும்.. படித்து டாக்டர் ஆவானா?. எவ்வளவு செலவானாலும்  பராவாயில்லை” சின்னத்தம்பி கேட்டார்.

“ ம்... உமக்கு சொல்லுறதுக்கு யோசிக்க வேண்டி இருக்கு”

“ என்ன அப்படி ஏதும் சாதகத்தில் பிரச்சனையா”?

“உம்முடைய மகன் பிறந்தது 1955 ஆம் ஆண்டு ஜுன் 20. அது திங்கள் கிழமை இல்லையா”?

“ ம் . அதுக்கு இப்ப என்ன?”

“ அதுவும் அமாவாசையில் திருவாதிரை நட்சத்திரத்’தில் பிறந்தவன். திருவாதிரை கள்ளன் என்று சிலர் சொல்வார்கள். அவன் சொல்வதை நம்ப முடியாது   என்று ஒரு வாக்குண்டு,”

 

“ அவன் எனக்கு ஒரே மகன். என்னிடம் போதிய பணம் இருக்கு” சின்னத்தம்பி பதில் சொன்னார். அவருக்கு சோதிடர் சொன்ன வார்த்தை மனதை உறுத்தியது

 

“ உம்டைய மகனுடைய சாதகத்தில். சந்திரன் சூரியனை மறைத்து’ விட்டது. சொல்லப்போனால் ராகு சூரியனை விழுங்கிய நேரத்தில் இவன் பிறந்திருக்கிறான். சூரியபகவானின் பார்வை’ இவன் பிறந்த போது இவன் மேல் விழவில்லை.  எட்டிலை செவ்வாய் வேறு. அதுவும். தோஷம் ”

 

“ சாத்திரி கொஞ்சம்’ விளக்கமாய் தான் சொல்லுங்கோவன்”

 

:”உமக்கு நினைவிருகிறதா 15 வருஷத்துக்கு முந்தி இலங்கையிலை ;பூரண சூரிய கிரகணம் வந்தது 1955 ஜூன் 20 ஆம் திகதி என்று?

 

“ ஒம் நினவிருக்கு என் மகன் இரத்தினபுரி ஆஸ்பத்திரியில் பிறந்தவன். கிரகணம் அன்று அவன் பிறந்தவன். சிசிரியன் ஒப்பரேசன் செய்து அவனை டாக்டர் வெளியே எடுத்தவர்.. அந்த கிரகணம் நடந்த நாள் இரத்தினபுரியை சுற்றி உள்ள சில கிராமங்களில் தாங்கள் வெள்ளையாக, வெள்ளைக்கார பெண்களைப் போல் வர வேண்டும் என்பதற்காக மடச் சனங்கள் வரக்கா என்ற பிலாக்காயில் கூழ் தயாரித்து அருந்தி பலர் ஆஸ்பத்திரிகளுக்கு போக வேண்டி இருந்தது. அந்த சம்பவத்தை வைத்து ஒரு பைலா பாட்டு இயக்கப் [பட்டு பிரபலமானது. அது என் நினைவில் இன்றும் இருக்கிறது” சின்னத்தம்பி சொன்னார்.

 

“அதாவது கிரகணம் அன்று அமாவாசை. சுமார் ஏழரை நிமிடங்களுக்கு சூரிய வெளிச்சம் இலங்கை தீவில் விழாத நேரம் உம்முடைய மகன் பிறந்திருக்கிறான்”.

 

“ அது எப்படி சாத்திரி சரியாக சொல்லுகிறீர்’?

 

“சாதகத்தில் கிரங்கள் இருக்கும் வீடுகள் சொல்லுதே. எங்கடை இந்து மதத்தில் சொல்லுவினம் ராகு என்ற பாம்பு சூரியனை விழுங்கியதால் சூரிய கிரகணம் தோன்றுகிறது என்று. ராகு. சூரியன்.. சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே வீடான மிதுன ராசியில் இருந்த போது உம்முடைய’ மகன்’ காலையிலை பிறந்திருக்கிறான். சூரியனும்’ ”சந்திரநும் ஒரே வீட்டில்’ இருந்தால் அன்று’ அமாவாசை. எதிர் வீடுகளில் இருந்தால் பூரண சந்திரன். உம்முடைய மகனின் வாழ்வு இருண்டு இருக்கும்.  காரணம் அவன் பிறந்தது கிரகண நாள். அதாலை.....”சாமபசிவம் வார்த்தைகளை ,இழுத்தார்

“” அப்ப சூரிய கிரகணத்தின் விளைவு என்ன”?

 “ ஓன்று மட்டும்’ எனக்கு’ நினவிருக்கு சூரிய கிரகத்தின் பின் 1958 இல் இனக்கலவரம் நடந்தது. பிறகு 1959 இல் பிரதமர் பண்டாரநாயக்கா  புத்த பிக்கு ஒருவரால் சுட்டு படுகொலை செய்யப் பட்டார்   என்று சிங்கள் ஊரில்  சனங்கள் கதைப்பினம்.”

“அது எனக்குத் தெரிந்த விஷயம். என் மகனின் வருங்காலத்தைப் பற்றி சொல்லும்”

“அவனின் வருங்காலம் சூரிய கிரகணத்தில் பிறந்ததால் பிரகாசமாக இருக்காது. இப்படித் தான் ஓவர்சியர் நடராஜாவின் மகனும்  சந்திர கிரகணத்தில் பிறந்தவன். அவனுக்கு மூளை தட்டிப்போட்டுது. பாவம் பெடியன். இப்ப அவனுக்கு கிட்டத் தட்ட உம்முடைய மகனின்டை வயது இருக்கும். அங்கொட மன நோய் மருத்துவ சாலையில் மூன்று வருடமாக இருக்கிறான். எதுக்கும் உமது மகனை கவனித்துக் கொள்ளும்”

 

“இதுக்குப் பரிகாரம்’ இல்லையா சாஸ்திரியார்”?.

 

“ஏன் இல்லை கொஞ்சம் செலவாகும். அவ்வளவு தான். எனக்குத் தெரிந்த உரும்பிராய் அம்மன் கோவில் ஐயர் இருக்கிறார். அவர் இந்த பிரகாரத்துக்கு சூரியன், சந்திரன், ராகுவுக்கு சாந்தி செய்வார். அவர் சாந்தி செய்வதில் கெட்டிக்கரன்.”

:”எவ்ளவு செலவாகும்”?

“என்ன உமக்கு அது பெரிய தொகை இல்லை. ஒவ்வொரு கிரகத்துக்கும், சாந்திசெய்ய ஒரு கிரகத்துக்கு பத்தாயிரம் வீதம் முப்பதாயிரம் ரூபாய் மட்டில் வரும். என்ன சொல்லுறீர்??

“எண்டை மனுசியோடு  கதைக்துப் போட்டு முடிவு சொல்லுறன். இந்தாரும் இரு நூறு ரூபாய்,. என் மகனின் ஜாதகம் பார்த்து சொன்னதுக்கு”.

“ அது’ சரி உமது மனைவி பற்றி கேள்விப் பட்டனான் அவ ஒரு பௌதிக பட்டதாரி ஆசிரியை என்றும்,. முற்போக்கான எண்ணங்கள் கொண்டவ என்றும். அவ  இதுக்கு என்ன சொல்லுவாவோ தெரியாது” சாம்பசிவம் சொன்னார்

சின்னத்தம்பி பதில் சொல்லவில்லை.

********

“என்ன அத்தான் உங்களுக்கு பைத்தியமா? உங்களிடம் காசு இருக்கிறது என்று இந்த மூட நம்பிக்கையுள்ள பூஜை, சாந்தி அன்னதானம்  என்று செலவு செய்ய வேண்டுமா?. அந்த பணத்தை அனாதை இல்லத்துக்கு கொடுங்கோவன். அவன் நவரத்தினத்துக்கு படித்து டாக்டர்ராக முடியாவிட்டால். நீங்கள் செய்யும் தொழிலை காட்டிக் கொடுங்கள். நீங்கள் கூட கிளார்காக இருந்து மாணிக்க கல் வியாபாரத்தில் இறங்கி இலடச்சாதிபதி ஆனீர்கள். சுண்ணாகத்திலும், கொழும்பு, இரத்தினபுரியில் மூன்று வீடுகளுக்கு சொந்தக்காரன் பூனகரியில் இருபது ஏக்கர் வயல் காணி. பளையில் பத்து ஏக்கர் தென்னம் தோட்டம் இனி என்ன வேண்டும்”? சின்னத்தம்பியின் மனைவி வைதேகி கேட்டாள்

“ அப்ப வைதேகி நீர் சாமபசிவத்தார் சொன்னதில் உண்மை இல்லை என்கிறீரா”

 

“ இந்த ராகு, கேது. பாம்பு  சூரியனை விழுங்குது என்ற கதையேல்லாம் எல்லாம் மரபு வழி வந்த கதைகள். ராகும் கேதும் கிரகங்கள் இல்லை   கேது பொதுவாக "நிழல்" கோளமாக குறிப்பிடப்படுகிறது. ... வானியலில், ராகு மற்றும் கேது  சூரிய மண்டலத்தில் நகரும் சூரியன் மற்றும் சந்திரன் பாதைகள் குறுக்கு புள்ளிகளை குறிக்கிறது. எனவே, ராகு மற்றும் கேது ஆகியவை முறையே வடக்கு மற்றும் தெற்கு சந்திர நாளங்கள் என்று அழைக்கப்படுகின்றன வானியலில் அழைக்கப் படுகின்றன. பழங்கால மேற்கத்திய ஜோதிடரைப் போல, கிரகங்கள் கிரணங்களை நல்லது கேட்டது செய்கின்றன ராகு (வடக்கு நோட்) மற்றும் கேது (தெற்கு நோட்) ஆகிய இரண்டும் ஆண்மையற்றவை. அவர்கள் "சாயா கிரகங்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்,  அதாவது "நிழல் கிரகங்கள்" என்று பொருள்படும்.

 
“ அப்போ ஒரு வருஷத்துக்கு எத்தனை கிரகன்னங்கள் தோன்றும். சொல்லுமென்”
 
“இது நல்ல கேள்வி.  எண்டை மனுஷன் இப்பத்தான் சிந்திக்க தொடங்கி
 இருக்கிறார். முந்தி நான் பௌதிகம் பற்றிப் பேசினால் எழும்பிப் போய் விடுவீர்
இப்ப மகன் என்று வந்தவுடன் பொறுமையாக இருந்து கேட்கீறிர் ஒவ்வொரு 1000 ஆண்டுகளில் 840  பகுதியளவு (Annular) கிரகணங்கள், 791 வருடாந்திர கிரகணங்கள், 635 மொத்த கிரகணங்கள்,
 (Total Eclipse) மற்றும் 114 கலப்பின கிரகணங்கள் (Hybrid Eclipse) ஆகியவை உள்ளன. ஒவ்வொரு வருடமும் 2-3 வகையான கிரகணம் ஏற்படும், ஒவ்வொரு 3 ஆண்டுகளுக்கு ஒரு தடவை 
2 சூரிய கிரகணம் ஏற்படும். 1955 இல் ஏற்பட்ட கிரகணம் சுமார் 7.3 நிமடங்கள் நீடித்தது. அந்த
 நேரத்தில் நவரத்தினம் எங்களுக்கு பிறந்தான். அது அவன் குற்றமில்லை. கிமு 1375 மே மாதம் சூரிய கிரகணம் நடந்ததாக பபிலோனியன் வரலாற்றில் பதிவாகி உள்ளது.அதோடு விடி வெள்ளி , எரிகல் மழை,  சூரியச் சுடர் (Solar Flare) அடிக்கடி தோன்றும். இவை’ பிரபஞ்சத்தில் நக்கும்
 நிகழ்ச்சிகள். அதை வைத்து ’ சிலர் பிழைக்கிறார்கள். அவர்களைச் சொல்லி குற்றமில்லை”
 
“:நான் சாந்தி ஒன்றும் செய்ய போவதில்லை. எனது தொழிலை நாவரத்தினதுக்கு’ காட்டிக் கொடுக்கப் போறன். நீர் என்ன சொல்லுறீர் வைதேகி.
 
“ நால்ல முடிவு அப்படி செய்யும். பிறகு நடப்பதைப் பார்ப்போம்” என்றாள் வைதேகி..
 
இந்த உரையாடல் நடந்து’ மூன்று நாட்களில் தன் மகனை இடங்கொட இரத்தினக் கற்கள் தேடித் தோண்டும்’ இடத்துக்கு அழைத்துச்
 சென்றார் 
சின்னத்தம்பி. அவரின் மகன் நவரத்தினம் வேலை செய்பவர்களோடு வேலை
செய்த சில மணி நேரத்தில் குழிக்குள் வேலை’ செய்பவர்களின் கூக்குரல் கேட்டது”
 
“ ஐயா முதல் நாளே உங்கள் மகன் ஒரு பெரிய நீல
 மாணிக்கக் கல்லும்,’ சிவப்பு ரூபியும் கண்டு பிடித்துவிட்டார்.”என்றார் மேற்பார்வை’ செய்தவர்.
 
“ அப்படியா. இனி நவரத்தினத்துக்கு  அவன் வாழ்க்கையில் விடிவு காலம் தான்’ என்றார் சந்தோஷத்தில் சின்னத்தம்பி.
 
 
வானில் சூழ்ந்திருந்த கரும் மேகங்கள் நீங்கின
 
 ********
 

 

காலம்

 எனது ஒரே மகன் அகஸ்த்தியன் ஒரு பைலட். என்  மருமகள் வத்சலா  ஒரு டாக்டர்;. இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். எனதும், என் மனைவி பூர்ணிமாவினதும் சம்மதத்தோடு தோடும் தான் அவர்கள் திருமணம் நடந்தது. அகஸ்த்தியன் எங்களின் ஒரே மகன் என்றபடியால் சம்மதித்துதானே ஆகவேண்டும். அவர்களுக்கு  அகஸ்த்தியன் தம்பதிகளுக்கு அபிமன்யூ என்ற மகன் பிறந்தான்.  அபி படிப்பில் வெகு கெட்டிக்காரன். வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகவே வருவான்.   பங்களூரில் வசிக்கும் அகஸ்த்தியன் குடும்பம் அடிக்கடி லீவில் சென்னை வருவார்கள். அகஸ்த்தியனுக்கு தான் எப்போதாவது ஒரு நாள் விண்வெளிப் பயணியாக வேண்டும் என்ற கனவு பல காலமாக இருந்து வருகிறது.

 “நான் நினைப்பது நடக்குமா அப்பா”? என்று என்னை அடிக்கடி கேட்பான்.

“அகஸ்தியா. உன் கனவு நனவாகுமா என்பதை நாம் நாடி சாஸ்திரக்காரனிடம்  கேட்டு விடு

வோமே” என்று அவனுக்குச் சொன்னேன்.

“அப்பா அது நல்ல ஐடியா தான். நாடி சாஸ்திரத்தைப்பற்றி கேள்விபட்டிருக்கிறன். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை அப்பா” என்றான். மூன்று நாள் லீவில் தனது வருங்காலத்தைப் பற்றி அறியும் திட்டத்தோடு அவன் மட்டுமே சென்னைக்கு வந்தான்  .

 அவனை அழைத்துக்கோண்டு வைதீஸ்வரன் கோவில் இருக்கும் ஊருக்கு நாமிருவரும் மட்டுமே போனோம். ஏன் மனைவிக்கு பூர்ணிமா உடம்பு சரியில்லாததால் எங்களோடு வரவில்லை.  இக்கோவில் உள்ள ஊர் சென்னையில் இருந்து சுமார் 300 கிமீ தூரத்திலும், சீரகாழிக்கு அருகே 7 கிமீ தூரத்திலும் உள்ளது. செவ்வாய் கிரகத்துக்கான கோவிலது. .  நாடி சாஸ்திரக்கார்கள் பலர் வாழும்;   ஊர்.  அனேகர் தமது சென்ற காலம் , நிகழ் காலம், வருங்காலத்தைப் பற்றி அறிய  இங்கு செல்வதுண்டு. அவர்கள் நாடி சாஸ்திரம் சொல்வதற்கு பாவிக்கப்படுவது, பல நூற்றாண்டுகளுக்கு முன் வட்ட எழுத்தில் எழுதப்பட்ட ஓலைச் சுவடிகள். இது வேதகாலத்தில் சித்தர்களால் எழுதப்பட்டது என்பது பலர் நம்பிக்கை. இந்த சாஸ்திரம் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்கிவருகிறது. நாடிச்சென்று சாஸ்திரம் கேட்பதால் நாடிசாஸ்திரம் என்ற பெயர் வந்தது என்பர் சிலர். சாஸ்திரம் கேட்பவர் ஆண் ஆகில் வலது கையின் பெருவிரலின் ரேகையும்,; பெண்ணாகில்;; இடது கையின் பெரு விரல் ரேகையும் பிரதி எடுத்து, ஓலைச்சுவடிகளைத் தேடியபின் பல கேள்விகளை சாஸ்திரம் கேட்க வருபவர்களிடம் கேட்டு,  ஆம் அல்லது இல்லை என்று அவர்கள் சொல்லும் பதில்கள் மூலம் தாம் சாஸ்திரம் சொல்லப் போவது சரியானவருக்கா என உறுதி செய்த பின்னர் சாஸ்திரம் சொல்ல ஆரம்பிக்கிறார்கள்.

 அவ்வூரில்; நாடி சாஸ்திரம் பார்த்துவிட்டு நானும்  மகன் அகஸ்தியனும் வீடு திரும்பும் வழியில் அவன் கேட்ட பல கேள்விகளுக்கு என்னால் பதில் சொல்லவேண்டி இருந்தது.

 “அப்பா, நாடிசாஸ்திரக்காரர், உங்கள் பெயர் சந்திரசேகரன் , அம்மா பெயர் பூர்ணிமா, என் பெயர், என் மனைவி பெயர் எல்லாம் சரியாகச் கொன்னார். உங்களுக்கு நான் ஒருவன்தான் பிள்ளை என்றும், நான் காதலித்து க்டித்த பெண்ணைத் திருமணம் செய்ததாகவும் சொன்னார் .  நான் பிரபல வான்வெளி பயனியாவேன் என்றும் என் மகன் வைத்தியத் துஙையில் சேர்ஜனாவான் என்றும்   என் மனைவி அரசியலில் ஈடுபட்டு அமைச்சராவாள்  என்றார். என் குடும்பத்தின் வருங்காலத்தைப் பற்றி அவரி சொன்னது நடக்குமா என்பது எனக்குச் சந்தேகம். டாக்;டர் தொழில் செய்யும் என் மனைவி வத்சலா எப்படியப்பா அரசியலில் ஈடுபட்டு அமைச்சராக முடியும்? எனது மகள் சேர்ஜனாவன் என்று சாத்திரத்தில் சொன்னபடி நடந்தால் நான் சந்தோஷப்படுவேன். அது தான் நான் எதிர்பார்பதும். நாடி சாஸ்திரம்  சொன்னவர் பெயர் என்னப்பா”?

 “ அவர் பெயர் சிவசங்கர். அவர் எனக்குத் தெரிந்தவர்களுக்கு  சொன்னது நடந்திருக்கிறது.; பிரானசில் 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த  தீர்க்கத்தரிசி மைக்கல் நொஸ்டடெமஸ் என்பவர் பற்றி கேள்விபட்டிருப்பியே. அவரை போல் என்று சொல்”

 “நாடி சாஸ்திரம் சொல்லும் போது அவர் கையில் இருந்த ஏட்டுச் சுவடிகளைப் பார்த்து வாசித்தாரே. அச்சுவடிகள்  என்ன அவரின்  டைம் மெசினா? கடந்த காலத்துக்கும,; நிகழ்காலத்துக்கும், நிகழப்போகும் காலத்துக்கு கையில் இருக்கும் ஏட்டைபார்த்து சொல்லுகிறாரே அதெப்படி?

 “அகஸ்தியா காலத்தில் ஏற்படும் மாற்றத்தைப்பற்றிய சார்புக் கொள்கையினை  பௌதிக விஞ்ஞானி அல்பேர்ட் அயன்ஸ்டைன் எற்கனவே சமன்பாடுகள் மூலம் விளக்கியிருக்கிறார். ஒளியின் வேகமானது ஒரு செக்கண்டுக்கு சுமார் மூன்று இலட்சம கிமீ.  இதுவே  நாமறிந்த ஆகிய கூடிய வேகம். ஓளி, ஒரு வருடத்தில் செல்லும் தூரத்தை  ஒளி வருடம் என்று வான்வெளியாளர்கள் அழைப்பார்கள். அந்த தூரத்தை ஆங்கிலத்தில் லைட் இயர் (Light Year) என்பார்கள்;.”

 என்  மகன் பௌதிகத்திலும் விண்வெளித்துறையிலும் அதிக ஆர்வம் உள்ளவன் என்பது எனக்குத் தெரியும். சந்திரனில் முதல் கால் அடி எடுத்து வைத்த ஆரம்ஸ்டோரங் என்பவரைப் பற்றி  வாசித்து அறிந்த பின், பைலட்டாக வேலை செய்யும் தானும் ஒரு விண்வெளி வீரனாக வேண்டும் என்று அடிக்கடி சொல்லுவான்.  வானியல் பற்றிய பல நூல்கள் அவன் கேட்டு, நான் வாங்கிக் கொடுத்திருக்கிறேன். ஆகவே அவனுக்குப் பௌதிகத்துறையில் பேராசிரியரான நான் வாண்வெளிப் பயணம் பற்றி விளக்கம் கொடுத்தேன்.

 “அகஸ்தியா நீ விண்வெளி வீரனாக வர வேண்டுமானால் விண்வெளியில் தூரத்தை கணிப்து எப்படி என்று முதலில் தெரிந்து வைத்திருக்கவேண்டும்”, நான் சொன்னேன்.

 “அப்பா, நீங்கள் பொளதிகத் துறை பேராசிரியராச்சே. வாண்வெளியில் பூமிக்கும் கிரகங்களுக்கும் இடையிலான தூரத்தை எப்படி கணிப்பது என்று சொல்லுங்கள்.”.

 “ கஸ்தியா விஞ்ஞானிகளால் ஏற்றுக் கொண்டபடி ஒளியின் வேகம் தான், நாமறிநத வேகங்களில் ஆகக்கூடிய வேகம். ஓளி செகன்டுக்கு சுமார் 300,000 கிமீ வேகத்தில் செல்லக்கூடியது என பரிசோதனைகள் மூலம் கணித்துள்ளார்கள். ஒரு வருடத்தில் ஒளி பயணம் செய்யும் தூரத்தை கணிப்பதென்றால் 300,000 கிமீ  தூரத்தை ஒரு வருடத்தில் உள்ள செகன்டுகளை 300,000 கீமீ ஆல் பெருக்கினால் சுமார் 9.5 டிரிலியம் கிமீ தூரம் வரும்.. இத’ தூரத்தை ஒரு ஒளி ஆண்டு தூரம் என்றார்கள் பல வாண்வெளி ஆராச்சியாளர்கள்.”

 “ அடெயப்பா நினைத்து பார்க்க முடியாத அவ்வளவு தூரமா அப்பா”?

 “ஆமாம் பூமியில் இருந்து சூரியனதும் ,நட்சத்திரங்களினதும் கிரகங்களினதும் தூரத்தை ஒளி வருடத்திலும் அல்லது வானியல் அலகு எனும் அஸ்டிரோனோமிக்கல் யுளிட்டிலும் (Astronaumical Unit) சொல்லுவார்கள். ஒரு வானியல் அலகு   பூமிக்கும் சூரியனுக்கு இடையிலான தூரம் கிட்டத்தட்ட 150 மில்லியன் கிமீ. அதாவது  ஓளி சூரியனில் இருந்து பூமியை வந்து சேர கிட்டத்தட்ட  8.3 நிமிடங்கள் எடுக்கும். இத்தூரத்தை ஒரு வானியல் அலகுவாகக் கருதுகிறார்கள். ஒரு ஒளி வருடத்தையும் வானியல் அலகை இணைக்கும் ஒரு ஒளி வருடமானது 63241 வானியியல் அலகுக்கு சமனாகும். பூமியில் இருந்து வெகு தூரத்தில் உள்ள நெப்டியூனுக்கு போகும் தூரம் சுமார் 29 வானியல் அலகாகும். இவ்வலகை 63241ஆல் பெருக்கினால் ஒளி ஆண்டு தூரம் வரும்.

 “முடிவில்லா தூரம் என்று சொல்லுங்கள். இகனால் தான் இந்து மதத்தில் ஆதியும் அந்தமும் இல்லாத பரம்பொருள் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்த வானியல் தூர கணிப்பைப்பற்றி நான் வாசித்திருக்கிறேன் அப்பா”

 “சரியாகச் சொன்னாய். அகஸ்தியா இன்னொன்றை தெரிந்து வைத்துக்கொள். நேரமானது வேகத்தாலும் , ஈரப்பு விசையாலும் பாதிப்படையும். வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது, நேர மாற்றம் அதிகரித்து கொண்டே போகும். இதை விண்வெளி வீரர்கள் அவதானித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணம் செய்தால் மட்டுமே நேர மாற்றத்தை அவதானிக்க முடியும் என்பதில்லை. ஈரப்புச் சக்தி அதிகம் உள்ள பிளக் ஹோல் (Black Hole)  என்ற கரும் துளைக்கு அருகே சென்றால் அதன ஈரப்பு விசை நேரத்தை  பாதிக்கும்.”

 “அப்பா நான் நாடிசாஸ்திரத்தில் சொன்னபடி விண்வெளி பயணியாக வந்தால் நான் யாரும் செய்யாத ஒரு சாதனையைப் படைப்பேன்”

 “ என்ன சாதனை படைப்பாய் அகஸ்தியா”?

 “ பூமிக்கு அருகே உள்ள கருந்துளைக்கு பயணத்தை மேற் கொண்டு காலத்தில் ஏற்படும் மாற்றத்தை கண்டறிந்து அது உண்மையா என்று அறிய விரும்புகிறேன்”.

 “ நல்ல சிந்திக் முடியாத இலட்சியம் தான், ஆனால் அகஸ்தியா நீ நினைப்பது சாத்தியமாகுமா என்பது எனக்கு சந்தேகம். வெகு தூரத்தில் உள்ள கருந்துளையை அடைவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. கிட்டத்தட்ட ஒளியின் வேகத்தில் பயணித்தால் மாத்திரமே கருந்துளையை அடைய முடியும். அதற்குள் போனால் அதன் ஈரப்பு விசையில் இருந்து தப்பமுடியாது என்பதை நீ அறிந்து கொள்.”

 “ தெரியும் அப்பா. நான் பங்களுரில் உள்ள  இந்திய விண்வெளி ஆராச்சி நிலையத்துக்கு நான் விண்வெளி வீரனாகும்  விருப்பத்தை தெரிவித்து விண்ணப்பிக்கப் போறன். நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் திருவனந்தபுரத்தில் உள்ள ரொக்ட் விண்வெளிக்கு அனுப்பும் தும்பா என்ற இடத்தில் பயிற்சி கிடைக்கும். அதுசரி அப்பா நீங்கள் பல்கலைக்கழகத்தில் பௌதிகத்துறை பேராசிரியராயிற்றே கருந்துளை பற்றி மேலும் சொல்லமுடியுமா”

 “கருந்துளை (Black Hole) என்பது விண்வெளியின் ஒரு பகுதியாகும். இது மிகவும் அடர்த்தி வாய்ந்த ஒன்று. எனவே, இதனுள் ஒளி கூட புக முடியாது. இந்தக் கருந் துளை தனக்கு அருகில் இருக்கும் அனைத்தையும் ஈர்த்துக் கொள்ளும் ஈரப்புச் சக்தி கொண்டது. இதனால் ஏற்படும் வெப்பம் காரணமாக, ஒளித்துகள்கள் மின்னும் கதிர்களை வெளியிடும் தன்மை கொண்டவையாக உள்ளன. இந்த ஒளிக் கதிர்கள் 'குவாசார்' (Quarsar) என்று அழைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட ஒரு கருந்துளையை சீனாவில்; உள்ள விண்வெளி ஆய்வாளர்கள் 2.4 மீட்டர் குறுக்களவு கொண்ட தொலை நோக்கி உதவியுடன் கண்டு பிடித்துள்ளனர். கருந்துளைகளை  அதன நிறையை வைத்து நான்கு வகையாக வகுத்துள்ளனர். நான்காம் வகையைச் சேர்ந்த சூரியனை விட பல கோடி அதிகமான நிறையுள்ள கருந்துளை பூமியில் இருந்து 1,280 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படி ஒரு கருந்துளை இருப்பதை அமெரிக்காவும், சிலி (Chile) நாடும் உறுதி செய்துள்ளன. இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட கருந்துளைகளிலேயே இதுதான் மிகவும் பெரியதாகவும், இதன் ஒளிக்கதிர்கள் அதீத வெளிச்சம் கொண்டதாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. நட்சத்திர இறப்பினால் தோன்றும் கருந்துளை; சூரியனின் நிறையிலும் சுமார்  மடங்கு கூடியது. சூரியனிலும் பார்க்க பல மில்லியன் நிறை கூடிய கருந்துளைகள் உயர் வகுப்பை சேர்ந்தவை . சூப்பர் நோவாவில் (Super Nova)  உள்ள நட்சத்திரஙகள் இறநதபோது தோன்றிய கருந்துளை இதில் ஏ616 மொன் (Mon) என்று பெயரிடப்பட்ட கருந்துளை பூமியில் இருந்து சுமார் 3000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளது. இகருந்துளை சூரியனின் நிறையை விட 9 முதல் 13 வரை கூடுதலான நிறை உள்ளது என கணித்துள்ளார்கள்;. இதற்கு அடுத்த அருகே உள்ள கருந்துளை 6000 ஒளி ஆண்டுகள் துராத்தில் உள்ளது. இது சூரியனை விட  15 மடங்கு நிறை கொண்டது.

 “ கேட்பதற்கு எவ்வளவு சுவர்சியமாக இருக்கிறது அப்பா. இதைபற்றி மேலும் வாசித்தறிய விருப்பப்படுகிறேன். நான் விண்வெளி வீரனாகும் சந்தரப்பம் கிடைத்தால் இதைப்பற்றி அறிந்து வைத்;திருப்பது நல்லதல்லவா. ஒருவேளை என்னை இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் நேர்காணலுக்கு அழைத்து கேள்விகள் கேட்டால் பதில் சொல்ல நான் தயாராக இருக்கவேண்டாமா”?

 “வீட்டுக்குப் போனதும் எனக்கு நினைவு படுத்து, கிப்ஸ் தோர்ன் (Kips Thorn) எழுதிய “கருந்துளையும் நேர பாதிப்பும்” (Black Hole Time Impact) என்ற  நூலொன்று எனது லைப்பிரரியில் இருக்கிறது. அதைத் தருகிறேன், அந்நூலை வாசி. அப்போது பிரபஞ்சத்தைப் பற்றி அறிவாய்”, நான் அகஸ்தியனுக்குச் சொன்னேன்.

 அகஸ்தியனும் நானும் வீடு திரும்பியதும், இரவு உணவு சாப்பிட்டபின்  பின், நித்திரைக்குப் போக முன், அந்நூலை மறக்காமல் என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டான்;. தூங்கமுன் நூல் முழுவதையும் வாசித்துவிட்டு அதை தன் நெஞ்சில் வைத்தபடியே அதன் நினைவாகவே தூங்கிவிட்டான்.

                                                                      ******

ஆகஸ்தியன் எதிர்பார்த்தபடியே ஏ616 மொன் என்ற கருந்துளை நோக்கி பயணிக்க இருக்கும் 3 பேரைக் கொண்ட  விண்வெளி வீரர்களில் அகஸ்தியனும் ஒருவனாக தேர்ந்து எடுகக்ப்பட்டான். மற்ற இருவரும்; வடநாட்டவர்கள். மூவரில் குழுவுக்கு பூனாவைச் சேர்ந்த பாரத் என்பவர் கப்டனாக இருந்தார்;. மற்ற வீரரின் பெயர் கல்கத்தாவை சேர்ந்த சௌதிரி.; கருந்துளையைபற்றிய அகஸ்தியனின் அறிவைக் கண்டு பயணிகள் குழுவின் தெரிவுக்காக நேர்காணல் கண்டவர்கள் வியந்தார்கள்.

 அவன் விரும்பியபடி  அவனது விண்வெளிப் பயணம் 2005 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பத்தாம் திகதி காலை 9 மணிக்கு கேரளாவில் உள்ள பாம்பா (Pampa) விண்வெளி ரொக்கட்டுகள் பயணிக்கும் இடத்தில் இருந்து ஆரம்பமானது என்பதை ரொக்கட்டில் உள்ள கடிகாரம் காட்டியது. அகஸ்தியன் பயணம் செய்த ரொக்கட்டின் பெயர் “சட்டேர்ன்” (SATURN)). கருந்துளை நோக்கிய பயணமாவதாலோ என்னவோ சனியை குறிக்கும் சட்டேர்ன் பெயர் ரொக்கட்டுக்குப் பொருத்தமாக இருந்தது. பெற்றோர்,; மனைவி வத்சலா, மகன் அபிமின்யூ ஆகியொரிடமிருந்து உயிரை பணயம் வைத்து> அகஸ்தியன் விடைபெற்றான். அப்போது நான் ரிட்டையராக ஆறுமாதங்களே இருந்தன.

 ஓளியின் வேகத்தின் தொன்னூற்றி எட்டு வகிதத்தில் ரொக்கட் பயணம் செய்தால் சில வருட பயணத்தின் பின் பல கிரங்களைத் தாண்டி கருந்துளையை நோக்கிச் செல்லக்கூடியதாக இருந்தது.

பயணத்துக்கு போதுமான எரிபொருள் இருக்கிறது என்பதை மீட்டர் காட்டியது,  குழுவுக்கு நிம்மதியைக் கொடுத்தது. குழுவின் கப்டன் பாரத்; பல தடவை வாண்வெளியில் பணம் செய்த அனுபவசாலி. குழுவில் இரண்டாவது பயணி சௌத்ரி, ஒரு பிரமச்சாரி. அவரும் இரு தடவை வாண்வெளியில் பயணம் செய்தவர். அகஸ்தியனுக்கு இப்பயணம் புது அனுபவம். பயிற்சியின் போது ரொக்கட்டில் உள்ள கருவிகளை இயக்குவதையும், மீட்டர்களை வாசிப்பதை பற்றி கற்றுக்  கொடுத்திருந்தார்கள். உண்பதற்கு சத்தள்ள மாத்திரைகள் உற்கொள்ளவேண்டியிருந்தது. ஈரப்பு சக்தியில நடக்கக்  கூடிய வித்தில் ஆடைகள் அணிந்திருந்தான். அதறகான பயிற்சியும் கொடுக்கப்பட்டது. எவ்வளவு தூரம் ரொக்கட்; பயணித்துள்ளது என்பதை  ஒளி ஆண்டு; அலகுவில் மீட்டர் காட்டியது. ரொக்கட் பயணிக்கும் வேகத்தை ஒளியின் வேகத்தின் விகிதத்தில் காட்டியது. வேகம் ஒளியின் வேகத்தை நெருங்கும் போது நேர மாற்றம் பெரிதாகிக் கொண்டு போகும் என்று தன் தந்தை சொன்னது அகஸ்தியன் ஞாபகத்துக்கு வந்தது.  அதுவமல்லாமல் கருந்துளையை வெகு சீக்கிரம் போயடையலாம் எனப் பாரத் சொன்னார்

 கருந்துளைக்குள் போனால் வெளியேறமுடியாது என்று விண்வெளி ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை செய்து பயணிகளை அனுப்பியிருந்தது. 2900 ஒளி ஆண்டு தூரத்துக்கு பயணம் செய்து கருந்துளைக்கு அன்மையில் ரொக்கட்டை நிறுத்தி கருந்துளையை அவதானித்து குறிப்புகள் எடுத்து திரும்பவேண்டும் என்பது குழுவுக்கு ஆராய்ச்சி நிலையம் இட்ட கட்டளை. அதனபடி சட்டெர்ன் ரொக்கட்;  கருந்துiளையில் இருந்து 10 ஒளி ஆண்டு தூரத்தோடு பயணத்தை தொடராமல் நிறுத்தியது. 

 தங்கள் குழுவுக்கு ஐஎஸ்ஆர்ஓ (ISRO) என்ற இந்திய விண்வெளி ஆராச்சி நிலையம் இட்ட வேலையை  சரிவர செய்து முடித்து, திரும்பவும் பூமிக்கு குழு திரும்பிய போது ரொக்கட்டில் உள்ள கடிகாரம் ஜனவரி 20 திகதி 2015 ஆண்டு எனக் காட்டியது. ரொக்கட்டில் இருந்த கடிகாரம் காட்யபடி  கிட்டத்தட்ட பத்து வருடங்கள் கருந்துளைக்குப் போய் வர எடுத்தது என்பதை நினைத்து பார்க்கும் போது தாம் எவரும் கிடைக்காத சாதனையைப் படைத்துவிட்டோம் என குழு நினைத்தது. பூமியை ரொக்கட் வந்தடைந்த போது பாம்பாவில் உள்ள ஐஎஸ்ஆர்ஓ பரிபாலன நிலையத்தில் இருந்த கடிகாரம் 2038 ஆண்டு ஜுன் மாதம்  20 ஆம் திகதியைக் காட்டியது. 

 “ பூமியின் நேரத்தின்படி நான் என்ன 23 வருடங்கள் இளமையாகிவிட்டேனா? அப்போ நாஙகள் புறப்படும் போது இருந்தவர்கள் இப்போது விண்வெளி ஆராச்சி நிலையத்தில்  வேலை செய்யமாட்டார்களே”, என்றார் குழுவின் கப்டன் பாரத்.

 23 வருடங்கள் இளமையாகி வீடு திரும்பிய அகஸ்தியனுக்கு இன்னொரு அதிரச்சி காத்திருந்தது, ரொக்கட் இறங்கிய நிலையத்துக்கு தன்னை வரவேற்க மனைவி வத்சலா ஒரு பெரிய கூட்டத்தோடு, பல பொலீஸ் அதிகாரிகள் புடைசூழ வந்திருந்தாள். அவளோடு அபிமன்யு தன் மனைவியோடும் இரு பிள்ளைகளோடும் வந்திருந்தான். அகஸ்தியனின் கண்கள் அவனது பெற்றோரைத் தேடிற்று. அபிமன்யுவிலும் வத்சலாவிலும்; பல  மாற்றங்கள்;. வத்தசலாவின் முகத்தில் வயதின் முதுமை தெரிந்தது. தலை மயிர் நரைத்தவிட்டது.

 “ அப்பாவும் அம்மாவும் எங்கே” ? பதட்டத்தோடு அகஸ்தியன் மனைவி வத்சலாவைக் கேட்டான்.

 “ அவர்கள் இறந்து 15 வருடங்களாகிவிட்டது” வத்சலா சொன்ன பதில் அவனை அதிர வைத்தது.

 “ அது சரி வத்சலா டாக்டரான உனக்கேன் இவ்வளவு பொலீஸ பாதுகாப்பும் கூட்டமும் ”?

 “ நான் இப்போ டாக்டராக வேலை செய்வதில்லை . நான் இப்போ மாநில கல்வி அமைச்சர், இவர்கள் என் மக்கள் திராவிட தமிழர் கழக கட்சித் தொண்டர்கள்.” வத்சலாவிடம் இருந்து பதில் வந்தது.

 குழப்பம் அடைந்த  அகஸ்தியன் அபிமன்யுவைப் பார்த்தான்.

 

“ அப்பா நீங்கள் இன்னும் இளமையாக இருக்கிறீர்கள். என்னை யார் என்று அடையாளம் தெரிகிறதா? நான் தான் உங்கள் மகன் அபிமன்யூ. இது என் மனைவி அகிலா. இவ ஒரு கிட்னி கொன்சல்டன் டாக்டர். அவளுக்கு பக்கத்தில் நிற்பது என் மகன் சேகரனும், மகள் பூர்ணிமாவும். உங்கள் அப்பா அம்மா நினைவாக அவர்கள் பெயரை என் குழந்தைகளுக்கு வைத்திருக்கிறேன். நானும் அகிலாவும் மருத்துவக் கல்லூரியில் ஒன்றாகப் படித்த போது காதலித்து திருமணம் செய்து கொண்டோம்.”

 “அபி நீ இப்ப என்னவாக வேலை செய்கிறாய்”? அகஸ்தியன் மகனைக் கேட்டான்.

 “நான் ஒரு ஹார்ட் சேர்ஜன் அப்பா. “அவனிடம் இருந்து பதில் வந்தது

 “உங்கள் அனுமதி பெறாமல் உங்களை வரவெற்க நாங்கள் வந்ததுக்கு மன்னிக்கவும்” வதசலா சொன்னாள்.

 ஐயோ கடவுளே நாடி சாஸ்திரக்காரன் சொன்னது போல நடந்துவிட்டதா? காலம் அவ்வளவு கெதியிலை கடந்து விட்டது” தன்னையும அறியாமலே புலம்பினான் அகஸ்தியன்.

 அவன் புலம்பல் குரல் கேட்டு நானும் மனைவியும் அவன் அறைக்குள் போனோம்.

 “தம்பி அகஸ்தியா ஏன் புலம்புகிறாய்? எதாவது கெட்ட கனவு கண்டாயா”?, நான் அவனின் உடலை உசுப்பியபடி கேட்டேன்.

 “அகஸ்தியா இப்டித்தான் வெகு நேரம் உன் வீட்டில் தூங்குவாயோ?. காலை பத்து மணியாகிவிட்டது. இதோ சூடான காப்பி கொண்டுவந்திருக்கிறன். குடித்துவிட்டு முதலிலை வத்சலாவுக்கு போன் செய். வத்சலா வைத்தியசாலையில் இருந்து உன்னைக் கேட்டு போன் செய்தவள். எப்போ நீ பிளைட்டில் பங்களுர் திரும்புகிறாய் என்று கேட்டாள்”, பூர்ணிமா மகனுக்கு செய்தி சொன்னாள்.

 “ என்ன அதஸ்தியா நான் தந்த கருந்துளை நூல் முழுவதையும் வாசித்து முடித்துவிட்டாய் போலத் தெரிகிறது. கருந்துளை பற்றி கனவு ஏதும் கண்டாயா” நான் சிரித்தபடி அவனைக் கேட்டேன்.

 அவன் திரு திரு என்று முழித்தான். நடப்பது யாவும் அவனுக்கு குழப்பமாயிருக்கிறது என்பதை அவன் முகம்; காட்டிற்று, அவனுக்குப் பக்கத்தில் உள்ள மேசையில் இரவு பல மணி நேரம் வாசித்த என் “கருந்துளையும் நேர பாதிப்பும்”  என்ற நூல் அவனைப்பார்த்து கண்சிமிட்டியது.

                                                                                ******

தூமகேது (The Comet)

 சூரிய கிரகணம்  நாம்  அழைக்காமலே  அழையா விருந்தாளியாக இரண்டரை நிமடங்கள் அமெரிக்கர்களை வந்து ஆகஸ்ட்2017 இல் தரிசித்துப் போய் விட்டது. வின்கல் மழை தங்கள் சொரிவைக் அடிக்கடி காட்டிப் போகும். வால் நடசத்திரம் என்ற தூமகேது தன் நீண்ட வாலின் அழகைக் காட்டி சில மாதங்களில் மறைந்துவிடும் இந்த பிரபஞ்சத்தில் உள்ள குடும்பங்களில் அன்றாடம் நடக்கும் பல நிகழ்ச்சிகளுக்கு, காதும் மூக்கும் வைத்து, பல கற்பனைக் கதைகள் வேதத்தில் உருவாகி இருக்கிறது. அதை உண்மை என்று நம்பியவர்கள் பலர். ஹாலியின் வின்மீன் (Haley’s Comet) என்ற தூமகேது, சுமார் 76 ஆண்டுக்களுக்கு ஒரு தடவை வந்து தன் அழகை உலக வாசிகளுக்கு காட்டி மறையும். அப்படி 2013 இல் ஐஸ்சொன் (ISCON) என்ற தூமகேது வந்து போகும் போது நடந்த மூடநம்பிக்கை  உள்ள  ஒரு கிராமத்தின் கதை இது.

 

******

தமிழ் நாட்டில் உள்ள ஸ்ரீ ரங்கத்தைப் பிறப்பிடமாக கொண்ட ஹரிகரன் (ஹரி)   ஸ்கொலர்ஷிப் பெற்று, லண்டன் சென்று. வான் இயற்பியல் (Astro Physics) துறையில் பட்டம் பெற்றவர் லண்டனில் உள்ள  குயீன் மேரீஸ் பல்கலை கழகத்தில் விரிவுரையாளராக  வேலை செய்பவர். அவர் முனைவர் பட்டம் பெறுவதற்கு தூமகேது என்ற வால் நட்சத்திரங்களின் தோற்றமும் வரலாறு பற்றியும்,  அதனால் பூமிக்கு ஏற்படும் விளைவுகள் பற்றியும் ஆராய்ச்சி செய்தவர்.  பாலசுந்தரத்தோடு  நண்பரானார். ஹரிகரன்- பாலசுந்தரம் நட்பு  குயீன் மேரீஸ் பல்கலைக் கழகத்தில் ஏற்பட்டது.

பாலசுந்தரம் (பாலா), . ஈழத்து வன்னியில் உள்ள முல்லைத்தீவில் பிறந்தவர். வன்னியில் உள்ள ஓட்டுசுட்டானில் சில வருடங்கள் ’ வரலாறு ஆசிரியராக  கடமையாற்றியவர். ஈழத்து போர் நிமித்தம் அவர் முல்லைத்தீவு  மாவட்டத்தில் இருந்து’ லண்டனுக்கு புலம் பெயர்ந்த பலரில்  பாலாவும் ஒருவர். வன்னி மக்களின் கலாச்சாரம், வரலாறு பற்றி நன்கு அறிந்தவர். பாலாவும், ஹரிகரனும் திருமணமாகாதவர்கள்.

அன்று விடுமுறை.  ஹரிகரன் தயாரித்த தோசை, இட்டலி, சாம்பார்  உணவை சுவைக்க பலா .ஹரியின் வீட்டுக்கு  அவர் அழைப்பில் போயிருந்தார்.. போசனத்துக்குப் பின்’ இருவரும் ஹாலில் இருந்து உரையாடிக் கொண்டு இருந்தார்கள்.

“ ஹரி, நான் இன்னும் ஒருமாதத்தில் என் ஊருக்கு பெற்றோரைப் பார்க்க போக இருக்கிறேன். உமக்கு வன்னியை ஆண்ட பண்டார வன்னியனை பற்றி’ ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். அவர் பிரிட்டிஷ் இராணுவத்தோடு போர் புரிந்த இடம்  கற்சிலைமடு. அக்கிராமம்  ஒட்டுசுட்டனில் இருந்து மேற்கே சுமார் 2 மைல் தூரத்தில் உள்ளது . ஈழத்து வரலாறு பற்றி அறிய ஆவல்  உள்ள நீர்’ என்னோடு ஒட்டுசுட்டானுக்கு வர விருப்பமா?. அந்த’ வரலாறு உள்ள கிராமத்துக்குப்’ போய்’ நாம் அந்தக் கிராரமத்தின் மக்களை சந்தித்தித்துப் பேசலாம். என் பாட்டனர் முத்தையா என்பவர் தொண்ணூறு வயதாகியும் பல் விழாமல் அங்கு வாழ்கிறார். அவரையும் சந்திக்கலாம். என்ன சொல்கிறீர்”?

“அது சரி பாலா,. நீர் வன்னி வரலாறு அறிந்தவராயிற்றே அந்த கிராமத்துக்கு அந்தப் பெயர் எப்ப்படி வந்தது?. சிலை ஏதும் உண்டா”

“ கற்சிலைமடுக் கிராமத்தில் 1803  ஆண்டில்  மன்னன் பண்டாரவன்னியன் ஆங்கிலேய தளபதி கப்டன் றிபேக்குடன் ஏற்பட்ட மோதலில் தோல்வி அடைந்தாதாக குறிப்பிட்டு, குறித்த நினைவுக்கல் அதே காலப்பகுதியில் அமைக்கப்பட்டது. இதுவரை காலமும் அந்தப் பகுதி மக்களால் புனிதமான சிலையாக பாதுகாக்கப்பட்டு வந்தது. குறிப்பிட்ட நினைவுக்கல்லே வன்னியின் தொன்மையையும் பண்டாரவன்னியனின் சிறப்பையும் வெளி உலகிற்கு வெளிப்படுத்தக்கூடிய ஆதாரபூர்மான ஒரே ஒரு நினைவுக்கல்லாக விளங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே தனியான சுண்ணக்கல்லால் ஆக்கப்பட்ட இந்த நினைவுக்கல் அமையப் பெற்றமையால்த்தான் அது அமைந்துள்ள கிராமம் கற்சிலைமடு என பெயர் பெற்றது.

“ அப்போ ஈழத்து போரில் சிலை தப்பி விட்டதா”?

“எங்கே தப்பியது?. தமிழர் வரலாற்றுச் சின்னங்களை அழிப்பதில் தாம் போர்துக்கேயருக்கு குறைந்தவர்கள் இல்லை என்று காட்டி விட்டது சிங்கள இராணுவம்.”.

“ இதுவே என்னை அந்த கிராமத்தைப் பார்க்க வேண்டும் போல் மேலும் என் ஆவலைத் தூண்டுக்கிறது. நான் ஈழம் சென்றதில்லை. வன்னியைப் பற்றி கேள்வி பட்டிருக்கிறேன். ஈழத்து இறுதிப் போர் நடந்த நந்திக் கடலையும் அதன் அருகே உள்ள வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோவிலையும்’ பார்க்க வேண்டும் போல் இருக்குது. நானும் உம்மோடு ஓட்டுசுட்டானுக்கு’ வருகிறேன். அழைப்பிற்கு நன்றி’ பாலா”, ஹரிகரன் சொன்னார்

“அங்கு வரமுன் உமக்கு ஒரு எச்சரிக்கை. சில  வன்னி கிராம வாசிகள் பழைய மூட நம்பிக்கையில் ஊறியவர்கள். அவர்களோடு பேசுவது கவனம்”

“பாலா,, உமக்கு அசௌகரியம் தராமல் நடப்பேன். அது உறுதி”

“ அது சரி ஹரி நீர் ஒரு பிராமணன். அதோடு வான் இயற்பியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஏன் வால் நட்சத்திரத்தை தூமகேது என்றும் அழைக்கிரார்கள்?. எதற்கு எதாவது காரணம் உண்டா”

“இராக் தேசத்தின் கெமிக்கல் அலி (Chemical Ali) என்பவரை பற்றி கேள்விபடிருப்பீரே. அவர்  சதாம் ஹுசைனின் கட்டளைப் படி குர்திய மக்களின் கிளர்ச்சியை அடக்க  இரசாயன ஆயுதம் பாவித்தார் என்பதற்காக தூக்கில் இடப்பட்டார். இரசாயனப் போர் முறை (Chemical warfare) பற்றி வேத காலத்து கதை ஓன்று உண்டு. விநாயகரின் 16 முக்கிய பெயர்களில் ஒன்று தூமகேது. இந்த சம்ஸ்கிருதச் சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு: ஓன்று .வால் நட்சத்திரம், இரண்டாவது .விநாயகப் பெருமான். அவருக்கும் வால் நட்சத்திரத்துக்கும் ஒரு தொடர்பும் இல்லை.

விகுதி என்ற ஒரு அரசன் இந்திர பதவி மீது ஆசை கொண்டான். அதைப் பொறுக்காதோர் அவனைச் சபிக்கவே அவன் தூமாசுரன் என்ற புகை அசுரனாகப் பிறந்தான். தூமம் என்றால் புகை என்று பொருள். அவனிடம் விஷப் புகை (Weapons of Mass Destruction) ஆயுதங்கள் இருந்தன. அதை அவன் ரிஷிகள் மீதும் நல்லோர் மீதும் பிரயோகித்தான். அவனைக் கொல்ல சுமுதை என்பவளுக்குப் பிறக்கப்போகும் குழந்தை உதவும் என்று ஒரு அசரீரி கேட்டது. ஆகவே சுமுதை கணவருடன் காட்டுக்குச் செல்ல, அங்கு விநாயகரே அவர்களுக்குக் குழந்தையாக வந்து அவரிடம் வளர்ந்தார்.

தூமாசுரன் செயல்களைப் பிள்ளையார் கேள்வி கேட்கவே. அவன்  கோபம் கொண்டு அவர் மீது புகை ஆயுதங்களைப் பிரயோகித்தான். பிள்ளையார் அத்தனை புகையையும் உள்வாங்கி. தூமாசுரன் மீது அந்த விஷப் புகையைக் கக்கவே அவன் சேனைகளுடன் அழிந்தான். ஆகவே பிள்ளையாருக்கு  தூமகேது என்று பெயர் வந்தது. அது தான் கதை. இந்தக் கதையை ஏன் பாலா கேட்டனீர்”

“கற்சிலை மடுவில் என தாத்தாவை சந்திக்கும் போது நான் கேட்ட

காரணம் அறிவீர் ஹரி”

*****

இரு நாள் பயணத்தின் பின் கொழும்பு ஊடாக ஒட்சுட்டானை இருவரும் வந்தடைந்தார்கள். வாடகை’ கார் ஒன்றை கொழும்பில் இருந்து பாலசுந்தரத்தின் நண்பன் ஒருவன் ஒழுங்கு செய்திருந்ததால் சுமார் 2௦௦ மைல் பயணத்தின் பின், முதலில் முல்லைதீவில் உள்ள பாலாவின் பெற்றோரிடம் இருவரும் ஆசி பெற்றனர். அதன் பின் நந்திக் கடல். வற்றாப்பளை அம்மன் ஆகிய இடங்களை பார்வையிட்டு ஒட்டுசுட்டானைப் போய் அடைந்தனர். போகும் வழியில் காடுகளை அழித்து,. எரித்து. சாம்பலை உரமாகக் கொண்டு சேனை விவசாயம் வன்னியில் செய்வதாக பாலா. ஹரிக்கு சொன்னார். தான ஒட்டுசுட்டானில் ஆசிரியராக தடமையாற்றிய பாடசலைக்குப் போன போது; தன்னோடு ஒன்றாகப் படிப்பித்த மகாதேவன் என்பவரை தலைமை ஆசிரியராக தான் காண்பேன் என்று பாலா எதிர்பார்கவில்லை;

ஒட்டுசுட்டனில் இருந்து  ஏ34 பாதையில் மேற்கே 2 மைல் பயணத்தின் பின்; கற்சிலைமடு கிராமத்தை இருவரும் போய் சேர்ந்தனர்.  அக்கிராமத்தில் பண்டார வன்னியனினின் சிலைக்கு மரியாதை செலுத்தி, பாலாவின் பாட்டனர் முத்தையா வீடு போய் சேர்ந்தனார். அந்த வயதிலும் அவர் சுறு சுறுப்பாக தன் மனைவி நாச்சியாரோடு இயங்குவதைக் கண்டு ஹரி ஆச்சரியப்பட்டார். இந்த முதுமையிலும் அவர்கள் ஒற்றுமையைக் கண்டு வியந்தார்.

அன்று அக்கிராமத்து பிள்ளயாருக்கு பொங்கிப்  படைத்தனர் கிரம வாசிகள். ஒரே கூட்டம்.  கிராமத்தில் மூத்தவர் என்பதால் முத்தையாவுக்கு  அவ் விழாவில் பிரதம அதிதி என்ற மரியாதையை கிராமவாசிகள் கொடுத்தனர். 

“ தாத்தா இப்படி அடிக்கடி பிள்ளயாருக்கு இந்த ஊர் வாசிகள்  பொங்கிப்  படைப்பார்களா? ஹரி கேட்டார்

“ கிராமத்தில் 1986 இல் தெரிந்த  வால் நட்சத்திரத்தால் ஆபத்து வராமல் இருக்க பண்டாரவன்னியன்  ஆட்சி காலத்தில் தோன்றிய பிள்ளையாருக்கு பொங்கி படைத்தனர். இந்தப் பிள்ளையார் ஊர் வ வாசிகளை யானைகளின் தாக்’குதலில் இருந்தும் வால் நடச்திர்தின்

பாதிப்பில் இருந்தும் காப்பாற்றும் தெய்வம் என்ற மக்களின் நம்பிக்கையால் இந்த பொங்கல் விழா“ விளக்கம் கொடுத்தார் முத்தையா.

“ வால் நட்சத்திரம் 1986 இல் எப்படியான பாதிப்பை கிராமத்துக்கு கொடுத்தது தாத்தா” ஹரி கேட்டார்.

“ வால் நட்சத்திரம் வந்து போன பின்,  இராணுவத்தின் தாக்குதலினால் இந்தக் கிராமத்தைச் சுற்றி உள்ள காடுகள் தீ பற்றி எரிந்தன.. சில குடிசைகளும் எறிந்தன . சிலர் இறந்தனர். விவசாயப்  பயிர்கள் நாசமாயிற்று.” : கவலையோடு சொன்னார் முத்தையா.

" அப்போ இந்த பொங்கல் எதற்கு”?

“இந்த பொங்கல் 2013 இல், கார்த்திகையில் தோன்றவிருக்கும்’ மிகப் பெரிய வால் நடச்சதிரம் கக்க இருக்கும் விஷப் புகையில் இருந்து கிராமத்தைக் காப்பாற்றவே இந்தப் பொங்கல் பிள்ளையாருக்கு” என்றார முத்தையா,

 ”’ இதை நீங்கள் நம்புகிறீர்களா தாத்தா?”

 “ ஊரே நம்பும் போது நான் மட்டும் நம்பாமல் இருக்க முடியாது. இந்த ஊர் பூசாரியும். சாத்திரியும் அதைத் தான் சொன்னார்கள். அவர்கள் சொன்னது போலவே முந்தி நடந்திருக்கிறது” என்றார் உறுதியோடு தாத்தா.

 “ ஹரி உமது ஆய்வின் படி எப்போது வால் நட்சத்திரம் தோன்றும்?

" வால் நட்சத்திரம் ஐஸ்சொன் (ISON) 2013 ஆண்டு நொவம்பரில் தெரியும். அதாவது. இன்னும் மூன்று மாதங்களில் பார்க்கலாம். அதன் கரு சூரியனை விட 12 மடங்கு பெரிது. வால் நட்சத்திரத்தின் கருவானது தூசி. வாயு, பனிக்கட்டிகலால் உருவாகியது.  சூரியனின மையத்தில் இருந்து 1,860,000  கிமீ தூரத்தில் வரும்’ போது எம் கண்களுக்கு புலப்படும் 400,000 வருடங்களுக்கு ஒரு தடவை பூமிக்கு தெரியும். 14-15 ஜனவரி 2014 இல் ISON இன் சுற்றுப்பாதைக்கு அருகே பூமி கடந்து செல்லும போது, ​​சூரியனின் கதிர்வீச்சால் வீசிய மைக்ரான்-அளவிலான தூசி துகள்கள் விண்கல் மழை அல்லது தூசிகள் நிறைந்த மேகங்களை ஏற்படுத்தும் எனக் கணிக்கப்படுகிறது. வால் நட்சத்திரம் ISON இன் சுற்றுப்பாதைக்கு அருகே மட்டுமே வால் நட்சத்திரம் பூமியை கடந்து செல்லும் போது, வால் வழியாக, விண்கல் மழை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அரிதாக இருக்கும். இதுவரை அது நடந்தாக பதிவாகவில்லை. சிறிய துகள்கள்களை சுற்றுப்புற பாதையில் விட்டுச்செல்லக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. -. இத்தகைய சூழ்நிலைகளில் கடந்த காலத்தில் நிகழ்ந்த நிகழ்வுகள் எதுவும் இல்லை. இந்த தூமகேதுவுக்கு இவர்கள் பயந்து பூஜை செய்கிறார்கள் பயப்படத் தேவையில்லை.  இருந்தும் இந்தக் கிராம வாசிகள் எதிர்பார்க்கும் வால் நட்சத்திரத்தில் இருந்து நச்சு வாயுவோ அல்லது. நெருப்போ பூமியை தாக்காது.” என்று விளக்கம்’ கொடுத்தார் ஹரி. இரு கிழமை இலங்கை பயணத்தின்; பின்’ இருவரும் லண்டன்; திரும்பினர்.

 

*****

அன்று 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 12அம’ திகதி டிவி யில் இலங்கையில் வட மாகாணத்தில் உள்ள வன்னியில் ஏற்றப்பட்ட காட்டுத் தீ பற்றி டிவியில் காட்டியதைக் கண்டு பாலாவும் ஹரியும் அதிர்ச்சி அடைந்தனர்.

 “கேட்டீரா ஹரி செய்தியை.. கிராமவாசிகள் பயந்தது போல் நடந்து விட்டது  நல்ல காலம் கற்சிலைமடு  கிராமத்தில் காட்டு தீ நடக்கவில்லை அவர்கள் கிரமத்தில் இருந்து. சுமார் மேற்கே 30 மைல் தூர்த்தில் உள்ள காட்டில் காய்ந்த மரங்களை மின்னல் தாக்கியதால் காட்டுத் தீ உருவாகி, சில கிராமங்களை அழித்து இருக்கிறது.. வால் நட்சத்திரம் தோற்றமும். காட்டுத் தீ உருவாகியதும்’ தூய தற்செயல். அது போதும் கிராமவாசிகளுக்கு. அவர்கள் பிள்ளயார் மேல் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை:” என்றார் பாலா.

 “எல்லாமே இயற்கையின் செயல் பாலா” பதில் சொன்னார் ஹரி.

 

******